Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வா… காதோரம் காதல் சொல்ல.

அ23 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 23: வா… காதோரம் காதல் சொல்ல. 💖💖💖   அர்ச்சனாவின் திருமண வரவேற்பிற்கு வீட்டு பெண்கள் எல்லாம் அழகு பதுமைகளாய் உலாவர,  மணமகளோடு நின்றிருந்த நகுநா கண்களோ கட்டிளம் காளை ஒருவன் மேல்.    ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்ற கதை போல் சும்மா இருந்த பெண் மனதில் சலனம் ஏற்படுத்தியவனுக்கு அது நினைவில் இருந்ததா என்றே தெரியவில்லை. இன்று வரை வினோத் நகுநாவோடு பேச முற்படவில்லை. நேற்று வரை […]


அ22 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 22: வா… காதோரம் காதல் சொல்ல. 💖💖💖   உலகளவில் தரமான பல்கலைகழங்களில் முதன்மையில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்  (Harvard University)  மற்றும் மசாசூட்ஸ் இன்ஸ்ட்டிடியூட்  ஆஃப் டெக்னாலஜி(Massachusetts Institute of Technology) ஆகிய இரண்டுமே மசாசூட்ஸ் மாநிலத்தில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குப் படித்து பட்டம் பெறுவதென்பது பல படிப்பாளிகளின் கனவு.    கனவின் வாயிலை அடைந்த துடிப்போடே பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தான் எபி. முப்பது மணி நேரம் […]


அ21 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 21: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤   எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்.. சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம்! விதைக்க ஒரு காலம், அறுவடை செய்ய ஒரு காலம்!    அப்படி தான் கற்றிருந்தான் மனோவா எபெனேசர். அதனால் படிக்க ஒரு காலம்… அதில் காதலுக்கு இடமில்லை என்று தெளிவாகத் தான் இருந்தான், அலர்விழி என்ற பெண்ணை காணும் வரை.    அவன் […]


அ20-2 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 20-2: வா… காதோரம் காதல் சொல்ல. 💖💖💖 அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த, அவன் மூச்சுக்காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் சிலையாய் போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. எழுந்து நின்றவன் கண்களோடு மனமும் அவள் பிம்பத்தை உள்வாங்கியது.    இருவருமே இந்த சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டிய தருணம்… வெறும் அதிர்ச்சியாகப் போனது!    ‘மனோ…’ விழி நீர் முட்டிக் கொண்டு வந்தது. கட்டிக் கொள்ளும் […]


அ20 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 20: வா… காதோரம் காதல் சொல்ல. 💖💖💖 தினமும் ஒரே நேரத்தில் மது அருந்துபவனுக்கு, அந்த குறிப்பிட்ட நேரம் வந்தால் கை கால் உதறுமாம். குடித்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்புமாம். இது மதுவென்றில்லை ஒரு காரியத்தைத் தினமும் விரும்பி ஒரே நேரத்தில் செய்யும் வழமை வைத்திருந்தால் நாம் அனைவரும் அந்த நேரத்திற்காகக் காத்திருப்பது இயல்பு தானே.    அலர்விழிக்கும் அதே நிலை தான். பெண்ணின் கவனம் முழுவதும் கடிகாரத்தில். ‘எப்போ அங்க விடியும்?’ […]


அ19 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 19: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤ “அக்கா அக்கா எனக்கும் ஐஸ் வேணும்,” என்று கப்பிலிருந்த பனிக்கூழை விழுங்கிக் கொண்டிருந்த நகுநாவிடம் வாண்டொன்று வந்து நிற்க, மாடியில் பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஒன்றை எடுத்துக் கொடுக்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் ஐந்தாறு குட்டிகள் அவளைச் சுற்றிக் கொண்டது.    “நிம்மதியா உக்காந்து ஒரு கப்பைஸ் சாப்பிட விடுறீங்களா?”   “அக்கா அக்கா… ஒரே ஒரு ஐஸ் க்கா… பிளீஸ் க்கா” […]


அ18 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 18: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤ காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய் எலும்பை உருக்கும் குளிர்காற்று திறந்திருந்த ஜன்னல் வழி அறைக்குள் நுழைந்து குளிர்ந்திருந்த அவன் மனதோடு அவன் உடலையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த அவன் – மனோ. அவனைக் குளிர்வித்துக் கொண்டிருப்பது அலர்விழி […]


அ17-2 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 17: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤   ஏதேதோ யோசனையோடு அபிகேலோடு கடைக்குக் கிளம்பினான். வெக்மென்ஸ்(Wegmans) அங்காடி வளாகத்தில் அபியின் அலுவலக தோழியைக் காண நேர்ந்தது.    “அவன் தான் உன் பாய் ஃப்ரெண்டா… நல்ல செலக்ஷன். ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்,” என்று அவள் அபியிடம் கூறுவது இவன் காதில் விழுந்தது. மருத்துவ பரிசோதனை முதல் வீட்டுச் சமையல் சாமான் வரை இவனே அனைத்துக்கும் அவளோடு சென்றால் வேறென்ன பேச்சை எதிர்பார்க்க? […]


அ17 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம் 17: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤   முன்பெல்லாம் நடுச்சாமத்தில் வீட்டிற்கு வெளியே கோட்டான்கள் விழித்திருக்கும். இப்பொழுது வீட்டிற்குள் இரண்டு கோட்டான்களேனும் விழித்திருக்கிறது  தங்கள் கைப்பேசிகளோடு.    இரவு நேர மங்கலான ஒளியில் மெத்தை மேல் படுத்திருந்தாலும் அலர்விழியின் கண்கள் பிரகாசமாய் விழித்தே இருந்தன. காரணம் மனோ.    கண்களை மூடுவதும்… மீண்டும் திறந்து அருகில் இருக்கும் கைப்பேசியை பார்ப்பதுமாகப் படுத்திருந்தவளுக்குத் தவிப்பு உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. நேரம் பார்த்தாள். மணி 3:20. […]


அ16 – ஷோபா குமரனின் வா… காதோரம் காதல் சொல்ல.

. அத்தியாயம்16: வா… காதோரம் காதல் சொல்ல. ❤❤❤ “கடைக்கு போயிட்டு வா மிட்டாய் தரேன்,” என்று காரியம் சாதித்த காலம் மாறி, “சொன்னத செய் இல்ல செல் ஃபோன் கிடையாது,” என்றாகிவிட்ட தலைமுறை இது.  பல்லில்லா குழந்தை முதல் பல் போன கிழம் வரையிலுமே காலையில் கண் விழிப்பது கைப்பேசியில் தான். அதில் அப்படி என்ன தான் இருக்குமோ?   மற்றவருக்கு எப்படியோ… அவள் கண் விழிப்பது கைப்பேசியில் சிரித்துக் கொண்டிருக்கும் அவன் பிம்பத்தில் தான்.  […]