Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennavo Maatram Enakkul

Ennavo Maatram Enakkul 26

  26   ஒரு வருடம் கடந்திருந்த வேளையில்! நிறைய முறை கணவனுக்கு போன் முயற்சித்து கடைசியில் அவனைக் கூப்பிட்டாள். “வி..விக்னேஷ்” என்றழைத்தாள் சூர்யோதயா. “சூர்யா! என்னமா? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரியாயிருக்கு?” என்று பதற… “எ..எனக்குப் பிரசவ வலின்னு நினைக்கிறேன். மச்சானுக்கு லைன் போகல. அத்தை மாமா ஊருக்குப் போயிருக்காங்க. சியாமளா அண்ணி ரொம்ப வருஷம் கழிச்சி இப்பதான் மாசமாயிருக்காங்க. அதனால அவங்களைக் கூப்பிடலை. சியாமளா அண்ணி ஹஸ்பண்டுக்கு கால் பண்ணினா என்கேஜ்டா இருக்கு.” “ஆகக் […]


Ennavo Maatram Enakkul 25 2

அதை உணர்ந்தானோ சபரி, “பிடிச்சிக்கலாமே! ஆனாலும், உனக்கு ரொம்ப ஆசைதான் மதுமிதா. உன்னையே நினைச்சிட்டிருப்பேன் நினைச்சியா? பைக் ஓட்டும்போது வண்டி ஸ்லிப்பாகி கீழ விழுந்துட்டா, ஐயோ செத்துட்டேனேன்னு நினைச்சி அப்படியே கிடக்குறதில்லை வாழ்க்கை. அடியே பட்டிருந்தாலும் கையைக் காலை உதறி அடுத்து நடக்க வேண்டியதைப் பார்த்து கிளம்பிட்டேயிருக்கணும். உன்னோடான என் கல்யாணம் ஜஸ்ட் ஸ்லிப்தான். அதனால்தான் உன்னை உடனே உதற முடிஞ்சது. எனக்கு என் உதயா கிடைச்சா” என்றான் கர்வமாக. “ரொம்பப் பேசுற சபரி. நான் விட்டுட்டுப் […]


Ennavo Maatram Enakkul 25 1

  25   மறுநாள் பதினோரு மணியளவில் வீராச்சாமி போலீஸ் மற்றும் வக்கீலுடன் சபரியின் வீட்டில் வந்திறங்கினார். எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவரின் வேகத்தை மெச்சியவனாய், பெண்களை அறைக்குள் இருக்கச் சொல்லி கீழே வந்தவன், “வாங்க மாமா. சீக்கிரம் மீட் பண்ணலாம்னு நேத்து மதியம் சொல்லிட்டு காலையிலேயே இப்படி திடுதிப்னு வந்து நிற்கறீங்க? ஒரு போன் பண்ணியிருக்கலாமே மாமா?” “எதுக்குத் தப்பிச்சிப் போகவா?” “தப்பு செய்றவன்தான் தப்பிச்சிப் போகணும். நான் என்ன தப்பு செய்தேன் மாமா?” “எங்கடா என் […]


Ennavo Maatram Enakkul 24 2

ஃப்ரீ ஷோ பார்க்கும் ஆவலில் வீட்டின் இளையவர்களும் வந்துவிட, “ஒன் டூ த்ரீ” என்று கௌண்ட் ஆரம்பித்து, “சூர்யா சபரிக்கு கிஸ் பண்ணுவாங்க” என்று ஒரு க்ரூப்பும்… “இல்ல பல்ப் கொடுத்திருவாங்க” என்று ஒரு க்ரூப்பும் பெட் கட்டினார்கள். மெஜாரிட்டி பல்பிடமே இருக்க… ‘அவளின் மச்சானை விட்டுக் கொடுத்திருவாளா என்ன?’ சபரிநாதன்-சூர்யோதயா இருவருக்குமிடையே அரை அடி இடைவெளியில் நின்றவள், கணவனின் கையுடன் கைகோர்த்து விரல்களில் பின்னலிட்டு, அவன் முகம் பார்த்து கண்சிமிட்டிப் புன்னகைத்து தோள் சாய்ந்து கொண்டாள். […]


Ennavo Maatram Enakkul 24 1

  24   “உனக்கும்… பரத், ரவிக்கும் என்ன சம்பந்தம் விக்னேஷ்?” “எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணினது அவங்கதான். சூர்யாவைப் பார்க்க அவங்க வீட்லயிருந்து யாரையும் வரவிடாமல் செய்தது பரத். ஸ்கூல் படிக்கிற சின்னப் பையன்தான் இருந்தாலும் அக்கா பாசத்துல எல்லாத்தையும் செய்தான். என்ன அவனைக் கன்வின்ஸ் பண்ண நானும் சதீசும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.” “அடுத்து ரவி சார்! முதல்ல திட்டித் தீர்த்தாலும், உங்க சைடுல இருந்து எனக்கு ஹெல்ப் பண்ணினார். நீங்க சென்னையில ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறது விஷயமா […]


Ennavo Maatram Enakkul 23 2

“என்னை உங்க மூத்த பையனா ஏத்துக்கிட்டா, உங்க மருமகளும் பேத்தியும் காருக்குள்ள” என்று வழிவிட்டு நின்றான். வேகமாக வெளியே வந்தார் விமலா. கார் நின்றதுகூட தெரியாமல் மகளை அணைத்துத் தூங்கும் விழிகள். தூக்கத்திலும் புன்னகைக்கும் இதழ்கள் நான் நிறைவாக வாழ்கிறேன் என்பதைப் பரைசாற்றியது. தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலனாக நினைத்தவர் எழுப்ப மனமில்லாமல் நிற்க… “என்னம்மா எழுப்ப மனசு வரலையா? நானும் அதான் எழுப்பலை” என்றவன் போனை எடுத்து, தாரமே தாரமே வா ரிங்டோனை திரும்பத்திரும்ப ஓடவிட… […]


Ennavo Maatram Enakkul 23 1

  23   மழைச்சாரல் சற்று பெரிதாகி ஊற்றிக் கொண்டிருக்க, மழை நீர் படாமல் இருக்க குழந்தையை அணைத்தாற்போல் காரிலிருந்து இறங்கி வீட்டினுள் வந்து, ஆடை மாற்றி பால் ஆற்றிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். கணவன் குழந்தையினருகில் இருந்ததால் நைட்டியை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றாள். ஜாக்கெட்டில் மாட்டிக்கொண்ட பின்னைக் கழட்ட முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய், “ப்ச்… இது வேற வம்பு பண்ணுது. மச்சான் எடுத்துக் கொடுத்த சேலை கிழியாம பார்த்துக்கணும்” என்றெண்ணி போராடிய பொழுது… […]


Ennavo Maatram Enakkul 22 2

“டாக்டர் இவள் என்னோட தாய்மாமா மகள். ஒன்றரை மாதம் முன்ன எங்கம்மாவை ப்ரெய்ன் வாஷ் பண்ணி என்னை அவசரமா வரவச்சி நிச்சயம் பண்ணிட்டாங்க. இவளைப் பார்த்து கிட்டத்தட்ட ஏழு வருஷம் இருக்கும். நிச்சயம் முடிஞ்சதும் கேரளாவுக்குப் போயிட்டு கல்யாணத்துக்குதான் திரும்பி வந்தேன். நிச்சயத்தப்ப தப்பு நடந்ததா பார்த்தாலும் ஒன்றரை மாதம்தான டாக்டர் ஆகுது. இங்க இரண்டரை மாதம் எப்படி?” என்றான் கோபமாக. “வேண்டாம் சபரி. நீ ரொம்பப் பேசுற?” “ச்சீ வாயை மூடு. நான் ரொம்பப் பேசுறேனா? […]


Ennavo Maatram Enakkul 22 1

  22   “போன் செய்து அரைமணி நேரமாச்சேன்னு உங்களைத் தேடினா, தனியா இங்க என்ன பண்றீங்க மச்சான்?” “சும்மாதான்மா. ஃப்ரண்ட்கிட்ட பேசிட்டிருந்தேன் நீ வர்றதுக்குக் கொஞ்சம் முன்னதான் கிளம்பினாங்க. அப்படியே குழந்தைங்க விளையாடுறதைப் பார்த்துட்டிருக்கேன். பாப்பா எங்க?” ப்ரித்வி உடன்பிறப்புகளோட பிள்ளைங்க அவளைப் பிடிச்சி வச்சிக்கிட்டாங்க. இப்போதைக்கு நம்மை அனுப்புறதா ஐடியா இருக்கிற மாதிரித் தெரியலை.” “அப்ப இங்க வந்து உட்கார்” என்று மடியைக் காண்பித்தான். “பொது இடத்துல மடியிலயா? சேட்டையா உங்களுக்கு” என்று அருகிலிருந்து […]


Ennavo Maatram Enakkul 21 2

  “அந்தளவு வேண்டாம் சூர்யா. இப்ப நீங்க அமைதியா தூங்கி ஃப்ரெஷ்ஷா எழுந்திருங்க. உங்க மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கிருச்சி. இதுவரை நடந்ததை எல்லாத்தையும் மறந்திருங்க” என்று அவளை மயக்கத்திலிருந்து தூக்கத்தில் விட்டு வெளியே வந்து நர்ஸ் ஒருவரை சூர்யாவிற்குத் துணையாய் அமர்த்தி டாக்டர் அறைக்குள் வர, சற்று நேரம் மூவருக்குள்ளும் அமைதி. சட்டென்று குலுங்கி அழுத விக்னேஷை இருவரும் பாவமாகப் பார்க்க, “அவளை இப்படிப் பார்க்க முடியலை டாக்டர். கண்ட நாய்கள் செய்த தப்புக்குத் தண்டனையை […]