Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnil Uruvaana Aasaigal

உன்னில் உருவான ஆசைகள் – 24 (2)

“அவன் அப்படித்தான்ம்மா. நீ அதையெல்லாம் விடு. அடுத்த பேர் எழுதிட்டியா?…” என்றார் பூங்காவனம். “ப்பா, நீங்களுமா?…” என்றவன், “இது அநியாயம்மா…” என்றான் யமுனாவிடம். “அத்தை, எதுக்கு இத்தனை கோவம் தர்ஷ்க்கு?…” என்றாள் தாமரை. “எல்லாம் அவன் பேருக்கு தான் கோவம். தண்டாயுதபாணின்னு மாப்பிள்ளை பேர் எழுதிருக்குதுல? அதான் இவ்வளோ கோவம்…” என்றதும் தாமரை தர்ஷனை பார்த்து சிரித்தாள். “இவன் பேர் தண்டாயுதபாணி. கோவில்ல வச்சது. ஆனா தர்ஷன்னு கெஜட்லையும், கூப்பிடறதும். ஆனா கோவில்ல வச்சதை தானே பத்திரிக்கையில […]


உன்னில் உருவான ஆசைகள் – 24 (1)

ஆசைகள் – 24                கதிர் மேஜையில் இருந்த அடுத்த ட்ரிப்க்கான பேப்பரை எடுத்து சரிபார்த்துக்கொண்டு இருந்தான். தனது லேப்டாப்பில் ட்ரிப்க்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தவர்களின் விபரங்களுடன் கையில் இருந்த பேப்பர் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டிருக்க தர்ஷனின் பொறுமை பறந்தது. “என்னடா நான் வந்து இவ்வளோ சொல்றேன். ஒண்ணுமே நடக்காத மாதிரி நீ உன் வேலையை பார்த்துட்டு இருக்க?…” என்றான் தர்ஷன். “வேற என்ன செய்ய சொல்ற? அதான் அம்மாக்கிட்ட சரின்னு சொல்லிட்டியே?…” “நானா […]


உன்னில் உருவான ஆசைகள் – 23

ஆசைகள் – 23          தாமரை கோபத்துடன் அமர்ந்திருந்தாள். குழந்தை துருவ் கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தான். கட்டிலை விட்டு சற்று தள்ளி இருந்த மேஜையில் கையை ஊன்றியபடி கதிர் இருக்க அவன் முகத்திலும் மிதமிஞ்சிய கோபமே வியாபித்து இருந்தது. மேஜையை தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அந்த சத்தத்தில் கதிரின் கோபத்தை உணர்ந்துகொண்டவளோ அசைவதாய் இல்லை. மனதுக்குள் ஆயிரம் சஞ்சலங்கள். ஆசைகளை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அந்த வேதனையில் உழன்றுகொண்டு இருந்தாள் தாமரை. அவளுக்கு மட்டும் என்ன ஆசையா? தன் […]


உன்னில் உருவான ஆசைகள் – 22

ஆசைகள் – 22             மருந்து கொடுக்கும் விழா நல்லவிதமாக நிறைவேறிவிட ஏழாம் மாதம் வளைகாப்பை செய்துவிடலாம் என அன்றே இரு குடும்பத்தினரும் பேசி முடிவெடுத்துக்கொண்டார்கள். மாலை வரை இருந்துவிட்டு சோமநாதன் குடும்பம், அங்கையின் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள். வீட்டில் தாமரையை விட்டுவிட்டு அருகே ஒரு விசேஷ வீட்டிற்கு பூங்காவனமும் யமுனாவும் கிளம்பிவிட தர்ஷனும் வெளியே சென்றிருந்தான். கதிர் அன்று வெளியே செல்லாமல் நல்ல உறக்கத்தில் இருக்க இருவருக்குமாக டீ வைக்கலாம் என உள்ளே சென்றாள் தாமரை. வந்த […]


உன்னில் உருவான ஆசைகள் – 21

ஆசைகள் – 21       இரண்டு நாட்களில் கோர்ட்டுக்கு சென்று நகைகளை மீட்டு வர சென்றார்கள் சோமநாதன், கதிர், சரளா மூவரும். தாமரை அன்று தான் அலுவலகம் செல்கிறாள் என்பதால் அவள் வரவேண்டாம் என சொல்லிவிட்டான் கதிர். ஏற்கனவே நகைகளை பாலீஷ் செய்ய குடுத்திருந்த இடத்தில் வாங்கியிருந்த ரசீதுகள் எல்லாம் இருந்ததனால் ஓரளவுக்கு பார்த்து வாங்கிக்கொண்டு வர முடிந்தது அவர்களால். அதிலும் நூற்றில் நாற்பது சதவீத நகைகளே கிடைக்கபெற்றிருந்தது. அழுதுகொண்டே தான் வாங்கினார் சரளா. அவரை தேற்றி […]


உன்னில் உருவான ஆசைகள் – 20 (2)

“என்னம்மா? என்ன சொல்றாங்க? நகைங்க எதெது இல்லை?…” என சரளா மகளிடம் கேட்க அவள் தான் பார்த்தவற்றை எல்லாம் சொல்ல சரளாவிற்கு தாளமுடியவில்லை. “ஐயோ அந்த நகைங்க தான அதிக பவுனு? நான் என்ன செய்வேன்?…” என புலம்ப ஆரம்பித்துவிட்டார். “சரளா, கொஞ்சம் பேசாம இருக்க மாட்ட…” என்றார் சோமநாதன். “நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை…” என மருமகன் பக்கம் பார்த்தார். “பணத்தை பத்தி கேட்டோம் மாமா. பணம் மட்டுமில்லை. சில நகைங்களையுமே அவனுங்க முடிச்சுட்டானுங்க. இப்போ கைவசம் […]


உன்னில் உருவான ஆசைகள் – 20 (1)

ஆசைகள் – 20 அன்று சோமநாதனை பரிசோதனைக்கு வர சொல்லியிருந்தார்கள் மருத்துவமனைக்கு. நிவேதாவிற்கு முக்கிய பரிட்சை என்பதால் அவள் செல்ல முடியாது தாமரையே உடன் சென்றிருந்தாள். ஒருவாரம் போல விடுமுறை எடுத்திருந்தவள் அதற்கு மேல் வீட்டில் எதற்கு இருக்கவேண்டும் என அலுவலகம் கிளம்பிவிட்டாள். அந்த ஒருவாரமும் நண்பர்கள், சொந்தங்கள் என சிலரின் வீட்டில் விருந்து. மறுவீடு என்று வேகமாய் சென்றுவிட்டது. இதற்கிடையில் தான் காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வந்துவிட அங்கே சென்ற பொழுது தாமரையுமே […]


உன்னில் உருவான ஆசைகள் – 19

ஆசைகள் – 19 கதிர் கிளம்பவும் தாமரை தனியே இருந்தாள் கதிர் சென்ற ஐந்து நிமிடத்தில் பக்கத்து வீதியில் இருந்த யமுனாவும், அங்கயும் வந்துவிட்டார்கள் வீட்டிற்கு. “என்னம்மா போன் வந்துச்சாமே? என்ன சொல்லிட்டு போறான்?…” என யமுனா கேட்க, “எனக்கு தெரியலை அத்தை. கொள்ளையடிச்சவனை பிடிச்சாச்சுன்னு போன் வந்தது. அதான் உடனே கிளம்பினாங்க…” “அம்மாடி, இது போதும். அப்படியே அவன் கையை கால உடைச்சு அடுப்புல போட. என்ன ஆட்டம் காமிச்சுட்டானுங்க…” என யமுனா வேண்டுதலும் சாடலுமாக […]


உன்னில் உருவான ஆசைகள் – 18

ஆசைகள் – 18 காலை அலாரம் வைத்து எழுந்திருந்தாள் தாமரை. எப்போதும் வீட்டில் சரளா தான் வந்து எழுப்புவார். அதனால் தானால எழும் பழக்கமில்லாத தாமரை அங்கை சொல்லியதை ஞாபகம் வைத்து மொபைலில் அலாரம் வைத்துவிட்டாள். அதன்படி எழுந்து குளித்து கீழே சென்றுவிட சுத்தமாக கதிர் இதை எல்லாம் கவனிக்கவில்லை. எப்பொழுதும் சிறு சத்தத்தில் விழிப்பவனுக்கு எதுவும் தெரியவில்லை. வெகுநேரம் கழித்தே அவனும் கண்விழித்தான் அந்த அறை தாமரை இன்றி இருக்க தானும் குளித்துவிட்டு கீழே கிளம்பி […]


உன்னில் உருவான ஆசைகள் – 17

ஆசைகள் – 17           நடந்து முடிந்துவிட்டது அவர்கள் திருமணம். கதிர் காணாமல் அவனை கண்டவள் முகத்தில் ஆச்சர்யபாவமும், ஆசை மேகமும் கொஞ்சியது. ‘ஒரு மாதம் தான் ஆகிறதா இவன் என் வாழ்வில் வந்து?’ என நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை அவளால். இருவரும் பார்த்த நாளில் இருந்து அத்தனை இலகுவாய் பேசிய நாட்களும், நேரங்களும் மிக மிக குறைவு. திருமணத்தில் பெரிதாய் ஈடுபாடோ, விருப்பமோ இல்லாதிருந்தவளின் தற்போதைய மனநிலை செங்கதிரவனின் வெம்மையான ஒளிகற்றையிலும், அவனின் குடும்பத்தின் அரவணைப்பிலும் […]