Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியோர சிறுபார்வை போதும்.

விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 35

மார்கழி குளிர். போர்வைக்கு அடியில் துயில் கொண்டிருந்த தன் மனையாளை எழுப்ப விரைந்தான் முகிலன்.  “மீரா குட்டி” “ம்ம்” “டைம் ஆகிடுச்சுடா எனக்கு. காலேஜ் போகணும்” “பொய் சொல்லாத அத்தான். இன்னிக்கு சண்டே” “அதெல்லாம் நல்லா சொல்லு. பசிக்குது” சட்டென்று எழுந்து அமர்ந்தவள், “சரி வா, சமைக்கலாம்”, எனவும், “சும்மா சொன்னேன். இந்த குளிருக்கே இப்படித் தூங்குற. இதுல அடுத்த டிசம்பர்ல அமெரிக்கா போகணுமாம்” அவனுக்குப் பசியில்லை என்று தெரிந்ததும் திரும்பவும் அவன் மடியிலேயே படுத்துக் கொண்ட […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 34

“துளசி, நான் இன்னிக்கு திருச்சிக்குப் போறேன்” “வாயிலேயே போடுவேன், இவ தான பேர் வச்சா எனக்கு. என்ன திடீர்னு திருச்சிக்கு?” “எனக்கு  எவ்வளவோ வேலை இருக்கும். எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமா” “பின்ன போறத மட்டும் ஏன் சொல்ற, அதில்லாம… “ “அம்மா தாயே அதில்லாம அமெரிக்கா வரை சொல்லாம போனவ தான் நான். விட்டுரு. இன்னிக்கு திருச்சிக்கு அத்தான் கூட போறேன்” “முகிலனோடயா. அவன் வீடு பாக்க தான போறான். நீ எதுக்கு அங்க? அவன தொந்தரவு […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 32

ஆறடி உயரத்திற்கு வளர்ந்து விட்ட மகன் இன்னும் தன் மடியில் படுத்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க, சிரித்துக் கொண்டே வசுந்தரா பூ தொடுத்துக் கொண்டிருந்தார்.  “என்ன முகிலா உனக்கு போஸ்டிங் எப்பப் போடுவாங்க, எங்க போடுவாங்க” “நீ ஏம்மா அத  வேற ஞாபகப் படுத்துற? இன்னும் கொஞ்ச நாள் இப்படி உன் மடில படுத்து ரிலாக்ஸ்டா இருந்துட்டுப் போறேன்” .. “என்னம்மா, அமைதியா ஆகிட்ட” “இப்ப தான் ரேடியோல ஒரு கதை சொன்னாங்க. ஒரு அம்மா தூங்கிட்டே […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 31

நிச்சயதார்த்த வீடு! விழாக்களுக்கே உரிய அழகும் கலகலப்பும் சேர பிருந்தாவின் வீடு களை கட்டியது. பாரம்பரியம் மிக்க சற்றே பெரிதான வீடாக இருந்த கிரிதரனின் வீட்டில் கிரிதரனும் அபிராமியும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஆட்டோவில் வந்த உணவு வகைகளை உதவிக்கு என்று நியமிக்கப்பட்ட ஆட்கள் இறக்கி வைத்துக் கொண்டிருக்க, தேவ் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.  பிருந்தா இரண்டு தோழியருடன் அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கையில் எட்டி பார்த்த அபிராமி, “உங்க மாமியார் பேசினாங்க, கெளம்பிட்டாங்களாம்”, என்று தகவல் அறிவித்துவிட்டு சென்றார். […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 30

  இது வரை இப்படியான ஒரு பேச்சற்ற பயணத்தை நந்தனும் மீராவும் அனுபவித்ததில்லை. அண்ணனுடன் மிதிவண்டிப் பயணம் என்றாலும் சரி, கார் பயணம் என்றாலும் சரி, பேருந்து/ரயில் பயணமானாலும் சரி வளவளத்துக் கொண்டே வரும் மீரா, பைக்கில் அமைதியாகவே அமர்ந்து இருந்தாள். நந்தனுக்கு இந்த அமைதியை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. காலையில் இவள் இப்படி இல்லையே, நன்றாகத் தானே பேசிக் கொண்டிருந்தாள். மீரா ஊரில் இருந்து வந்த பின் தன்னிடம் பேச மாட்டாள் என்று தான் […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 29

“எப்போ அண்ணி மீரா வர்றா. நாம எங்க போய் கூப்பிடணும். அவ வந்த உடனே நீங்க எதுவும் அவ மனசு நோகுற மாதிரி பேசிறாதீங்க. பாவம் குழந்தை” “நீ தான் மெச்சிக்கணும் அந்த குழந்தைய.. வரட்டும் இருக்கு. டிக்கெட் வந்த உடனே சொல்வாளாம். அவங்க பானும்மா கூட வராங்களாம். யாரும் கூப்பிட வர வேணாம். வீட்டுக்கு சூர்யா கூட வந்துறேன்னு சொல்லிருக்கா” “வரட்டும் வரட்டும், அவ  வந்தா தான் வீடு களையாவே இருக்கும்” ஆனால் இதற்கெல்லாம் இடம் […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 28

“முகிலா, உங்கம்மா எங்க” “குளிச்சுட்டு இருக்காங்க அத்தை” “நீ தோட்டத்தில என்ன பண்ணிட்டு இருக்க, உள்ள வா”, என்று துளசி அழைத்தவுடன் மீரா வீட்டிற்குள் நுழைந்தான் முகிலன். குளித்து விட்டு பூஜையில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் ஒரு சின்ன தலையசைப்புடன் அவனை வரவேற்றார். “என்ன அத்தை, ஏதாச்சு வேணுமா” “இந்தா காபி குடி. இன்னிலேர்ந்து நீங்க ரெண்டு பேரும் தூங்க மட்டும் உங்க வீட்டுக்குப் போனா போதும்னு வசுகிட்டே சொல்லிட்டேன். கல்யாண வேலை ஆரம்பிக்கணும். நிச்சயதார்த்தம் பத்தி பேசணும்னு […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 27

சமையலறையில் பானுவையே குட்டி போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருந்த மீராவை ஏற இறங்க பார்த்தாள் சுடர்.  “நீ கிளம்பலயா மீரா”. ஹூஸ்டன் நகரின் பெரிய மால் ஒன்றிற்கு எல்லாரும் இன்று போவதாய் திட்டம். பானு, தான் அங்கு வந்து ஒன்றும் வாங்கப் போவதில்லை என்று வர மறுத்து விடவே, மீராவும் வர மறுத்து விட்டாள். “நான் வரல அக்கா. நீங்க, தீபக் அண்ணா, ஆதி மட்டும் போயிட்டு வாங்க. இன்னொரு வாட்டி வரேன்”  “யாரு நீயா? […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 26

அழுது அழுது கரைந்து கொண்டிருந்தாள் மீரா. செய்தவறியாது நின்று கொண்டிருந்த பானு மீராவின் அருகில் அமர்ந்தார். “என்னடா மீரா, ஏன் அழுதுட்டு இருக்க” “ஒண்ணுமில்ல பானும்மா, கஷ்டமா இருக்கு” “ஏனாம்” “வீட்ல கோச்சுட்டு வந்துட்டேன், இப்ப எல்லாத்தையும் பாக்கணும் போல இருக்கு” “அவ்ளோ தான வா வீடியோ கால் பண்ணலாம்” “இல்ல அவங்க என்கிட்ட பேச மாட்டாங்க, எந்த மூஞ்சிய வச்சுட்டு அவங்ககிட்ட பேசறது” “அவங்கன்னா – அம்மா அப்பாவா. அவங்க தான் டெய்லி இந்த அழுமூஞ்சிட்ட […]


விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 25

“அத்தான் என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மருதாணி வச்சுருக்காங்க, எனக்கு வச்சு விடறயா”, என்று கேட்ட அந்த குட்டி மீராவுக்காய் ஒரு கிளையையே ஒடித்துக் கொண்டு வந்து நின்றான் முகிலன்.  “ஏன்டா அந்த குட்டி கைக்கா இவ்ளோ பெரிய கிளைய ஓடிச்சுட்டு வருவ” “ஆசையா கேட்டால்ல. அரைச்சு கொடும்மா”, என்று நின்ற முகிலனை வித்தியாசமாய் பார்த்தார் வசுந்தரா. அரைத்து முடித்து, மீராவின் கையை பிடித்த வசுந்தராவின் கையை உதறிவிட்டு, அவர் அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு முகிலனிடம் […]