Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kanmoodi kaathal naanaavaen

கண்மூடி காதல் நானாவேன் – 30 (2)

“கோபம் வரலை?…” என ஆச்சர்யமாக கேட்க, “இப்ப நானும் ஒரு அப்பா ஆக போறேன் தானே?…” என்ற கேள்வியில், “சோ ஸ்வீட் அங்கிள்….”  என்று அவனை இறுக்கிக்கொள்ள, “பேபி இருக்கு எல்டி…” என்று அவளை எச்சரிக்க சிரித்தபடி மீண்டும் தளர்ந்து படுத்தாள். சட்டென்று ஒரு மௌனம். ஆனால் இதழ்களில் நிறைந்திருந்த புன்னகை. “ரோஜா…” “ஹ்ம்ம்…” “தூங்கிட்டியா?…” என்றதற்கு இல்லை என்பதே தலையை மட்டும் அசைக்க, “ஹேய் லிட்டில் டெவில், உனக்கு என்னை புடிக்குமா?…” என விதுரன் மெதுவாய் […]


கண்மூடி காதல் நானாவேன் – 30 (1)

காதல் – 30         “ம்மா, எங்க ரோஜா? வந்ததுல இருந்து தேடறேன்…” என விதுரன் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே வைத்தீஸ்வரியிடம் தண்ணீரை வாங்கி குடிக்க, “ஒரு இடத்துல நின்னா சொல்லலாம். வந்த, வந்ததும் வேகமா மாடிக்கு போய்ட்டே கேட்ட, இப்ப பின்னால போய்க்கிட்டே கேட்ட. அடுத்து பதில் சொல்லுமுன்ன தோட்டத்துக்கு போய்ட்டு வர…” என வைத்தீஸ்வரி கேலியாய் சொல்ல அவரை பார்த்தவன், “சித்தி…” என இழுக்க, “அவன் முதல்ல உட்காரட்டும். அப்பறமா சொல்லு வைத்தீ…” என […]


கண்மூடி காதல் நானாவேன் – 29 (2)

பிரச்சனை தான். கை மீறி வலுத்துவிட்டது. ஆனால் அதிலிருந்து தானும், தன் பிம்பமும் சேதாரமில்லாமல் தப்பிக்க வேண்டுமே. புத்திகெட்டு கோபத்தில் உளறியதை மாற்ற வேண்டுமே. சுதாரித்தாள். (https://punandjokes.com/) “எனக்கு நிர்மலோட ஒத்து போகலையா? இல்லை அவருக்கு என்னோட ஒத்துபோகலையா எதுவுமே தெரியலை. ஆனா நான் சந்தோஷமா இல்லையே. என்னை பெத்தவங்க எனக்கு அமைச்சு குடுத்த வாழ்க்கையை நான் வாழனும்னு அவங்களுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன்…” “ஐயோ என் பொண்ணு இத்தனை கஷ்டப்பட்டறாளே?…” என வளர்மதியும் அழ ஆரம்பித்தார். […]


கண்மூடி காதல் நானாவேன் – 29 (1)

காதல் – 29          இத்தனை திமிருடன் அவன் வந்து அமர்ந்திருக்கும் விதமே பிரஷாந்தியின் மனதிற்குள் அபாய ஒலியை உயிர்பித்தது. “அம்மா இப்ப இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்? அப்பாட்ட சொல்லி போக சொல்லுங்க…” என சொல்ல, “இரு பாப்பா…” என்ற வளர்மதி, “இங்க பாருங்க, பிரச்சனை வேண்டாம். என்னன்னு கேட்டு அனுப்ப பாருங்க. ஏற்கனவே சின்னவ விஷயத்துல நடந்த சண்டை போதும்…” என்று விதுரனை விரும்பாத ஒரு பார்வை பார்த்து வளர்மதி கணவனுக்கு சொல்ல, “இவன் […]


கண்மூடி காதல் நானாவேன் – 28

காதல் – 28           மறுநாள் காலையில் எழும் பொழுதே ரோஜா மிக புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். மனதில் இருந்ததை இறக்கி வைத்ததன் பலனோ அவளின் முகமே தெளிவாய் இருந்தது. எழுந்து குளித்து வெளியே வர கயல்விழியுடன் சடகோபனும் மணிவாசகமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விதுரனை காணவில்லை. “குட்மார்னிங் ராஜமாதா…” என்று வேகமாய் சொல்லியவள் பின் நாக்கை கடித்துக்கொள்ள, “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. என்னவோ முதல் தடவை சொல்ற மாதிரியே எப்படித்தான் சொல்லிட்டு இப்படி ரியாக்ட் பன்றியோ?…” என்று கேட்டுக்கொண்டே […]


கண்மூடி காதல் நானாவேன் – 27 (2)

பேத்தியின் கதறலை கடைசியாக கேட்டபடி பரிதவித்து செல்லம்மாளின் உயிரும் பிரிந்தது. வெளியில் எந்த சத்தமும் கேட்காமல் போக யாருக்கும் தெரியாமலே ஒரு உயிரின் மரணமும், ஒரு உணர்வின் மரணமும் நிகழ்ந்திருந்தது. எப்பொழுதும் காலையில் வளர்மதி தான் செல்லம்மாளுக்கு காபி கொண்டு வந்து தருவார். அன்றும் கதவை திறந்துகொண்டு வர கட்டிலில் அலங்கோலமாக செல்லம்மாள் இறந்து கிடக்க லைட்லேம்ப் கீழே கிடந்தது. அலறியபடி மகளை தேடிய வளர்மதி கீழே கிடந்ததை பார்த்து ஓடிவந்து அவளை தூக்கியவர் வெளியே குரல் […]


கண்மூடி காதல் நானாவேன் – 27 (1)

காதல் – 27           “வளர் நேரமாகுது, கிளம்பு. முதல் நாள் ஸ்கூலுக்கு போறப்ப நல்ல ஜம்முன்னு இருக்க வேண்டாமா? இந்த சடையை ஒழுங்கா போட்டுவிடு…” என்று மனைவியை கடிந்து கொண்டிருந்தார் சேகரன். ரோஜா முதன் முதலில் பள்ளி செல்லும் நாள். மூன்று வயது மட்டுமே நிரம்பிய குழந்தை தன்னை எங்கே அழைத்து செல்ல இருக்கிறார்கள் என்று தெரியாமல் தத்தி தத்தி தாயின் பின்னால் நடந்து கொண்டிருந்தாள். “நீ மட்டும் போய்ட்டு வான்னா கேட்கறதே இல்லை. நானும் […]


கண்மூடி காதல் நானாவேன் – 26 (2)

“போ போ, சும்மா மூஞ்சியை தூக்கி வச்சிட்டு. டாக்டர் மாதிரி இரு…” என்று உசுப்பேற்றி அனுப்பினான். “அக்கா, நானும் ஹர்ஷியும் வெளில இருக்கோம். மாமா வந்தா சொல்லனும் தானே?…” என்று நாசூக்காய் அவர் மகளுடன் சென்றுவிட்டார். அதன் பின் பொதுவான கேள்விகளுக்கு பின் ரோஜாவை அழைத்துக்கொண்டு பரிசோதிக்க உள்ளே சென்றவர் சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்தார். “நீ வெளில இரும்மா…” என்று அவளை அனுப்ப ரோஜா விதுரனின் முகம் பார்த்தாள். “நான் பேசிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன்…” […]


கண்மூடி காதல் நானாவேன் – 26 (1)

காதல் – 26            சில நொடிகள் தான் விதுரன் அப்படியே நின்றது. அவள் வைத்துவிட்டு சென்றவற்றை எல்லாம் நன்றாக பார்த்தவன் கதவை தட்ட அவள் எழுந்து கொள்ளவே இல்லை. அதன் பின்னரே திறக்க முயற்சிக்க தாள் போடாத கதவு திறந்துகொண்டது. இதை முதலிலேயே செய்திருக்கலாமே என நினைத்தபடி வேகமாய் உள்ளே பார்த்தால் ரோஜா கண்ணை மூடி படுத்திருந்தாள். “ஹேய் ரோஜா, என்னடா இது?…” என அவளருகே அமர்ந்து எழுப்ப மெதுவாய் தலையை அவனின் மடியில் வைத்துகொண்டாள். […]


கண்மூடி காதல் நானாவேன் – 25 (2)

இருவரும் வரும் போது கதவு லேசாய் திறந்து தான் இருந்தது. அப்பொழுது தான் ஸ்ரீநிதி பேச ஆரம்பித்திருந்தாள். காலிங் பெல்லை அடிக்கும் முன்பு விதுரன் தடுத்துவிட ஸ்ரீநிதி மனதில் உள்ளதை தெரிந்துகொள்ளும் ஒரு ஆர்வத்தில் சக்தியும் அமைதியாக நின்றுவிட்டான். அனைத்தையும் கேட்டுவிட்டான். அவனின் வரவை எதிர்பாராதவள் டைனிங் டேபிளில் இருந்து தடுமாறி எழுந்து நிற்க சக்தியின் முகத்தில் பயங்கரமான கோபம். “ஆமா யார் நீ என் மேரேஜ் பத்தி பேசறதுக்கு? உன்கிட்ட வந்து கேட்டேனா? இல்லை என் […]