Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oonjalaadum Manathu

மனது – 28

இங்கே ஆடிட்டோரியத்தை காலி செய்து விட்டு, கிளம்ப தயாராகினர் மலரும், மகிமாவும். “போதும் மகிமா. மீதி வேலையை காலேஜ் ஸ்டாப்ஸ் பார்த்துப்பாங்க. நீங்க உங்களோட திங்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடுங்க. வீட்டுக்கு கிளம்பலாம்” என்று அன்பு சொல்ல, “ஓகே அண்ணா. எல்லாம் எடுத்தாச்சு. லெட்ஸ் கோ தென்” என்ற மகி, வாயில் கதவை லேசாக மூடி விட்டு, கல்லூரி சார்பாக நின்றவர்களிடம் சாவியை கொடுத்தாள். மூவரும் பார்க்கிங்கை நோக்கி நகர்ந்தனர். “சர்ப்ரைஸ்..” […]


மனது – 28

மலரின் கண்கள் மொபைலையும், வாசலையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தது. மகிமா மெல்ல அங்கிருந்து விலகி ஆடிட்டோரியத்தின் சிறிய மேடையின் மேல் ஏறினாள். “ஹலோ கைஸ்” கத்தினாள். மொத்த கூட்டமும் அவள் புறமாக திரும்பியது. “இந்த நாளை எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணீங்கனு நம்பறேன். பல வருஷங்கள் கழிச்சு, உங்களை எல்லாம் ஒன்னாப் பார்த்ததில் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். கனவில் கூட நினைச்சு பார்க்காத ஒரு நாள். நான் கூப்பிட்டதும், உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு, […]


மனது – 27

“என்ன விஜய், செத்தாலும் வீராவை மன்னிக்க மாட்டேன்னு சொன்ன? இப்போ அவன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க?” தங்களின் அருகில் வந்து நின்ற விஜயிடம் கிண்டலாக சிரித்தபடியே கேட்டாள் மலர். “ஆமா மலர், அப்போ அவன் மேல அவ்ளோ கோபம் இருந்தது. அதான் அப்படிச் சொன்னேன். ஆனா, இன்னைக்கு அவன் தன்னோட தப்பை உணர்ந்து உண்மையா வருந்தி மன்னிப்பு கேட்கும் போது, மதிக்கலைன்னா… அது தானே மிகப் பெரிய குற்றம். அதான் மன்னிச்சு, நான் பெரிய […]


மனது – 26

“மலர், வீராவை போய் பார்த்திட்டு வரலாமா?” எதிர்பாரா நேரத்தில் கேட்கப்பட்ட கேள்வியில், அதிர்ந்து விழி விரித்தாள் மலர். “இல்ல, அத்தை போக வேணாம்னு சொன்னாங்க. ஒருவேளை உனக்கு பார்க்கணும்னு இருந்தா…” “போகலாம்…” என்றாள் பட்டென்று, வீராவை நேருக்கு நேராக பார்க்க வைப்பதால் மலரை கொல்லும் குற்ற உணர்ச்சியில் இருந்து, பாதி இரவில் கலங்கி விழிக்கும் கெட்ட கனவுகளில் இருந்து மீட்டு விடலாம் என்று நினைத்தான் அன்பு. மலரின் எண்ணமும் அதுவாகவே இருந்ததால் அதிகம் யோசித்து குழப்பிக் கொள்ளாமல் […]


மனது – 26

நாட்கள் விரைந்து செல்ல, கார்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. மலருக்கு கல்லூரி இறுதி தேர்வுகளுக்கான நாளும் வந்தது. காலை அம்மாவுடன் கல்லூரிக்கு செல்வது, மாலை கணவனுடன் வீடு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது. முதல் தேர்வு எழுத சென்றவளுக்கு, அலை அலையாய் பல நினைவுகள். முடிவில் வீராவின் முகம் கண் முன் வந்து நின்றதை அவளால் தவிர்க்க முடியவில்லை. மலரைப் பார்த்ததும் ஓடி வந்து கைப் பிடித்து கொண்டாள் மகிமா. “கை எப்படி இருக்கு மகி?” என்றாள் […]


மனது – 25

“இது சரி வராது வைதேகி, என்ன பேசுற நீ? கல்யாணம் பண்ற வயசா இது? முதல்ல அவ படிப்பை முடிக்கட்டும்” அழுத்தமாக தன் மறுப்பை தெரிவித்தார் சுவாமிநாதன். “எனக்கு மட்டும் இப்போ அவளுக்கு கல்யாணம் பண்ண ஆசையா என்ன? சூழ்நிலை அப்படி. நான் என்ன பண்றது?” தளர்ந்து சோர்வாக அமர்ந்தார் வைதேகி. “என்ன சூழ்நிலை, அதான் காலேஜ்ல இருந்து போலீஸுக்கு சொல்லிட்டீங்க இல்ல? அவங்களும் வந்து விசாரிச்சு ஆக்சிடென்ட் தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க. அப்புறம்…” “விஷயம் புரியாம […]


மனது – 24

அன்றைக்கு அவசர அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த அம்மாவின் முன்னே போய், “அம்மா, வீட்ல தனியா இருக்க முடியல. இன்னைக்கு நானும் காலேஜ் வரவா?” என்றாள் மலர் மெல்லிய குரலில், சிறிது யோசித்து விட்டு, “ஓகே வா, ஆனா நோட்ஸ் எல்லாம் வாங்கிட்டு அண்ணன் கூட வீட்டுக்கு வந்திடனும், சரியா?” என்றார். “சரிங்கம்மா..” என்றாள் மலர். வாழ்க்கை பயணம் பல திருப்பங்களைக் கொண்டது, சிலதை நாமே தேடித் செல்கிறோம். சிலது தானாகவே அமைகிறது. அன்றைக்கு மலரின் வாழ்க்கைக்கான […]


மனது – 24

“மலர், ஒன்னு கவனிச்சியா? அடிக்கடி நம்ம கிளாஸ் பக்கம் ரெண்டு ஆபீஸ் ஸ்டாப் எட்டிப் பார்த்துட்டு போறாங்க” என்றாள் மகிமா, “ஹ்ம்ம், அம்மா வேலையா இருக்கும்” என்றாள் மலர் எதையோ ஆழமாக யோசித்தபடி, “இல்ல, மொத்த காலேஜையும் ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வராங்க. நமக்கு நல்லது தான், பாதுகாப்பு.” என்றான் வசீகரன், அவர்களின் அருகில் வந்து அமர்ந்தபடி, சட்டென ஒவ்வொருவராக அருகில் வந்திருந்தனர். “வீரா, இப்பலாம் எதுவும் தொல்லை கொடுக்காம இருக்கறது, ஆச்சரியமா இருக்கு. அவனை புரிஞ்சுக்கவே […]


மனது – 23

அன்றைக்கு மதியம் வரை மலரின் பக்கமே திரும்பவில்லை வீரா, மனதில் சற்றே நிம்மதி பரவ, தன் கூட்டத்துடன் கேன்டீன் கிளம்பினாள் மலர். மதிய உணவை முடித்து விட்டு விஜயுடன் பேசிக் கொண்டே மைதானத்தினுள் மலர் நுழைய, புயலேன எங்கிருந்தோ திடுமென வந்து, அவள் முன் நின்றான் வீரா. அனிச்சையாய் பின்னால் நகர்ந்து நின்றாள் அவள். “டேய், இன்னைக்கு நீ அடி வாங்கியே சாக தான் போற, பாரு..” வீராவின் சட்டையை கொத்தாகப் பிடித்து அடிக்கக் கை ஓங்கினான் […]


மனது – 23

“ஓய், தங்கம் நில்லு” என்ற குரலில் மிரண்டு திரும்பினாள் மலர். “என்ன முடிவெடுத்து இருக்க?” “என்ன? என்ன முடிவு வீரா?” கேள்வி புரியாதது போல நடித்தாள். “அடடே, நம்ம தங்கம் பாவம். கொஞ்சம் டைம் கொடுப்போம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்ப இல்ல தெரியுது” என்றவன், கைத் தட்டி அருகே சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவனை அழைத்தான். “எந்த வருஷம்?” “ஃபர்ஸ்ட் யியர் அண்ணா..” “ஓகே தம்பி, இங்கப் பாரு. நான் இந்த அக்காவை லவ் பண்றேன். […]