Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்காரம் பூவாரம் சூட

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (4)

சில வருடங்களுக்கு பின்…..              ஆடிட்டர் வந்திருக்க அவருடன் அமர்ந்து கணக்கு வழக்குகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷாந்தினி. “லன்ச் முடிச்சிட்டு வந்து மத்ததை பார்க்கலாம் ஸார்…” என்று அவரிடம் சொல்ல, “சரிம்மா, நீங்களும் போய்ட்டு வாங்க…” என்று அவர் அறையை விட்டு எழுந்து செல்ல தானும் வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தாள். இப்போது முழு நேரமும் லாட்ஜ், ஹோட்டல், அதன் அருகில் புதிதாய் கட்டப்பட்டிருந்த கடையில் உடைகள் வியாபரமும் என்று அவ்வளவு வேலைகள். மொத்தமாய் அவளை இழுத்துக்கொண்டான் ஆதித்தன். […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (3)

“மாப்பிளை மன்னிச்…” என்ற சுரேஷ் பேசும் முன், “தெரிஞ்சு பேசினதுக்கு எல்லாம் இப்படி வாய்வார்த்தையா கேட்காதீங்க. முதல்ல மன்னிப்பு கேட்கிற விதமா நடந்துக்காம இருங்க. ஒரு வயசுக்கு மேல நீங்க கேட்கிற மன்னிப்பு எங்களுக்கு சங்கடம். நீங்க உணர்ந்தா அது போதும். எல்லா நேரமும் நான் அமைதியாவே இருக்கமாட்டேன். நேத்து டாக்டர் அவ்வளோ சத்தம் போடறாங்க….” என்றவன், “ப்ச், உங்ககிட்ட சொல்லி என்ன? ஆனா திரும்ப நிஷாக்கிட்ட அவ மனசு கஷ்டப்படற மாதிரி, அழற மாதிரி பேசினா […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (2)

“இன்னும் என்ன நிஷா? நைட் ஒரு இன்ஜெக்ஷன் போடறேன். போட்டுட்டு நீ வீட்டுக்கு கிளம்பலாம்….” என்றவரிடம், “இல்ல டாக்டர் ஒரு முக்கியமான விஷயம்…” என ஆதித்தனை ஒரு பார்வையும், மருத்துவரை ஒரு பார்வையும் பார்க்க, “என்ன எதுவும் கேட்கனுமா? நான் கேட்கவா? என் கிட்ட சொல்லு…” என ஆதித்தன் முன்வந்து கேட்க, “இல்ல நானே கேட்டுக்கறேன்…” என்றவள் சங்கடமும், சிறு வெட்கமுமாக மருத்துவரை பார்க்க அவர் புன்னகைத்தார். “புரியுது நிஷா. எல்லாம் சுமூகமா போற மாதிரி பார்த்துக்கிட்டா […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (1)

ஸ்ருங்காரம் – 27                  ஆதித்தன் வந்து இரண்டுமணி நேரமாகிவிட்டது. மதிய உணவு நேரமே வந்துவிட்டது. இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. செந்தாவும் நிஷாந்தினியை வந்து அழைக்கவில்லை. ஆதித்தனும் வீட்டில் இருக்க சமையலை செய்து வைத்துவிட்டு காத்திருந்தாள். அறையில் ஆதித்தனின் கைபேசி அழைப்பை தாங்கி வர கண்களை பிரித்தவன் அதனை எடுத்து மெல்லிய குரலில் பேசிவிட்டு வைத்து மனைவியை பார்த்தான். ஆதித்தனின் தோளிலிருந்து சாய்ந்து தலையணைக்கு மாறி இருந்தாலும் நிஷாவின் கைகள் ஆதித்தனின் சட்டையை பற்றி இருந்தது. அழுது […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (3)

“உங்க மேலையும், என் மேலையும் விஷயத்தை தெரிஞ்சும் சொல்லாம மறைச்ச காரணத்துக்காக மட்டும் தான் அவரோட கோபம். அதுவும் அவர் மரியாதை சம்பந்தப்பட்டது. உங்களுக்கும் மரியாதை சம்பந்தப்பட்டது தானே? அதுக்காக தான் அவ்வளோ பேசினார். இப்பவும் அந்த விஷயத்தால தான் ஒதுங்கி இருக்கார்….” “ஒரு மனுஷனுக்கு அந்தளவுக்கு கூடவா ரோஷமும், தன்மானமும் இருக்க கூடாதுன்னு சொல்றீங்க? என்ன நடந்தாலும் சரின்னு போகனுமா? ஏன் போகனும்? என்ன அவசியம்? அப்பாவும் தான் ஒருவருஷம் அக்காவோட பேசாம இருந்தார். நீங்க […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (2)

“நாங்க கிளம்பறோம் நிஷா…” என ரஞ்சனி சொல்ல, “என்னக்கா எங்க லாட்ஜ் பத்தி எதுவும் சொல்லாம கிளம்பிட்ட? அது எப்படி இருக்கு? சர்வீஸ் எல்லாம் ஓகே வா?…” என்றாள் நிஷா சிரிப்புடன். “ஹ்ம்ம், எல்லாம் நல்லா இருக்கு. நீ என்ன கஸ்டமர்ஸ்கிட்ட கேட்கிற மாதிரி ரிவ்யூ கேட்கற?…” என நிரஞ்சனி புன்னகைக்க முயன்றாள். “ஆமா, நீ என்கிட்ட சொல்லிட்டா வந்த? உன் லாட்ஜ்ல எனக்கு ரூம் வேணும்ன்னு. அப்போ நானும் கேட்கனும் தானே?…” “வேற என்ன பன்றது? […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (1)

ஸ்ருங்காரம் – 26                  ஆதித்தன் அடுத்த ஐந்துநிமிடத்தில் கிளம்பி வெளியில் சென்றுவிட்டான். அவனால் இருக்க முடியவில்லை. இருக்கவும் முடியாது. இதற்கு மேல் என்ன செய்யவேண்டும்? “ஆதி இப்ப வந்திருவாங்க…” என சசிகலா மகனிடம் சொல்ல, “விடுங்க த்தை. முக்கியமான வேலை இருக்கு. நான் தான் போய் முடிச்சிட்டு வர சொன்னேன்…” என நிஷா சொல்லவும் அவர் அமைதியாய் மகனை பார்த்தார். ஆதித்தன் நிஷாவிடம் தலையசைத்துவிட்டு வெளியே சென்றுவிட சசிகலா மருமகளிடம் வந்தார். “நீ என்ன இப்படி […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 25 (3)

“ஹாய்…” என அமர்த்தலாக சொல்லியவன் இதழ்களுக்குள் சிறு புன்னகை. சட்டென மனைவியை திரும்பி பார்க்க இன்னும் அதே இடத்தில் தான் நின்றிருந்தாள் நிஷாந்தினி. “இங்க வா நிஷா. நீ பேசிட்டிரு. இப்ப வரேன்…” என எழுந்து உள்ளே சென்றுவிட்டான் ஆதித்தன். சமர்ஜித் முதல்நாள் இரவில் ஆதித்தனுடைய விடுதியை தான் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தான். அதனை ஆதித்தன் அன்று காலையில் தான் கவனித்தான். அவன் தான் என பெயரை கொண்டே கண்டுகொண்டவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பணியில் இருப்பவர்களிடம் அவர்களை […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 25 (2)

எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போலிருந்தது கவிக்கு. அந்தளவிற்கு கமலாவின் அராஜகம் சகிக்க முடியாததாகி போயிருந்தது. அதுவும் நிஷாவிடம் கூட சொல்லவில்லை அவள். ‘அவ வாய்க்கு அவளுக்கு கூட அடுத்த பிள்ளை பார்த்தியா?’ என பேசியதெல்லாம் நெஞ்சில் நெருப்பை வாரி வீசி இருந்தது. கொஞ்சநஞ்சமிருந்த பயமும், பரிதாபமும் கூட துடைத்துவிட்டதை போல எங்கோ சென்றிருந்தது கவிக்கு. அதனை சொன்னால் வீட்டில் சங்கடப்படுவார்கள் என்று சொல்லாமல் விட்டவளுக்கு மாமியாரை எதிர்த்து பேசுவதற்கும் தைரியம் இல்லை. இவருக்காக போய் […]


ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 25 (1)

ஸ்ருங்காரம் – 25                 மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர் நிஷாவும் ஆதித்தனும். நிஷாவின் முகத்தில் ஏகத்திற்கும் கலவரம். முதல் குழந்தையை சுமக்கையில் அவளின் உடல்நிலை எப்படி இருந்ததென்ற பயமே இப்போது அவளை பதட்டத்தில் வைத்திருந்தது. அந்த நேரத்தில் நிற்கவும், அமரவும் கூட அவ்வளவு கவனம் தேவையிருந்தது. அதிகமாய் படுத்தோ இல்லை சாய்ந்தோ மட்டுமே இருந்திருக்கிறாள். அந்நினைவில் உழன்றவளை ஆதித்தன் தான் அப்படி இருக்காது என தேற்றியபடி அமர்ந்திருந்தான். ஆதித்தனின் கரம் நிஷாவின் வலதுகையை பற்றி இருக்க மெல்லிய நடுக்கத்தை […]