Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nenjil Uraintha Thedal

நெஞ்சில் உறைந்த தேடல் – 25 (2)

“போதும் சிரிச்சது. அவனே வொய்பை பார்க்க விடலைன்னு டென்ஷனா இருக்கான். நீங்க இங்க கிண்டல் செஞ்சுட்டு இருக்கீங்க. போய் அவனை கொஞ்சம் உட்கார சொல்லுங்க. ஃப்ளோர் தேஞ்சு போய்டபோகுது…” என ஸ்டெபி கார்த்திக்கை தலைகீழே கவிழ்த்த அனைவரையும் திரும்பி முறைத்தான் கார்த்திக். ஏதோ பேசப்போக அதற்குள் தர்ஷினி அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டார். மற்றவர்களை விட்டுவிட்டு அவரிடம் விரைந்தவன், “தர்ஷிமா நான் ஜீவாவை பார்க்கலாம் தானே?…” பரபரக்கும் குரலில் கேட்டவனின் தலையில் செல்லமாக குட்டியவர், “அதான் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 25 (1)

தேடல் – 25             வள்ளியம்மை வீட்டிலிருந்து கிளம்பிய சேகரன் வரும் வழியெல்லாம் வெளியை வெறித்தபடி அமர்ந்துவந்தார். தன் வீட்டிலிருந்து ஆரவ் அழைத்துக்கொண்டு கிளம்பும் பொழுது முகத்தில் இருந்த அருள் இழந்து இருண்டு காணப்பட்டது அவருக்கு. ஆரவ்வும் அர்ஜூனும் இதை கவனித்தாலும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக மனதளவில் பரிதாபம் கொள்ளத்தான் செய்தனர். “இவருக்கு இது தேவைதான்” என வேண்டாம் என்றாலும் தோன்றும் எண்ணத்தை விரட்டியடிக்க முயன்றான் ஆரவ். சேகரனை ஓரவிழியால் தொடர்ந்தாலும் பேசவோ ஆறுதல் கூறவோ […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 24 (1)

தேடல் -24           தஞ்சாவூரில் இருந்து பூம்பொழில் திரும்பியவர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல முத்தழகி வண்ணமதியிடம் அமுதாவின் வீட்டை ஒழுங்குபடுத்த உதவிவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அமுதா கூட, “எதற்கு மதினி. நான் பார்த்துக்கறேன். மதியும் களைச்சு போய் தானே வந்திருக்கு. இப்போ என்ன, அதான் ஜீவா இருக்காளே? நாங்க பார்த்துக்கறோம்…” என கூறியும் முத்தழகி கேட்கவில்லை. வண்ணமதியோடு சேர்ந்து கலகலத்துக்கொண்டே ஜீவாவும் அமுதாவும் வீட்டை ஒழுங்குசெய்து விரைவில் வேலையை முடிக்க அதற்குள் முத்தழகி உணவு வகைகளுடன் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 23

தேடல் – 23 அமுதாவை அவர் வீட்டில் சமையல் எதுவும் செய்யவிடாமல் உதவிக்கு ஆள் வைத்துக்கொண்டு முத்தழகியே ஒரு பெரிய விருந்தை தயார் செய்துவிட்டார் ஆரவ் குடும்பத்தினருக்கு. வள்ளியம்மையும் தயாளனும் வெளியேறியும் ஜீவாவின் பேச்சு ஓயவில்லை. கோவத்தில் என்ன செய்யவென தெரியாமல் அமுதாவிடம் படபடவென பொறிந்துகொண்டே தான் இருந்தாள். “இப்படி ஒரு அம்மாவுக்கு மருமகளா நான் போனா என்னை அந்தம்மா ஜோசியர் சொன்னார்ன்னு என்ன வேணும்னாலும் செய்யுமே? எந்த நம்பிக்கையில் அவரை நான் கட்டிப்பேன்னு நினைச்சார்?…” என […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 22 (2)

“சேகரனை குலதெய்வம் கோவிலுக்கு வர சொன்னேன். பொண்ணு பத்தின தகவல் தெரியனும்னா என் பிள்ளைக்கு அவளை கட்டிக்குடுக்கிறதா சூடம் அடிச்சு சத்தியம் செஞ்சு தரனும்னு சொன்னேன். அப்போ நிலாவுக்கு கல்யாணம் ஆனது அவனுக்கு தெரியாது. அவனும் பொண்ணு கிடைச்சா போதும்னு வாக்கு குடுத்தான். இது என் பையனுக்கு தெரியாது…” “அதுக்கப்பறமா என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய் மத்த விஷயங்களை சொல்லவும் என்கிட்டே முடியாதுன்னு மறுத்தான். வாக்கை காப்பாத்தலைனா உன் பொண்ணு ஓடி போனதா தான் நான் ஊர்ல […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 22 (1)

தேடல் – 22 குணசேகரனின் வீட்டில் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ஆரவ் மட்டுமே நிலாவை எண்ணி தவித்தான். இந்த அதிர்ச்சியினால் அவளுக்கு எதுவும் பாதிப்பு வருமோ என கவலையாக அமர்ந்திருந்தவனால் எழுந்து உள்ளே செல்லமுடியாது போனது. உள்ளே சென்ற ஸ்டெபியும் தர்ஷினியும் நிலாவிடம் நடந்ததை மெதுவாக எடுத்து கூற அதை கேட்டவளுக்கு மெய்சிலிர்த்து போனது ஆரவ்வின் அளப்பறியா காதலில். யாரென்று தெரியாத தன் மீது இத்தனை காதலா? இப்போது புரிந்தது நிலாவிற்கு. தான் ஹாஸ்பிட்டலில் இருந்த […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 21

தேடல் – 21 வீடே நிசப்தமாக இருக்க தர்ஷினி ராகவ்வின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். ராகவ் யோசனையில் தான் இருந்தார். இரவின் குளுமை கொஞ்சமும் தீண்டாமல் ஆரவ்வின் நெஞ்சம் உலைகலனாக  கொதித்துக்கொண்டிருந்தது. உடலெல்லாம் தீப்பற்றிக்கொண்டது போல பற்றி எரிந்தது. அவனின் முகத்தில் நிமிடத்திற்கு நிமிடம் கோபம் அதிகரிக்க அடக்கமுடியாத ஆக்ரோஷம் கொண்டவனாக நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான். சேகரனையும், வள்ளியம்மையையும் அப்போதே கொன்று புதைத்துவிடும் ஆவேச அலை வேகமாக பொங்கி எழுந்தது அவனுள். தயாளன் ஆரவ்விடம் பேசிமுடித்து அரைமணி நேரம் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 20

தேடல் – 20        பூம்பொழில் முழுவதும் நிலாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக அங்குமிங்குமாக கசிந்து பரவியது. நல்லவிதமாக ஒரு வாழ்க்கை அவளுக்கு அமையட்டும் என ஒருமித்த கருத்தே அவ்வூரின் அனைத்து மக்களின் மனதிலும். ஊருக்குள் அனைவருக்கும் நிலாவின் திருமண ஏற்பாடு ஆரம்பித்திருப்பது மட்டுமே அறிந்திருக்க மாப்பிள்ளை தயாளன் என்பது இன்னமும் தெரியாமலே இருந்தது. குணசேகரனும் அதை தெரியப்படுத்த முயலவில்லை. அவருக்கு ஏதாவது ஒரு திருப்புமுனை ஏற்பட்டு இத்திருமண பேச்சு தடைபட்டு நின்றுவிடாதா என்னும் பேராவல் மனதின் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 19

தேடல் – 19           குணசேகரனின் வீட்டிற்கு சென்று நிலாவை பார்த்துவிட்டு வந்ததும் முத்தையாவிடம் நிலாவை பற்றியே புலம்பிக்கொண்டிருந்தார் முத்தழகி.  அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது வண்ணமதிக்கு. முத்தையாவோ தன் மனைவியின் பேச்சில் முகம் கன்ற அமைதியாக அமர்ந்திருந்தார். இருவரையும் ஒருவழியாக சாப்பிட எழுப்பியவள் அவர்களோடே தனக்கும் சேர்த்து பரிமாறி உண்டுமுடித்தாள். முத்தையா பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலையிருப்பதாக கூறி வெளியேறியதும் தினகரன் வந்து சேர்ந்தான். “வாய்யா, ஏன் இம்பூட்டு நேரம்? கொஞ்சம் வெரசா வரவேண்டாமா? […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 18

தேடல் – 18            பூம்பொழில் கிராமமே குணசேகரனின் வீட்டில் தான் குழுமி இருந்தது. அமுதாவால் இன்னமும் நம்பமுடியவில்லை. தன் மகள் தன்னிடம் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டாள் என்பதை. இதற்குதான் தன் கணவர் தன்னிடம் எங்கு செல்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றிருந்தாரா? அவர் மேல் எத்தனை கோபத்தில் இருந்தேன் நான்? என எண்ணி அதற்கும் சேர்த்து விசும்பினார். “என்கிட்டே ஒத்த வார்த்த சொல்லியிருந்தா நானும் என் மவளை பார்த்துக்க ஒத்தாசைக்கு அங்க வந்திருப்பேன்ல. […]