“சிம்பிளா காது குத்தை வச்சும் எவ்வளோ திருஷ்டி பாரேன்…” என சொல்ல குருஆர்யன் மகளை சோபாவில் கிடத்தி அப்போது தான் காதை பார்த்தான். அன்றுதான் மகளுக்கு காதணி விழா செய்திருக்க மகள் அங்கே லேசாய் வலிக்கவும் கைகொண்டு தேய்த்ததில் வலி அதிகம் தந்திருக்கவேண்டும் என்று புரிந்துபோனது. “ம்மா, எண்ணெய் எடுத்துட்டு வாங்க. காது தான் வலிக்குது போல. நான் கவனிக்கவே இல்லை…” என்று சொல்லியவன் எண்ணெய் போட்டுவிட்டு காதில் ஊதிவிட அழுகை குறைந்து சிரித்தாள் ஆர்யாவின் மகள். […]
“ஆனாலும் எங்க வீட்டுல உன்னை பார்த்து பேசி முடிச்சு வச்சாங்க பாரு. எப்படி புரிஞ்சது அவங்களுக்கு உனக்கு நான் தான் சரின்னு…” என்று சொல்ல அவள் இமைகள் இன்னும் சுருங்கியது. “ஓகே, புரிஞ்சது. எனக்கு நீ தான் சரின்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க. இப்ப சரியா? தூக்கத்துல கூட மாத்தி சொல்ல முடியுதா?…” என்று சொல்ல அவள் இதழோரம் புன்னகை வெளிவர துடித்தது. “தூங்க விடாம டிஸ்டர்ப் பன்றேனா?…” என்றவன், “எனக்காக கேளேன். நீ ரியாக்ட் பண்ணவேண்டாம். […]
வர்ணம் – 33 நனியிதழை அறைக்கு மாற்றி இருந்தனர். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சென்று பார்த்துவிட்டு வர அவளின் கண்கள் அவனை தான் நாடியது. எதுவும் பேசாமல் மௌனமாய் மற்றவர்களிடம் அவள் காண்பிக்கும் அந்த பாவனையையும், தன்னை தேடும் அவளின் ஆவலையும் உள்வாங்கியபடி தன்னை நிதானித்துக்கொண்டிருந்தான். இன்னும் அவனுள் பொங்கிய அலைகடலின் ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை. என்றைக்கும் இந்த நடுக்கடலில் தவிப்பெடுத்த தாகம் தீராது என்று தான் தோன்றியது. மனைவி மீதான கொள்ளை அன்பு அவஸ்தையாய் முரண்டுபிடித்தது […]
“நீ ஒரு சின்ன பையன் இருக்கன்னு மறந்துட்டேன் பாரேன்…” என்று நரசிம்மன் சிரிப்புடன் அவரிடம் கை கொடுத்து, “டேய் ப்ரவா, இங்க பாரு. அட என்னை பாருடா…” என்று அவன் முகம் நிமிர்த்தி அவனின் கண்ணீரை துடைத்துவிட்டவர், “நான் ஒரு முட்டாப்பய, எப்பவும் சரியா பேசுவேன்னு உங்கப்பன் என்னை ஏத்தி ஏத்தி விட்டு இப்ப என்ன பேசன்னே தெரியாம உளறிட்டு இருக்கேன்…” என்றவருக்கு கண்கள் அலைபாய்ந்தது. “ப்ரவா…” என்று கீதாவின் குரல் பதட்டத்துடன். “நதி எப்படி இருக்கா?…” […]
அவரின் காதில் கைபேசிக்கு கொடுத்த அழுத்தத்தில் அவனின் அழைப்பு எடுக்கப்பட அதனை கவனியாதவர் பரத் என்று எல்லாவற்றையும் சொல்லி, “சீக்கிரம், நான் ட்ரைவரை வர சொல்லிருக்கேன். எல்லாம் ரெடி பண்ணு…” “ம்மா, ம்மா இதழ்க்கு என்னாச்சு? இதழ்…” என்ற சின்னமகனின் கத்தலில் தான் தமயந்திக்கு சுதாரிப்பு வந்தது. போனை எடுத்து பார்க்க அதில் குருஆர்யன் பதட்டமாய், பயத்துடன் படபடப்பாய் அவரை பார்த்தபடி. “கேட்கிறேன்ல. இதழுக்கு என்ன?…” என இரைந்து, “காமிங்க அவளை…” என்றான் குருஆர்யன். “ஆரி ஒன்னும் […]
வர்ணம் – 32 ஒவ்வொன்றாய் பார்த்து புகைப்படம் எடுத்த குருஆர்யன் அதனை மனைவிக்கு அனுப்ப அங்கே பார்க்கப்பட்டுவிட்டது. “ஹைய்யோ போதும். ஏன் இப்படி பன்றீங்க?…” என்று நனியிதழ் விழி பிதுங்கினாள். அப்போதும் குறுஞ்செய்தியே அவள் அனுப்பியது. அவளின் வார்த்தைகளே எப்படி அவள் அதனை கூறியிருப்பாள் என்று இவனின் காதில் ஒலியாய் வந்து சேர, “உன்னை செலெக்ட் பண்ண சொல்லலை. இதெல்லாம் வாங்கிருக்கேன்னு சொன்னேன்…” என அவனின் மிதப்பான பதில். “முடியலை சாமி. ஆளை விடுங்க…” என்று […]
என்னென்னவோ நினைத்து இங்கே வந்திருக்க அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல அவனை பந்தாடிக்கொண்டிருந்தாள் அவன் மனைவி அவளின் அமைதியில். “தலை வலிக்குதா?…” என அவனின் தலையில் விரல் நுழைக்க தாளமாட்டாமல் அருகில் நிறுத்தி அவளின் வயிற்றில் முகம் புதைத்தான். “ஸாரி கேட்கனும்ன்னு தோணுது. சொல்லு கேட்கட்டுமா?…” என்று கரகரப்பாய் பேச, “எதுவுமே தானா தோணனும். தனக்குள்ள இருந்து உருவாகனும். இன்னொருத்தர் சொல்லி வளரும் பிம்பம் என்னைக்குமே உடையக்கூடியது. நமக்குள்ள வேர் விட்டு தானா வளர்ந்து […]
“நதி தூங்கறா. நீங்க உட்காருங்க….” என்று அவர் வேறொன்றை கேட்க இங்கே இவனுக்கு பொறுமை பறந்தேவிட்டது. “குடிக்க எதுவும் கொண்டு வரட்டுங்களா? இல்ல சாப்பிடறீங்களா?…” என்று நரசிம்மன் உபசரிக்க, “எனக்கு எதுவும் வேண்டாம்….” “சரி உக்காருங்க. நதி எந்திக்கட்டும். வீட்டுலையும் வேற யாருமில்லை. நாம மட்டும் தான். அதனால என்னமாச்சும் வேணும்னா உங்களுக்கு நான் தான் குடுக்கனும்…” என்று சொல்ல, “எதுவும் வேண்டாம். நான் போய் பார்க்கறேன்…” என்று அவன் அவரை தாண்டிக்கொண்டு செல்ல பார்க்க, “இல்ல […]
வர்ணம் – 31 சுஜாதா டீக்கப்புடன் அந்த அறைக்குள் நுழைய அதுவரை தீவிரமாக பேசிக்கொண்டிருந்த நனியிதழும் அவள் தோழி சபிதாவும் நிமிர்ந்தமர்ந்தனர் இலகுவாய். “டீ எடுத்துக்கோம்மா. லன்ச் ரெடி பன்றேன். கண்டிப்பா இருந்து சாப்பிட்டு தான் போகனும்…” என்றார் அவர் சபிதாவிடம். “இல்லை ஆன்ட்டி. ஈவ்னிங் மாமியார் வீட்டுக்கு கிளம்பனும்….” என அவள் மறுக்க, “ஈவ்னிங் தானே? சாப்பிட்டு போகலாம். ட்ரைவரை கொண்டுவந்து விட சொல்றேன். நீ நதி கல்யாணத்துக்கும் வரலை. உன்னை ரொம்ப மிஸ் […]
எப்போதும் அவனின் அழைப்பை உடனே ஏற்று பேசுபவளின் அந்த ஆசை குரலை கேட்டிருந்தவனுக்கு இப்போது தன்னை தவிர்ப்பதில் கோபம் ஒருபக்கம் எழுந்தாலும் தான் பேசிய அதிகப்படியில் அவள் காயப்பட்டிருப்பாள் என்று தெளிவாய் கண்டுகொண்டான். அப்போதும் அவன் வேறு யாருக்கும் அழைத்து அவளிடம் தரும்படி சொல்ல ஆர்யாவின் மனம் இடம் தரவில்லை. “இதழ் கால் அட்டன் பண்ணு. அட்லீஸ்ட் மெசேஜாவது பண்ணுடி….” என்றான் அதட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்து. “என்னை சோதிக்கிற நீ. எவ்வளோ நேரமா கூப்பிடறேன். இதழ் […]