Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதுவை சாத்திரம்

வதுவை சாத்திரம் 6(ஆ)

ஐந்து வருடங்களாக அதே வீட்டில் தங்கியிருந்த முகில்நிலாவிற்கு ருத்ரமூர்த்தியின் குணங்களை தெரிந்து வைத்திருந்த அளவில் கூட அவளின் சகோதரியின் குணங்கள் புரிப்பட்டிருக்கவில்லை என்பதே மெய். அதனால் தன் இரட்டை சகோதரிக்காக அவளின் பக்கம் நின்று தான் உயரிய மனிதனாய் மதிக்கும் ருத்ரமூர்த்தியை கூட பகைத்து கொண்டிருக்கிறாள். கணவன் மனைவி உறவு என்பது மண்ணும் மழையும் போல் பின்னி பிணைந்த ஒன்று என்ற கருத்தை ஆமோதிக்கும் ருத்ரமூர்த்தியே இத்தனை உறுதியாக இந்த பிரிவில் நிற்கிறான் என்றால்,முதன்முறையாக அவளின் சந்தேகம் […]


வதுவை சாத்திரம் 6(அ)

கணவன் இருந்தும் தனிமையில் வாடிய சந்திரநிலாவிற்கு துணை நிற்கும் விதமாக தன் பெயரை அழைத்த நபரின் குரலை வைத்தே அவர்கள் ‘யார்?’ என்பதை அடையாளம் கண்டுகொண்டவளின் முகம் பளீரிட்டது. சட்டென்று தலையை திருப்பி அவர்களை பார்த்தவளின் கண்கள் இரண்டும் அவ்விடத்தில் நின்றிருந்த முகில்நிலாவையும் அவளது கணவன் ஞான மூர்த்தியையும் கண்டதும் ஆச்சரியத்தில் பெரிதாக விரிய, தனக்காக நெடுதூரத்திலிருந்து பயணம் செய்து வந்திருந்த தன் இரட்டையின் பாசத்தில் நெகிழ்ந்த சந்திரநிலாவின் விழிகள் பனிக்க “முகில்..” என பரவசத்துடன் அழைத்தப்படி […]


வதுவை சாத்திரம் 5

காலதேவன் தன் சக்கரத்தை வேகமாக சுழற்றியதின் விளைவால் நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்தோடி ருத்ரமூர்த்தி மற்றும் சந்திரநிலா இருவரும் சட்டத்திற்கு உட்பட்டு கணவன் மனைவியாய் வாழப்போகும் இறுதிநாளும் வந்திருந்தது. ஏறு தழுவும் போட்டியில் ருத்ரமூர்த்தியின் தலைமையின் கீழ் அவனது குழு எப்பொழுதும் போல் அவர்களின் திருவீரப்புத்திரம் வெற்றி வாகையை சூடி,வாழையடி வாழையாய் வளர்ந்து வந்த ஊரின் பாராம்பரிய பெருமையை நிலைநாட்டியிருந்தது. இதற்கிடையில் பாவையவள் கணவனின் மனம் கவர,பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த எதிர்வினையுமின்றி தோல்வியை […]


வதுவை சாத்திரம் 4

அறையின் கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு ருத்ரமூர்த்தி புருவம் சுருக்கி ‘யாரது இந்நேரத்தில்?’ என்ற சிந்தனைவயத்தோடு கதவை திறப்பதற்காக எழுந்தான். அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்திரநிலாவும் கதவு தட்டும் இரைச்சலில் பெண்ணவளின் மெல்லிய சரீரம் தூக்கிவாரிப்போட நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்து மிரட்சியுடன் திருதிருவென விழித்தாள். மனையாள் அதிவிரைவாக எழும் சத்தம் கேட்டு வாசல் நோக்கி சென்ற ருத்ரா வேகமாக இவள் புறம் திரும்பியவன்,அவள் அமர்ந்திருந்த அலங்கோல தோற்றம் கண்டு திடுக்கிட்டான். சட்டென்று சுதாரித்த ருத்ரமூர்த்திக்கு […]


வதுவை சாத்திரம் 3(ஆ)

சந்திரநிலாவின் அமைதி எதிரே பேசிக்கொண்டிருந்தவளின் நெஞ்சை படபடக்க வைக்க “நிலா இருக்கியா?” என, “ஹும்” என்று மட்டும் பதில் வந்தது அவ்விடத்திலிருந்து. ‘புருஷனை மாதிரி இவளும் சரியான அழுத்தக்காரி…ஏதாவது சொல்லறாளா பாரு’ என திட்டிக்கொண்டே “நிலா” என அதட்டலாய் அழைக்கவும், சில நொடிகள் அறையிலிருந்த சுவற்றை வெறித்தவள் பின்பு “முகில் எனக்கு தட் விஷயம் பத்தி ஸ்பீக் பண்ண விருப்பமில்லை…அட் தி சேம் டைம் மாமா இதெல்லாம் வெளிய ஸ்பீக் பண்ணக்கூடாது ஸ்டீரிக்ட்டா சொல்லியிருக்கார்” என்றாள் சற்றே […]


வதுவை சாத்திரம் 3 (அ)

கணவனது இத்தகைய புறக்கணிப்பினால் கண்ணீரோடு படுக்கையில் விழுந்து கதறியவளின் அலைப்பேசி தன் இருப்பை காட்டுவதற்காக சப்தம் செய்து கிணுகிணுத்தது. “என்னுள் நீ வந்தாய்… இன்னும் வாழ்கின்றாய்… உந்தன் சொல்லாலே… தூரம் உண்டாக்கினாய்… என்னை தீண்டாதே… என்னை பார்க்காதே… ஒன்றும் பேசாதே… போதும் துன்பங்கள்” அவளின் மனதை பிரதிபலிக்கும் அந்த பாடலின் வரிகள் மேலும் நெஞ்சை அழுத்தினாலும் ‘அழாதே மனமே’ என தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டு மேசையின் மீதிருந்த அலைப்பேசியை எடுத்தாள். அதில் ஒளிர்ந்த தன் சகோதரியின் […]


வதுவை சாத்திரம் 2(ஆ)

தாயில்லாத பிள்ளையான சந்திரநிலாவிற்கு அவரது செயல் சுகமாக இருக்க,நன்றாக சாய்ந்து சிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நெகிழ்ச்சியோடு கண்மூடிய மருமகளின் சிறுப்பிள்ளைதனமான செயலில் அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அத்தோடு அவரது விழிகளோ மருமகளை ஆராய்ச்சியுடன் தழுவ செய்தது. வெள்ளை நிற அழகிய சருமம்,மயில் தோகை போல் விரிந்திருந்த கூந்தலை இப்பொழுதெல்லாம் ஒரு சிறிய நொய்லி வளையத்திற்குள் அடைத்து வைத்திருந்தாள். இருப்பினும்,அவளது அடர்த்தியான கார்மேக கூந்தல் அதற்குள் அடங்காமல் அவளின் நெற்றியின் முன்பு விழுந்து காரிகையின் அழகிய மதிமுகத்தை […]


வதுவை சாத்திரம் 2(அ)

சாத்திரம் 2: ருத்ரமூர்த்தி தங்களுக்கு உரிமையான அரிசி ஆலையின் உள்ளே நுழைந்தான். நெற்பயிர்களிலிருந்து உமியையும் அரிசியையும் தனியாக பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் இருக்கும் பகுதியை நோக்கி செல்லும் போது,அவ்விடத்தில் சுமார் 80க்கும் அதிகமானோர்  பணிப்புரிந்துக்கொண்டிருந்திருந்தனர். நேர்க்கொண்ட பார்வையோடு நடந்து வந்து கொண்டிருந்த தங்களது முதலாளியை கண்டவுடன் அந்த ஆட்கள் “ஐயா வணக்கமுங்க” என இருகரம் குவித்து பணிவுடன் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆடவனோ தனது வேக நடையை சிறிதும் குறைக்காமல் சிறு தலையசைப்புடன் அவனது அறை நோக்கி சென்றான். உள்ளே […]


வதுவை சாத்திரம் 1

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தமிழ் பாரம்பரியமிக்க தொன்மை நகரம் தான் தஞ்சாவூர். இது தஞ்சை என சுருக்கமாக அழைக்கப்படுக்கிற நிலையில்,தஞ்சை என்ற சொல்லுக்கு ‘குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி’ என்று பொருள். ஏனெனில் அம்மாவட்டத்தை சுற்றிலும் உள்ள கிராமங்கள் யாவிலும் அழகிய பச்சையாடை போர்த்திய வயல் பரப்புகளும்,கூடவே தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்கள் அடங்கிய தோப்புகளும் நிறைந்ததிருந்தது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களுக்கு முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் […]


வதுவை சாத்திரம்

முன்னோட்டம் 1: தங்களது வீட்டின் பிரம்மாண்டமான தேக்கு மரத்தாலான படிக்கட்டின் வழியாக வெள்ளை நிற வேட்டி சட்டையில் ஆறடி உயரத்தில் ஆண்மையின் இலக்கணமாய் கம்பீரமாக இறங்கி வந்துக்கொண்டிருந்த தனது மகனை பூரிப்புடன் பார்ப்பதற்கு பதிலாக ஒரு வித கலக்கத்துடனே பார்த்திருந்தார் அவனது தாய் வேலாம்மாள். தாயின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் ‘எதற்கென்று’ அறிந்தவனாய் தன் கத்திப்போன்ற கூரிய விழிகளால் துளைத்தப்படி வந்த ருத்ரமூர்த்தியின் கண்களில் தெரிந்த கனல் கண்டு சட்டென்று கண்ணீரை உள்ளிழுத்த அவனது தாய் அடைத்த […]