Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூங்கில் புன்னகையே

மூங்கில் புன்னகையே..! – 11

மூங்கில் 11: வெற்றியையும், வர்ணிகாவையும் ஜோடியாய் பார்த்த வினிதாவின் நெஞ்சம் நிறைந்து போனது. வெற்றி நேராக அவளை அங்கு தான் அழைத்து சென்றிருந்தான். வர்ணிகாவைப் பார்த்ததும் முதலில் வினிதா தலை நிமிர்ந்து பேசவேயில்லை. அவளின் முகத்தைப் பார்த்து பேசவே அவரால் முடியவில்லை. ராஜேஷ் செய்து வைத்திருந்த காரியத்திற்கு வினிதா தான் தலை குனிய வேண்டியிருந்தது. “என்னம்மா இதெல்லாம்..?” என்றாள் வர்ணி கலங்கிய கண்களுடன். “உன்னை நேரா பார்த்து பேசுற தகுதி கூட எனக்கு இல்லை வர்ணி. எங்களுக்காக […]


மூங்கில் புன்னகையே..! – 10

மூங்கில் 10: “சார் நீங்க எங்களை அனுப்பி வைக்கப் போறிங்கன்னு பிகாரி சார் சொன்னது தான் மாயம்.. மேடம் முகம் அப்படியே மாறிப் போய்டுச்சு. எதுக்கு அப்படி மாறுச்சுன்னு இப்பத் தான் தெரியுது…!” என்றார் ஜெர்சி. “அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றாள் கடுப்புடன். “ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லியே எங்களை ஒருவழியாக்கிட்டடி..” என்ற லோகா அவளைப் பார்த்து சிரித்து வைக்க, அவளை முறைத்து வைத்தாள் வர்ணிகா. “நாங்க நிஜமாவே இந்த இடத்தை மிஸ் பண்ணுவோம் சார். என்ன ஒரு குறை.. […]


மூங்கில் புன்னகையே..! – 9

மூங்கில் 9: வர்ணிகா வாயைத் திறந்து பேசுவாள் என்று வெற்றியும் காத்திருக்க, அவளானால் வெளியே சொட்டிக் கொண்டிருந்த அந்த மழை நீரை வெறித்துக் கொண்டிருந்தாள். “பேசனும்ன்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி நிகா..?” என்றான் அவளின் மௌனத்தை கலைக்கும் பொருட்டு. திரும்பி அவனை ஆழ்ந்து பார்த்தவள், “எங்கப்பாவைப் பத்தி என்னை நினைக்கிறிங்க..?” என்றாள் எடுத்த எடுப்பில். ‘கொன்னு புதைக்கணும் போல இருக்கு..’ என்று மனதில் நினைத்தவன், “அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு..?” என்றான் மேம்போக்காய். […]


மூங்கில் புன்னகையே..! – 8

மூங்கில் 8: மேகநாதன், வெற்றியிடம்  சொன்னதைக் கேட்ட பொன்னிக்கும் அதிர்ச்சி தான். அவருக்கு இப்படி ஒரு காரணம் இருந்ததே இப்போது தான் தெரியும். “நீங்க வெற்றிகிட்ட சொன்ன விஷயமெல்லாம் உண்மையாங்க..?” என்றார் பொன்னி. “அவன்கிட்ட பேசும் போது கேட்டுகிட்டு தான இருந்த..? மறுபடியும் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..?” என்றார் மேகநாதன். “இது தான் விஷயம்ன்னா நீங்க வெற்றிகிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாம். தேவையில்லாத மன உளைச்சல் ஆகியிருக்காது. அவனும் உங்கமேல கோபப்பட்டிருக்க மாட்டான்..” என்றார் பொன்னி. “கோபப்பட்டிருக்க […]


மூங்கில் புன்னகையே..! – 7

மூங்கில் 7: பொன்னி வீட்டிற்குள் நுழையும் போதே அவரை கவனித்து விட்டிருந்தார் மேகநாதன். கண்டிப்பாக பொன்னி எங்கே போய் விட்டு வருகிறார் என்று மேகநாதனுக்கு தெரிந்தே இருந்தது. இருந்தாலும் தெரியாதவரைப் போல் கேட்டு வைத்தார். “இந்த நேரத்துக்கு எங்க போயிட்டு வர்ற பொன்னி..?” என்றார். “எதுக்குத் தெரியாத மாதிரி கேட்குறிங்க..? நீங்க தெரிஞ்சே தான் கேட்குறிங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் மருமக வீட்டுக்குப் போய் அவங்கம்மாவைப் பார்த்து பேசிட்டு வரேன்..போதுமா..?” என்றார் பொன்னி. “வரவர வாய் […]


மூங்கில் புன்னகையே..! – 6

மூங்கில் 6: தூரத்தில் வெற்றி, வர்ணிகாவை தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த ஜெர்சிக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது. லோகாவிற்கு ஒரு பக்கம் கருகுவதைப் போல் இருக்க, வெற்றியின் கையில் இருந்தவளுக்கோ, அவனை அப்படியே நாலு சாத்து சாத்த வேண்டும் போல் இருந்தது. சூழ்நிலையும், உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காததே முதற் காரணம். “என்ன லுக்கு..? இப்படி பார்க்காத மாதிரி தான் என்னைய சைட் அடிக்கனும்ன்றது இல்லை. நேரா பார்த்தே சைட் அடிக்கலாம்..” என்றவன் லேசாக சிரித்து […]


மூங்கில் புன்னகையே..! – 5

மூங்கில் :5 மண்டபத்தில் இருந்து நேராக வீட்டிற்கு சென்ற வர்ணிகாவின் நிலையை யாரும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஆங்காரமாக அனைத்தையும் கழற்றி எறிந்தாள். “இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இப்படி பண்ற வர்ணி. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். மாப்பிள்ளையைப் பார்த்தா ரொம்ப நல்லவராத்தான் தெரியுது..” என்றார் வினிதா. “அம்மா..! ப்ளீஸ்..! இதுக்குமேல அவன் கிட்ட போய் யாரும் பேசக் கூடாது. என்ன தைரியம் இருந்தா அப்படி பேசுவான்..? அவனை, நீங்க எல்லாரும் தான் பெரிய தியாகி ரேஞ்சுக்கு […]


மூங்கில் புன்னகையே..! – 4

மூங்கில் 4: வெற்றிக்கு ஒரு யோசனையும் பிடிபடவில்லை. அதே நேரத்தில் பெண் வீட்டில் இருந்தும் யாரும் வந்து அவனைப் பார்க்கவில்லை. அதுவே அவனுக்கு பெரிய சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. ‘இதை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. நாமளே நேரா களத்துல இறங்கிட வேண்டியது தான்..’ என்று நினைத்தவன், “அம்மா..! பொண்ணு வீடு எங்க இருக்கு..?” என்றான் போன்னியிடம். பொன்னி பதில் சொல்வதற்கு முன்பு, மேகநாதனின் குரல் பின்னிருந்து கேட்டது. “ஏன்..? அதைத் தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற..?” என்றார் […]


மூங்கில் புன்னகையே..! – 3

மூங்கில் 3: வெற்றியின் வீட்டில்… “என்ன சொன்னான் உன் மகன்..?” என்றார் மேகநாதன். இவர் தான் வெற்றியின் அப்பா. அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல, பொன்னிக்கு விருப்பமில்லை. ஆனால் அவரிடம் சொல்லாமல் இருந்தால் அதுவும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும். “சும்மாதாங்க பேசுனேன். வெற்றியைப் பார்த்து ஆறுமாசமாச்சேன்னு நான் தான் அவனுக்கு போன் பண்ணேன்..” என்றார் பொன்னி. “அது தான் நல்லாத் தெரிஞ்ச விஷயமாச்சே. இப்படியே பாசத்தைப் பிழிஞ்சு பிழிஞ்சு தான் அவனை உருப்படவிடாம பண்ணிட்டு இருக்க […]


மூங்கில் புன்னகையே..! – 2

மூங்கில் 2: தான் தங்கும் இடத்திற்கு வந்த பிறகும் கூட வெற்றியால் ஒருநிலையில் இருக்க முடியவில்லை. மீண்டும் மனதிற்குள் இருந்த எண்ணங்கள் தலைதூக்க, என்ன செய்வதென்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். “எதுக்கு வெற்றி இப்படி நடந்துகிட்டு இருக்க..?” என்றது அவனின் மனம். ‘காரணம் உனக்குத் தெரியாதா..?’ என்றான் பதிலாய். “காரணமெல்லாம் தெரியத்தான் செய்யுது. நடந்து முடிஞ்சதைப் பத்தி எத்தனை தடவை யோசிச்சாலும் அது மாறப்போறது இல்லை..” என்றது மனம். ‘அது எனக்கும் தெரியும். இந்த […]