Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மலர்ந்தும் நாணமேனடா

மலர்ந்தும் நாணமேனடா 23.3

ஒன்றரை வருடமாக அனைவரும் எதிர்பார்த்த வரம் இன்றுதான் கிட்டியது. கல்யாணி “நீ தாய்மாமாவாகிட்ட பார்த்தி” என்றார் சந்தோசத்தோடு.    பார்த்திபன் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க, சிவப்ரியாவிடம் சென்ற பவ்யா, “நான் அத்தையாகிட்டேன்” என சந்தோசித்து அணைத்துக்கொண்டாள் அண்ணியை.    “டாக்டர்கிட்ட போனிங்களா? நான்வேற காரெடுத்துட்டு போய்ட்டேனே” என தவித்தான் பார்த்திபன்.    மனமெல்லாம் மத்தாப்பூதான், ஆனால் இது குறித்து தங்கையிடம் என்ன பேச என அருட்செல்வனிடம் சென்றான் பார்த்திபன்.    பார்த்திபனை கண்டாலே வழக்கமாய் முறைக்கும் அருட்செல்வனிற்கு […]


மலர்ந்தும் நாணமேனடா 23.2

ஒன்றரை வருடம் கழித்து…     “ஏங்க, இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க” என பாவமாய் கோபப்பட்டான் பார்த்திபன்.     மனமிறங்கிய அருட்செல்வன், “என்னடா பிரச்சனை உனக்கு? இன்னும் பத்து நாள்ல கல்யாணம் நடக்கப்போகுதுதான?” என்றான் கோபமில்லாமல்.     “அதேதான்ங்க நானும் சொல்றேன், பத்து நாள்ல கல்யாணம். ஆனா ஒத்த வார்த்தை பேசல, உங்க தங்கை என்னை லவ் பண்றாளோ இல்லையோ, நான் பண்றேங்க. புருசன் பொண்டாட்டி ஆகும் முன்ன லவ்வர்ஸா ஒருநாள் அவளோட ஸ்பெண்ட் பண்ணனும். அனுப்பி விடுங்க” […]


மலர்ந்தும் நாணமேனடா 23.1

அத்தியாயம்  23      ஒரு வாரம் முடிந்திருக்க, காலை ஏழு மணிபோல் அருட்செல்வன் எழ, அருகில் சிவப்ரியா இல்லையென்றதும் குளியலறையைப் பார்த்தான். அங்கும் சத்தமில்லாமல் போக, எழுந்து கதவைத் திறக்க, “டீ சாப்பிடுறிங்களா மாமா?” என நாகராஜனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.     “பவானி கொடுத்துட்டாம்மா, நீ போய் குடி” என நாகராஜன் சொல்ல, “அருள் எழுந்துட்டான் போல, அவனுக்கு எடுத்துட்டு போ” என்றார் தனலஷ்மி.     தனதறையை பார்க்க திறந்திருக்கவும், ஓஹ் எழுந்துட்டாங்களா? என அறைக்குள் போக குளியலறையில் […]


மலர்ந்தும் நாணமேனடா 22.2

     அடுத்தநாள் காலை, எட்டு மணிபோல் கிளம்பி பவ்யாவை விடுதியில் விட்டு வந்தவனிடத்தில், “அருள், பார்த்தி ஸ்கூலுக்கு கிளம்பிட்டானாம்” என முறையிட்டார் தனம்.      “ஏன்? இன்னைக்கு விருந்துனு அவனுக்கு தெரியாதா?” என்றான் அருட்செல்வன்.      “நேத்து சாயங்காலமே சொல்லிட்டேன் அருளு, இன்னைக்கு லீவ் போட முடியாது, நம்ம அத்தை வீடுதானே? லீவ்ல ஒரு நாள் போய் சாப்பிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டானாம்.”  என்றார் தனம்.      நேரம் பார்க்க பத்து மணியாகியிருந்தது, “இந்த நேரம் கால் […]


மலர்ந்தும் நாணமேனடா 22.1

அத்தியாயம்  22      சரவணன் வீட்டில் விருந்து முடித்து “நாளைக்கு பந்தகிடா வெட்டுறோம் சரவணா, எல்லாரும் வந்திடனும்” என்று அன்பு கட்டளையிட்டு கிளம்ப ஆயத்தமானார்கள் அருட்செல்வன் குடும்பம்.     ராகவனின் சொந்தகார பெண்ணொருவர் பேசியதில் மனம் வாடிய சிவப்ரியா பவ்யாவோடுதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தாள் ஆதலால், “எங்களோட சிவா பேசினாதான் வருவோம்” என்றார் ராகவனின் அன்னை.     “ஜீவிதாக்கு எப்போ குழந்தை பிறக்கும்னு கேட்டேனே ஆன்ட்டி” என்க, “உன் ஃப்ரண்டைப் பத்திதான் பேசின. எங்களைப் பத்தி எங்க பேசின?” […]


மலர்ந்தும் நாணமேனடா 21.2

    “உங்க சம்சாரத்துக்கு இதுல விருப்பங்களா?” என்றான் அண்ணாமலையிடம்.     “விருப்பம் இல்லை கண்ணு, ஆனா பார்த்திபன்” என்று நேற்றிரவு மோகனாவிற்கும் பார்த்திபனிற்கும் இடையே நடந்த வாக்குவாதம் அனைத்தும் சொல்லி, “சம்மதிக்க வச்சிட்டான்” என்றார்.     நன்றாகத்தான் கேட்டிருக்கான் என மனதில் மெச்சினாலும், “சொத்திருந்தா பொண்ணு கொடுத்துடுவோம்னு நினைச்சிருக்கான்” என்றான் கோபத்தோடு.     பதறிய அண்ணாமலை, “பார்த்தி அப்படிலாம் நினைக்கமாட்டான் கண்ணு, நீ இப்படி நினைக்கிற மாதிரி யார்கிட்ட என்ன சொன்னான்?” என்றார்.     “சிவாகிட்ட சொல்லியிருக்கான்” […]


மலர்ந்தும் நாணமேனடா 21.1

அத்தியாயம் 21      “மணி ஆறுதான்ப்பா ஆகுது, நீ முதல்ல கோப முகத்தை மாத்து, பவ்யா சிவா இரண்டு பேரும் பேயறைஞ்ச மாதிரி இருக்காங்க” என்றார் சங்கர்.     “பவ்யாவை கூட்டிட்டு உள்ள போ” என்றான் சிவப்ரியாவிடம்.     அருள் என்ன முடிவெடுப்பான் என சிவப்ரியாவிற்கு தெரிந்துகொள்ள வேண்டியிருக்க, “பவ்யா நீ உள்ள போ” என்றாள்.     அருள் முறைக்க, “ப்ச், எல்லாம் நல்ல முடிவாத்தான் இருக்கும், நீ பவ்யாவோட போய் அவ மனசுல என்னயிருக்குனு கண்டுபிடி, இங்க […]


மலர்ந்தும் நாணமேனடா 20.2

பவானி, “டீ போடவா?” என்றார். “டீ வேணும்தான், ஆனா அதுக்கு முன்ன பவ்யாக்கு என்ன பிரச்சனை சொல்லுங்கத்த” என்றாள். தற்போது சொல்லவில்லை என்றாலும் அருட்செல்வன் எழுந்ததும் பவ்யாவிடம் விசாரிப்பான். அதோடு நேற்றிரவு சிவப்ரியா தந்தையிடம் அனைத்தும் சொல்லியிகிற்று, யார் மூலமாவது தெரியத்தான் போகிறது, நாமே சொல்லிடலாம் என, “டீ வைக்கிறேன், குடிச்சிட்டே பேசலாம்” என்று டீ வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தனர். “லைட் போட்டா எல்லாரும் எழுந்துப்பாங்க” “லைட் வேணாம்த்தை, உக்காருங்க” என சிவப்ரியா அமர, “முடியை […]


மலர்ந்தும் நாணமேனடா 20.1

அத்தியாயம்  20     அருட்செல்வன் உறங்கச் சென்றதும், அருணாச்சலத்திற்கு அழைத்து பவ்யாவிடம் பார்த்தி பேசியதை சொல்லி, “என்கிட்ட சொன்னானே, அதோட விட வேண்டியதுதானே? நேரம் வரும்போது நானே பேசியிருப்பேன், காலைலயிருந்து பார்க்காததுக்கே பவ்யா எதாவது சொன்னுச்சா? முகமே சரியில்லையேனு கேட்டான், இன்னைக்கு எதோ சமாளிச்சு தூங்க அனுப்பிட்டேன்.     காலைல எழுந்ததும் பவ்யாவை பார்த்துட்டுதான் வேற வேலை பார்ப்பான். அவ வேற அண்ணன்கிட்ட எதையும் மறைக்கமாட்டா, மோகனாவை நினைச்சே சம்மதிக்கமாட்டான், பார்த்தி மேல உள்ள கோபத்தை யார் […]


மலர்ந்தும் நாணமேனடா 19.2

ஒன்பது மணிபோல் அருள் வர, “என்ன அருளு இவ்வளோ நேரம்? போனும் எடுக்கல?” என குறைபட்டார் தனலஷ்மி.     “வர வழியில் இன்னொரு கேஸாகிடுச்சும்மா, அங்க கரண்ட் வேற இல்லன்றதால டென்ஷன்ல இருந்தேன், அதான் கால் அட்டன் பண்ணல” என்றவன், “பவ்யா எங்க? வர சொல்லு” என உள்ளே சென்று முகம் கை கழுவி வர, “பவ்யா தூங்கிட்டா அருளு, நீ சாப்பிட்டு படு, காலைல பேசிக்கலாம்” என்றார்.     பவ்யாவும் நாகராஜும் வழக்கமாக சீக்கிரம் உறங்குபவர்கள் […]