அதிரன் தாடியும் வைக்க கூடாது. மீசையும் எடுக்க கூடாது. மேகாவின் ஆசைகள் இவை. படம் என்று வருகையில் அந்த பாத்திரமாகவே சில நாட்கள் இருக்க நேரிடும். இப்போதும் ஒரு கிராமத்து கதையில் இப்படியான தோற்றத்தில் தான் அவன் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தான். “டேய் பொண்ணே, படுத்தறடா நீ…” என அவள் விலகலில் அதிரன் சொல்ல, “இந்த மூவியோட லாஸ்ட் ஷூட் நேத்து தானே…” என மேகா இடுப்பில் கை வைத்து கேட்க தனது அடர்ந்த சிகையை கலைத்துக்கொண்டே தலையசைத்தவன், […]
மேகம் – 42 அன்று குழந்தைகளின் பேரன்ட்ஸ் மீட்டிங். பள்ளியில் இருந்து முன்பே அழைப்பு வந்திருக்க மேகா கிளப்பிக்கொண்டு இருந்தாள். “ம்மா அப்பா…” என்றாள் ஸ்பூர்த்தி. “தங்க பொண்ணு, அப்பாவுக்கு வேலை இருக்கு தானே? அம்மா வரேன்டா குட்டிம்மா…” என குழந்தைக்கு தலை வாரிக்கொண்டிருந்தாள் மேகா. அருகே இன்னொரு குஷன் சிட்டரில் நந்தன் கால்களை ஆட்டியபடி கைகளை சுழற்றிக்கொண்டே வேடிக்கை பார்த்தான். “லாஸ்ட் மந்த் கூட சேம் ரீஸன் ரித்தி….” என்றான் நந்தன் தாயை மாட்டி […]
சற்று நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியிருந்தது. அதிரன் இவர்கள் வரவுமே குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். இப்போது அவனால் பேசவும் முடியாது. வந்தும் பார்க்க முடியாது. ஆரம்பித்ததில் இருந்து முன்னுரை முடிந்த பின் மூன்றாவதாக அவன் பாட இருந்தான். அவனை எப்போது காண்போம் என்று இருக்க ஓர் இலகுவான ஷர்ட், ஜீன்ஸில் மேடையில் தோன்றினான் அதிரன் தேவராஜ். மைதானமே ஆர்ப்பரிக்க ஆங்காங்கே இருந்த பெரிய எல்.ஈ.டி திரைகளில் அதிரன் புன்னகையுடன். ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், அதன் கீழ் துடிக்கும் […]
மெல்ல கைகளை கொண்டு சென்று இரு குழந்தைகளின் கன்னத்தையும் விரல் கொண்டு தொட்டு, “அச்சோ சாஃப்ட்…” என சிலிர்த்து சிரித்து. “மாமா கிஸ் பண்ணட்டா?…” என்று கேட்க, “அஷ்வின் சும்மா கையால தொட்டு கொஞ்சிக்கோ. இப்ப முத்தம் குடுக்க கூடாது…” என்று மோனி சொல்லவும் அஷ்வின் இரண்டு முகம் மாற, “நீ குடு சேம்ப் இங்க…” என்று நெற்றியை காட்டினான் அதிரன். இரண்டு குழந்தைகளின் நெற்றியிலும் மெல்ல முத்தமிட்டுவிட்ட அஷ்வின் கை தட்டி சிரிக்க, “மாமாவுக்கு இல்லையா […]
உறக்கம் வராமல் வலைதளத்தை பார்வையிட்டபடி இருக்க அன்றைய லைவ் ட்ரேண்டிங்கில் முதலில் இருந்தது யூட்யூப்பில். அத்துடன் எடிட்ஸ் , மீம்ஸ் மேகாவின் முகத்துடன் அதிரன். அதிரன் மேகாவுடன் பேசிய காட்சிகள் மட்டும் தனியே, அஷ்வினுடனான பேச்சு என இப்படி இடம் பிடித்திருந்தது. ஒரு தலையசைப்புடன் பார்த்தபடி இருந்தான் அவன். அந்த புகைப்படத்தில் மேகாவின் முகம் அவனை இம்சித்தது என்றைக்கும் போல் இப்போதும். மேகாவிற்கான அதிரனின் இந்த பிரத்யோக தவிப்புகள் மட்டும் அவனிடத்தில் குறையவே இல்லை. நாளுக்கு நாள் […]
மேகம் – 41 ‘கட்’ என்னும் சத்தத்தில் அந்த கடலின் அலையில் இருந்து மெல்ல நகர்ந்து கரைக்கு வந்தான் அதிரன். சண்டோரிணி, கிரீஸ் நாட்டிற்கு வந்திருந்தனர் படப்பிடிப்பு குழுவினர். அந்த திரைப்படம் புதிதாய் அதிரன் ஒப்புக்கொண்டிருக்கும் படம். இந்த படத்தின் இயக்குனரும் பரத் என்பதால், கதையும் பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டான் மறுபேச்சின்றி. இதோ காட்சிகள் முடிந்து பாடலுக்கென்று அங்கே வந்து குழுமியிருந்தனர் அவர்களின் பிரடக்ஷன் டீம். அது அவனுக்கு மட்டுமான சோலோ ஷாட். அலையில் நடனமாடிவிட்டு […]
அவனின் பின்னோடு செல்ல மனது உந்த எழுந்து அதிரனை தேடி சென்றது அவனின் மேகம். மேகாவின் வருகையை உணர்ந்தவன் திரும்பவில்லை. அமைதியாய் நின்று ஒரு கையினால் வீணையை மீட்ட அவனுக்கு ஸ்வரம் வாய்க்கவில்லை. “ப்ச்…” என்று சொல்லிக்கொண்டவன் மீண்டும் முயன்றான். மனது ஒருநிலையில் இல்லாதிருக்க ஒருநிலைப்படுத்தி வாசிக்க முடியவில்லை அதிரனால். “அதி…” என பின்னிருந்து அணைத்துக்கொண்டவளை ஒரு கையால் முன்னிழுத்து இறுக்கமாய் கைகளுக்குள் நிறுத்தினான். “மேகாடா, என்னடா பண்ண? என்னை என்ன பன்ற நீ?…” என்று அவளின் […]
இருவரும் பேசியபடி ஹாலுக்கு வர அதிரன் மாத்திரைகளை தானே போட்டிருந்தான். “நான் வந்து எடுத்து தந்திருப்பேனே?…” என்றாள் அதிரனிடம். “அதனால என்ன? போட்டாச்சு…” என்று சொல்லியவன் சுபத்ரா குலோப் ஜாமூன்கள் ஜீராவில் மிதக்க தனி தனி கிண்ணங்களில் போட்டு எடுத்து வந்தார். “மேகா அதை வாங்கி குடு எல்லாருக்கும்…” என்றவன், “ம்மா நீங்க உட்காருங்க. ஸ்வீட் மேகா குடுப்பா…” என்றான் புன்னகையுடன். அதிரனின் பார்வை அர்த்தம் பொதிந்து மேகாவிடம் மையம் கொண்டிருக்க பார்த்ததும் மோனிக்கு புரிந்துவிட மேகாவை […]
அவள் அதிகமாய் பயந்ததே தேவராஜ் என்ன சொல்வாரோ என்று தான். இப்போது அவரே ஒப்புக்கொள்ள மகிழ்ச்சியுடன் அதிரனுக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று பார்க்க கிட்சனுக்குள் செல்ல, “ம்மா…” என அழைத்தவன், “குலாப் ஜாமூன் செய்ங்க…” என்றான். “என்ன?…” சுபத்ரா ஆச்சர்யமாக கேட்க, “சாப்பிடனும்னு தோணுது…” “இப்பவே பன்றேன் அதி….” என அவரும் உள்ளே ஓடினார். “இன்னைக்கு ஊருக்கே செய்யற மாதிரி செய்ய போறா உன் அம்மா…” என தேவராஜ் சொல்ல அதிரன் புன்னகைத்து, “செய்யட்டும் ப்பா…” என்றதும் […]
மேகம் – 40 காலை அதிரன் எழுந்துகொள்ளும் முன்பே மேகா எழுந்துவிட்டாள். மாத்திரையின் உபயம் ஆழ்ந்த உறக்கம் அதிரனுக்கு. அவனுக்கான நர்ஸ் கீழே வந்து காத்திருந்தார். அவருடன் சுபத்ரா பேசிக்கொண்டிருக்க மேகா வரவும் மருமகளை அழைத்தார். “என் மருமக, அதிரன் வொய்ப்…” என அறிமுகப்படுத்தவும், “தெரியும் மேடம். நேத்து ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்…” என்றார் அவர். அனுபவமிக்க செவிலியராக பார்க்க தெரிந்தார். முகத்திலும் அவ்வளவு கனிவும், மரியாதையும். “அதி எழுந்தாச்சா வரு?…” என சுபத்ரா மருமகளிடம் கேட்க, […]