Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uruginaeno Uraigiraeno

உருகினேனோ உறைகிறேனோ – 25 (3)

“சரி எல்லாரும் போய் தூங்குங்க. காலையில பேசிக்கலாம்…” என ஜெகன் சொல்லவும் மீண்டும் அந்த அறைக்குள் வந்து கதவை சாற்றினான். விடியற்காலை போல திரும்பி படுக்க பார்த்தவளுக்கு ஆச்சர்யம். அவனின் கைவளைவில் அவள் இருக்க விஜய் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை இறுக்கமாய் கட்டிக்கொள்ள பார்த்து முடியாமல் அவள் திணற விழித்துவிட்டான் விஜய். “பேபியை வச்சுட்டு இப்பத்தான் உனக்கு இப்படியெல்லாம் தோணுமா கேர்ள்?…” என கேட்டபடி அவளை அணைத்துக்கொண்டே நெற்றியில் முட்ட, “எப்போ வந்தீங்க? சொல்லவே இல்லை?…” […]


உருகினேனோ உறைகிறேனோ – 25 (2)

“தாலி கட்டு நேரத்துல இவ இங்க கூட இல்லாம அங்க போய் உட்கார்ந்துட்டாளே? அந்த மனுஷன் வேற கையை பிடிச்சுக்கிட்டு விடுவேனான்னு இருக்காரு…” என்று புலம்பிய வசந்தி, “ரஞ்சி போய் கூப்பிடு அப்புவை. எல்லாரும் பார்க்கறாங்க…” என்றார் வசந்தி. “வசும்மா, இப்ப என்ன பார்த்தா பார்க்கட்டும். முதல்ல இன்னைக்கு சுத்தி போடனும் ரெண்டுபேத்துக்கும். ம்மா நீங்க ஞாபகப்படுத்துங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் ரஞ்சனி. “என்னக்கா?…” என பார்வதியிடம் திரும்ப, “நீ இங்க கவனத்தை வை. அவ வரும் […]


உருகினேனோ உறைகிறேனோ – 25 (1)

உருக்கம் – 25 பவித்ரா மௌனமாக தனது வேலைகளை பார்த்தபடி இருக்க விஜய் காலையில் இருந்து திட்டி திட்டி ஓய்ந்து போய் இருந்தான் அவளை. “எவ்வளவு திட்டறேன். அசையாம இருக்க? கொஞ்சமாச்சும் கோவம் வருதா பாரு?…” என்று அவளிடம் கேட்க அதற்கும் பதிலில்லை. அவன் எடுத்துவைத்த உடைகளை எல்லாம் மீண்டும் எடுத்து வாட்ரோபில் அடுக்கிக்கொண்டு இருந்தாள் அவள். அதில் தான் இன்னும் அவனுக்கு கோபம். சொல்ல சொல்ல கேட்கமாட்டேன் என்று அழுத்தமாய் இருக்கிறாளே என்னும் கோபம். “உன்னை […]


உருகினேனோ உறைகிறேனோ – 24 (2)

“கோவமா இருப்பீங்கன்னு நினைச்சேன். இல்லையா?…” என்றாள் அவளாகவே. “எதுக்கு கோவம்?…” என்றவனுக்கு பதில் சொல்லும் முன் ஆகாஷ் வந்துவிட்டான். “வாடா, மெசேஜ் பண்ணதும் என்னவோன்னு பயந்துட்டேன்…” என்றவன் விஜய் பவித்ரா பக்கம் கண்ணை காண்பிக்கவும் புரிந்ததை போல தலையசைத்தான். “இறங்கு பழனி…” என விஜய் சொல்ல, “நீங்க பேசிட்டு வாங்க. நான் கார்லயே இருக்கேன்…” என்றவள் சாய்ந்து கண்ணை மூடி வாகாய் சாய்ந்துகொள்ள அவள் பக்கமாக வந்து கதவை திறந்தான் விஜய். “படுத்துறடி. வா, உனக்கு தான் […]


உருகினேனோ உறைகிறேனோ – 24 (1)

உருக்கம் – 24 நான்குமாதங்கள் சென்றது கூட தெரியாது. திருமணம் முடிந்து முதலில் கல்லூரிக்கு செல்லவே அத்தனை தயக்கம் பவித்ராவிற்கு. வழக்கம் போல விஜய் அவளை தேற்றி தேற்றி ஒருவழியாய் கூட்டிக்கொண்டு கிளம்பினான். கல்லூரியில் கிண்டலாக விளையாட்டாக கூட யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் உடனே இவனிடம் சுணங்கிவிடுவாள் வரவில்லை என்று. ஆனால் யாரும் எதுவும் சொல்லிவிடகூடாது என்பதிலும் அத்தனை கவனம் இருக்கும். அதிலும் விஜய் வகுப்பெடுக்க வந்துவிட்டால் அங்கிருக்கும் அனைவருக்குமே பவித்ரா மேல் ஒரு பார்வை இருக்கத்தான் […]


உருகினேனோ உறைகிறேனோ – 23 (3)

வீடு முழுக்க சொந்தம். அருகில் இருக்கும் காலி நிலத்தை செப்பனிட்டு பந்தல் போட்டு கறிவிருந்து தான். மதிய உணவு முடிந்து ஏனையோர் கிளம்பியிருக்க பவித்ராவை காலையில் இருந்து காணாமல் தேடிக்கொண்டிருந்தான். காலை குளித்து கிளம்பி வந்ததோடு சரி அவனை ஜெகன் தன்னுடன் வைத்திருக்க பவித்ராவை பெண்கள் பிடித்துக்கொண்டார்கள். இடையே சில பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்யும் போது சேர்ந்து நின்றதோடு சரி. “யாரைடா தேடற?…” என கேட்டான் ஜெகன் விஜய் சுற்றி சுற்றி வருவதை கண்டு. “உங்க […]


உருகினேனோ உறைகிறேனோ – 23 (2)

“என்ன சிரிக்கிறீங்க?…” என்றாள் அவள். “ஏன் சிரிக்க கூடாதா பழனி?…” என்றான் பதிலுக்கு. “என்னவோ இருக்கு. ஆனா வாயை திறப்பீங்களா நீங்க?…” என்றவளை கண்டு சிரித்தவன், “ஓகே ஜெகாண்ணா வீட்டுக்கு போகனும். இன்னைக்கு நாம கிளம்பறோம். நாளைக்கு அங்க போய்ட்டு அங்க இருந்து சென்னை…” என்றான் அவளிடத்தில். “விடாம ட்ரைவ் பன்றீங்க? முடியுமா? ரெஸ்ட் வேண்டாமா?…” என கவலையுடன் அவள் கேட்க, “சென்னை போய் சேர்த்து ரெஸ்ட் எடுத்துட்டா போச்சு…” என்றான் அவனின் இடதுகையை நீட்டி அவளின் […]


உருகினேனோ உறைகிறேனோ – 23 (1)

உருக்கம் – 23 உறக்கம் வராமல் கணினியின் முன்பு அமர்ந்திருந்த விஜய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பவித்ராவை திரும்பி பார்த்தான். மழையின் போது வேறு வழியின்றி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்தபொழுதும் சரி, அவள் தான் இனி என்று அழைத்து வந்தபொழுதும் சரி அவள் அப்படி உறங்கி கண்டதில்லை. எப்போதும் அவள் இருந்த அவனறை ஒருக்களித்து தான் திறந்திருக்கும். புரண்டுபடுப்பவளின் கொலுசின் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் ஹாலில் படுத்திருப்பவனுக்கு. அதை கொண்டு ஓரளவு கண்டுகொண்டிருந்தான் […]


உருகினேனோ உறைகிறேனோ – 22 (3)

“இதுதான் அம்மாவும் அப்பாவும் இருந்த ரூம்…” என அந்த அறையை திறந்து காண்பிக்க இப்போதும் அது அத்தனை சுத்தமாய் பராமரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு நறுமணம் கமழ்ந்து நாசியை நிறைக்க அறையில் ஏதோ ஸ்லோகம் மெல்லிய சத்தத்தில் கேட்டது. “அம்மாவுக்கு இந்த ஸ்லோகம் ரொம்ப இஷ்டம். அதனால ட்வென்டி ஃபோர் ஹவ்ர்ஸ் இது ஓடிட்டே தான் இருக்கும்…” என்றான். “இது யார் மெய்ண்டெய்ன் பன்றாங்க?…” “ஆகாஷ் பேமிலி தான். அவங்கக்கிட்ட கீ இருக்கும். இது ஆட்டோமேட்டிக் ரெக்காடர். சோ […]


உருகினேனோ உறைகிறேனோ – 22 (2)

“ஹேய் கேர்ள், என்ன ட்ரீமா?…” என்றான் அவளின் கன்னத்தை தட்டி. “ஹ்ம்ம், எப்படி சொல்லன்னு தெரியலை. அதை எக்ஸ்ப்ரெஸ் பண்ண தெரியலை. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்குது…” அவளின் கண்கள் கூட லேசாய் கலங்கிவிட்டது. பவித்ராவின் பேச்சில் பதிலின்றி அவளின் முகத்தை சிறுபுன்னகையுடன் பார்த்திருந்தான் விஜய். அவளின் சின்ன சின்ன விஷயங்களும் தன் இதயத்தில் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என ஆழ்மனதினால் உணர்ந்துகொண்டிருந்தான். சிறிது நேர மௌனம் இருவரையும் ஆட்கொள்ள பிரனேஷ் வந்துவிட்டான் அவர்களை சாப்பிட அழைக்க. […]