Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Vittu Ponaayae

என்னை விட்டுப் போனாயே – 24 (இறுதி – 2)

இறுதி அத்தியாயம் – 2   தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்க, அகத்தியன் வேகமாக உள்ளே வந்து, “வருணி செய்திப் பாத்தியா, இனன்யாவுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர கைது செஞ்சிருக்காக” “ஆமா அகத்தியண்ணா இப்பதான் செய்தில பாத்தேன்” சிந்தி, “என்னல சொல்ற அவுகல எதுக்கு கைது செஞ்சாக” “அவுக போலி மருத்துவராம், சென்னைல ஒரு பெரிய மருத்துவமனையில் செவிலியரா வேலைப் பாத்துட்டு இருந்துருக்காக, அங்க கெடச்ச அனுபவத்த வச்சி, போலிச் சான்றிதழ் வாங்கி இங்க டாக்டர் ஆயிட்டாக” […]


என்னை விட்டுப் போனாயே – 24 (இறுதி-1)

அத்தியாயம் – 24   இறுதி அத்தியாயம் – 1 இனன்யாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து, இறுதி யாத்திரைக்கு இனன்யாவின்  பூத உடலை தூக்கிச் செல்லும் போதும் கூட, வருணியின் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை, இனன்யாவின் தலைமாட்டில் அமர்ந்தவள் அப்படியே அசையாமல் இருந்தாள், யாருடனும் பேசவுமில்லை, பல பேர் இப்படி இருக்காதே அழுது தீர்த்துவிடு என சொல்லியும், எதுவும் அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை, வதனாவும் வன்யாவும் அவளை வலுக் கட்டாயமாக, மற்ற வேலைகளைச் செய்ய […]


என்னை விட்டுப் போனாயே – 23

அத்தியாயம் – 23   மருத்துவர் சாந்தி, “என்ன டாக்டர் நீங்க இப்படியொரு பதில் சொல்றீங்க, உங்களுக்கு ஒரு உயிர் சர்வ சாதாரணமா போய்ட்டா, அந்த புள்ள கூட யாரும் வரல, ஏன் வரலன்னு கேக்க மாட்டீகளா, அவ கணவனாவது கூட வந்திருக்காகளான்னு கேக்கனும், எதயும் கேக்காம, எப்படி நீங்க சிகிச்சை ஆரம்பிச்சீங்க?” “நான் கேட்டேன் டாக்டர், அந்தப் பிள்ளதான் சொன்னா, இன்னைக்கு அவங்கலால வர முடில, நான் விபரங்கள் கேட்டுட்டுப் போகதான் வந்தேன், பிறகு அவரிடம் […]


என்னை விட்டுப் போனாயே – 22

அத்தியாயம் – 22   வைரம், “டாக்டர் என் மவளுக்கு என்ன ஆச்சு, ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுல வச்சிருக்கீங்க” “இனன்யாவுக்கு மஞ்சகாமால, சில பரிசோதனை எடுக்க சொல்லியிருக்கேன், அந்த ரிப்போர்ட் வந்த பிறகு தான், அவளுக்கு ஏன் மஞ்சகாமால வந்ததுன்னு தெரியும், இப்ப அவள பரிசோதிச்சதை வைத்து எதுவும் சொல்ல முடியாது, ரிப்போர்ட் வந்த பிறகுதான் இந்த நோய் எந்த அளவுக்கு இருக்குனு சொல்ல முடியும், அவளுக்கு வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் […]


என்னை விட்டுப் போனாயே – 21

அத்தியாயம் – 21   “சிறு வயதிலிருந்து தனக்கு நல்லது கெட்டது எதுவென, எனக்கு பிடிச்ச மாரி சைக்கிள்ள முன்னாடி உக்கார வச்சு கூட்டிட்டுப் போய், ஒவ்வொண்ணா சொல்லித் தந்தவுக, பெண் புள்ள எப்படி வளரனும், எந்தெந்த இடத்தில் தைரியமா, பொறுமையா இருக்கனும்ன்னு சொல்லிக் கொடுத்தவுக, பெண் புள்ளக தேவையில்லாம அழக் கூடாது, ஏன்னா அது அவுகள கோழையாக்கும், மத்தவுகளிடம் அனுதாபத்தை எதிர்பாக்கும் ஆயுதமா மாறும்ன்னு சொன்னவுக முதல் முறையா தன் முன்னாடி கண்ணீர் வடிக்காகளே, நான் […]


என்னை விட்டுப் போனாயே – 20

அத்தியாயம் – 20   மறுநாள் அகத்தியன் இனன்யாவை அழைத்துக் கொண்டு, வருணியைத் தேடி வர, வருணியும், அபினவும் இவர்களுக்காக காத்திருக்க, வருணி, “இனன்யா சாப்டியாப்ள, உனக்கு இட்லியும் சாம்பாரும் ரொம்ப பிடிக்கும், வாப்ள சாப்ட்டு போலாம்” “வேணாம் நான் சாப்ட்டுதான் வந்தேன்” என்று வேறு பக்கம் பார்த்து பதில் சொல்ல, “அகத்தியா அலுவலகத்தில் விடுமுறை சொல்லனும், போற வழியில் சொல்லிட்டு போலாம்” வருணி, “நான் ஏற்கனவே வன்யாவிடம் ரெண்டு பேருக்கும், விடுமுறை சொல்லச் சொல்லிட்டேன்ப்ள, அப்படியே […]


என்னை விட்டுப் போனாயே – 19

அத்தியாயம் – 19   அமைதியாக சென்ற மூன்று வருடங்களில் இதுவரை குழந்தை என்ற எண்ணம் இல்லாமல் இருந்தாள் இனன்யா. அவளின் பொறுமையை சோதிப்பதற்காக, தொலைக்காட்சியில் ஐவிஎப் (IVF) சிகிச்சை முறைப் பற்றிய நிகழ்ச்சி ஒளிப்பராகிக் கொண்டிருக்க, அவளுக்கு அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும், தன்னுள் தூங்கிக் கொண்டு இருந்த அவள் மனம் எழத் தொடங்கியது, அதனால் மீண்டும் அகத்தியனிடம் குழந்தையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினாள். இனன்யா, “அகத்தியா உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்” “என்னப்ள இந்த வீட்ல […]


என்னை விட்டுப் போனாயே – 18

அத்தியாயம் – 18   வன்யாவிடம் பேசியதிலிருந்து இனன்யா அகத்தியனிடம் குழந்தைப் பற்றி எதுவும் பேசவில்லை, இவர்களும் வீட்டில் யாரிடமும் நடந்தவை, எதையும் கூறவில்லை, வன்யாவை வருணிதான் பேச வைத்திருப்பாலோ என்ற சந்தேகம் இருந்தாலும், வருணியிடம் கேட்கவும் இல்லை. அவரவர் வேலையை பார்த்தாலும், ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வதிலும், நால்வரும் கவனமாக இருந்தனர். வருணிக்கு பிரசவ தேதியும் நெருங்கியது, வருணியை விட இனன்யாவும் அகத்தியனும் தான் பயத்தில் இருந்தனர், அவர்கள் பயந்தது போலவே, சிந்தி அகத்தியனை கைபேசியில் […]


என்னை விட்டுப் போனாயே – 17

அத்தியாயம் – 17   வன்யா, “வருணி வரலயாப்ள, அவளுக்கு எதுவும் முடிலயா ஏன்ப்ள வரல?” “நல்லாத்தான் இருக்கா மருத்துவமனைக்கு போக வேண்டிய தேதி, எதுக்கு இப்படி பதட்டத்தோடு கேக்க, அபினவ் கூட்டிட்டு போய்ருக்கான், அங்க போய்ட்டு வருவா, ஒரு மணி நேரம் தாமதம் ஆகும்னு சொல்லச் சொன்னா, நம்ம குழு லீடரிடம் வரும் போதே சொல்லிட்டேன்” “சரிப்ள பசிக்குது காலைல சாப்டல, கேண்டீன்ல ஏதாவது சாப்ட்டு வரலாமாப்ள” “காலையிலயே கேண்டீன்ல போய் உக்காந்தா லீடர் ஏதாவது […]


என்னை விட்டுப் போனாயே – 16

அத்தியாயம் – 16   வருணி, “இனன்யா எனக்கு ஏழு முடிஞ்சு எட்டு மாசம் ஆகப் போகுது, இனிமே நான் கொஞ்சமாச்சும் வேல பாக்கனும்ப்ள, இப்படி எல்லா வேலயும் நீயும் வன்யாவும் பாத்தா, நான் சோம்பேறி ஆயிடுவேன்ப்ள” “நீ சோம்பேறியானாலும் பரவாயில்ல, என் மருமவன் நல்லபடியா, வெளில வர வரைக்கும் நீ நல்லா இருக்கனும், அப்பதான் அவனும் நல்லா இருப்பான்” வன்யா சிரித்துக் கொண்டே, “ஏப்ள அப்ப நீ வருணிக்காக எதயும் செய்யலயா, உன் மருமவனுக்காகதான் செய்றியா” […]