Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

punnagaiyil jeevan karaiyuthadi

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 28 (2)

“இந்த மாதிரி நான் என்ன நினைப்பேன்னு யோசிக்காம உன் மனசுல என்ன இருக்கோ அதை தெளிவா பேசு. கேளு. என்கிட்டே உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் உன்னோட ஹஸ்பன்ட் மேடம். உனக்கு மட்டும் தான் பர்ஸ்ட் ப்ரிபரன்ஸ்…” அவளின் நெற்றியில் லேசாய் முட்டி சின்ன சிரிப்போடு சொல்ல, “ஐ வான்ட் டூ கிஸ்…” என அவள் முடிக்கும் முன்  அவனின் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தாள். என்னவிதமான உணர்வை அவன் பிரதிபலிக்கிறான் என. “பண்ணிக்கோ. இதுக்கெல்லாமா பர்மிஷன் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 28 (1)

புன்னகை – 28 மாடியில் வேறொரு காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. காட்சிகள் முடிந்து அடுத்ததிற்கான பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்க இங்கே ரிஷி நேத்ராவிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான். முகத்தில் அவ்வளவு புன்னகை. அதுவும் வசீகரமாய். தன்னருகில் யாரோ வந்து அமரும் அரவம் தெரிய நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் நேத்ராவிடனான பேச்சில் தன்னை நுழைத்துக்கொண்டான். அவள் அப்படத்தின் இன்னொரு கதாநாயககி அபர்னிதா. அவனின் அருகில் அமர்ந்தவள் தன்னை நிமிர்ந்துபார்த்தவன் ஒரு மரியாதைக்காவது புன்னகைப்பான் என்று பார்த்தாள். அவனின் கண்டுகொள்ளாத தன்மையில் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 27

புன்னகை – 27              கோவிலுக்குள் பலரும் பலதரப்பட்ட பார்வையினை மலரை நோக்கியும் அவளது மொத்த குடும்பத்தை நோக்கியும் வீச கொஞ்சம் நடுங்கத்தான் போனாள். யாரின் பேச்சையும் காதுகொடுத்து கேட்காமல் கண்டுகொள்ளாமல் போகும் மலர் அல்லவே. இப்பொழுது யாரேனும் தவறாக பேசிவிட்டால் அது தன் குடும்பத்தையும் பாதிக்குமே என யோசித்து குழம்பி நின்றாள். அவளின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டதுமே ஆறுதலாய் அணைத்துக்கொண்ட அனய், “ரோஸ்பட் பேஸ்மட்டம் வீக்கா இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங் அப்டின்னு நாம காட்டி […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 26

புன்னகை – 26          ஒன்றுக்கு மூன்று முறை விடாமல் அவன் அழைத்தபடியே இருக்க நேத்ரா அவனின் அழைப்பை ஏற்கும் பாடுதான் இல்லை. திரும்பியும் ரிஷி அழைக்க அப்பொழுதுதான் அதை எற்றால்நேத்ரா. “ஹ்ம்ம் என்ன இது எப்ப பார்த்தாலும் தூங்கறப்பவே கால் பண்ணி டிஸ்டர்ப் பன்றது. இப்ப என்ன வேணுமாம்?…” தூக்ககலக்கத்தில் நேத்ரா பேச, “நீயெல்லாம் என்ன பொண்ணுடி?…” என கடுப்படித்தான் அவளிடம். “ஏன் கட்டுமரத்திற்கு அதுல என்ன சந்தேகமாம் இப்போ?…” புரண்டு படுத்தபடி கேட்க அவளின் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 25 (2)

அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு அன்று வீடு திரும்பியவனின் முகமே பொலிவிழந்து காணப்பட்டது. லேசாக அவனின் முகம் வருந்தினாலே பொறுக்காதவள் வனமலர். இதை தாங்கிக்கொள்வாளா? “எதுவும் பிரச்சனையா மாமா?…” என்று காபி கொடுத்துவிட்டு கேட்க, “மலர் எனக்காக ஒன்னு செய்வியா? எனக்கு வேற வழி தெரியலைடா. அதான்…” “மாமா உங்களுக்காக என்னோட உயிரை கூட குடுப்பேன். என்ன வேணாலும் கேளுங்க. உங்களுக்கு செய்யாமலா?…” என்று அவனின் வருத்தத்தை போக்கிவிடும் வேகத்தில் கேட்க அவனின் நெஞ்சறுத்தது அவளின் வெள்ளந்தியான குணமும், […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 25 (1)

புன்னகை – 25 ஒருவருடம் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. அவன் யுஎஸ் வந்து நாட்கள் சடுதியில் ஓடியே விட்டது. அலுவலகம் சம்பந்தமாக வந்தவன் அங்கேயே தன்னுடைய வேலையை நீட்டித்து இருந்துகொண்டான். மீண்டும் சென்னை வரும் உத்தேசமோ யாரையும் பார்க்கும் தைரியமோ எழவே இல்லை. எதற்குமே விருப்பப்படவில்லை. “வேண்டாம், எதுவும் வேண்டாம். வாழ்வில் முக்கியமானதையே இழந்துவிட்டேன். இனி எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?” என்னும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான் அங்கிருந்து கிளம்பும் முன்பாகவே. ஆனால் மலர் மட்டும் அவனின் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 24 (2)

“ஒன்னும் தெரியாத பிள்ளையை இப்படி கொன்னுட்டாளே. நீயெல்லாம் நல்லா இருப்பியா?…” என்றபடி காமாட்சி ஒரு துணியோடு வந்துவிட  மலரின் தலை காயத்தில் மஞ்சளை வைத்து அழுத்தியவர் துணியை வைத்து இறுக்கமாய் கட்டினார். வைத்தியநாதன் மலரை தூக்கிக்கொள்ள அவரின் பின்னே காமாட்சியும் ஓட ஆனந்தி அப்படியே நின்றார். வாசல் வரை சென்ற காமாட்சி, “உனக்கு தனியா வேற சொல்லனுமா? வந்து தொலை…” என்று ஆனந்தியை சொல்லிவிட்டு மலரின் தலையை பிடித்துக்கொண்டே வெளியே செல்ல வாசலில் காத்திருந்த சரவணன் பயந்துபோய் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 24 (1)

புன்னகை – 24 உயிராய் நேசித்து தனக்குள் வளர்த்த காதல் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காற்றில் கலந்து கைவிட்டு உயிர் பறித்து செல்வதை போன்ற வலியை உணர்ந்தான் அனய். “வந்துடு மலர்…” வெறும் இதழசைப்பில் சத்தமில்லாமல் அழைக்க அதை கண்டு இன்னமும் சரவணனோடு மலர் ஒன்றி நிற்க சரவணனோ அனய்யின் நிலைபுரியாமல் வெற்றிக்களிப்பில் அனய்யை மிதப்பாய் பார்த்துவைத்தான். அதை கூட கண்டுகொள்ளாமல் மலரை மட்டுமே பார்த்தபடி இருந்த அனய்யையும் சரவணனின் எள்ளல் பார்வையையும் புரிந்துகொண்ட […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 (2)

அவரிடம் தலையாட்டிக்கொண்டு காமாட்சியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவன், “எப்படிம்மா உங்களால இவ்வளோ பயமில்லாம அவர்க்கிட்ட பேச முடியுது?…” என, “யாருக்கு பயமில்லை? எனக்கும் பயம் தான். ஆனாலும் வெளில காமிச்சுக்க கூடாது. அவருக்கு தெரிஞ்சிட்டா அவ்வளோ தான். மனுஷன் என்னை கண்ணாலையே உருட்டி மிரட்டி மூலையில உட்கார வச்சிடமாட்டாரு…” இருவரும் பேசி சிரித்துக்கொண்டே கோவிலை நோக்கி சென்றனர் நடக்க போகும் விபரீதம் தெரியாமல். இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயதார்த்தம் என்னும் நிலையில் வீட்டிற்குள் புயலாய் நுழைந்தான் அனய். […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 (1)

புன்னகை – 23               புதுக்கோட்டையில் தங்கள் கல்லூரியில் புதிதாய் நர்ஸிங் படிப்பு ஆரம்பிப்பதற்காக அப்ரூவலை பெறுவது சம்பந்தமாக முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திக்க நேத்ராவும், அவள் மாமனார் சிவராமனும் வந்திருந்தனர். முதல்நாள் வேலை முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழலில் அனய்யும் அவர்களை பார்க்க இரண்டுநாள் விடுப்பில் வந்திருந்தான். ஆறுமணிக்கு எழுந்ததும் ரிஷியிடம் பேசியவள் அப்படியே தன்னுடைய மொபைலில் முகநூல் பக்கத்திற்கு சென்றாள். “காலாங்காத்தால ஃபேஸ்புக். ஹ்ம்ம்…” என்று ஒரு நக்கலுடன் அவளுக்கான காபியை கையில் […]