Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Engiruntho Vanthaal

எங்கிருந்தோ வந்தாள் – Epilogue (1.2)

  அன்றொரு நாள் மாதுரியை பார்க்க வீட்டிற்கு வந்தாள், சாதனா. அவளுடன் வந்திருந்தான் ஒரு ஆடவன். தோழியைப் பார்த்ததும், கௌஷிக் நியாபகம் வர, அதைக் கட்டாயப்படுத்தித் தூர தள்ளிய மாதுரி, தோழியையும், அவனையும் வரவேற்றுச் சோஃபாவில் உட்கார சொலிவிட்டு, அவர்களுக்குக் கிட்சனுக்குச் சென்று குடிக்கக் குளிர்பானம் எடுத்துவந்து கொடுத்தாள். பின், அவர்கள் குடித்து முடித்ததும், “என்ன விஷயம் டி?” என்றாள் சைகையில். “அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம் மாதுரி. இதோ இவர் தான் என் மாமா. இவரைத் […]


எங்கிருந்தோ வந்தாள் – Epilogue (1.1)

  எபிலாக் – 1.1   “இன்றைய முக்கியச் செய்திகள்!” “முன்னாள் முதல்வர் கொலை வழக்கின் விசாரணையில் திடீர் திருப்பமாக, விபத்தில் இறந்து போன சென்னை ஆட்சியர் நந்தகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக நிருபிக்கும் வகையில் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.” “சென்னை மனநல காப்பகத்தில் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையின் முடிவில், அங்குப் பணியாற்றும் மருத்துவர்கள் வசந்த், குமார், கௌஷிக், உள்ளிட்ட மூவருக்கும் பங்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் […]


எங்கிருந்தோ வந்தாள் 31.2

  சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்பு! தன் உடைகளையும், மகளின் உடைகளையும் பெட்டியில் அடுக்கிக்கொண்டு இருந்தாள், மாதுரி. அங்கே சித்தார்த் அறையில், கணவன் சித்தார்த், மற்றும் தன்னுடைய துணிகளைப் பெட்டியில் பேக் செய்துகொண்டு இருந்தாள், ஸ்வப்னா. அவளை வேலை செய்ய விடாமல் கொஞ்சிக்கொண்டு தொல்லை செய்து கொண்டும் இருந்தான் சித்தார்த். இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஸ்வப்னா, அம்பரீஷின் தொழில் நண்பர் ஜெகதீஷின் ஒரே மகள். தங்கை தனியாக இருக்கும்பொழுது, தான் திருமணம் […]


எங்கிருந்தோ வந்தாள் 31.1

  அத்தியாயம் 31   “தற்பொழுது கிடைத்த முக்கியச் செய்தி! தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஐம்பது எம்.எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா. ஆட்சி கவிழும் வாய்ப்பு!” செய்தியாளர் நியுஸ் வாசிக்க, தன் வீட்டுச் சோஃபாவில் அமர்ந்தாவாறு அச்செய்தியை பார்த்துக்கொண்டு இருந்தார் ரத்தினசபாபதி. மீசையை முறுக்கிக் கொண்டவரின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அன்று மாதுரி வந்து பார்த்துவிட்டுப் போனதும், அவள் சொன்னபடி, கட்சியில் அவரின் அண்ணனின் ஆதரவாளர்களை ரகசியமாகச் சந்தித்தார். அவர்களிடம் நரசிம்மனின் வீடியோவை போட்டுக்காட்ட, […]


எங்கிருந்தோ வந்தாள் 30

  அத்தியாயம் 30   “குட் ஈவ்னிங் சர்!” சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் கமிஷனர். எதிரில் சுதர்ஷன் நின்றிருந்தான். “உட்காருங்க சுதர்ஷன்.” கமிஷனர் சொல்ல, அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். “வாக்குமூலம் வாங்கியாச்சா சுதர்ஷன்?” “வாங்கியாச்சு சர்.” சொல்லிவிட்டு தன் கையில் இருந்த காகிதத்தை அவரிடம் நீட்டினான். அதை வாங்கியவர், பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். காகிதத்தில் இருந்ததைப் படிக்கப் படிக்க, அவர் முகம் அதிர்ச்சிக்கும், குழப்பத்துக்கும் போனது. முழுவதையும் படித்து முடித்தவர், “என்ன சுதர்தன் […]


எங்கிருந்தோ வந்தாள் 29

  அத்தியாயம் 29   இன்ஸ்பெக்டர் எப்போது வருவார் என்று படபடப்புடன் அமர்ந்திருந்ததாள் மாதுரி. திடீரென்று திபுதிபுவென்று சிலர் உள்ளே நுழைவதைப் பார்த்தாள். அவர்களின் உடையைப் பார்த்ததுமே அவர்கள் மனநல காப்பக ஊழியர்கள் என்று தெரிய, எழுந்து ஓட முயற்சித்தாள். இவ்வளவு தூரம் உயிரை கையில் பிடித்துத் தப்பித்து வந்தது இவர்களிடம் மாட்டிக்கொள்ளவா? முடியவே முடியாது! தன்னைப் பிடிக்க வந்தவர்களைத் தன் முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி தள்ளிவிட்டவள், அடித்துபிடித்துக்கொண்டு வெளியே ஓடினாள். “யோவ்! கான்ஸ்டபிள் அவளைப் […]


எங்கிருந்தோ வந்தாள் 28.2

  ஒரு மாதம் கடந்திருந்தது. ரொம்பவே மெலிந்து போயிருந்தாள் மாதுரி. என்புதோல் என்று சொல்லும் அளவுக்குப் பார்க்கவே எழும்பும் தோலுமாகக் காட்சி அளித்தாள். உடல் அளவில் மட்டுமில்லை மனதளவிலும் ஓய்ந்து போயிருந்தாள். போராடி போராடி ஓய்ந்து போயிருந்தாள். உண்மையைச் சொன்னால் கேட்பதற்குக் காதுகள் இல்லாதபோது யாரிடம் சொல்வது? முற்றும் துறந்த முனிவர் நிலை தான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று! அப்படி ஆக்கியிருந்தனர் அங்கிருந்த கயவர்கள். அங்கே சித்தார்த்தோ, போகப் போக வியாபாரம் பள்ளத்தை […]


எங்கிருந்தோ வந்தாள் 28.1

  அத்தியாயம் 28   பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து செல்லும் உயர்ரகப் பார் அது. தரை தளத்தில் ஆட்டமும் பாட்டமும் என இளசுகள் கும்மாளாம் அடித்துக் கொண்டிருக்க, முதல் தளத்தில் போக்கர், பூல் விளையாட்டுக்களைச் சிலர் விளையாடிக் கொண்டிருக்க, கடைசியில் இருந்த மேசையில் அமர்ந்திருந்தான் விக்டர். நாற்பதுகளில் ஆரம்பத்தில் இருப்பவன். அவன் கண்கள் அடிக்கடி வாசலையும் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று அவன் முகம் பிரகாசகமானது. அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தனர், அவனின் உதவியாளனும், […]


எங்கிருந்தோ வந்தாள் 27.2

  “என்ன நாகராஜ்? லீவு எல்லாம் எப்படிப் போச்சு? புதுப் பொண்டாட்டிக் கூட ஒரே குஜாலா?” வராண்டாவில் தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து கேட்டான் மாணிக்கம். “அய்ய! நீ பண்ணாததையா நான் செஞ்சுட்டேன். போவியா அந்தபக்கம்!” பதில் சொன்ன நாகராஜுக்கு முப்பது வயதிற்குள் இருக்கும். பார்க்க நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான். கண்கள் இரண்டும் எப்பொழுதும் போதையில் மிதக்க, பற்களோ புகையிலை போட்டு கரை படிந்திருந்தது. மாணிக்கம், நாகராஜ், இருவருமே மனநல காப்பகத்தில் கம்பவுண்டர்களாகப் […]


எங்கிருந்தோ வந்தாள் 27.1

  அத்தியாயம் 27   கண் விழித்தாள் மாதுரி. தன் அறையில் இருந்தாள். யாரோ தூக்கிக்கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் போல! மெல்ல எழுந்துகொள்ள முயற்சித்தாள். தசை எல்லாம் வலித்தது. எழுந்துகொள்ள முடியாமல் தலை எல்லாம் சுற்றியது. வயிற்ரை வேறு புரட்ட, அப்படியே படுத்துக் கொண்டாள். ஏனோ தெரியவில்லை தனிஷ்காவின் நினைவு நெஞ்சில் பாரத்தை ஏற்றியது. மகளைப் பார்க்காமலே இறந்து விடுவோமோ என்ற பயம் இதயத்தை அழுத்த, தேம்பி தேம்பி அழுதாள். “பப்பா!! ஏன் என்னை விட்டுட்டு […]