Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chinna Mookuthi Poo

சின்ன மூக்குத்தி பூ – 21 (3)

“கூப்பிட தானே செஞ்சாங்க. உடனே கிளம்பிடுவியா?…” என அவளை முறைத்தவன் சங்கருக்கு போன் போட முதலில் அடுக்காமல் இரண்டாவது அழைப்பில் எரிச்சலுடன் போனை எடுத்தான். “என்னடா?…” என கேட்க, “சும்மா அத்தான். மாடிக்கு போனவங்க இன்னும் வரலையேன்னு…” “இப்ப வரமுடியாது. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு…” என்று சொல்லி போனை வைத்துவிட அவன் பேசிக்கொண்டிருந்த நேரம் தேவகி நழுவ பார்க்க, “எங்க ஓடற?…” என அவளை அணைத்தவன் இடையில் விட்டதை தொடங்க, “ஒரே நாள்ல ஹீரோ ஆக […]


சின்ன மூக்குத்தி பூ – 21 (2)

“அரைக்கிழவனுக்கு ஆசைல ஒன்னும் குறைச்சல் இல்லை. லைட்டை ஆஃப் பண்ணுங்க. இல்லன்னா அடுத்து கனமா எதாச்சும் பறந்து வரும்…” என்று அவள் சத்தம் போட சத்தமாக சிரித்துக்கொண்டே விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தவன் மகனின் மேல் இருந்த மனைவியின் கையில் கை போட்டான். “போயா யோவ்…” என்று மெல்லிய குரலில் அவனை திட்டி கையை தட்டிவிட மீண்டும் மீண்டும் அதையே செய்தவன் அவள் விலக்க விலக்க, “தேவா ப்ளீஸ்…” என்று அவளின் விரல்களோடு விரல் கோர்த்துக்கொண்டவன் அதை […]


சின்ன மூக்குத்தி பூ – 21 (1)

பூ  – 21 தேவகி நேரடியாக இப்படி தாக்கவும் சங்கர் வாயடைத்து நின்றான். அவள் சொல்வது சரிதானே? தானும் அப்படிதானே இருந்தோம் என எண்ணியபடி அசையாமல் நிற்க, “இப்ப இன்னைக்கு வந்த தைரியம் ஏன் இதுக்கு முன்னாடி இல்லாம போச்சு? பதில் சொல்லுங்க. நான் அந்த பக்கம் போனா கேட்க வேண்டியது தானே? நீங்க மட்டும் என்ன பண்ணுனீங்க?…” “தேவா நான் அமைதியா இருந்ததுக்கு ஒரு காரணம் இருந்துச்சு…” “ஏன் எங்களுக்கு எல்லாம் அந்த காரணம் இருக்க […]


சின்ன மூக்குத்தி பூ – 21 (3)

அமலா சொல்லி  தேவகியிடம் கேட்க சொல்லியிருக்க அவளுக்கு அதை எப்படி கேட்பதென்ற தயக்கமும், கேட்டால் கோவிப்பாளோ என்ற அச்சமும் ஒருங்கே இருக்க ஒருகட்டத்தில் ஷ்ரவனிடம் வந்து நின்றாள். “அத்தான் நான் எப்படி இதை கேட்க?…” என வந்து நிற்க தூக்கிவாரி போட்டது அவனுக்கு. “நீ எதுவும் கேட்டு வச்சிரலையே…” என்றான் அக்கம்பக்கம் சுற்றி பார்த்து. “அதெப்படி கேட்பேன்? அதெல்லாம் இல்ல. எனக்கும் விவரம் தெரியுமாக்கும்…” என்று பெருமையடித்துக்கொண்டவள், “சொல்லுங்க, நான் கேட்டு அத்தைட்ட சொல்லனும்…” என்று அவனின் […]


சின்ன மூக்குத்தி பூ – 21 (2)

எத்தனை பேசியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. என்னவும் பேசிக்கொள் என்று சொல்லிவிட ஊட்டிக்கு சென்றவனுக்கு ஒருவாரம் தாக்குபிடிக்கமுடியவில்லை. “வாசு கிளம்பி வாயேன். இதுக்கெல்லாம் சண்டை போடமாட்டியாடி நீ?…” என அவளிடம் வேறு எகிறினான். திருமணம் ஆகி அந்த வாழ்க்கையை நல்லவிதமாய் வாழவேண்டும் என்று மனைவியிடம் கணவனாய் அன்போடு நடந்துகொண்டவன் இன்று அவளில்லாத தருணத்தில் தான் எந்தளவிற்கு அவளை தேடுகிறோம் என்று தனிமையில் இருந்தவனுக்கு அப்போதுதான் அந்த புரிதலே உண்டானது. “இந்த ஊர்நாட்டான் என்னை இப்படி புலம்ப விட்டுட்டாளே?…” […]


சின்ன மூக்குத்தி பூ – 21 (1)

பூ – 20 கோவமும், எரிச்சலுமாக இங்குமங்கும் ஷ்ரவன் நடக்க வாசமல்லி கையில் வைத்திருந்த ஆப்பிளை நறுக்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். “இப்ப சந்தோஷமா? எந்த நேரம் ஊருக்கு போறேன்னு கிளம்பினியோ? என்ன தோணுச்சுன்னு திரும்ப வரதை பத்தி பார்க்கலாம்ன்னு சொன்னியோ இப்ப இப்படி ஆகிருச்சு…” என்று அவன் குதித்துக்கொண்டு இருந்தான். “என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது அத்தான். என்னையும் கூட கூட்டிட்டு போங்க….” என்றாள் அதிகாரமாய். “அப்படியே தலையில நங்குன்னு கொட்டினா என்னன்னு வருதுடி எனக்கு….” என […]


சின்ன மூக்குத்தி பூ – 19 (3)

“சொன்னாப்ல என்ன ஆக போகுது? சொல்லு…” என்று ஷ்ரவன் முறைக்க, “ஒன்னும் ஆகாது. என்கிட்டே சொன்னா ரகசியமா பத்திரமா வச்சுப்பேன்….” “அதான் தெரியுமே ரகசியத்தை நீ பாதுகாத்தது. பொங்கலை வை. இல்ல இப்படியே ஊருக்கு கூட்டிட்டு போய்டுவேன்…” “நான் வரமாட்டேன் உங்களோட. சும்மா சும்மா மிரட்டிட்டே இருக்கீங்க. இது எங்க ஊரு. ஆமா…” என அவள் சிலிர்த்துக்கொள்ள, “இங்க கெக்கபிக்கேன்னு நான்பாட்டுக்கு சிரிச்சா என்னை என்ன நினைப்பானுங்க? ஒரு போலீஸா எவ்வளவு மெயின்டெய்ன் பண்ணி வச்சிருக்கேன். நீ […]


சின்ன மூக்குத்தி பூ – 19 (2)

“பின்ன என்ன அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா, இவளுக்கு தெரியும்ல. அதை சொல்லாம இவளுக்கு இவ கவலை. ஹைய்யோ ஹைய்யோ…” என்று இன்னும் சிரிக்க அதற்குள் வந்துவிட்டாள் வாசு. “அம்மாட்ட சொல்லிட்டேன். செல்விக்கு போன்ல பேசறேன்னு சொல்லிட்டாங்க. வாங்க போகலாம்…” என்று நிற்க, “என்னவோ சப்போர்ட்டுக்கு வந்தீங்க. இனி வாங்க வச்சு செய்யறேன் அண்ணனையும், தங்கச்சியையும்…” என்ற ஷ்ரவன் ஆதவ்வை தூக்கிக்கொள்ள, “என்னண்ணே? என்ன சொல்லுறாரு?…” என்று வாசு சங்கரிடம் கேட்க, “அவனுக்கு பசிக்குதாம். அதான் உளறிட்டு […]


சின்ன மூக்குத்தி பூ – 19 (1)

பூ – 19 ஷ்ரவன் சொல்லியதை போல மாலை கிளம்பி இரவு வாசமல்லியுடன் ஊர் வந்து சேர்ந்துவிட்டான். வரும் வழியெல்லாம் அவள் ஒரே அனத்தல். கோவிலுக்கு போகனும், ஊர்வலம் பார்க்கனும், ஆட்டம், பாட்டம் எல்லாம் பார்க்கனும் என்று திருவிழாவின் டாப் டூ பாட்டம் அவனுக்கு சொல்லி சொல்லி காதில் ரத்தம் வராத குறைதான் ஷ்ரவனுக்கு. “சத்தியமா சொல்றேன். நீயே இவ்வளவு படம் போட்டு விளக்கின பின்னாடியும் ஊருக்கு போகனுமான்னு இருக்கு. இதுவே திருவிழா பார்த்தமாதிரி தான் எனக்கு. […]


சின்ன மூக்குத்தி பூ – 18 (2)

“என்ன கேட்கல? அப்படி என்ன கேட்காம இருந்தேனாம்? சொன்னாத்தான தெரியும்?…” “ஏன் உனக்கு தெரியாதா? உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தனியா எங்கயும் போக வேண்டாம்ன்னு. அன்னைக்கு ரோடு ரோடா நாயா அலைஞ்சது நான் தானே?…” என கோபத்துடன் அவன் சொல்ல, “எங்க? என்னிக்கு?…” என்றாள் புரியாமல். “சுத்தம். ஒன்னும் கேட்க வேண்டாம் போ…” “சொல்லுங்க அத்தான். கேட்கறேன்ல…” “உன்னை யார் கடைக்கு தனியா போய்ட்டு வர சொன்னா? கடைக்கு சாமான் வாங்க போறேன்னு நாலு வரில […]