நான்கு வருடம் கழித்து… “குட்டிம்மா உக்காரு தங்கம். இங்கயும் அங்கயும் நடந்துட்டே இருக்க?…” என அருணா விஷ்வரூபினியை அழைக்க, “மூச் பாட்டி…” என்றாள் குழந்தை இடுப்பில் கை வைத்து நின்று. “மூச்சு தான். போ…” என அருணா முறுக்கிக்கொள்ள துர்காவிற்கு பேத்தியின் அதட்டலில் அத்தனை சிரிப்பு. “இன்னும் முளைச்சு மூணு இலை விடலை. எவ்வளோ பேசுது பாருங்க…” என்றார் அருணா துர்காவிடம். “பாத்தி…” என்று ரூபினி வந்து அருணாவின் முன் நிற்க, “என்ன?…” என்றார் அவரும் முறைப்பாய். […]
பகுதி – 27 அதிரபள்ளி ரிவர் ரெசார்ட். வெளியே லேசான தூறல் தூறிக்கொண்டு இருக்க பதினோரு மாத குழந்தையை தோளில் போட்டபடி இங்குமங்கும் நடந்து தட்டிக்கொடுத்தான் விஷ்வா. “பா, பா…” என குழந்தை சிணுங்க, “விஷ் பேபி அப்பா இருக்கேன்டா. தூங்கு…” என்று சொல்லியபடி நடை பயில அவனை தலை தூக்கி பார்க்கவும் பின் கழுத்தில் முட்டவும் என்று அவனின் பெண் விஷ்வாவை ஒருவழி செய்துகொண்டு இருந்தாள். உள்ளே கட்டிலில் அமர்ந்துகொண்டு இதனை வேடிக்கை பார்த்தபடி […]
“ஹ்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் வர்ஷி…” “பசிக்குது எனக்கு. தனியா என்ன சாப்பிட?…” என்றதும் முயன்று கண்ணை விழித்து எழுந்தான். சரியான உறக்கமின்றி விழிகள் சிவந்துபோய் இருக்க எழுப்பியிருக்க வேண்டாமோ என யோசித்தாள். “எப்ப பாரு செஞ்சிட்டு செஞ்சிட்டு யோசிக்கிறது. வா சாப்பிட்டு தூங்கலாம்…” என எழுந்து வந்தான். அன்றைய நாள் ஓய்விலேயே செல்ல இரவு போல தான் வீட்டிற்கு அழைத்து பேசினான். மறுநாள் வழக்கம் போல அலுவலகம் கிளம்ப வர்ஷினிக்கு புவனிடம் சொல்லி வொர்க் ப்ரம் […]
“ஹ்ம்ம், சரிதான்…” என்றவன், “அப்ப இருந்து இப்ப வரைக்கும் இந்த தலையில தேவையில்லாததை எல்லாம் போட்டு அடைக்கிறது. உருப்படியா எதையும் வச்சுக்கறதில்லை. மேல்மாடி மேல்மாடி…” என்றான் கிண்டலாக. “அப்ப தலைக்குள்ள இருக்கற நீங்களும் உருப்படி இல்லை. சரியா?…” என வர்ஷினி அவனை மடக்க, “அது ஒன்னு இருக்க போய்தான் நீ கொஞ்சம் யோசிக்கிற…” “யப்பா, முடியலை. ஓகே ஒத்துக்கறேன், நான் இன்னும் கொஞ்சம் மெச்சூர்ட் ஆகனும். போதுமா? ஹேப்பியா?…” என்று தலை சாய்த்தாள். “மெச்சூர்டா? படிச்சுட்டேன், இத்தனை […]
பகுதி – 26 விஷ்வா கேட்டதில் தவறில்லை. தான் எதிர்பார்க்கும் போது அவனுக்கு தோன்றுவதிலும் நியாயம் உள்ளது தானே என நினைத்தாள் வர்ஷினி. அவனை விட்டு விலகி உள்ளே செல்ல முயன்றாள். என்னவோ அந்த கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. “என்னாச்சு? நிக்க முடியலயா?…” என அவளின் சோர்ந்த முகம் கண்டவன் உள்ளே அழைத்து சென்றான். “ஏதாவது வேணுமா? என்ன குடிப்ப இந்த நேரம்? ப்ரெஷ் ஜூஸ் தரவா?…” என வரிசையாய் கேட்க, “ம்ஹூம், எதுவும் வேண்டாம்…” […]
ஏழு மணி போல வர்ஷினியின் சித்தப்பாவும் வந்துவிட, அரவிந்தும் வந்து சேர்ந்தான். “என்னை வீட்டுல கொண்டுபோய் விடு அரவிந்த், அவங்க வந்துட்டாங்க. காலையில கால் பண்ணிருந்தாங்க…” என்றதும், “இதை நீ வந்ததும் சொல்லியிருக்கலாமே? கிளம்பு முதல்ல…” என்று சத்தம் போட்டு அழைத்து வந்தான் அரவிந்த். வீட்டிற்குள் நுழையும் பொழுதே சோபாவில் அமர்ந்து காபியை குடித்துகொண்டு இருந்தான் விஷ்வா. முதலில் அரவிந்த் செல்ல அவனின் பின்னே லாங் குர்தியில் மேடிட்ட வயிற்றுடன் நுழைந்தாள் வர்ஷினி. அவன் காண தவித்த […]
பகுதி – 25 அன்றோடு யோகேஷுடனான நட்பிற்கு பெரும் முற்றுப்புள்ளியை வைத்துவிட்டான் விஷ்வா. மற்ற நண்பர்களிடமும் பாராமுகம் காட்ட அவர்களுக்கு அவனை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியவில்லை. “டேய் உன்கிட்ட சொல்லனும்னா யோகேஷ் விடமாட்டேன்றான். உனக்கு தெரிஞ்சா இப்படி எதாச்சும் நடக்கும்ன்னு தான் சொல்லாம இருந்தோம். அவனும் நம்ம ப்ரென்ட் தானேடா?…” பிரகாஷ் சொல்ல, “உங்க ப்ரென்ட்…” என்று கத்தரிப்பதை போல பேசிய விஷ்வா, “கேட்ட தானே அந்த பொண்ணு சொன்னதை. உங்க ப்ரென்ட் மாதிரி […]
“மைன்ட் யூர் வேர்ட்ஸ், என் பேரு ஏய் இல்லை. சீனியர்னா எப்படி வேணாலும் பேசுவீங்களா?…” என்ற பொரிய யோகேஷின் கோபம் இன்னும் கூடியது. “ரூபவர்ஷினி, நில்லுங்க ஜூனியர் மேடம்…” என்றதும் அவனை அவள் யோசனையுடன் பார்க்க, “உங்க ப்ராஞ்ச்க் என்னன்னு சொல்லிட்டு போங்க…” என்றான் நக்கலாக. வர்ஷினியின் விழிகள் சீற்றத்தில் விரிந்தது. ஒருநொடி ஸ்தம்பித்த பார்வையுடன் அவள் பார்க்க யோகேஷின் கேள்வியில் மற்றவர்களும் அதிர்ந்தார்கள். “யோகேஷ் என்னடா…” என்று பேசும் முன், “ஹாய் டா. யார் இந்த […]
பகுதி – 24 விஷ்வாவிற்கு அத்தனை தலையிறக்கமாக இருந்தது. இப்படி ஒரு அவமானம் இந்தளவிற்கு அவன் அனுபவித்ததே இல்லை எனலாம். எப்போதும் எதிலும் சரியாய் இருப்பவன். தன்னுடைய நண்பர்கள் விஷயத்திலும் கூட ஒழுக்கத்தை பெரிதும் எதிர்பார்ப்பவன். இப்போது தன்னையும் சேர்த்து அனைவரையும் ஒரு பெண்ணிடம் தவறாக பேசினான் என்று குற்றத்துடன் கூண்டில் ஏற்றியிருந்தாள் ஒரு பெண். அதிலும் கல்லூரி வந்து சேர்ந்த அன்றே அவனின் அத்தனை வருட நற்பெயரையும் சுக்குநூறாய் உடைப்பதை போல. பிரின்ஸிபால் சத்தமிட்டுவிட்டு […]
“இல்லம்மா, நான் மட்டும் போய்ட்டு வரேன். நீ இரு…” என சொல்லியவர் விறுவிறுவென இறங்கி நடந்துவிட கதவை அடைத்துக்கொண்டு வந்தான் அவன். கோபத்துடன் சோபாவில் அமர்ந்தவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க கிட்சனுக்கு சென்று தண்ணீர் குடித்தான். இன்னொரு அறைக்குள் நுழைந்தான், அங்கே எதையோ உருட்டி மீண்டும் ஹாலுக்கு வர, வர்ஷினியின் போனை எடுக்க, பின் தங்கள் அறைக்குள் நுழைய என்று அவன் சுழல எதற்கும் வர்ஷினியின் பார்வை அவனை விட்டு அகலவில்லை. அவனை தொடர்ந்து […]