Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mullai Vana Kulirae

முல்லை வன குளிரே – 25 (2)

“ஓஹ் அதான் நைட்டே வந்தாரா? என்னைக்குமில்லாம மாப்பிள்ளை நம்ம வீட்டுல தங்கினது இன்னும் சந்தோஷமா இருக்குது. நீங்க கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை…” என்று தயாளன் சொல்ல அமர் அசடு வழிந்தான். “அடுத்த வாரம் சுபாவை அழைச்சுட்டு போக வராங்க. அன்னைக்கு கொண்டு வந்து விட்டுடுங்க. என்னதான் இருந்தாலும் பிரசவம்ங்கறது தாய் வீட்டுல பார்த்தா தான மரியாதை…” என்று தயாளன் சொல்ல, “உங்கப்பா விவரம்டி. டெட்லைன் குடுத்து கூட்டிட்டு போக சொல்றாரு. என் பொண்டாட்டி என் இஷ்டம்…” என்று […]


முல்லை வன குளிரே – 25 (1)

குளிர் – 25 அமரின் முகத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவனின் மீசையை பிடித்து லேசாய் இழுக்க கன்னத்தில் சுண்டுவிரலை விட்டு நிமிண்ட என அவனின் உறக்கத்தை வழக்கம் போலவே கலைத்து விளையாட, “ப்ச், நான் வரும் போது தூங்கத்தான செஞ்ச? இப்ப என்ன?…” என்றான் அவளின் கையை பிடித்து தனது கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டே. “இப்ப நீங்க ஏன் வந்தீங்கன்னு தெரியனுமே. நேத்து அசதில தூங்கிட்டேன். இன்னைக்கு சுத்தமா தூக்கம் வரலை…” என்று தலையால் அவனின் கழுத்தை […]


முல்லை வன குளிரே – 24 (2)

“போங்க, சொதப்பிருச்சு. இப்ப நான் என்ன பண்ண?…” என்று முறுக்கிக்கொள்ள, “சொதப்ப வாய்ப்பில்லையே. அதே மெசர்மென்ட் தானே போட்ட? நானும் பார்த்தேனே?…” என்றவனை குறிஞ்சி இன்னும் முறைக்க, “சரி, சரி. விடு. இதெல்லாம் ஒரு விஷயமா? எனக்கு நீ கேக் செய்யனும்னு நினைச்சதே பெரிய கிப்ட் தான். இதுல என்ன சர்ப்ரைஸ் வேற? நமக்கும் இந்த சர்ப்ரைஸ்க்கும் செட்டே ஆகலை போல…” என்றவன் அவளோடு கிட்சனுக்கு சென்றான். “எங்க நீயே எடு பார்ப்போம்…” என கேக்கை காண்பிக்க […]


முல்லை வன குளிரே – 24 (1)

குளிர் – 24 குறிஞ்சிக்கு இன்னும் உறக்கம் கண்களை தழுவவே இல்லை. மனமெல்லாம் ஏதேதோ செய்தது. அப்படி ஒரு சொல்லொண்ணா ஆனந்தத்தில் மிதந்தது. “இன்னும் தூங்கலையா நீ?…” என்று அவளின் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டே அவளிடம் கேட்க, “ம்ஹூம், தூக்கம் வரலை. என்னவோ இப்படியே முழிச்சுட்டே இருக்க தோணுது….” என்று அவனின் விரலோடு தன் விரல்களை கோர்த்துக்கொள்ள, “நாளைக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொன்னாங்க உங்கப்பா. போக வேண்டாமா?…” “ம்ஹூம், வேண்டாம்…” “பார்ரா, சொந்த வீடு சொந்த […]


முல்லை வன குளிரே – 23 (2)

“என்னாச்சு சைலன்ட் ஆகிட்ட?…” என்றான் மெதுவாய். “என்னை நீங்க விரும்புனேங்களா?…” என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்தவன், “மிஸ் பன்றப்போ தான் நம்ம மனசு என்ன நினைக்குதுன்னே தெரியும் இல்லையா? கிட்டத்தட்ட அது தெரியவே எனக்கு ஒரு வருஷம் ஆச்சு. நீ வரதை, போறதை, உன் பேச்சின்னு கவனிச்சுட்டே இருப்பேன்.  பெருசா காட்டிக்கிட்டதில்லை…” “ஆனா கொஞ்சம் நாள் வரலைன்னதும் தான் உன்னை தேடனும்னு தோணுச்சு. உன்னை பார்க்கனும்னு, யார்ன்னு தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு. ஆனாலும் இதெல்லாம் சரிவராதுன்னு என்னை கன்ட்ரோல் […]


முல்லை வன குளிரே – 23 (1)

குளிர் – 23 சத்தியமாக குறிஞ்சி அமரிடம் அது இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் அதிர்ச்சி விலகாத முகத்துடன் நிற்க, “சும்மா சும்மா இனி கௌரவத்துக்கு பண்ணின கல்யாணம்னு சொன்ன. வாய்லையே போடுவேன் பார்த்துக்க…” என்று மிரட்டியவன் அதன் பின்னர் தான் அவளின் முகம் போன போக்கில் சுதாரித்தான். “போச்சா…” என்று நாக்கை கடிக்க, “இதெப்படி உங்ககிட்ட? அதுவும் இத்தனை வருஷமா?…” என்று கேட்டதும் அவன் முழித்த முழியில் குறிஞ்சி, “இது சுபாக்கா எனக்கு வாங்கி […]


முல்லை வன குளிரே – 22 (2)

“அட இருக்கட்டும்மா. அப்படியே கூப்பிட்டு பழகிட்டா. எனக்கும் இது தான் நல்லா இருக்குது. அத்தைன்னு சொன்னாத்தானா மாமியாரு? அதெல்லாம் இல்ல…” என்று குறிஞ்சியின் கையை பிடித்துக்கொண்டவர், “உன் மாமா அப்பவே கிளம்ப சொன்னாங்க. போய் குறிஞ்சிக்கு உதவியா இருன்னு. லேட் ஆகிருச்சு. எல்லாரும் வந்தாச்சா?…” என கேட்க குறிஞ்சிக்கு இப்போது என்ன சொல்லி அங்கிருந்து கிளம்புவது என்றே புரியவில்லை. “அதன உன் மாமியாரே வந்தாச்சே? அப்பறம் எங்க போற? வா வா….” என்று அத்தைக்கார பெண் சொல்ல, […]


முல்லை வன குளிரே – 22 (1)

குளிர் – 22 ‘மாட்டிக்கிட்டியேடா அமரா, சொன்னா ஆடிடுவா இவ. எஸ்கேப் ஆகிடு’ என தனக்குள் நினைத்துக்கொண்டவன், “இதை விடு, ஆமா ஓவனை கிளீன் பண்ணுனியா? உள்ள என்னாச்சுன்னு பார்த்தியா? கேக்கே மொத்தமா போச்சு. உடனே கிளீன் பண்ணனும்னு தெரியாதா?…” என்று வேகமாய் கிட்சனுக்குள் நுழைந்தவன், “ப்ரிட்ஜ்ல லெமன் இருக்கா பாரு…” என்றான். குறிஞ்சியும் தான் கேட்டதை மறந்து ஓவன்க்கு எதுவும் ஆகியிருக்குமோ? ரிப்பேரோ? என பயந்து போனாள். “போச்சா? என்னால தானா?…” என்று கையை உதறிக்கொண்டு […]


முல்லை வன குளிரே – 21

குளிர் – 21 குறிஞ்சி சொல்வதை முதலில் நிதானமாக மனதில் வாங்கிக்கொண்டான் அமர். அதே நேரம் தன் பக்கத்தையும் பொறுமையாக அவளிடம் எடுத்துவைக்க இருந்தான். இனி இப்படி ஒரு மனஸ்தாபத்தை வளரவிட அவனும் விரும்பவில்லை. “உங்க பார்வைக்கும் என் பார்வைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. உங்களுக்கு என்னோட  சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் சின்னபிள்ளைத்தனமா தெரியலாம். ஆனா அதை எல்லாம் ரசிச்சு அந்த நேரத்துல அனுபவிச்சு பார்க்கிறதுல இருக்கற சுகமே தனி. அதை எப்போ நினைச்சாலும் மனசுக்குள்ள ஒரு […]


முல்லை வன குளிரே – 20 (2)

“முடியாதுன்னா?…” என்று அவளின் விழிகள் இரண்டும் அலைபாய ‘யோசி குறிஞ்சி, யோசி’ என  மனது உந்தியது. “முடியாதுன்னா…” என்று மீண்டும் விரலை சொடுக்கிக்கொண்டே யோசித்தவள், “ஆங், முடியாதுன்னா இனி பேசவும் மாட்டேன்…” பெரிதாய் எதையோ சொல்லியதை போல. “ஓஹ், யார் கூட?…” என்றான் இப்போது அவனின் ட்ரேட் மார்க் புன்னகையுடன். குறிஞ்சியிடம் எப்போதும் அமரின் புன்னகையை ஆழந்து பார்க்கும் அதே பாவனை. அமர்நாத் அதை ரசித்து பார்க்க, ஒரு நொடி தன்னை மறந்து அந்த சிரிப்பில் லயிக்க […]