கலிஃபோர்னியாவில் இருந்து துபாய் நோக்கி பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் அமர்ந்திருந்த நந்தா கடைசி நாளில் அன்பு அவனுக்கு அழைத்து செய்ய சொன்னதை மனதில் ஒருமுறை நினைவு கூர்ந்துக் கொண்டான். “மாப்பிள்ள உன்னோட மெயில் செக் பண்ணு. துபாய் விசா அனுப்பி இருக்கேன். துபாய்ல இருந்து சென்னை ப்ளைட் ஏறாம வெளில வந்துடு. எனக்கு அங்க கொஞ்சம் வேலைகள் இருக்கு. எனக்கு பதிலா அதை, நீ முடிச்சுட்டு வந்திடு டா” என்று சொல்ல, அதிர்ச்சியில் நந்தாவிற்கு பேச்சே வரவில்லை. […]
அன்றிரவு கல்லூரி முடிந்து வீடு திரும்பவே மிகவும் தாமதம் ஆகி விட, வேறு எதையும் கவனிக்கும் மனநிலை இல்லாமல் சமைக்க ஓடினாள் அஞ்சலி. “அக்கா எங்க அத்த?” அவள் கேட்க, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்த சுகுணா, “தெரியல மா. எங்கயோ வெளில போய் இருக்காங்க போல, ரெண்டு பேரும்” என்று சொல்ல, “அவங்களுக்கும் சேர்த்து தானே டின்னர் செய்யணும்? இல்ல, அவங்க வெளில சாப்பிட்டு வந்திடுவாங்களா அத்த?” “தெரியலையே மா. எதுக்கும் சேர்த்தே செய்திடு” அவர் […]
அஞ்சலி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மெலிதான இசையொலி காதில் ரீங்கரித்து அவளின் உறக்கத்தை கலைக்க, சிணுங்கி போர்வையை இழுத்து தலை வரை போர்த்தினாள் அவள். இசை நின்று இப்போது குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்க, “ப்ச், அதுக்குள்ள காலைல ஆகிடுச்சா?” மெல்ல புலம்பிக் கொண்டே உறக்கத்தை தொடர்ந்தாள். ஆனால், அவளது உறக்கத்தை தொடர விடவில்லை அலைபேசி. மீண்டும் அது விடாமல் சத்தமாக ஒலியெழுப்ப, மெல்ல கை நீட்டி, படுக்கையை ஒட்டி இருந்த மேஜையின் மேலிருந்த அலைபேசியை எட்டி […]
மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த அந்த பெரிய வீட்டின் பரந்து விரிந்த தோட்டத்தில் நின்று பல விதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள் அவர்கள். புகைப்பட கலைஞர் சொல்லிய படியெல்லாம் அவர்கள் இணைந்து நிற்க கச்சிதமாக வந்தன புகைப்படங்கள். அஞ்சலி முன்னேற்பாடாக இருவருக்கும் பாரம்பரிய உடையும், வெஸ்டர்ன் உடையும் எடுத்து வந்திருக்க, வீடு, தோட்டம், நீச்சல் குளம் முன்பு, கடற்கரை என்று வெவ்வேறு இடங்களில், வித விதமான உடைகளில் நின்று அழகாக புகைப்பட சட்டத்தில் அடைந்தார்கள் இருவரும். கணவனிடம் அவ்வளவு […]
“அஞ்சலி” அறை அதிர கத்தினான் நந்தா. “எங்க இருக்க?” என்று திரும்பியவனின் முன்னே, ஓடி வந்ததில் மூச்சு வாங்க, இடுப்பில் கை வைத்து கொண்டு நின்றிருந்தாள் அஞ்சலி. பட்டு பாவாடை, தாவணியில் பட்டாம்பூச்சி போலிருந்தவளின் மேலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை அவனால். கடந்த சில நாட்களாக ஜீன்ஸ், டி-ஷர்ட் இல்லையேல் மருத்துவ கல்லூரி யூனிஃபார்மிலேயே அவளைப் பார்த்திருந்தவனுக்கு, தேவதையாக தெரிந்தாள் மனைவி. அவன் பார்வை அவளை விட்டு விலக மாட்டேன் என சண்டித்தனம் செய்தது. மனைவியை உச்சந்தலையில் […]
காஃபி கோப்பையுடன் அறைக்குள் வந்தவள், நேராக சென்று பால்கனியில் நின்று விட்டாள். மழை தாரைகள் ஒரு லயத்துடன் இறங்கி பூமியை நனைத்து கொண்டிருக்க, மழைக்கு கண்களால் குடைப் பிடித்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. மழையின் குளுமையும், காஃபியின் வெம்மையும் துளித் துளியாக அவளுள் இறங்க, மழைக்கு பூமி அழகாக மாறியது போல, அவள் மனமும் இதமாக உணரத் தொடங்கியது. அவளின் மோன நிலையை, இதத்தை கலைத்தது அறைக்குள் இருந்து கசிந்து வந்த நந்தாவின் கணீர் குரல். “மௌனமே பார்வையாய் […]
அஞ்சலி அன்று கல்லூரி முடிந்து வெளியில் வரும் போதே மெலிதாக தூறி கொண்டிருந்தது. மழையில் நனைய விருப்பம் இல்லாமல், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு, பின்னர் செல்லலாம் என்று தான் அவளும் நினைத்தாள். ஆனால், நேரம் இரவு ஏழு மணி என்றது அவளது வலது கையில் இருந்த கடிகாரம். எப்படியும் வீடு போய் சேர்வதற்கு எட்டு மணிக்கு மேலாகி விடும் என்பதை நினைக்கையிலேயே அவளுக்கு தலையை விண்ணென்று வலித்தது. அவள் வீட்டிற்கு போனதும் வரிசைக் கட்டி […]
மாலை நாலு மணியளவில் அன்புவின் வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்கள் அவர்கள். இப்போதும் வண்டியை அஞ்சலி தான் ஓட்டினாள். வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்து கணவனின் முகம் பார்த்து ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை அவள். மனைவியின் மனதை, அவளின் புதிரான நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் நந்தா. வீட்டை அடைந்ததும் நேராக அறைக்குள் சென்று, தலையை கையில் தாங்கிய படி கட்டிலில் அஞ்சலி அமர்ந்து விட, அவளின் அருகில் செல்வதற்கே அவனுக்கு தயக்கமாக […]
அஞ்சலியின் பார்வையை சந்திக்க முடியாமல் தன் கண்களை தழைத்தான் நந்தா. அவன் உணவில் கவனம் செலுத்த, அவளால் எதையுமே செய்ய முடியாத நிலை. தட்டில் இருந்த அரை பூரியை மென்று விழுங்குவதற்குள் அவளுக்கு பசியே சுத்தமாக மரத்திருந்தது. “என்னம்மா அஞ்சலி?” என்ற சுகுணாவின் கேள்விக்கு, “சரிங்க அத்த. நந்தா மாமா ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லா வேலையும் பார்த்திடுறோம்” அஞ்சலி பதில் கொடுக்க, உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்த அந்த குரலில் பட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் நந்தா. சாப்பிட்டு […]
மறுநாள் மாலை போல மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் அவர்கள். காயம் இன்னமும் ஆறாமல் தான் இருந்தது. வலியும், எரிச்சலும் அவரை வாட்டி வதைக்கவே செய்தது. அஞ்சலி தான் அம்மாவை அழகாக பார்த்துக் கொண்டாள். ஏதோ ஒரு ஏஜென்சியில் சொல்லி வைத்து, வீட்டுக்கு வேலைக்கு ஆள் வரச் செய்திருந்தான் நந்தா. அந்நேரம் அத்தனை உதவியாக இருந்தது அவரின் வரவு. அஞ்சலி நன்றி சொல்ல, நந்தா பதிலே சொல்லவில்லை. “ரொம்ப பண்றீங்க டூட்” அஞ்சலி அலுத்துக் கொள்ள, […]