Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழை வரப் போகுதே

மழை ஃபைனல் 23.2

ஆனாலும் குழம்பிய முகத்துடன், “வீட்டை விட்டு போறதுக்கு எதுக்கு மாமா பணத்தை எடுக்கணும்? அதுமில்லாம, நீங்க ஏன் வீட்டை விட்டு போகணும்?” என்று கேட்க, “நிறைய தடவை சொல்லிருக்கேன்! இந்த வீட்ல நான் இருந்ததுக்கு ஒரே காரணம் என் அப்பா மட்டும் தான்! நான் யாரோடவும் அவ்ளோ சட்டுன்னு ஒட்டவே மாட்டேன்! அப்பாவும் இல்லன்னா நான் தனிமரமா சொந்தபந்தம் இல்லாம அநாதரவா போய்டுவேனோன்னு பயந்து தான் என்னை இங்க அனுப்பி வச்சாரு! எங்களுக்குன்னு வேற சொந்தமும் இல்ல […]


மழை 23 ஃபைனல்

  “அட அட… என்ன தம்பி நீங்க? சொன்னா கேட்கவே மாட்டேன்குறீங்களே? என்ன செய்யணும்ன்னு வாயால சொன்னா போதாதா? நாங்கல்லாம் என்னத்துக்கு இருக்கோம்?” வேலையாட்களில் ஒருவர் மனம் கேளாது கேட்டுவிட, “அதனால என்னண்ணே? எனக்கு என் கையால செஞ்சா ஒரு திருப்தி! நீங்க மிச்ச வேலையை பாருங்க நேரமாச்சு!” என்றான் மனோகரன், விரித்திருந்த சிகப்பு கம்பளத்தை லாவகமாய் சுருட்டிக்கொண்டே. அடுத்து மண்டபம் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்த பலவண்ண மலர்களை கழட்டி எடுத்துக்கொண்டிருந்த ஆட்களிடம் மேலும் சில வேலைகளை நியாகப்படுத்திக்கொண்டிருந்தான் […]


மழை 22 prefinal

அறை முழுவதும் இருளில் இருக்க, கதவை திறந்ததால் அதன்வழி விசாலமாய் உள்புகுந்தது கதிரவனின் கால்கள். அடைத்திருந்த ஜன்னல்களை எல்லாம் ஒவ்வொன்றாய் திறந்து விட்டாள் கௌசி. கட்டிலில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த புவனா, கௌசியின் வருகையை பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை. அறை முழுக்க வெளிச்சம் இருந்தது இப்போது. கட்டிலின் மறுகோடி ஓரத்தில் அமர்ந்தாள் கௌசி. ‘எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும்’ என்ற திட்டம் எதுவுமே அவளிடம் இல்லை. ‘ஆனால், பேச வேண்டும்’ என்ற நிர்பந்தம் இருக்க, […]


மழை 21

மனோகரன் தங்கள் பூர்வீக வீட்டில் நிம்மதியாக படுத்திருந்தான். அப்பா அம்மா அக்காள் என குடும்பமாய் அவன் கூடி களித்த நாட்களின் நினைவுகள் எல்லாம் அங்கே தானே மிதந்துக்கொண்டிருக்கிறது. தன் இடம்… தன்னது… தன்னுடையது… என்ற உரிமை உணர்வு எழுவது அவரவர் இடத்தில் தானே!? அந்த நிம்மதியை, ஆசுவாசத்தை ரசித்தபடி படுத்திருந்தான். கண்மூடி கிடந்தவனின் விழிகள் பட்டென திறந்தது. செவிகளும் சற்று கூர்மை பெற, “ஏய்….” என்றான் கண்டுபிடித்து விட்டதன் அடையாளமாய். கதவுக்கு வெளியே நின்ற உருவம் அவன் […]


மழை 20

காலையில் கௌசி கண்விழிக்கையில் மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மணியை பார்த்ததும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவளுக்கு மனம் முழுக்க மனோகரனிடம் பேச வேண்டும் என்பது மட்டுமே!!!   ‘ஒருவேளை மாமா முடியாதுன்னு சொல்லிட்டாலும், நம்ம தெளிவா பேசிடனும்! அவர் கூட இருந்தா தான் நான் இயல்பா, நிம்மதியா, பாதுகாப்பா எல்லாத்தையும் தாண்டி சந்தோசமா இருக்கேன்!’   அரக்கபறக்க குளித்து நல்லதாய் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டவள், வெகு நாட்களுக்கு பிறகு கண்ணாடியில் முகம் பார்த்து தன்னை மிதமாய் அலங்கரித்துக்கொண்டாள். […]


மழை 19

மனோகரனுக்கு இரண்டு நாட்கள் அவசாகம் கொடுத்தவள் அவனோடு வெளியே செல்வதை நிறுத்திக்கொண்டாள். அவனிடம் தெளிவான முடிவு தெரியாமல் அவன் கண் முன்னே செல்ல கூடாது என்று உறுதியாய் நினைத்தாள். அறைக்குள்ளேயே இருந்து நேரம் நகராமல் சண்டி செய்ய, கீழே இறங்கி கூடத்திற்க்கு சென்றவள், அங்கே யாரையும் காணாமல் கிச்சனுக்கு சென்றாள். அங்கே புவனா தனியாய் ஏதோ சமைத்துக்கொண்டிருக்க, வாசனை வேறு பலமாய் இருக்க, ‘வெள்ளிக்கிழமைல மீன் குழம்பா?’ என வியந்துப்போய் வேகமாய் சென்றவள், “ம்மா? என்ன இந்நேரம் […]


மழை 18

மனோவின் பைக் அந்த சாலையில் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இன்றும் கயிறு ஆலைக்கே வண்டியை ஓட்டினான்.   பின்னால் நேற்றை போல கௌசி அமர்ந்திருந்தாலும் அவளிடம் பேசும் எண்ணம் அவனுக்கு துளிக்கூட இல்லை.   “மாமா, எனக்கு பூ வேணும்!” கௌசி வேண்டுமென்றே கேட்டாள்.   அவன் காதில் வாங்கியது போலவே இல்லாது இருக்க, “மாமா, உங்ககிட்ட தான் கேட்குறேன்! எனக்கு பூ வாங்கிக்குடுங்க!” என்றாள் அவன் காதருகே சத்தமாய்.   அசைவேனா என்றான் அவன்!!!   […]


மழை 17

‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே… நீலம் கூட வானில் இல்லை, எங்கும் வெள்ளை மேகமே…! போகப்போக ஏனோ நீளும் தூரமே… மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே!!!’ “இன்னும் கொஞ்சம் சாய்ஞ்சுக்கிட்டே போனன்னா, நம்ம ரெண்டு பேரும் ரோட்ல தான் கடக்கணும்!” என்ற மனோவின் குரலில் பாடலின் இதத்தில் இருந்து பட்டென வெளியே வந்தாள் கௌசி. அவனது பைக் அந்த சாலையில் சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்க, அவர்களுக்கு சற்று அருகில் வந்துருந்த வாகனத்தில் […]


மழை 16

இரவு உணவு முடிந்து எல்லோரும் கூடத்தில் ஆங்காங்கே அமர்ந்திருக்க, மஞ்சள் மிளகு போட்ட பாலை மிதமான சூட்டில் ஆற்றி கொண்டு வந்து அன்பழகனிடம் நீட்டினார் புவனா. அதை வாங்கக்கூட செய்யாமல் கவனமின்றி அவர் அமர்ந்திருக்க, “ஏங்க! புடிங்க” என்றதும், கவனம் சிதற, அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டார் அவர். “என்ன பாக்குறீங்க அப்படி?” “ம்ம்… எல்லாம் உன் மவன் பண்றது தான்! முன்னாடி பொறுப்பில்லாம இருந்து என் நிம்மதியை கெடுத்தான்! இப்போ ஒரு வாரமா ஓவர் பொறுப்பா இருந்து […]


மழை 15

மொட்டை மாடியில் வெறும் தரையில் கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் மனோகர். இரவு வானின் இருளை அவன் கண்களில் வெறித்திருந்தாலும் மனம் முழுவதும் இரு நாட்கள் முன்பு கெளசி பேசிவிட்டு சென்றதிலேயே தான் நின்றது. கழுத்தில் கிடைந்த சங்கலியை அவள் எடுத்து நீட்டிய நொடி, அதில் இருந்த மங்கல்யத்தை கண்டவனுக்கு தன்னை மீறி ரோமக்கால்களில் சிலிர்ப்பு ஓடியது நிஜம். அதை அவன் கட்டிய நிமிடமும், அதை தொடர்ச்சியும்….மனம் தன்னால் பின்னோக்கி ஓடியது. அந்த நடுநிசி நேரம் வீட்டின் […]