Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Swarangalin Aranaai

ஸ்வரங்களின் அரணாய் – 28 (4)

“எக் நெஸ்ட்…” என்று அதனை பார்த்துவிட்டு ஸ்பூர்த்தி பார்த்தவன் விழிகள் சுருங்க மீண்டும் அவள் முகத்தை பார்த்தான். “ஸ்பூர்த்தி இது என்ன?…” என அரை உறக்கத்தில் இருந்தவளிடம் எழுப்பி கேட்க, “என்ன மாமா?…” “அதான் எக் நெஸ்ட்? உன் ட்ராலில இருந்தது…” “உங்களுக்கே தெரிஞ்சிருக்கே? ஏன் கேட்கறீங்க? லீவ் மீ…” “ப்ச், சொல்லுடி. என்னன்னு. எப்ப வாங்கின?…” விடாமல் அவளை எழுப்பி கேட்க, “டெல்லி ஏர்போர்ட்ல தான் வாங்கினேன். சப்போஸ் பாப்பா வந்தா இதை உங்களுக்கு சர்ப்ரைஸா […]


ஸ்வரங்களின் அரணாய் – 28 (3)

“நீ ஏன் உங்கப்பாவுக்கு போட்டோஸ் அனுப்பின?…” என்று கேட்க அவனை முறைத்துவிட்டு திரும்பியவள், “இந்த சாங் பாட கூடாது. அவ்வளோதான். யாரோடையாச்சும் பேர் பண்ணுனீங்க இருக்கு உங்களுக்கு…” என்று கோபமாய் சொல்லிவிட்டு அவள் செல்ல அஷ்வின் முகத்தில் மத்தாப்பூக்கள். “எங்க சேம்ப்? ஸ்பூர்த்தி அதுக்குள்ளே போயாச்சா?…” “ஹ்ம்ம், ஆமா, நான் யாரோடையும் பேர் பண்ணி பாட கூடாதாம். மிரட்டிட்டு போறா…” “இதென்னடா? ம்யூஸிக்ல இப்படி சொல்ல கூடாதே? ஸ்பூர்த்திக்கு தெரியுமே?…” என்ற அதிரன், “இப்படியெல்லாம் மேகா சொன்னதே […]


ஸ்வரங்களின் அரணாய் – 28 (2)

நிகழ்ச்சி நடைபெறும் ஆடிட்டோரியம் அருகில் அவர்கள் குடும்பம் அனைவரும் தங்கியிருக்க அங்கே அஷ்வின் இல்லை. “என்னம்மா ப்ரோக்ராம் நல்லபடியா முடிஞ்சதா?…” என்று மோனிகா கேட்க, “ஆச்சு அத்தை. எங்க மாமாவை?…” “அவரை என்கிட்டே கேட்டா?…” என சலித்தாள் மோனிகா. “உங்க மாமாவை யார் கேட்டா? நான் என் மாமாவை கேட்டேன்…” என பல்லை கடித்துக்கொண்டே ஸ்பூர்த்தி கேட்க, “அஷ்வினை தான் கேட்கறா அண்ணி. உங்களுக்கு இவளை பார்த்ததும் தெரியலையா?…” மேகா மகளை பார்த்து சிரித்துவிட்டாள். “ஏன் தெரியாம? […]


ஸ்வரங்களின் அரணாய் – 28 (1)

ஸ்வரம் – 28                அன்று சென்னையின் பிரபல கல்லூரியின் அறுபதாவது ஆண்டின் நிறைவு விழாவுக்காக சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ஆவுடையப்பனும், பசுமை அரண் அறக்கட்டளை நிர்வாக தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்பூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தனர். வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு சிறப்புரைக்காகவும், அறக்கட்டளை சார்பாக லட்சம் மரக்கன்றுகளையும் தர வந்திருந்தாள் ஸ்பூர்த்தி. விழா ஆரம்பிக்கப்பட சிறப்பானதொரு பேச்சாளரை போல இருந்தது அவளின் உரை. வனத்தை பற்றியும் அதன் பெருமிதங்கள், அதனால் காக்கப்படும் வன உயிரினங்கள், நீர் வளம் என்று […]


ஸ்வரங்களின் அரணாய் – 27 (1)

ஸ்வரம் – 27             கோவிலுக்கு சென்று வந்தவர்கள் வந்ததுமே ஸ்பூர்த்தி எங்கே என பூவம்மாவிடம் கேட்க, “நீங்க போன கொஞ்ச நேரத்துல தம்பி கூப்புட்டுச்சு. அப்பா உள்ள போன போலீஸ் கண்ணு இன்னும் வெளில வரலை…” என்றார் அவர். “என்ன? இன்னுமா? சண்டை எதுவுமா தெரியலையே?…” என மோனிகா பதற, “இருங்கண்ணி, எதுக்கு இவ்வளோ டென்ஷன்?…” என்றாள் மேகா. “ப்ச், அஷ்வின் பேச்சு எல்லாம் இப்ப ஸ்பூர்த்தியை கஷ்டப்படுத்தற மாதிரியே இருக்கு. உன்கிட்ட சொன்னா நீ […]


ஸ்வரங்களின் அரணாய் – 27 (2)

“நான் நானாவே போவேன். சும்மா உங்களை பார்த்தேன். பர்மிஷன் கேட்டு ஒன்னும் இல்லை…” அறையிலிருந்து செல்ல போனவள் இதனை பேசிக்கொண்டே போக, “ஸ்பூர்த்தி ஸ்டாப்…” என்றுவிட்டான் அஷ்வின் உடனே. “போக வேண்டாம். இங்கயே இரு…” என சொல்ல திருதிருவென்று ஸ்பூர்த்தி விழித்ததில் அதிரனும் சிரிக்க, “அப்பா…” என்றாள் மகள். “என்னப்பா?…” என அதிரனும், “என்ன அங்க அப்பா?…” என அஷ்வினும் ஒன்றுபோல கேட்க, “போதும்…” என்று கை நீட்டி இருவரையும் முறைத்தாள். “நீ தான் தைரியமான ஆளாச்சே. […]


ஸ்வரங்களின் அரணாய் – 26 (3)

அதிரன் தான் மகளை இதனை சொல்லி அழைக்கிறேன் என்றதற்கும் அஷ்வின் மறுத்துவிட்டான். “அதென்ன அவ்வளோ அடமென்ட்? நாமளா போக சொன்னோம்? அவளே வரட்டும். கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டும். நானும் இன்னும் நல்லா ஸ்ட்ராங்காகிக்கறேன்…” என்று சொல்லிவிட்டவனை மீற முடியவில்லை. இரண்டு வருடங்கள் பொறுத்தவன் இவள் என்ன இன்னும் இப்படி இருக்கிறாள் என்று மேகாவின் பிறந்தநாளை வைத்து மேகமலை வரவழைத்து தன்னையும் ஒப்புவித்து பேசியிருக்க இத்தனைக்கு பிறகும் மீண்டும் அவள் அவசரப்பட்டு எடுத்த முடிவில் முற்றிலும் நிதானமிழந்திருந்தான். அந்த […]


ஸ்வரங்களின் அரணாய் – 26 (2)

என்னதான் அந்த பேச்சுக்கள் வலம் வந்தாலும் அவனுக்கான வாய்ப்புகள் வந்துகொண்டு தான் இருந்தது மற்ற மொழிகளில் இருந்தும் கூட. அதுவும் அன்று பூஜை முடிந்து பிரஸ்மீட் வைத்திருக்க அதில் அஷ்வினிடமே நேரடியாக அந்த கேள்வி முன்வைக்கப்பட, “இதை நீங்க ஆரம்பிச்சு வச்சவங்கட்ட தான் கேட்கனும். எனக்கு நானே எந்த பட்டமும் குடுத்துக்க முடியாது இல்லையா?…” என்று எதிர்கேள்வியை கேட்டவன், “யார் சொன்னாங்க? சொல்லுங்க நானே கேட்கறேன்…” என்றும் கேட்டுவிட்டான் அவன். அதன் பின் அந்த பேச்சை விடுத்து […]


ஸ்வரங்களின் அரணாய் – 26 (1)

ஸ்வரம் – 26               இரண்டு வருடங்களுக்கு முன்…  மத்திய பிரதேசத்தில் வனத்துறை அதிகாரியாக பணியிலிருந்த ஸ்பூர்த்தி மூன்று நாள் விடுப்பில் ஊர் திரும்பியிருந்தாள். வெளிநாட்டில் படிப்பை முடித்துகொண்டு நீண்ட மூன்று வருடங்களுக்கு பின் நந்தன் வந்திருக்க அவனை காண கிளம்பி வந்துவிட்டாள். வந்ததில் இருந்து அத்தனை ஆர்ப்பாட்டம். நந்தனும், ஸ்பூர்த்தியும் சேர்ந்து வீட்டை ஒருவழி செய்தனர். “எவ்வளோ நேரம் முழிச்சிருப்பீங்க? போய் தூங்குங்க….” என மேகா விரட்டாத குறை தான். “இன்னைக்கு மாமா வரலை பாருங்க…” […]


ஸ்வரங்களின் அரணாய் – 25 (3)

அதிலும் தான், நந்தன் என்றால் அஷ்வினுக்கு தனி என்று அதுவரை இறுமாந்திருந்தவள் இப்போது நொடிந்து போனாள். வருத்தம், கவலை எல்லாம் அந்த நொடி மட்டுமே. இவன் என்ன போக சொல்வது? தானாய் ஞாபகம் வரும் வரை பொறுமையாக இருந்தால் இத்தனை பேசுவானா? வேலையை வைத்து ஆபத்து என்று விலக நினைத்தவள் இப்போது அதுவும் தடையில்லை என்று அவனுடனே இருந்து கவனித்தால் தான் அத்தனை ஈஸியா என அத்தனை கோபம். “போக முடியாது. என்னவோ உங்க இஷ்டத்துக்கு பேசறீங்க? […]