Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18-part-3

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18-part-3 ஜெயா மகன்கள், செல்வம் மகன்களோடு சரிக்குச் சரி பேசியவள், தட்டில் இட்லியை வைத்து நான்கு பேரையும் சுற்றி உட்கார வைத்து ஊட்டி விட்டாள். மீனா, அழகி, ஹரிணி இறங்கி வந்தனர். செல்வத்திடம் ஐஸ்வர்யாவைப் பார்க்க வேண்டும் னஎன மீனா கேட்கவும், சந்திராவும், கௌசியுமாக, மறுத்தனர். வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக்கோ. என்று விட்டனர். முத்து ஒரு சேலை அட்டை டப்பாவோடு வந்தவன், சிவப்ரியாவின் அருகில் அதனை எதுவும் பேசாமல் வைத்தான். அந்தச் […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18-part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18-part-2 முத்து முன் இரவில் மருத்துவமனையிலிருந்து குடும்பத்தோடு, புது மனைவியோடு வீடு திரும்பியவன் அனல் மேல் நிற்பது போலவே உணர்ந்தான். இவ்வளவு நேரம் இருந்ததை விட , சிவப்ரியா அவன் மனைவியாக வீட்டுக்குள் காலடி வைத்த போதும் கூடப் பொறுத்தவன், சாப்பிட்டவுடன், எங்கே தன் அறைக்கும் அவளை அனுப்பி விடுவார்களோ என்றே வேகமாகச் சென்று கதவை அடைத்துக் கொண்டான். இரவு வெகுநேரம் கவிப்ரியா போட்டோவை பார்த்து, தான் அவளுக்குத் துரோகம் செய்ததாகவே புலம்பினான். […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18 part-1

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-18 part-1 மருதாணி! இந்தச் செடி, மருத்துவக் குணங்களையும், அமானுஷ்ய சக்திகளையும் கொண்டவை. ஆம் யாகங்கள் தொடங்கும் நேரம், பூவும் காயும், இலையுமாகச் சேர்ந்து இருக்கும் மருதாணி கொப்பை யாக அக்னியில் சொருகினால், அவை துஷ்ட சக்திகளைத் தடுத்து யாகத்தைக் காக்கும் என்பது ஓர் நம்பிக்கை. அதே போலப் பல மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்த மருதாணி இலைகள், பித்தம் சூடு எனப் பலவற்றைத் தணித்துக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவை. இவையிரண்டையும் விட […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 -part-3

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 -part-3 துரை செல்வியோடு, மருது, தங்கம் தம்பதிகள் தங்குவதாக முடிவானது. ஆனால் செல்வம், தேவைப்பட்டால் பெட்ரோல் பங்க் வீட்டை உபயோகித்துக் கொள்ளச் சொன்னான். ஐஸ்வர்யாவைத் தனியறைக்கு இரண்டு மணிநேரம் கழித்து அழைத்து வந்தனர். அதுவரை அவளுக்கு மயக்கம் தெளியாமலும், இரத்தம் ஏறிக் கொண்டும் இருந்ததால் ஹரீஷ் கூடவே தான் அமர்ந்திருந்தான். மருத்துவர்கள் இருவரும் அதற்கு முன்னரே கிளம்பிவிட்டிருந்தனர். தனியறை , ஏசியறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அங்கும் அவளை மாற்றி, மற்ற உபகரணங்கள் […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 -part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 -part-2 ஆப்பரேஷன் தியேட்டரிலிந்து வெளியே வந்த டாக்டர். சேதுபதி, “உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை. இரத்தம் நிறைய லாஸ் ஆகியிருக்கு. ஓ நெகட்டிவ், ப்ளட் பேங்க்ல , டோனார்ஸ்க்குச் சொல்லியிருக்கு. ரிலேடிவ் சைட் செக் பண்ணுங்க. யாருக்கு ஓ நெகட்டிவ் இருக்கோ, அவங்க கொடுங்க ” என மற்றதைக் கவனிக்கச் சென்றார். சிவபாண்டியன், ராஜபாண்டியன் இருவருமாக டாக்டர் அறைக்குச் சென்று ஐஸ்வர்யா நிலை குறித்துப் பேசினர். அவசர சிகிச்சை அறையில், கையில் […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 part-1

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே!-17 part-1 மானூத்துப்பட்டி பாண்டியன் இல்லம், முன்னிரவு நேரம் பேச்சியப்பத்தாவின் அறையில் கருத்த பாண்டி தாத்தா படுத்திருந்த கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. இன்று மாலையில் தான் எல்லோரையும் கதிகலக்கிய ஒரு நாள் இரவு, மூன்று முழு நாட்களுக்குப் பிறகு, சற்றே உடலில் தெம்பு வரவும், பிடிவாதம் பிடித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தவள் மானூத்தில் அப்பத்தா அறையில் தங்கிக் கொண்டாள். ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை அப்பாத்தாவின் அருகாமை மட்டுமே தன்னை எல்லாவற்றிலிருந்தும் […]


 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-4

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-4 செல்வமணி, செல்வியை அணைத்து இழுத்துப் பிடித்துக் கொண்டு “அக்கா நீ கிளம்பு, வண்டில போய் உட்காரு. நான் ஐஸை கூட்டிட்டு வாரேன். இவைய்ங்களும். இவைய்ங்க பஞ்சாயத்தும். அந்தப் பயலுக்கு நம்ம புள்ளை வேணு முண்டா, அவன் சொந்தத்தை அத்துக்கிட்டு வரட்டும், குயிலு வாடி. உன் சித்தியைக் கூட்டிட்டு காரில ஏறு ” எனச் செல்வியை மானூத்துக்கு அனுப்ப பூங்குயிலோடு காருக்கு அனுப்பினான். சிவப்ரியா ,” அத்தை நீ வா. அது […]


 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-3

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-3 ” இது எப்படித் தம்பி முடிவாகும். பொண்ணு பெத்தல்களுக்குச் சொந்தமா இல்லையா. இவ்வளவு பெரிய குடும்பத்தை மறந்துட்டு அது உன்கூட வரத் தயாரா இருக்கா” என மாயத்தேவன் கேட்கவும். ” அப்படி இல்லாமலா அவன் கட்டின தாலியை நெஞ்சில்ல சுமந்துக்கிட்டு கிடக்கா” எனப் பாண்டியம்மாள் இடக்கு பேசினார். ஐஸு அவர்களை மாறி மாறிப் பார்த்தவள், ” ஹரீஸ், இவுங்க என்ன பேசுறாங்க. நான் அப்படியெல்லாம் என் குடும்பத்தை விட்டுட்டு தனியா […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-2

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-2 அடுத்து அனைவர் கவலையும் ஐஸ்வர்யாவிடம் குவிந்தது. மருத்துவன் நல்லவனாகத்தான் இருந்தான், பாண்டிக் குடும்பத்துக்குப் பற்றற்ற புதியவனாய்த் தெரிந்தான். பாம்பென அடிப்பதா, பழுதென ஒதுக்குவதா எனப் புரியாமல் தவித்திருந்தனர். தங்கள் மகளை அவன் தாங்கும் விதத்தில் பழுதில்லை. பகட்டான நடிப்பில்லை. தப்பென்றால் பட்டென உரைத்தான். யார் சார்பும் அவனிடமில்லை. ஆனால் வளர்த்த பாசம் , வந்த குடும்பம் அவனைக் குழப்பியது. அவன் படித்த அனுபவப் பாடம், அவனை வழிநடத்தியது. மருமகன் என்றும், […]


மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-1

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே !-16-part-1 பதின்மவயதில் மனதில் பதிந்தவன். பையவே தொடர்ந்தவனை பாவையவள் பாவை ஓட்டி பார்த்திருந்த நேரம் -பாவி அவன் பார்த்ததோ பக்கத்திலிருந்தவளை. பார்த்துப் பார்த்து பதியமிட்டு வளர்த்த பதின்மக் காதலை ! தன் உயிர் தோழிக்காய் துறந்தாள். தன்னலமின்றி , அவள் நலம் விரும்பி . விருப்பமில்லா மணவாழ்விலும் வீழ்ந்திடவே முயன்றாள். விதியது, இவனுக்கு இவளென விதித்ததை மாற்றுவார் யார்? பரிசம் போட்டு பந்தக்கால் ஊன்றி கவிதை வடிவான கவியவளை கைத்தலம் பற்றக் […]