Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரோஜாக்கள் தூவும் மழை

ரோஜாக்கள் தூவும் மழை – 8

ரோஜாக்கள் தூவும் மழை – 8 “ஸ்டீஜா…” என்று JJ அழைக்கையில், ஸ்ரீஜாவிற்கு அவளையும் மீறி ஒரு புன்னகை முகத்தில் வருவதை அவளால் தடுக்கவே முடியவில்லை. ‘ஸ்ரீஜா…’ எத்தனை அழகானதொரு பெயர் என்று அப்பாவும் அம்மாவும் தனக்கு வைத்தால், இவன் என்ன எங்கிருந்தோ வந்து அந்த பெயரை இப்படி ‘ஸ்டீம்…’ செய்கிறான் என்று அவளால் கிண்டலாக எண்ணாமலும் இருந்திட முடியவில்லை. வெகு நாளைக்கு பிறகான அவளின் ஒரு கிண்டல் மைன்ட் வாய்ஸ்  எப்போது டீம் மீட்டிங் என்றாலும் […]


ரோஜாக்கள் தூவும் மழை – 7

ரோஜாக்கள் தூவும் மழை – 7 பெரும் புயல் ஒன்றில் சிக்கி வெளி வந்தது போல்தான் இருந்தது ஸ்ரீஜாவிற்கு. சௌந்தரிடம் இருந்து விவாகரத்து என்ற முடிவிற்கு வந்த பிறகு, அவளை முதலில் வந்து பார்த்தது சௌந்தரின் பெற்றோர்கள் தான். நல்லவர்களே.  இருந்தும் இவர்கள் நல்லவர்களாய் இருப்பதால் மட்டும், சௌந்தரோடு அவள் காலத்திற்கும் போராட முடியாது அல்லவா?! “இதுதான் உன்னோட முடிவாம்மா…” என்று கேட்கையில், அந்த அன்னைக்கு கண்ணில் நீர் சுரந்தது நிஜமே. “என்னால செய்ய முடிஞ்சது இது […]


ரோஜாக்கள் தூவும் மழை – 6

ரோஜாக்கள் தூவும் மழை – 6 கவனிப்பு என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித கொடுமைக்கு ஆளானாள் ஸ்ரீஜா. யார் என்ன சொல்லியும் சௌந்தர் கேட்பதாய் இல்லை. தினம் தினம் அவனின் அதிகாரம் அதிகமாகிக்கொண்டே தான் போனதே தவிர, யார் சொல்வதையும் புரிவதாய் காணோம். “நீ இந்த நேரத்துக்கு தூங்கனும்… இவ்வளோ நேரம்தான் தூங்கனும்…” என்று அவள் உறங்குவதற்குக் கூட பல கட்டுபாடுகள் செய்தான். “இப்போ நீ ஜூஸ் குடிக்கிற நேரம், குடிச்சியா?” என்று கேட்டால், […]


ரோஜாக்கள் தூவும் மழை – 5

ரோஜாக்கள் தூவும் மழை – 5 மனித வாழ்வில் அழகழகான தருணங்கள் ஆயிரம் வந்து போகும். அதில் சில அந்தந்த நேரத்து மன மகிழ்வைக் கொடுக்கும். இன்னும் சில நினைத்துப் பார்த்து பார்த்து சந்தோசிக்க வைக்கும். வெகு சிலதே, ஆயுள் முழுமைக்கும் எப்போது நினைத்தாலும், அந்த முதல் நொடியில் அனுபவித்த அதே பூரிப்பை தரும். அப்படியானதொரு தருணம் தான் ஒரு பெண்ணுக்கு, தான் கருவுற்றிருப்பதை உணரும் நேரம். அந்த நேரத்து மகிழ்வுக்கு, எந்த வார்த்தைகளும் உருவம் கொடுத்திட […]


ரோஜாக்கள் தூவும் மழை 4

ரோஜாக்கள் தூவும் மழை – 4  ஸ்ரீஜா இதோ அவளின் பிறந்தவீடு வந்தும் நாட்கள் இரண்டாகிப் போனது. வந்த நிமிடம் முதல் உண்பதும், உறங்குவதும் மட்டுமே அவள் வேலையாகி இருந்தது இந்த இரு தினங்களில். அவளின் அப்பாவும் சரி அம்மாவும் சரி “நீ முதல்ல ரிலாக்ஸ் பண்ணு. அப்புறம் பேசலாம்…” என்றிட, அவர்களும் எதுவும் மேற்கொண்டு அவளை தொந்திரவு செய்யவில்லை. இத்தனை நாள் இல்லாத ஒரு அமைதி அவளுள் திடீரென புகுந்தது போலிருக்க, ஸ்ரீஜாவிற்கு வெகு நாட்களுக்கு […]


ரோஜாக்கள் தூவும் மழை 3

ரோஜாக்கள் தூவும் மழை – 3 வன்முறை என்பது ஒருவரை உடல் ரீதியாய் தாக்குவது மட்டும் அல்ல. உள்ள ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒருவரை துன்புறச் செய்வதும் வன்முறையில் அடக்கமே. அப்படியொரு தாக்குதலுக்குத் தான் ஆளானால் ஸ்ரீஜா..! சௌந்தரைப் பொறுத்தமட்டில், ஸ்ரீஜா என்பவள் மனைவி அல்ல. அவனின் உடல்பசியை லீகலாய் தீர்க்க வந்த ஒருத்தி. அவ்வளவே. அவளுக்கான மரியாதை என்பது அந்த ஒரு விசயமே. ‘சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்…’ என்று சௌந்தரின் பெற்றோர்கள் சொன்னாலும், அதிலும் மகனுக்கும் […]


ரோஜாக்கள் தூவும் மழை – 2

ரோஜாக்கள் தூவும் மழை – 2 ஸ்ரீஜாவிற்கு இதழில் ஒட்டியிருந்த புன்னகை மறையவும் இல்லை மாறவும் இல்லை. இதற்கும் மிருதுளா அத்தனை கோபமாய் பேசிக்கொண்டு இருந்தாள். ஆனால் அதற்கெல்லாம் தான் அசரப் போவது இல்லை என்பது போல் ஸ்ரீஜா இருக்க, நிதினுக்கு தன் மனைவி செய்யும் செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை. மனதில் சிறிது வருத்தம் கூட ஏற்பட, “மிருது… என்னென்ன ஆர்டர் பண்ணும் சொல்லு.. ஏற்கனவே டைம் ஆச்சு…” என்றான். தங்களின் பேச்சை திசை திருப்பவே நிதின் […]


ரோஜாக்கள் தூவும் மழை 1

ரோஜாக்கள் தூவும் மழை – 1 ஜில்லென்று காற்று வீசும் இரவு நேரத்து ஈசிஆர் சாலை. நிதின் தன் மனைவி மிருதுளா மற்றும் நான்கு வயது மகள் ஸ்ருதியோடு, தன் வீடு நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தான். அழகாய் குளுகுளுவென்று இருக்கும் சூழல் அங்கே அவனின் காரினுள் இல்லை. காரணம் மிருதுளா! முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு இருந்தாள். இதற்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்தவொரு பிரச்னையும் இல்லை. நீண்ட நாட்களாய் ஏற்பாடாகி தள்ளிப்போயிருந்த நிதின் அலுவலக பார்டி இன்று கோலாகலமாய் […]