Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெல்ல மயங்குது என்னிலை

மெல்ல மயங்குது என்னிலை இறுதி 2

நம்ம கையால கொல்லலனாலும், வாய்ப்பு கிடைக்கும் போது யார் மூலமாவது அவனை பழிவாங்கியே தீரனும்னு நினைச்சிட்டிருந்தேன். என்னைக்கு உன் பேத்தி என்னை கட்டிக்க சம்மதிச்சாளோ அன்னைக்கே முழுசா பழிவாங்கும் எண்ணத்தை விட்டுட்டேன் தாத்தா.       அவனை கொன்னாலும், என் அப்பாம்மா வரப்போறதில்ல.. ஆனா என் அம்மா மாதிரி பிரச்சனையை சந்திக்கிறவங்களுக்கு உதவி செய்தா என் அம்மா ஆத்மா சாந்தியடையும், என் அப்பா என்னை ஆசிர்வதிப்பார்னு தெளிவானேன் தாத்தா.     என்மேலான உன் பேத்தியோட விருப்பம்தான் என்னை மனுசனாக்கினது. […]


மெல்ல மயங்குது என்னிலை இறுதி 1

மெல்ல மயங்குது என்னிலை..     அத்தியாயம் .. 21    பத்து நாள்கள் முடிந்திருக்க.. எனக்கு படிக்க விருப்பமில்லையென இரண்டு நாட்களாய் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் தாமரை.    படித்தே ஆகவேண்டும் என தன் முடிவிலிருந்து மாறவில்லை மதியழகன்.      அடுத்த காரணமாக “என் புக்ஸ் அங்க எங்க வீட்டுல இருக்கு, எப்படின்னாலும் நாளைக்கு போக முடியாது.” என்றாள்.      சிரித்தவன்.. “இரண்டு நாள் முன்ன மஞ்சு நம்மளை பார்க்க வந்தாயில்ல? அப்பவே உன்னோடதை எடுத்துட்டு வர சொல்லிட்டேன், […]


மெல்ல மயங்குது என்னிலை 20.2

காமாட்சியும் கதிரேசனும் கிளம்பிய பின்னே, உண்மையில் பெண்ணை காப்பாற்றத்தான் போனாயா என விசாரித்து, அங்கு நடந்ததை கேட்டறிந்த பின்னே.. முன்புபோல் தன் மகன் மருமகள் படத்தை எடுத்து வந்து, இனி இப்படி வம்பிற்கு போகமாட்டேன் என சத்தியம் செய்ய சொல்லி மிரட்டினார் பழனியப்பன்.     “இலக்கற்ற வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கை போல தாத்தா.. அப்படி வாழ்க்கைக்கு உடன்படுவதை விட மன்னிக்க முடியாத குற்றம் வேறெதுவும் இல்லை.” என தாய் தந்தையர் மீது சத்தியம் செய்ய மறுத்தான் மதியழகன். […]


மெல்ல மயங்குது என்னிலை 20.1

     மெல்ல மயங்குது என்னிலை..        அத்தியாயம் .. 20     வாசலில் அமர்ந்திருந்த பழனியப்பனின் அழுகுரலில் உள்ளிருந்த கதிரேசன், காமாட்சி தாமரை அனைவரும் அவசரமாய் வெளியே வந்தனர்.     பேண்ட் போட்டு சென்ற மதியழகன், தற்போது லுங்கியோடும், சோர்ந்த முகத்தோடு வந்திருக்க.. “என்னாச்சுங்க?” என தாமரையோடு அனைவரும் மதியருகே அருகே வந்தனர் பதட்டத்தோடு.    சீருடையில் இருக்கும் மித்ரனைக் கண்டதும், போன இடத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் ஆகிவிட்டதோ என.. “என்னாச்சு மதி?” என்று பதறினார் […]


மெல்ல மயங்குது என்னிலை 19

மெல்ல மயங்குது என்னிலை..          அத்தியாயம் .. 19      ரஞ்சித் இருக்கும் மருத்துவமணைக்கு மதியழகனும்  மித்ரனும் வந்தனர். வீல் சேரில் அமர்ந்திருந்த மதியழகனைக் கண்டதும் ரஞ்சித் நன்றியோடு கண்ணீர் வடிக்க.. “ஏய் ச்சீ.. அப்படி பார்க்காத.” என அதட்டி, “என் குடும்பத்தை நாசமாக்கின உனக்கு நல்லது செய்யற அளவுக்கு நான் மகான் இல்ல. என்னை நன்றியோட பார்க்காத, உன் நன்றியை எதிர்பார்த்து உன் பேத்தியை காப்பாத்த நினைக்கல..” என முறைத்து..    “எங்கப்பாக்காக உன் பேத்தியை […]


மெல்ல மயங்குது என்னிலை 18.2

புரோட்டோ வாங்கினானா? என யோசித்த மதியழகன் அருகிலிருந்த மருந்தகத்திற்கு சென்று மயக்கத்தை உண்டாக்கும் மருந்தை கேட்க, கடைக்காரன் தர மறுத்தான்.      பல வாதத்திற்கு பிறகு வேறு வழியின்றி குழந்தையை காப்பாற்ற வேண்டியென்று எடுத்துரைத்தும் கடைக்காரன் தர மறுக்க, இனி இவனிடம் கேட்டு லாபமில்லை பல யோசனைகளோடு ஜஷ்வந்த் சொன்ன இடத்திற்கு அருகே சென்றவன் பைக்கை ஓரிடத்தில் நிறுத்தி இவன் வேறொரு மறைவில் நின்றான்.     சற்று நேரத்தில் ஜஷ்வந்த் வர, வேறொரு மறைவிலிருந்து அவ்விடம் வந்தவன்.. […]


மெல்ல மயங்குது என்னிலை 18.1

மெல்ல மயங்குது என்னிலை..       அத்தியாயம் .. 18        ரகுவரனிடம் பேசிவிட்டு, தாமரையோடு பேசிக்கொண்டிருந்த கதிரேசனிடம் வந்தவன்.. “மாமா என் பழைய ஸ்டூடண்ட்டோட தங்கையை யாரோ கடத்திட்டாங்களாம், ஹெல்ப் கேக்குறான், நான் வர எவ்வளோ நேரமாகுமோ தெரியாது, தாமரையை உங்களோட அழைச்சிட்டு போங்க, நான் வந்து கூட்டிட்டு வந்துக்கிறேன்.” என்றவன், தாத்தாவிடமும் இதையே சொல்லி.. “பத்திரமா இருங்க தாத்தா.” என்று..       தாமரையிடம்.. “ஹெல்ப் பண்றதா நினைச்சிட்டு காலேஜ்ல யாருக்கும் சொல்லிடாத, கடத்தின பாப்பா உயிருக்கு […]


மெல்ல மயங்குது என்னிலை 17.2

ஆறரை மணிக்கு தாமரையை எழுப்ப “ம்ம்..” என சிணுங்கியவாறு தூக்கத்தை தொடர்ந்தாள். “ஹே.. உன் டிரெஸ் எங்க?” என மதி கன்னம் தட்டி சிரிக்க.. பட்டென விழித்தவள் தன்னை ஆராய்ந்து முறைத்தாள் மதியழகனை.      “இல்ல நைட்டி போட்டுருக்கியே, நேத்து போட்டுருந்த சாரி எங்கனு கேட்டேன்.” என்றான் சிரிப்போடு.     “போங்க..” என நாணித் தலைகவிழ.. “எழுந்து குளி, அத்தை மாமால்லாம் வந்திடுவாங்க, கோவில்க்கு போகனும். போய்ட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்குவியாம்.” என்றான்.      “அச்சோ ஆமாம்ல? […]


மெல்ல மயங்குது என்னிலை 17.1

மெல்ல மயங்குது என்னிலை    அத்தியாயம் .. 17    மஞ்சு வரதுக்கு சாயங்காலம் ஆறு மணியாகிடும், ஆறு மணிக்கு மேல பொண்ணை வீட்டை விட்டு அனுப்பமாட்டேன், கிளம்பறதுனா இப்பவே கிளம்புங்க, இல்ல காலைலதான் கிளம்பனும் என காமாட்சி கட்டளையிட, மாலை ஐந்து மணிக்கெல்லாம் மனைவியோடு கிளம்பினான் மதியழகன்.     நாளை காலை விருந்திற்கு வரும்போது மாமாவை கூட்டிட்டு வரேன் என்றார் கதிரேசன். தனக்காக மதி இன்னொரு முறை வந்து அழைத்து செல்ல வேண்டுமேயென பழனியப்பனும் சம்மதிக்கவே, […]


மெல்ல மயங்குது என்னிலை 16 2

          புன்னகையோடு மதி அவனறைக்குள் உடை மாற்ற செல்ல.. “தப்புதான்டிம்மா, படிக்கிற புள்ளையாச்சேனு உன்னையெல்லாம் சொகுசா வளர்த்தினேன் பாரு.. நான்தான் தப்பு.” என்றார் பொய் கோபத்தோடு.      “அப்பா வரலையா?” என்றாள் ஆவலாய்.      “வராம இருப்பாரா? உன் தாத்தாகிட்ட பேசிட்டிருக்கார்.” என்க.. தந்தையை காண சென்றாள் ஆவலோடு.      “அப்பா..” என கட்டிக்கொண்டு மௌனக்கண்ணீர் வடிக்க..  “ஹே..  தாமர.. எதுக்குடா அழற?” என மகளின் முதுகை தடவிக்கொடுக்க.. “பிடிச்சிருந்தும் அடுத்தவனிற்கு தன்னை விட்டுக்கொடுக்க இருந்தவனை என்னவென்று சொல்வதென.. “சும்மா […]