Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2) வணங்காமுடி பானுமதி அறையில்….. சந்தனமும் தாழம் பூ குங்கும நெடியும் மிதமாக வீச வணங்காமுடி சாதாரண வேட்டியும் உள் பனியனுமாக இருக்க. வழமை போல் மெல்லிய பருத்தி சேலை அணிந்து அவரை ஒட்டியவாறு பானுமதி. ஒருவரது அணைப்பில் ஒருவர்… மூக்குத்தி கொண்டு அவர் கன்னம் தீண்டிய பேரிளம் பெண்ணின் கண்ணில் இருந்து வற்றாத ஜீவநதி சுரக்க முதுமகன் கண்ணிலும் அதன் சாரல். இரு ஜீவன்களும் பிரிவை எண்ணியது போலும் தாங்க […]


வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (1)

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (1) எங்கு காணிலும் அமைதி, இரவு நேரம் மிதமான வாடை காற்று வீச. அதனை அனுபவித்த வாரே அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்,ஈஸ்வர் – வானதி,அருணகிரி – அகிலா தம்பதியினர். திருமண நிகழ்வில் போட்ட ஆட்டத்தில்  இளசுகள் சோர்ந்து போயி தனது கூட்டுக்குள் சுருண்டு கொண்டது. கடமைகள் முடிந்த களிப்பில் பெரியவர்களுக்கு உறக்கம் பிடிக்கவில்லை போலும். நால்வரும் அமர்ந்து கதை பேச தொடங்கி விட்டனர். “அப்பாடி நல்லபடியா எல்லாம் முடிஞ்சுது, சொத்தையும் பிரிச்சு கொடுத்தாச்சு.இனி […]


வடக்கு வீதி வணங்காமுடி (PRE FINAL-2)

வடக்கு வீதி வணங்காமுடி (PRE FINAL-2) அனைவரும் உண்டு முடிக்க இளசுகள் அனைத்தும் நாற்காலியில் ஓர் வட்டத்தைப் போட்டு அமர்ந்து கொண்டு, நடுவில் வணங்காமுடியையும் பானுமதியையும் சிறை பிடித்து கொண்டனர். அகிலா என்ன சொல்லி பார்த்தும் அசைந்து கொடுக்க வில்லை இளசுகள். போராடி பார்த்தவர் ஒரு கட்டத்தில் முடியாமல் போக , அவரும் ஓர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதீத களைப்பில் அமர்ந்த வாக்கிலே ஈஸ்வர் தூங்கி […]


வடக்கு வீதி வணங்காமுடி (PRE FINAL)

வடக்கு வீதி வணங்காமுடி (PRE FINAL) திருக்கடையூர்…….. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில். இதில் சிவ பெருமான் அமிர்தகடேஸ்வரர், அம்பாள் அபிராம சுந்தரியாக வணங்க  படுகின்றனர். இரு வேறு வரலாறு தாங்கி நிற்கும் இக்கோவில் சிவன் 108 திருத்தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் மூவராலும் தேவாரம் பாட பட்ட ஸ்தலம் என்ற பெயரும் உண்டு. கூடுதல் சிறப்பாக அபிராமி பட்டரால் அபிராமி அந்தாதி பாட பட்ட ஸ்தலமும் இதுவே. இதன் வரலாறு என்று பார்த்தால்…. மார்க்கண்டேயன் […]


வடக்கு வீதி வணங்காமுடி – 21

வடக்கு வீதி வணங்காமுடி – 21 வடக்கு வீதி சதாசிவ இல்லமே களை கட்டியது வீட்டுக்கு முன் பந்தலிட்டு,வாழை மரம் கட்டி,மாவிலை தோரணம் வாயிலில் தரித்துக் கோலாகலமாக இருந்தது.அதற்கு மாறாக இருந்தது வீட்டில் உள்ள மக்களின் நிலை. நாளை சொந்தம் அனைத்தும் கூடி விடும் என்ற நிலையில். ஈஸ்வர்- வானதி அருணகிரி- அகிலா நால்வரும், அவர்கள் எண்ணியதை போலச் சொத்தை பிரித்து எழுதி வைத்திருந்தனர்.அதனை குடும்பத்தார்க்கு தெரிவிக்க எண்ணி அனைவரையும் அழைத்திருந்தார்கள் போலும். கன்னிகா, சித்ரா , […]


வடக்கு வீதி வணங்காமுடி – 20

வடக்கு வீதி வணங்காமுடி – 20 வடக்கு வீதியில்…. “பானு கொழுந்து உன்னைப் பேசுறதுல தப்பே இல்லை.நீயும் தான் சும்மா இருக்கியா? எதையாவது இழுத்து வை” வானதி பானுமதியை கடிந்து கொள்ளச் சுற்றிலும் இள வட்டங்கள் கவலையாக நின்றது. “அக்கா!.. ஆளுக்கு ஒன்னா செஞ்சா சீக்கிரம் வேலை முடியும் அதான்” “அதுக்குன்னு மேல ஏறி துடைக்கனுமா?” அகிலா கோபமாக. திருமணதிற்கு இன்னும் ஐந்து நாட்கள் என்ற நிலையில். மூன்று தினங்கள் கடந்தால் உறவுகள் வர போக இருப்பார்கள் […]


வடக்கு வீதி வணங்காமுடி-19.1

வடக்கு வீதி வணங்காமுடி-19.1 நாள் முழுதும் ஓடிய ஓட்டத்தைத் தனிப்பதே இரவின் தனிமை தான். இளமையில் பொருள் தேடி ஓர் ஓட்டம். இளமையைச் சுகித்து முடித்தால் பிள்ளைகளைக் கொண்டு ஓர் ஓட்டம். அதன் பின் அவர்களை வளர்ந்து வாலிபம் பண்ணி சமூகத்தின் முன் நிறுத்தி என்று பெற்றவர்களின் கால் நிற்காமல் ஓடி கொண்டே இருக்கும். ஆனால் இந்த ஓட்டத்தை நிறுத்தும் காலமும் உள்ளதே!….. அது முதுமை அந்தப் பருவத்தில் நின்ற தம்பதியினருக்குத் தனிமை என்பது வரம் தானே […]


வடக்கு வீதி வணங்காமுடி – 19

வடக்கு வீதி வணங்காமுடி – 19 இன்றோடு வணங்காமுடியும் பானுமதியும் சென்னை விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது . அங்கே ஒரு அளவிற்கு மீனுவை பழக்கி விட்டு வந்திருந்தார் பானுமதி மேலும் தான் அவ்வப்போது வந்து போவதாகச் சொல்லி இருந்தார். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் சமாளிக்கக் கத்து கொண்டாள் மீனு. இனி வாழ்க்கை மெதுவாகப் பிடிபடும் என்ற நம்பிக்கையில் திருச்சிக்கு வந்தாயிற்று. ************** இன்று ஞாயிறு போலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக மதிய […]


வடக்கு வீதி வணங்காமுடி – 18

வடக்கு வீதி வணங்காமுடி – 18 வழமை போல் வாழ்க்கை என்ற நிலையில் ஓர் திங்கள் கடந்து விட்டது. இன்னும் ஒரு மாதம் முழுதாக உள்ளது, வைகாசி இறுதியில் சஷ்டியப்தபூர்த்தி என்று முடிவாகி அதற்கு நாளும் குறிக்கப் பட்டு விட்டது. பெரியவர்கள் அனைவரும் அதில் கவனம் கொண்டனர். இன்று ஏனோ வழமைக்கு மாறாக வடக்கு வீதி சதாசிவ இல்லமே இரண்டாகி போனது. அதற்கு உபாயம் கன்னல் அத்தனை சத்தம் போட்டு வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள். ஒவ்வொரு […]


வடக்கு வீதி வணங்காமுடி – 17

வடக்கு வீதி வணங்காமுடி – 17 இரவு வேளை உணவை முடித்துக் கொண்ட அனைவரும் உறங்க செல்ல. அடுக்கலைக்குள் வேலைகளை முடித்து விட்டு வந்த விமலாவை தடுத்து நிறுத்தினாள் கன்னல். “அக்கா மாமாவே வந்திருக்காங்க இது நல்ல வாய்ப்புச் சொல்லிட்டேன்” “ப்ச் செயற்கைத் தனமா ஓர் சேர்க்கையானு இருக்கு” விமலா ஒருவித சலிப்பு தன்மையோடு சொன்னாள். “அக்கா உங்க நிலைமை எனக்குப் புரியுது ஒருமுறை முயற்சி பண்ணி பார்ப்போமே” கன்னலுக்கு விமலாவின் நிலை புரிந்தாலும் அவர்களின் வாழ்வில் […]