Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி முத்தங்கள்

மார்கழி முத்தங்கள் – 4

முத்தம் 4 “இப்படியே நீ பேசினா நான் சாகத்தான் போறேன் டா” ஆத்திரம் தலைக்கேற கத்தினாள் தெய்வானை, கணவனை இழந்து நான்கு மாதம் மட்டுமே ஆகியிருக்க, அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்தே மீளமுடியவில்லை. அவள் மட்டும் என்றால் கூட தேறியிருப்பாள், குழந்தையோடு இருக்க உடல் மனம் எல்லாம் அவளை துவளச் செய்தது. “சாவுடி, இப்படி குழந்தையைப் பத்தி யோசிக்காம சாவேன்னு தெரிஞ்சா உன் ஸ்வரூப் என்ன நினைப்பான்? அவனோட குழந்தையை சுமக்கிற நினைப்பு இருக்கா டி […]


மார்கழி முத்தங்கள் – 3

முத்தம் 3 “நீ எப்போ இவ்வளவு பொறுமையா மாறின தேவ்?” காரில் போகும்போது மகனிடம் வேதா தேவாரனிடம் கேட்கவும் லேசாய்த் திரும்பி அம்மாவைப் பார்த்தவன் “ஜூஸ்தானே, போயிடும்” என்றான் அசட்டையாக. மகனின் பதிலில் கடுப்பானவார் “நீ செஞ்சது தேவையில்லாதது தேவ், தெய்வாவை அவ போக்குல விடனும், அவ புருஷன் செத்து நாலு மாசம்தான் ஆகுது. இப்படித்தானே இருப்பா அவ” என்றார் வேதா. “இப்படியே இருக்கிறதால உனக்கு சந்தோசமா ம்மா?” என்ற மகனின் கேள்வியில் “வாயை மூடு தேவ்! […]


மார்கழி முத்தங்கள்- 2

முத்தம் 2 தேவாரன் அடுத்த நாள் காலையில் எழுந்தபோது தெளிந்து இருந்தான். எதிர்ப்பாராத நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்க, முடிந்ததை என்ன செய்ய முடியும் என்ற தெளிவு பிறந்தது. அவனை விட தெய்வாவை நினைத்து மனம் தவித்தது, துடித்தது. வெளியே காட்டவே இல்லை. உள்ளம் என்ன நினைக்கிறது என்று வெளியே காட்டாத முகம். தெய்வா அப்படி இல்லை உணர்வுகளின் கண்ணாடி. பொய் சொன்னால் கூட மறைக்க முடியாது அவளால், அப்படியான உணர்வுகளைக் கொட்டும் முகம். தெய்வாவை நினைத்தவன் வேகமாக […]


மார்கழி முத்தங்கள் – 1

முத்தம் 1   மார்கழி அழகானது என்று அறிந்தது அவள் வந்தபோதுதான்! மார்கழி இயல்பில் அழகா இல்லை அவளால் அழகாகிப்போனதா அறியேன் நான்! முதன்முதலில் அவளைப் பார்த்தது ஒரு மார்கழித்திங்களில், அன்று பெரிதாய் முக்கியத்துவம் பெறவில்லை அந்நாள். பத்து வயதில் பக்கத்து வீட்டிற்கு ஒரு பெண் வந்திருக்கிறாள் என்றால் என்ன தோன்றிவிடும் பெரிதாக? அதுவும் அந்த பெண்ணை, ஒற்றை மகனைப் பெற்ற என் தாய் “டேய் வம்சி! பக்கத்து வீட்டு ஜானு பாப்பா எவ்வளவு அழகா பேசுறா […]