Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kavithai pesum vaanam

கவிதை பேசும் வானம் – 29 (1)

கவிதை – 29 ஸ்ரீநிவாஸ் அங்கேயே அப்படி அமர்ந்துவிட செய்வதறியாது நின்றாள் ராகா. கோபம் ஒருபக்கமும் எரிச்சல் ஒருபக்கமும் பொங்க, “இப்ப எதுக்கு ஸீன் க்ரியேட் பன்றீங்க? கிளம்புங்க நீங்க…” என்று அவன் மீது சீறி விழ கொஞ்சமும் கோபமில்லாத பார்வை பார்த்தவன், “எனக்கு என் மகனை பார்க்கனும். போன வருஷமும் பார்க்க முடியலை. இப்பவும் பார்க்காம என்னால இருக்க முடியாது…” என்றான் ஸ்திரமாய். சண்டையிட்டு பிரிந்த பின்பு வந்த அந்த வருட வினயின் பிறந்தநாள் அன்று […]


கவிதை பேசும் வானம் – 29 (2)

யாரும் ஸ்ரீநிவாசை உள்ளே வா என மீண்டும் அழைக்கவில்லை. ராகா அங்கேயே தான் நின்றிருந்தாள். கனகா தான் கீர்த்தனாவிடம் நடந்ததை சொல்லி இருக்க கீர்த்தனா அமைதியாக கேட்டுக்கொண்டாள். இது இனி கணவன் மனைவி பிரச்சனை. வினயின் எதிர்காலம் என்று வரும் பொழுது நிறையவே நிதானமா இருக்கவேண்டி இருந்தது. “உட்காருங்க ஸ்ரீநிவாஸ்…” என அக்னி சொல்லவும் மகனையும், குழந்தையையும் பார்த்துக்கொண்டே மெதுவாய் உள்ளே வந்து அமர, “ஓகே நீங்க பேசுங்க, நாங்க வினையி கூட்டிட்டு வெளில போய்ட்டு வரோம்…” […]


கவிதை பேசும் வானம் – 29 (3)

“இப்போலாம் நீ ரொம்ப தெளிவு இல்லை…” என சாதனா சிரிக்க, “ஹ்ம்ம், கண்டிப்பா நீயும், அடைக்கலம் அப்பாவும் மட்டும் இல்லைன்னா நான் என்ன ஆகிருப்பேன்னே தெரியாது…” என கண்கலங்க. “அட ச்சீ, இதுகெல்லாம் போய் பீல் பண்ணிட்டு. ஆனா பாரேன். அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை நடத்த நாம என்னென்ன வேலை பார்த்திருக்கோம். அது தெரியாம சுத்திட்டு இருக்காங்க…” என்றவள், “ஆனா அக்னி மாமாவுக்கு தெரிஞ்சிருச்சு அவர் கல்யாணத்தப்போவே. ஸ்மெல் பண்ணிட்டாரு. கீர்த்தி தான் இன்னும் தெரியலை…” […]


கவிதை பேசும் வானம் – 28 (2)

“ம்ஹூம், ஆனா என்னவோ மாதிரி இருக்குது. வெய்ட்டா கால்ல வச்சு எடுத்தா நல்லா இருக்கும் போல…” என்றதுமே உடனே அவளின் கையை எடுத்துவிட்டு சுவற்றின் பக்கம் சாய்ந்து தன் கால்கள் இரண்டையும் அவளின் முழங்காலில் போட்டவன், “இப்போ ஓகே தானே?…” என்று கேட்கவும் புன்னகைத்த கீர்த்தனா, “ப்ச், நீங்க எவ்வளோ அஜஸ்ட் மைண்ட் இல்லை…” “ம்ஹூம். சுத்தமா இல்லை….” என்றான் விஷமமாய் சிரித்து. “அய்ய, நான் அதை சொல்லலை…” “எதை?…” என்று லேப்டாப்பில் ஒரு கண்ணும் அவளிடம் […]


கவிதை பேசும் வானம் – 28 (1)

கவிதை – 28 மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு கீர்த்தனாவை கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள் சந்திரிகாவும், சுபாவும். அவர்களுடன் சாதனாவும் கிளம்பிவிட சட்டென வீடு வெறுமையானத்தை போல இருந்தது. “இவ்வளவு நேரமும் கலகலன்னு இருந்துச்சுல. இன்னும் கொஞ்சம் நேரம் அவங்க இருந்திருக்கலாம்…” என்று ராகா தங்கதுரையிடம் கேட்க, “அதுசரி, கீர்த்தனாவை இத்தனை நாள் இங்க இருக்கவிட்டதே பெருசு. உள்ளூர்ன்றதால அவங்க எதுவும் நினைக்கலை. இங்க தான இருக்கா பார்த்துக்கலாம்…” என கனகா சொல்லவும் ராகாவும் ஆமோதித்தாள். “ஆடிக்கு நாம […]


கவிதை பேசும் வானம் – 27 (2)

“ஓகே அத்தை, உங்க பாய்ண்ட்கே வரேன். பொண்ணை குடுத்தாச்சு சரி. அதுக்குன்னு கேட்க கேட்க அள்ளி குடுத்தா எப்படி? செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப செஞ்சீங்க. ஏன் என் விஷயத்துல கூட தான். நான் கேட்டதும் சரின்னு சொன்னீங்க. தப்பில்லை. ஆனாலும் பொண்ணை பெத்தவங்களா வர வரன் எப்பேர்ப்பட்டதா இருந்தாலும் விசாரிச்சு பொறுமையா தான் குடுக்கனும். நானும் ஸ்ரீநி மாதிரி இருந்திருந்தா?…” அக்னி கேட்டதும் கனகாவிற்கு சர்வமும் நடுங்கியது. ஒரு ஸ்ரீநிவாஸ்கே குடும்பம் சிதறியது. இதில் இன்னொரு […]


கவிதை பேசும் வானம் – 27 (1)

கவிதை – 27 தங்கதுரையுடன் வீட்டிற்கு வந்து பத்து நாள் ஆகவிருக்கிறது. நன்றாக உடல் தேறிவந்துகொண்டிருந்தார் அவர். அன்று ராகாவின் வாழ்க்கையை பற்றி கனகா சொன்னதோடு சரி. அக்னியின் பேச்சிற்காக அமைதியாக இருந்துகொண்டார். இன்றுவரை அதை பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்ததில் இருந்து யாரேனும் வந்து தினமும் பார்த்து சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள். இப்பொழுது கீழ் வீட்டில் தான் தங்கள் ஜாகையை மாற்றிக்கொள்ள வேண்டியதாகிற்று. கனகா எத்தனை மறுத்தும் ராகா கேட்கவில்லை. அக்னியிடம் விஷயத்தை கொண்டு […]


கவிதை பேசும் வானம் – 26 (2)

“அப்ப நீயும் வாழமாட்ட. அவனையும் வாழ விடமாட்ட…” சாரதாவிற்கு ராகாவை அடித்து துவம்சம் பண்ணும் துவேஷம் எழுந்தது. “ஆமா. விடமாட்டேன். என்னை மாதிரி இன்னொரு ராகா உருவாக விடமாட்டேன். இன்னொரு தங்கதுரை, கனகாவோட உயிர் துடிக்க அனுமதிக்க மாட்டேன்…” என்றவள் ஸ்ரீநிவாஸ் பக்கம் பார்த்து சொடக்கு போட்டவள், “முடிஞ்சா உன்னால முடிஞ்சா இன்னொரு கல்யாணம் பண்ணி காமியேன். பார்ப்போம்…” என்று சவாலாய் அவள் சொல்ல, “ராகா…” என்றான் பதறிக்கொண்டு. கோர்ட், கேஸ் எல்லாம் தாண்டி இப்படி அவள் […]


கவிதை பேசும் வானம் – 26 (1)

கவிதை – 26 ஸ்ரீநிவாஸ் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான். சட்டென சுதாரித்து அவளை மறித்து நின்றான். “இங்க பாரு ராகா என்னால முடியலை. எனக்கு உடம்பெல்லாம் வலி. அதை பத்தி கூட நீ கேட்கலை. ஆனாலும் என்னால உன்னை, நம்ம பையனை பார்க்காம இருக்க முடியாம தான் வந்தேன்…” அவளின் இரக்கத்தை பெறுவதை போல அவன் பேசியதை வெறுப்புடன் கேட்டவள் அவனை நிதானமாக பார்த்தாள். “நான் எப்பவோ வலிக்க வலிக்க துடிதுடிச்சு மனசளவில செத்துட்டேன். […]


கவிதை பேசும் வானம் – 25 (2)

“இப்ப இருக்கறதுக்கு அந்த பொண்ணு உங்க கூடவே வரட்டும். நான் ராகாவோட வீட்டுக்கு போய் ஏதாவது எடுக்கனும்னா எடுத்துட்டு வரேன்…” என்று அடைக்கலம் சொல்ல, “நானும் வரேன்ப்பா. நாம ராகாவோட கார்ல போவோம்…” என சாதனாவும் வருவதாய் சொல்ல சுரேனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். “ஓகே, அப்போ நானும் அம்மாவும், சுபாவும் இங்க இருக்கோம் கீர்த்தனா கூட. எல்லாம் நார்மல்னாலும் நாளை வரை அப்சர்வேஷன்ல இருக்கனும்னு சொல்லியிருக்காங்க…” என்ற பன்னீர்செல்வம், “அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு. பத்திரம்…” உடனடியாக […]