பக்கென சிரித்தவன்.. ‘என் மச்சினன் அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டார் மாமா..” என்றான். அப்பொழுதும் நாகராஜனின் முகம் யோசனையோடிருக்கவும்.. ‘என்னாச்சி மாமா.?” என்றான். ‘ஆறேழு மாசமா கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன் மாப்பிள்ளை.. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி மழுப்பிட்டிருந்தான். சரி மனசுக்கு பிடிக்காம கல்யாணம் செய்ய கூடாதுன்னு நானும் வேற வேற பொண்ணு பார்த்திட்டிருந்தேன்.. இன்னைக்கு அவங்கம்மா பிடிச்ச பிடியில என்னதாண்டா சொல்ற.? யாரையாவது மனசுல நினைச்சிட்டிருக்கியான்னு கேட்டா.. அப்படில்லாம் இல்ல.. ஆனா […]
‘ஆன்..” என இவள் விழிவிரிக்க.. ‘சரியா சாப்பிடலயாமே.. முதல்ல வந்து சாப்பிடு..” என கைப்பிடித்து எழுப்ப.. ‘இன்னைக்கு என்னவோ பசிக்கல..” என கையை உருவியவள்.. ‘நீங்க ஏன் குழந்தைக்கு மனசு வைக்கில.?” ஏன கேட்டவள்.. ‘ம்கூம் என்னை சமாதனப்படுத்த பொய் சொல்றிங்க.. நாமதான் அப்படி..” என முகம் சிவந்து.. ‘சந்தோசமாத்தான இருக்கோம்..?” என்றாள். ‘ப்ச்.. இப்போ உன் பிரச்சனை குழந்தை வேணும்.. அதான.?”என்றான். ‘ஆ.. ஆமாம்..” என தலைகுனியவும்.. ‘இப்படி தலைய தலைய […]
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 25 கடந்த இரண்டு நாட்களாக கலாவின் முகம் வாடியிருக்க.. நிலா.. ‘அத்தை.. நீங்க இவ்வளோ டல்லா இருக்கிறதை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்றாள் வருத்தமாக. ‘நீ பேசுனது சரிதான்னாலும் கீதாவை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு..” என்றார் கலா. ‘அவங்க மனசு கஷ்டபடும்னு நினைச்சி நினைச்சே அவங்க தப்பை கண்டிக்காம விட்டுட்டிங்கத்த.. அதுதான் மாமாவையே எதிர்க்கிற அளவுக்கு வந்துட்டாங்க.. அதுவும் அவங்க மாமியார் முன்னவே.. சம்பந்தி வீட்ல மாமா […]
மூன்று மாதங்கள் கடந்திருக்க.. மயில்சாமி கலாவிற்கு நிலாவின் மேல் அளவிற்க்கதிகமான அன்பும் பாசமும் பெருகியிருந்தது. ஆன்லைன் வகுப்பென்பதால் தஞ்சையிலேயே தங்கிவிட்டாள் நிலவழகி. கலாவை வீட்டு வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டதிலேயே செல்வராணிக்கும் நிலவழகி மீது மேலும் பாசம் கூடியது. சாணத்தின் வாடையை மனம் ஒப்புக்கொள்ள மறுக்க இந்த கட்டாந்தரைக்கு மட்டும் செல்ல மாட்டாள். நிலாவின் மேல் எந்த குறையும் சொல்லமுடியாமல் போக.. வீட்டு வேலை அதிகமாகட்டுமென இரண்டு மாதம் முன்பாக தன் பிள்ளைகளை இங்கு அனுப்பியிருந்தாள் […]
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 24 நிலவழகியின் முகம் வெகுவாய் வாடியிருக்க, கலையின் முகத்தில் குறும்பு புன்னகை மிளிர.. ‘என்னம்மா இது.? இப்படி சோர்ந்திருக்க.? எங்கையாவது வம்பு வளர்த்துட்டானா.?” எனப் பதறினார் கலா. ‘அதெல்லாம் இல்லைத்த..” என்க.. ‘வேற என்னம்மா.? ஏன் டல்லா இருக்க.?” என்றார் மயில்சாமி. ‘நல்லாதான் மாமா இருக்கேன்..” என்று சின்ன புன்னகை சிந்த.. அச்சிரிப்பில் இயல்பில்லை எனப்புரிந்து.. ‘என்னடா..?” என்றார் சந்தேகமாக. ‘அப்பா.. மூனு நாளா வீட்டுக்கு […]
கதிர் அவனின் அறையில் இருக்க.. கிச்சனில் சத்தம் வரவும் அங்கே செல்ல.. சுவாதி பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். ‘அக்கா நான் பார்க்கிறேன்..” என நிலா சொல்ல.. ‘நீ போய் கலைக்கு தேவையானதை செய்.. இன்னும் கொஞ்சம்தான் நான் பார்த்துக்கிறேன்..” என்றாள். ‘அவர் குளிச்சிட்டிருக்கார்.. மாத்திக்க டிரெஸ் எடுத்து வச்சிட்டேன்.. இன்னுமென்ன..?” என்றவள் அடுப்பை துடைக்க ஆரம்பிக்க.. ‘ப்ச்.. ரெண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க.. நான் பார்த்துப்பேன்..” என்றார் அம்பிகா. சமைத்து வைத்திருந்த வகைகளை […]
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 23 மகள் புகுந்த வீடு செல்லப்போகிறாள்.. பிரிந்திருப்பது எத்தனை கடினம் என உணர்ந்தபோதும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இன்முகத்தோடு அனுப்பி வைக்க வேண்டும் என தானும் கருத்தில்கொண்டு மனைவிக்கும் அறிவுறுத்தியிருந்தார் நாகராஜன். எந்த பலனும் எதிர்பாராமல் அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணமே கலையரசனை மதிப்பாக பார்க்க வைத்திருக்க.. கீதாவால் பிரச்சனை வந்தபோதும்.. மீண்டும் கூட வரும் என்ற கருத்திருந்தபோதும்.. எல்லாம் கலையரசன் பார்த்துக்கொள்வான் என மருமகன் மீது நாகராஜனிற்கும் அம்பிகாவிற்கும் […]
நிலா பெரிதாய் பதற.. ‘நெருப்புனா சுட்டுடாது.. ஆனா அது சுடும்னு தெரியப்படுத்தறது நம்மளோட கடமை.. தப்பு கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு குழந்தைங்க மனசுல பதியக்கூடாது.. என்னை பொருத்தவரை தப்புனா அது எப்பவும் தப்புதான்.. இன்னும் கொஞ்ச நாள்ல தாத்தா ஏன் நம்ம அப்பாம்மாகிட்ட பேசறதில்லன்னு கவிம்மா யோசிப்பா.. இதுதான் காரணம்னு தெரியும்போது அதையே நாமும் செய்ய கூடாதுன்னு கண்டிப்பா நினைப்பா..” என்றார் நம்பிக்கையாக. தந்தையின் கோபத்தில் நியாயம் இருப்பதோடு அது பின்வரும் சந்ததிகளுக்கு நண்மையே […]
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 22 ‘ம் சாப்பிட்டா கலை.. ஆனா மொத்தமும் என்னையே ஊட்ட வச்சிட்டா..” என செல்லமாய் முறைத்தான் தங்கையை. பார்த்திக்கு ஊட்டிக்கொண்டிருந்த நிலவழகியின் முகம் இன்னும் சோர்ந்துதான் இருந்தது. நிலாவை சுற்றி சிறுவர்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மயில்சாமி அருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகராஜின் பார்வை நிலாவைத்தான் வருடிக்கொண்டிருந்தது. ‘பார்த்திக்கு நான் ஊட்டிக்கிறேன்.. நீ போய் மாப்பிள்ளைக்கு சாப்பிட கொடு..” என அம்பிகா நிலாவிடமிருந்து தட்டை வாங்க.. ‘நான் சாப்பிட […]
கீதா சொல்லி முடிக்கவும் கலை வெளியே வரவும் சரியாக இருக்க.. ‘என்ன சொன்ன..?” என தீயாய் முறைத்தவாறு கீதா அருகே நெருங்க.. ‘தம்பி..” என்ற நாகராஜன் குரலுக்கு.. ‘அங்கிள்..” என ஆரம்பிக்கும் போதே.. ‘நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றார் தன்மையாகவே. ‘அவங்க பிரச்சனை செய்யறதுக்காகவே பேசுறாங்க.. இதை நான் பார்த்துக்கிறேன் அங்கிள்..” என்று கண்டிப்போடு சொல்லவும்.. ‘பிரச்சனை வரதுக்காக பேசுறவங்ககிட்ட பிரச்சனை செய்யறதை விட அதுக்கு தீர்வு காணறதுதான் என்னோட இயல்பு.. உங்க […]