Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kollai Nila

கொள்ளை நிலா – 27 (2)

உடனடியாக அவளை பிரசவ அறைக்கு அழைத்து செல்ல சூர்யாவும் அவளுடன் வர அவள் அனுமதிக்க கூடாதென்றுவிட்டாள். டாக்டர் கூட ஒப்புதல் தர பாலா சம்மதிக்கவில்லை. சூர்யாவும் அப்படியே இருந்துகொண்டான். உள்ளே செல்லும் முன்னர் வேகமாய் வந்த கோபாலசுவாமி அவளின் நெற்றியில் விபூதியை பூசியவர், “நல்லபடியா சுகமா பிள்ளையை பெத்து வாம்மா…” என்று அவளின் தலையை வருடியவர் அங்கியே அமர்ந்துகொண்டார். இதோ அவர் எதிர்பார்த்த நாள். ஒரு ஜனனத்தின் உதயத்தில் இன்னொரு மரணத்தின் கண்டம் விலகும் என்று இவர் […]


கொள்ளை நிலா – 27 (1)

நிலா – 27 மறுநாள் அப்பாயின்மென்ட் வாங்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினார்கள். மோகனாவும் வருவதாக சொல்ல, “ம்மா, நானும் அவரும் போய்ட்டு மாமா வீட்டுக்கு வரோம். எனக்கு சமைச்சு வை. இவரும் அங்க வந்த மாதிரி இருக்கும். அதனால நீ வர வேண்டாம்…” என சொல்லிவிட்டாள் தாயிடம். அடுத்ததாக அர்ச்சனா கேட்க அவரிடமும் என்ன பதில் சொல்லி மறுப்பது என தெரியாமல், “அவர் உங்கட்ட பேசனும்னு சொல்றாங்க அத்தை…”என சொல்ல அவளின் அத்தையில் மெய்மறந்தவர், “குடும்மா…” என்று சொல்லி […]


கொள்ளை நிலா – 26 (3)

“என்னடா, ஆபீஸ் வேலை எல்லாம் எப்படி போய்ட்டிருக்குது?…” என சகஜமாய் பேசுவதை போல கேட்க, “கங்க்ராட்ஸ்டா சூர்யா. அப்பறம் உன் கன்னத்துல என்னடா சூர்யா? பாலா ரொம்ப அடிச்சுட்டாளாமே? இப்பத்தான் அர்ச்சும்மா சொல்லிட்டு இருந்தாங்க…” என்று சொல்லி அவனை டோட்டல் டேமேஜ் செய்ய, “இதை கேட்கத்தான் இந்த மூஞ்சியை பாவமா வச்சுட்டு கிளம்பி வந்தியா நீ?…” என்று முறைக்க, “ஆமா, அதுவும் அர்ச்சும்மா போன் செய்யவும் போவோம்னு சொன்னேன். என்ன சாப்பிட கூட விடலை. கூட்டிட்டே வந்துட்டாங்க…” […]


கொள்ளை நிலா – 26 (2)

“பாலா என்னை கேட்டதுல எந்த தப்புமே இல்லை. மனைவின்ற உறவு எத்தனை முக்கியத்துவமானதுன்னு நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டியதில்லை. என்னால ஏதாவது அவளுக்கு ஆகிடும்னு நீங்க சொன்னதால தான் விலகி போனேன்…” என்றவன் பாலாவை தன்னருகே நிறுத்தி, “அதுவே அவளுக்கு கஷ்டத்தை குடுக்கும்னா என்னால சும்மா இருக்க முடியாது. எத்தனை சோதனை வந்தாலும் அதை நாங்க பார்த்துக்கறோம். அதையும் தாண்டி சந்தோஷமா நாங்க வாழ முடியும்னு நம்பறோம்…” என்று சொல்லியவனின் காதில், “அத்தைன்னு சொல்லுங்க. அத்தைன்னு சொல்லுங்க…” […]


கொள்ளை நிலா – 26 (1)

நிலா – 26 சென்னையை நெருங்கியதுமே அர்ச்சனாவுக்கு சூர்யாவிடம் தாங்கள் வருவதை சொல்லிவிடவேண்டும் என்று தோன்ற எப்படி மோகனாவை வைத்துக்கொண்டு பேசுவது என பார்த்தபடி இருக்க வழியில் ஒரு பெட்ரோல் பல்க்கில் காரை நிறுத்தினார் ட்ரைவர். “அர்ச்சு…” என கோபாலசுவாமி கண்ணை காட்ட, “மோகனா அங்க பாத்ரூம் இருக்குது. வாங்க…” என கூட்டிக்கொண்டு சென்றார். கண்ணீர் மோகனாவிற்கு நின்றபாடில்லை. இன்னும் அழுதுகொண்டே இருக்க ஒன்றும் சாப்பிடாதது வேறு. போட்டு வைத்த டீயை கூட குடிக்கவில்லை. எழுந்து அப்படியே […]


கொள்ளை நிலா – 25 (2)

அத்தனை நாள் அடக்கி வைத்த அழுகையெல்லாம் மொத்தமாய் கதறி தீர்க்க அழுது ஓயட்டும் என்பதை போல அவளின் தலையில் முகம் புதைத்தபடி வருடிக்கொண்டிருந்தான். “என்னை பார்க்காம கூட போய்ட்ட நீ. எத்தனை தேடினேன் தெரியுமா? அம்மா கோபத்துக்காக மட்டும் நான் போகலை, நீ என்னை வேண்டாம்னு போய்ட்ட மாதிரி தோணுச்சு. அதுவும் எனக்கு ரொம்ப கோவம். அதான் போய்ட்டேன்…” “அதோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப உடைஞ்சு போய் இருந்தாங்க. அதுக்காகவும். கொஞ்சம் நாள்ல சரியாகிடும்னு பார்த்தா அவங்க […]


கொள்ளை நிலா – 25 (1)

நிலா – 25 காலையில் வெகுநேரம் கழித்து தாமதமாக தான் எழுந்தே வந்தார் மோகனா. முதல்நாள் இரவு வரை அப்படி ஒரு பேச்சு பாலாவிடம். பேச்சுக்கு பேச்சு எதிர்வாதம் புரிந்தவளிடம் தோற்றுத்தான் போனார். மகள் உறங்க சென்ற பின்னரும் மோகனாவின் மனமோ அவளின் பேச்சுக்களிலேயே சுத்திக்கொண்டு இருக்க சந்திரனிடமும் சில ஆலோசனைகளில் இருந்தவர் விடியும் தருவாயில் தான் உறங்கவே சென்றார். காலை எழுந்ததும் முகம் கழுவிவிட்டு மணியை பார்த்தவருக்கு தூக்கிவாரி போட்டது. இவ்வளவு நேரம் ஆகிற்றே என்று […]


கொள்ளை நிலா – 24 (3)

இதோ பத்து நாட்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை இல்லை. அவனின் மொபைலை மட்டுமே வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பான். பாலாவின் அழைப்பு எப்பொழுது வேண்டுமானலும் இருக்கலாம் என காத்திருக்க ஆரம்பித்தான். யாரிடமும் பேசாதவன் தானாகவும் மோகனாவிற்கு அழைக்கவில்லை. பாலாவை பற்றி கேட்கவும் இல்லை. ஆனால் அவள் அழைப்பாள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அவளின் மொபைலும் தன்னிடமே இருக்க எப்படியும் அவள் அழைப்பாள் என்று நினைத்துக்கொண்டே இருந்தான். வீட்டில் இருந்து அர்ச்சனாவை தவிர யாரிடமும் பேசவில்லை. கோபாலசுவாமி பேச முயன்ற பொழுதும் […]


கொள்ளை நிலா – 24 (2)

“அந்த உறவே என் பொண்ணுக்கு வேண்டாம். அவளுக்கு கல்யாணமே ஆகலைன்னு நினைச்சுக்கறேன். யார் என்ன சொன்னாலும் சரி. இனி என் பொண்ணு என்னோட தான் இருப்பா…” “அவசரப்படாதீங்க மோகனா…” என அர்ச்சனா வர, “பேசவேண்டாம். எதுவும் பேசவேண்டாம். இந்த நாலுமாசம் நடந்தது எல்லாமே ஒரு கனவா நினைச்சு மறந்துடுவோம். என் பொண்ணையும் நான் மறக்க வச்சிடுவேன். தயவு செய்து இனி எங்க வாழ்க்கையில குறுக்கிடாதீங்க. போய்ருங்க…” என்றவர், “இங்க பாருப்பா சூர்யா, உண்மையில என் பொண்ணு உயிரோட […]


கொள்ளை நிலா – 24 (1)

நிலா – 24 சூர்யாவின் அத்தனை கோபத்தையும் கொஞ்சமும் அசையாமல் வெற்றி தாங்கிக்கொண்டிருந்தான். அவனின் கோபம் முழுவதும் தீரும் வரை அடித்துக்கொள்ளட்டும் என்பதை போல தன்னை ஒப்புக்கொடுத்து வெற்றி நிற்க, “இப்பவும் சொல்றேன் அர்ச்சு, பாலாவுக்கு இதோட எல்லா கிரகங்களும் விலகிருச்சு. அவ உயிருக்கு வந்தது இதோட போயிருச்சு. என் மனசுக்கு நல்லதா படுது…” என கோபாலசுவாமி பேச மீண்டும் அவரின் சட்டையை பிடித்துவிட்டான் வெற்றி, “எங்கிட்ட ஏன் மறைச்சீங்க? மறைச்சு இப்படி ஏமாத்தி எங்களை நடுங்க […]