Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையோடு ஓர் நாள்

மழை மேகம் – 13 (3)

கோடைக் காலம் முடிந்து, கார்காலம் தொடங்கி இருந்தது. ஒரு வாரமாக மழை மெல்ல எட்டி எட்டி பார்த்து விட்டு மறைந்து கொண்டது. அன்றைய தினம் காலையில் இருந்தே சூரியன் விடுமுறை எடுத்திருந்தான். வானம் வெண் மேகமும், கருமேகமும் கலந்து ஓவியம் போல காட்சியளித்தது. மாலை நெருங்கும் வேளையில் முழுதாக கருமேகங்கள் வானை நிறைக்கத் தொடங்கியது. தேவா அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான். “ஏய் பல்லவி, மழையில நனைஞ்ச, உதை விழும்” மிரட்டினான். அவனிடம் உதடு சுளித்து காட்டி […]


மழை மேகம் – 13 (2)

அன்று மதிய உணவு முடித்து, கனிமொழியுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பல்லவி.  “நான் சொல்ற பொருளை எல்லாம் ஒரு லிஸ்டா எழுது டா பல்லவி. மாமா கிட்ட கொடுத்தா வாங்கிட்டு வந்து தந்திடுவாங்க” என்று அவர் சொல்ல, “சரிங்க அத்த” என்றவள், “வீட்டு மளிகை, அப்புறம் மத்த பொருளுங்க தானே அத்த. நானும், தேவாவும் சாயங்காலம் போய் வாங்கிட்டு வர்றோம்” என்று அவள் சொல்ல,  “சரிடா” என்றார் கனிமொழி. அவர் சொல்ல, சொல்ல எழுத தொடங்கினாள் பல்லவி.  […]


மழை மேகம் – 13(1)

திருமணம் முடிந்த மறுநாள் காலையிலேயே தாங்கள் இருவரும் ஆகும்பே கிளம்புவதாக வீட்டில் தெரிவித்து விட்டான் தேவா. அவனுக்கு விடுமுறை தினங்கள் குறைவாகவே இருந்ததால் வீட்டினரால் அவர்களது பயணத்தை தடுக்க முடியவில்லை. அதுவும் தேனிலவு போல செல்ல விரும்பியதை மறுக்க மனமில்லாமல், இரு வீட்டு பெரியவர்களும் அரை மனதாக ஒப்புக் கொண்டனர். காலை எட்டு மணிக்கு, உணவை முடித்துக் கொண்டு, தேவாவின் காரிலேயே செல்லும் எண்ணத்துடன் அவர்கள் இருக்க, கதிர்வேலன் அதை கடுமையாக எதிர்த்தார். அதை பல்லவி வீட்டுப் […]


மழை மேகம் – 12(3)

வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் இருந்தாள் பல்லவி. அவளுக்கு தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்கு துணையாக அங்கேயே நின்றிருந்தாள் சங்கவி. “என்னை ஆள விடுங்க ரெண்டு பேரும். எனக்கு சேலை கட்டத் தெரியும். தலை சீவ தெரியும்” சலித்து கொண்டு சொன்னாள் பல்லவி. “குட்டி பிசாசே, பேசாம உட்காரு” என்ற சங்கவி, ஏற்கனவே அழகாக பின் குத்தி இருந்த தங்கையின் சேலை முந்தானையில், மேலும் இரு […]


மழை மேகம் – 12(2)

அன்று மாலை அவர்களின் திருமண வரவேற்பில் நின்றுக் கொண்டிருந்தனர் இருவரும். அன்று, அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருக்க, அதன் பின்னர் வந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முடித்து, மதிய உணவுக்கு பின் சிறிது நேரமே ஓய்ந்து அமர்ந்தனர். உடனே அவர்களை மாலை வரவேற்பிற்கு‌ தயாராக சொல்ல, முகூர்த்த ஆடைகளை களைந்து, இப்போது வரவேற்பிற்கென வாங்கி இருந்த உடையை மாற்றி விட்டு, அதற்கு தகுந்த நகை, ஒப்பனையுடன் வந்து மேடையேறிய இருவரின் முகத்திலும் ஒப்பனையை மீறிய சோர்வு […]


மழை மேகம் – 12(1)

பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்து கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் அவள். பயணப் பெட்டிகளை கொண்டு வந்து ஹாலில் வைத்து விட்டு, தேவாவும் அவளின் பக்கத்தில் அமர்ந்தான். கஸ்தூரி, கனிமொழி இருவருமே அதுவரை ஏதோ முக்கியமான வேலையில் ஈடுபட்டு இருந்திருப்பார்கள் போலும், அவர்கள் முன்னே பேனாவும், பேப்பரும் இருக்க, கண்ணை சுருக்கி அவர்களைப் பார்த்தாள் பல்லவி. “புது ஹாஸ்பிட்டல் எப்படி […]


மழை மேகம் – 11 (2)

அவளின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தனர் இருவரும். “புது போன் சிட்டிக்குள்ள போனதும் வாங்கிடலாம் பல்லவி” “ஹ்ம்ம், சரி தேவா” என்றவள், “ப்ரெண்ட்ஸ் எல்லாம் காலைல தான் ஊருக்கு கிளம்பினாங்க. நைட் எல்லாம் மழையில ஆட்டம் போட்டு, காலையில அவங்க கிளம்பினதும் தான் தூங்கினேன் தேவா. அதான், உனக்கும், வீட்டுக்கும் கால் பண்ண மறந்துட்டேன். சாரி” என்று அவள் கண் சுருக்கி கேட்க, “ஓகே” என்றவன், “பட், இனி இது போல நடக்கக் […]


மழை மேகம் – 11(1)

“கட்டிக்கலாமா பல்லவி?” தேவா கேட்ட மறுகணமே, அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தாள் பல்லவி. அமர்ந்த வாக்கில் தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள் அவள். தன்னிச்சையாக தேவாவின் கரங்களும் நகர்ந்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியது. உடல் குலுங்க மெலிதாக சிரித்தான் தேவா. “ஏன் சிரிக்கற தேவா?” கோபத்துடன் சிணுங்கினாள் பல்லவி. முகத்தை மட்டும் அவள் கழுத்தில் இருந்து விலக்கி, அவள் முகம் பார்த்து, “நான் கேட்டது இந்த, கட்டிக்கலாமா இல்ல” என்று […]


மழை மேகம் – 10(2)

வெயில் குறைந்திருந்த காலை நேரம், சிலுசிலுவென்று வீசிய காற்றுக்கு உடலை கொடுத்தபடி, ஹாஸ்பிட்டலை விட்டு வெளியில் வந்த தேவா, ஆட்டோ பிடித்து நண்பனின் வீட்டு முகவரியை சொன்னான். அவ்வளவு தான். அவன் வந்த வேலை முடிந்தது. புதிதாக குழந்தைகள் நல மருத்துவரை பணியில் இருத்தி ஒரு வார காலம் ஆகியிருந்தது. மறுநாள் மாலை சென்னை ப்ளைட். அவன் மனம் தானாக மெல்லிசை ஒன்றை இசைக்கத் தொடங்கி இருந்தது. இரண்டு வார பிரிவிற்கு பின் பல்லவியை சந்திக்கப் போவது […]


மழை மேகம் – 10 (1)

சூர்யா, பாரதி இருவருக்கும் சேதுராமன் சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட, அவர்கள் காரை நோக்கி நடந்தனர். சேதுராமன் சோர்வாக நின்றிருந்த மகளை திரும்பிப் பார்த்து, “இங்க வா பல்லவி” என்று அழைக்க, தேவாவின் பார்வை அவளையே வட்டமிட்டது. அவன் நிற்கும் பக்கமே விழிகளை திருப்பவில்லை பல்லவி. அவன் கண்களில் இருந்த சிரிப்பை கவனித்து விட்டு தான், அவன் பார்வையை தவிர்த்தாள் அவள். “என்னாச்சு மா?” என்ற அப்பாவின் கேள்விக்கு, “ஒன்னுமில்ல பா” என்றாள் அவள். கையில் […]