அதிலும், உறவுமுறையைச் சொல்லி அழைப்பது அரிதாகி வரும் இந்த காலகட்டத்தில், தங்களின் அத்தை மகன்களை அத்தான் என்றும், அத்தை மகள்களை அண்ணி என்றும் சசிதரன், மற்றும் அருணின் பிள்ளைகள் அழைப்பதை பார்க்கும் போது, அவ்வளவு அழகாக இருக்கும். இவர்கள் மேலே ஏறத்தொடங்க, சிவரஞ்சனி, சந்த்ரிகாவோடு, மீனாட்சியும் கயல்விழியும் குளிப்பதற்காக கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். “நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிறகு குளிக்கலாம். இப்போ நீ குளிக்காத” மனைவிக்கு அருகில் வந்து அருண் கிசுப்பாகச் சொல்ல, “ஹாங்… என்ன […]
அக்காவைக் கண்டதும், தன்னை மறந்து வேகமாக ரஞ்சனி மாடிப்படி ஏறி அவளிடம் செல்ல முயல, “ஹேய்… நில்லு டி நானே வரேன்…” என்று பதட்டத்தோடு வேகமாக படியிறங்கி வந்து தங்கையை கட்டிக் கொண்டாள் சந்த்ரிகா. அந்த ஒற்றை செயலே, அங்கிருந்த அத்தனை பேருக்கும் சந்திரிகாவின் மனமாற்றத்தை அழகாக எடுத்துக்காட்ட, உற்சாக வெள்ளத்தில் நிறைந்தது வீடு. அதன்பிறகு வந்த நாட்களில் வீட்டு பெண்களோடு சந்த்ரிகா இணைந்து கொண்டாளானால், சசிதரன் ஆண்களோடு கடைக்கு சென்று வர ஆரம்பித்தான். குழந்தைகளோ, உறங்கும் […]
அத்தியாயம் 22 அன்று, சந்த்ரிகா வீடியோஸ் அனுப்பியதும், ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் லிங்கத்தின் வீட்டை நோக்கி தன் புல்லட்டில் பறந்திருந்தான் அருண். லிங்கத்தின் வீட்டுக்கு வந்தவன், புயலென உள்ளே நுழைந்து, பையும் கையுமாக எங்கேயோ புறப்பட்டு நின்ற லிங்கத்தின் கன்னத்தில், சரமாரியாக தன் கைகளை இறக்க, அவனும் இவனோடு சரிக்குசரியாக மல்லுக்கு நின்றான். உண்மையில், அருண் தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வரும்முன், எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் லிங்கம் புறப்பட்டதே. ஆனால் […]
அத்தியாயம் 21 பெங்களூருவிலிருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாவூர்சத்திரத்தை தன் இலக்காக கொண்டு இன்னோவா ஒன்று விரைந்து கொண்டிருந்தது. காருக்குள் சசிதரன் தன் குடும்பத்தோடு இருந்தான். குழந்தைகள் அபிநந்தன், நந்தனா தவிர, சசிதரன் தோள்களில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்த்ரிகா, சசிதரன், ட்ரைவர் ஆகிய மூவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். ஆம்… கொரனா பரவலைத் தடுக்க அரசாங்கம் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியிருந்ததோடு, ஒரு வாரகால ஊரடங்கையும் அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த ஒருவாரம் முடியவும், வந்த சனி, ஞாயிறுகளில், […]
“நீங்க மட்டும் தான், பிள்ளைகளைக் கூட அடுத்தவங்க கிட்ட விட்டுட்டு, பணம்… பணம்னு, அதுக்கு பின்னாடி ஓடுவீங்களா? ஏன்?… நாங்க ஓடக்கூடாதா? எனக்கும் பணம் தேவையிருந்தது. அதான் பிள்ளைங்களை தூங்க வச்சிட்டு, நான் அடுத்த வேலைக்கு போனேன்” எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி சொன்னாள், அந்த சோனம். சோனத்தின் பதிலில் தடுமாறிப் போனாள் சந்த்ரிகா. அது லிஃப்டாக இல்லாமல் வேறு இடமாக இருந்திருந்தால், அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, சோனம் தப்பித்து போயிருக்க கூடும். குழந்தைகளோடு சோனம் […]
அத்தியாயம் 20 காலம் என்னும் நல்லாசிரியர், தன் குடும்ப விஷயங்களை தேவையில்லாமல் அடுத்தவர்களிடம் பகிரக்கூடாது, அதிலும், அடுத்த ஆண்களிடம் கூடவேக் கூடாது என்ற பாடத்தை சந்த்ரிகாவிற்கு வலிக்க வலிக்க கற்றுக் கொடுத்திருக்க, தான் காத்திருக்க சொல்லியிருந்த வாகனத்தில், மௌனமாக வந்து ஏறிக்கொண்டாள் சந்த்ரிகா. இதற்கு மேலும் அலுவலகத்திற்கு செல்லும் மனநிலை இல்லாததால், கார் ட்ரைவரிடம் வீட்டு விலாசம் சொல்லி, அங்கு செல்ல பணித்தாள். “அக்கா, ஒண்ணும் பிரச்சினை இல்லை ல்ல… பத்திரமா வீட்டுக்கு போய்டுவ ல்ல?” அலைபேசியில் […]
கூடவே, ‘ஒரு அந்நிய ஆடவன், என்னை இப்படி எடை போடுமளவிற்கா என் நடத்தை இருந்திருக்கிறது?’ என்று வெட்கித் தலைகுனிந்த சந்த்ரிகாவின் மனது, தன் குணத்தைப் பற்றி சுய அலசலில் இறங்க முற்பட, அதற்கான இடமும் நேரமும் இதுவல்ல என்று நிமிடத்திற்குள், நிமிர்ந்து நின்றவள், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்து கொண்டு, கணவனின் கைபேசிக்கு, தான் இப்போது நிற்கும் இடத்தின் அட்ரஸை டைப் செய்து வாட்ஸப் மூலமாக அனுப்பினாள். பின்னர், “நான் இந்த அட்ரஸில் சேஃப்பாக […]
ஏற்கனவே பலமுறை அவனுடைய ஃப்ளாட் க்கு சந்த்ரிகாவை அழைத்திருக்கிறான் அரவிந்தன். அவள் வர மறுக்கவே, வீட்டின் அட்ரஸைக் சொல்லி எப்போ வேண்டுமென்றாலும் நீ வரலாம் என்று சொல்லியிருந்தான். எனவே அவன் வீட்டைக் கண்டு பிடித்து வருவதில் சந்த்ரிகாவிற்கு தடுமாற்றம் ஒன்றும் இருக்கவில்லை. வந்த வாடகைக் காரிலிருந்து இறங்கியவள், அரவிந்தன் வீட்டில் தான் இருக்கிறானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக, கைபேசியில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். எதிர்ப்புறம் அலட்சிய சிரிப்போடு ஃபோனை காதுக்கு கொடுத்த அரவிந்தன், ” சொல்லு […]
அத்தியாயம் 19 தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபரிடமிருந்து, சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகள் வந்து விழ, மூளை ஸ்தம்பித்து, வாயடைத்து போனாள் சந்த்ரிகா. ஆம்… வாயடைத்து தான் போனாள். அரவிந்தனின் வார்த்தைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனப்புரியாமல், வாயடைத்துப் போய் மௌனமாக அந்த இடத்திலிருந்து சந்த்ரிகா நகர்ந்தாள். “பதில் சொல்லிட்டு போ சந்த்ரி” என்றான் அரவிந்தன். அங்கிருந்து நகர்ந்தவள், இப்போது நின்று அவனைத் திரும்பி பார்த்தாள். அந்த கண்களில் தெரிந்த அடிபட்ட பாவனை, அரவிந்தனைக் கூட அசைத்துப் […]
“இவ்வளவு தெளிவா நீ சொல்லணும்னு தேவையில்லை சந்த்ரி. ஏன்னா, எம்பையன் இப்படி சொல்லாட்டா தான், நான் ஆச்சர்யபட்டுருப்பேன்” என்று சொல்லி, மருமகளை அதிர்ச்சியடைய வைத்த இராஜேஸ்வரி, “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு ஒரு பழமொழி உண்டு, உனக்கு தெரியும் தானே சந்த்ரி… அப்படி தான் இருக்கு உன் கதை” என்று நையாண்டியாக சொல்லியும் விட்டார். இதுவரையிலும் இராஜேஸ்வரி இப்படி பேசிக் கேட்டிராத சந்த்ரிகா திகைத்து போய் நின்றாள். அடுத்த சண்டைக்கு அவள் தயாராவதற்கு முன் இடையிட்ட அருண், […]