Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெந்நீரில் நீராடும் கமலம்

வெந்நீரில் நீராடும் கமலம் 25 – FINAL

அவர்கள் இல்லாத இரண்டு மாதங்களில் ஊரில் பெரிய அளவில் இல்லையென்றாலும், ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாக மாற்றங்கள் ஏற்பட தொடங்கியிருக்க, அதுவே போதுமாக இருந்தது ஆட்சியருக்கு.                 முன்பு பழையம்பெருமாளுக்கு பயந்தே சாதிப்பாகுபாடுகளை தவறாமல் கடைபிடித்து வந்தவர்கள் இப்போது அவர் இல்லாத தைரியத்தில் சுதந்திரமாக சுவாசிக்கத் தொடங்கியிருந்தனர். பெண்களிடமும், பள்ளிக் குழந்தைகளிடமும் அதற்கான ஆட்களைக் கொண்டு தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள, அது நல்ல பயனை கொடுத்திருந்தது.                        ஊரும், வீடும் நலமாக இருக்க, ஆட்சியரும் சற்றே […]


வெந்நீரில் நீராடும் கமலம் 25 – FINAL

“என் மகனைவிட எனக்கு சாதி முக்கியமில்லை கதிர். நீயே இப்போதான் நல்லபடியா அவளோட வாழ ஆரம்பிச்சு இருக்க.. இந்த நேரத்துல நான் அங்கே வந்து நிற்கக்கூடாது.. நீ நிமமதியா, சந்தோஷமா இருக்கனும்ய்யா.. நான் அண்ணன் வீட்டுக்கு போறேன்.. நீ கிளம்பு..” என்று அன்னம் பிடிவாதமாக கூறிவிட்டார். அவர் செய்த தவறுகள் அவரை உறுத்த, தமிழின் முகம் பார்க்காமல் ஒதுங்கி கொள்ளவே முயன்றார் அவர்.                 “தமிழ் உன்னை எதுவும் சொல்லமாட்டா… அதற்கு நான் பொறுப்பு. என்னோட வா. […]


வெந்நீரில் நீராடும் கமலம் 25 – FINAL

வெந்நீரில் நீராடும் கமலம் 25                கதிரோன் -தமிழ்ப்பிறையின் வாழ்வு மெல்ல மெல்ல அவர்கள் வசப்பட, காதல் அவர்களை நிறைத்துக் கொண்டிருந்தது. காலையில் தமிழ்ப்பிறையின் கூந்தல் காட்டில் புரண்டு எழுந்து தான் கண்விழிப்பான் கதிர். கண்திறந்த முதல் நிமிடம் காட்சிகளுக்குள் கவிதையாய் தென்படும் அவள் முகத்தில் ஈரமான முத்தம் ஒன்றை வைத்து நகர்ந்து கொள்பவன் தனது வயல்வெளி, மாடுகள், என்று மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்து மீண்டும் எட்டு மணிக்கெல்லாம் வீட்டை அடைந்து விடுவான்.                தமிழ்ப்பிறை […]


வெந்நீரில் நீராடும் கமலம் 24

வெந்நீரில் நீராடும் கமலம் 24                        தனுஜா “நீங்க கிளம்புங்க..” என்று கூறிய நிமிடமே தமிழ்ப்பிறையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் கதிரோன். இருவரும் நேரே தங்களது வீட்டிற்கு வர, வீட்டிற்குள் நுழைய முற்பட்ட தமிழின் கையைப் பற்றி வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்றான் கதிரோன்.                    உமையாள் வாசலில் நின்றிருந்தவர் பேரனின் வேகத்தில் மிரண்டு அவர்களின் பின்னால் ஓட, பின்புறம் இருந்த கிணற்றின் அருகே நின்றிருந்தான் அவன். தமிழின் கைகளில் இருந்த அலைபேசியை பிடுங்கி பாட்டியிடம் […]


வெந்நீரில் நீராடும் கமலம் 23-2

                 ஆனால், அப்படி அவளை விட்டுவிட கதிரோன் தயாராக இருக்க வேண்டுமே. பழையம்பெருமாள் தன் ஆட்களிடம் அவளை முடித்துவிட ஆணையிடவும், கதிரோன் அந்த இடத்திற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.                  இம்முறை கதிரோன் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திருக்க, அவனை காதலாகப் பார்த்தாள் தமிழ். “என்னை விட்டு சென்றுவிடுவாயா..” என்று அவன் கண்கள் தன்னிடம் கேள்வி கேட்பது போல் இருந்தது அவளுக்கு. கதிருக்கு அப்படியான கேள்விகள் ஏதுமில்லை […]


வெந்நீரில் நீராடும் கமலம் 23-1

வெந்நீரில் நீராடும் கமலம் 23                     அலுவலகத்தில் அமர்ந்திருந்த தமிழ்பிறைக்கு ஏதோ தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர, யாராக இருக்கும்?? என்ற யோசனையுடன் தான் அழைப்பை ஏற்றாள் அவள். எதிர்முனையில் உச்சகட்ட பதட்டத்துடன் ஒலித்தது ஒரு இளம் குரல்.                   “மேடம்.. நான் பூவழகி மேடம்.. அன்னிக்கு எங்க ஊருக்கு வந்திங்களே.. என்கிட்டே கூட பேசுனீங்க..” என்றவள் ஒருநொடி தமிழுக்கு அவகாசம் கொடுத்து “மேடம் எங்க அண்ணாவை பிடிச்சுட்டு வந்துட்டாங்களாம் மேடம்.. கொன்னுடுவாங்கலாம்.. எங்களையும் கொன்னுடுவாங்களாம்.. எங்க அண்ணாவோட […]


வெந்நீரில் நீராடும் கமலம் 22

வெந்நீரில் நீராடும் கமலம் 22                        “என்ன யோசிக்கிற நீ…” என்று தமிழ் கேட்டுவிட, அவளிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை கதிருக்கு. “என்ன சொல்லிவிட முடியும் அவனால்.. உன் கவலைகளும், வேதனைகளும் என்னை கொன்று புதைக்க காத்திருக்கிறது..” என்று காதல் வசனமா பேச முடியும். இதுபோன்ற காதல் வசனங்கள் திரைப்படத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள படலாம். இது வாழ்க்கையாகிற்றே..                   வசனங்களை கடந்தது அல்லவா.. வார்த்தைகளற்ற மௌனமும், வாய்ப்பேச்சை கடந்த புரிதலும் தானே இங்கே ஆணிவேர். […]


வெந்நீரில் நீராடும் கமலம் 22

வெந்நீரில் நீராடும் கமலம் 22                        “என்ன யோசிக்கிற நீ…” என்று தமிழ் கேட்டுவிட, அவளிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை கதிருக்கு. “என்ன சொல்லிவிட முடியும் அவனால்.. உன் கவலைகளும், வேதனைகளும் என்னை கொன்று புதைக்க காத்திருக்கிறது..” என்று காதல் வசனமா பேச முடியும். இதுபோன்ற காதல் வசனங்கள் திரைப்படத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள படலாம். இது வாழ்க்கையாகிற்றே..                   வசனங்களை கடந்தது அல்லவா.. வார்த்தைகளற்ற மௌனமும், வாய்ப்பேச்சை கடந்த புரிதலும் தானே இங்கே ஆணிவேர். […]


வெந்நீரில் நீராடும் கமலம் 21

வெந்நீரில் நீராடும் கமலம் 21                 அழகிய மணவாளபுரத்தில் அமைந்திருந்த அந்த பெரிய வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தாள் தமிழ்ப்பிறை. நேரம் இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. மாலை தேரோட்டம் முடிந்து அம்மன் கோவிலுக்கு வந்து அமரவும், புறப்படத் தயாரானவளை விடவே இல்லை உமையாள்.                தமிழ் “முடியவே முடியாது..” என்று மறுக்க                 “எப்படி முடியாமப் போகும்.. என்னை மீறி நீ எப்படி போறேன்னு பார்க்கிறேன். ” என்றவர் அவளின் கையை பிடித்துக் கொண்டே அலைந்தார். […]


வெந்நீரில் நீராடும் கமலம் 20  

வெந்நீரில் நீராடும் கமலம் 20                   தமிழ்ப்பிறை அங்கு தனித்து நிறுத்தப்பட்டிருந்த வேற்று இன மக்களுக்காக, ஊர்ப்பெரியவர்களிடம் பேச முடிவெடுத்து அவர்களை நெருங்க, சரியாக அதே நேரம்  பழையம்பெருமாளும், சரவணப்பெருமாளும் தங்களது காரில் வந்து இறங்கினர்.                            கோவில் நிர்வாகிகள் பழையம்பெருமாளைக் காணவும், எதையும் மனதில் வைக்காமல் எப்போதும் போலவே அவரை நெருங்கி மரியாதையாக வணக்கம் வைக்க, ஆணவமான ஒரு தலையசைப்புடன் தன் காரின் அருகிலேயே நின்றிருந்தார் அவர். உடன் அவரது மகன் சரவணபெருமாள்.     ஏனோ […]