Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nila Mutrathu Muththam

நிலா முற்றத்து முத்தம் – 18

சர்வாவும் ரசிகாவும் பாடலில் லயித்திருக்க, அந்த மோன நிலையைக் கலைத்திட வேண்டாமென மெல்லமாய் சத்தம் செய்யாது வீட்டினுள் நுழைந்தனர் பத்ரியும் ரேஷ்மியும். பாடி முடித்து ரசிகா பார்க்க, பக்கத்தில் சர்வா தவிர யாருமில்லை. அவனும் சுவரில் இருந்து குதித்து இவள் அருகே உட்கார்ந்திருந்தான். “ரசீ, ஒரு டவுட்” சர்வா கேட்கவும் “சொல்லுங்க” என்றாள் ரசிகா. “இல்லை, அண்ணி சொன்ன மாதிரி என்னை நினைச்சுப் பாடினியா?” என்றான் ஆழ்ந்த குரலில். “அது.. நினைச்சிட்டுப் பாடுறதில்லை, பாடினா நீங்க தானா […]


நிலா முற்றத்து முத்தம் – 17

 நிலா 17 கல்லூரியில் பணி செய்யும் ஹெச்ஓடியின் மகனின் திருமண விழா, அதற்காக சக்தியும் உமாவும் சென்றிருக்க, சிவசங்கரனும் அவர்களுடன் ஒன்றாய்க் காரில் போய்விட்டார். ரசிகா வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்று நினைத்து இங்கு ரேஷ்மியுடன் விட்டுச் சென்றிருந்தார். ரேஷ்மியும் ரசிகாவும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டிருக்க, பத்ரி அப்போதுதான் டியுட்டி முடிந்து வந்தவன் “அட டா! என்ன ரசிம்மா ஸர்ப்பரைஸ் தர? சர்வா எங்க அவனைக் காணும்?” என்று உள்ளே […]


முத்தம் – 16

நிலவு 16 கல்லூரியில் வைத்து அதன்பின் சர்வா ரசிகாவிடம் பேசவில்லை. சிவசங்கரனிடம் மட்டும் சொல்லியிருந்தான், “சாரி மாமா, நான் பசங்க கவனிப்பாங்கன்னு நினைக்கல, ஜஸ்ட் நார்மல் பேச்சுதானே அப்படி நினைச்சுட்டேன், இனிமே இப்படி நடக்காது” என்று சொல்ல சிவசங்கரனுக்கு நிறைவாய் இருந்தது. “கோவமில்லையே உனக்கு?” என்று கேட்க “இல்லைன்னு சொல்ல ஆசைதான்” என்று சிரித்துவிட்டுப் போக, இவன் இருக்கானே என்று நினைத்து அவருக்கு புன்னகை அரும்பியது. அன்று மாலை சக்திவேலின் இல்லத்தில் எல்லாரும் கூடியிருந்தனர். சுகுமாறன் இன்று […]


முத்தம் – 15(2)

“அப்பா கார் எடுங்க, ஜஸ்ட் எ மினிட்” என்று சொல்லி அவரிடம் கார் சாவியைத் தந்தவன் ரசிகாவிடம் போக, சுகுமாறனுக்கும் புஷ்பாவிற்கு மகனின் செயல் அதிகபடியாத் தோன்றியது. “அண்ணா, தப்பா எடுக்காதீங்க. இவன் கொஞ்சம் அவசரப்படுறான்” என்று புஷ்பா எங்கே மகனை அவர் தவறாக நினைத்துவிடுவாரோ என்று பேச சுகுமாறனும் ”அவசரம் எல்லாம் இல்லை, இவனுக்கு வால்தனம் ஜாஸ்தி. எல்லாம் எங்கண்ணன் அண்ணியை சொல்லனும்” என்று அவரும் பேச “விடுங்க இரண்டு பேரும், சின்ன வயசுல இருந்து […]


முத்தம் – 15(1)

நிலவு 15 சர்வாவின் அணைப்பில் நின்றிருந்த ரசியின் விழிகள் கண்ணீரால் நனைந்து கன்னம் நனைத்தன. “ரசி! என்னாச்சு ஏன் அழற நீ?” என்று சர்வா கேட்க, அவன் நெஞ்சில் நன்றாய் ஒன்றியவள் “நம்பவே முடியல, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சர்வா” என்றதும் அவள் தலையில் செல்லமாய்க் கொட்டியவன் “சந்தோஷம்னா சிரிக்கனும், அழுவாங்களா?” என்று கேட்டான் கண்களில் சிரிப்புடன். “உங்களுக்குப் புரியாது போங்க” என்றாள் அகம் முழுவதும் ஆர்ப்பரித்த ஆனந்த துள்ளலுடனும் நிறைந்த சந்தோஷத்துடனும். “அது புரியாட்டினா […]


முத்தம் – 14

நிலவு 14 சர்வஜனன் சிறுவயது முதலே சேட்டைக்காரன், அதனால் அவன் தன்னிடம் இப்போது விளையாடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று ரசிகாவிற்குக் குழப்பம். அதனையும் விட ரசிகாவின் மனம் சர்வஜனனை எப்போதும் ரசிக்கும்! அதுவும் இப்போதெல்லாம் அது மிக  மிக அதிகம். தள்ளி  நிற்கலாம் என தத்தை நினைத்தாலும் அவன் அவளை ஈர்த்துக் கொண்டும் தன் பக்கம் இழுத்துக் கொண்டும் இருந்தான். தவிக்க வைத்தான் பெண்ணை, அவளும் தவித்துப் போனாள். அன்பை அடைத்து வைத்து அகத்தினில் ரசிகாவிற்கு […]


முத்தம் 13(2)

“டேய்! என்னடா அன்னிக்கு ஆறு மாசம் டைம் வேணும் சொன்ன?” என்று மகனை அறிந்தவராக சுகுமாறன் கேட்டார். இவன் திடீரென இப்படி சொல்கிறான் என்றால் எதாவது காரணம்  நிச்சயம் இருக்கும் என்று நினைத்தார். புஷ்பாவோ “அவனே மாறினாலும் நீங்க மாறாதீங்க” என்று கடிய சர்வாவோ சிரித்தபடி “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு” என்று கண்ணடிக்க, சுகுமாறனோ மகன் வேறெதுவோ சொல்ல போகிறான் என்று யுகித்துவிட, புஷ்பா பூரிப்போடு மகனின் முகம் பார்த்தார், கொஞ்ச நேரத்தில் பூரித்த முகம் […]


முத்தம் – 13(1)

நிலவு 13 “பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்ற சர்வாவின் வார்த்தைகள் தந்த தாக்கத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அந்த அதிர்வோடு அவனைப் பார்த்த ரசிகா “சர்வா?” என்று கேள்வியாய்ப் பார்க்க “ப்ச், அடிப்பட்ட பொண்ணைப் பார்க்க வந்தேன், அது ஒரு தப்பா? இப்படி ஷாக் ஆகுற நீ?” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் சர்வஜனன். அவனின் பேச்சு ரசிகாவிடம் இருக்க பார்வை பாவை விழிகளில் இருக்க, அந்த விழிகளில் முதலில் ஒரு வியப்பு, அதிர்வு, இப்போது […]


நிலா முற்றத்து முத்தம் – 12

நிலவு 12 சர்வஜனன் வீடு வந்த சேர்ந்தபோது மிகுந்த சோர்வுடன் இருந்தான். அவன் நண்பன் உதவியுடன் ரசிகாவின் வீட்டில் அவள் வண்டியை விட்டு, பின் அவன் வண்டியை எடுத்து என்று நிறைய அலைச்சல். சர்வாவின் வண்டி சத்தம் கேட்கவுமே  வெளியே எட்டிப் பார்த்தான் பத்ரி. காம்பவுண்டினுள் நின்றபடி சர்வாவிடம் “எங்களுக்கு முன்னாடி கிளம்பின, எங்கடா போன?” என்று கேட்க “ரசிகா விழுந்துட்டா டா” என்று எல்லாம் சொல்ல “அச்சோ, ஓகேதானே சர்வா?” என்ற பத்ரியின் கேள்விக்கு “ஓகேதான், […]


நிலவு 11

ரசிகாவின் பின் சர்வா இடைவெளி விட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான், இருவருமாக ஒரு சின்ன சாலையில் செல்லும்போது அந்த திருப்பத்தில் ரசிகா முதலில் திரும்பிவிட, எதிர்ப்பக்கம் வந்த வண்டியை அவள் கவனிக்கவில்லை, எங்கே மோதிவிடுவோமோ என்று பயந்தவள் வேகமாய்ப் பிரெக்கை அழுத்த அந்த திடீர் செய்கையில் தடுமாறி கீழே விழ, “ரசி” என்று பதறி சர்வஜனன் அவளருகே சென்றவள் அவளைப் பிடித்து நிறுத்த கால்களில் சிராய்ப்பு, கைமுட்டியிலும் சின்ன காயம். “வலிக்குது சர்வா, நிக்க முடியல” என்று […]