Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaa Vaa En Thoora Nila

வா வா என் தூர நிலா – 33 Final

தூர நிலா 33 சில வருடங்களுக்குப் பிறகு… குண்டூர் சிரிபுரம். கல்கி இப்போது பல அவதாரங்கள் எடுத்து இருந்தாள். எல்லா பொறுப்புகளும் அவளுடையதே. சிரஞ்சீவி ஒரு முறை பேச்சுவாக்கில் “அப்பாவுக்கு ரீடையர் ஆன பின்னாடி சிரிபுரம்ல செட்டில் ஆகனும்தான் ஆசை கல்கி” என்று சொல்லியிருக்க குழந்தை பிறந்த பின் கும்பகோணத்தில் ஐந்து மாதம் இருந்தவள் குண்டூரிலேயே இருந்து கொள்ளலாம் என்றுவிட்டாள். சென்னையில் இருந்த ப்ளாட்டை வாடகைக்கு விட்டுவிட்டனர். தனக்காக எல்லாம் பார்த்து செய்யும் மாமா, அத்தைக்கு சொந்த […]


வா வா என் தூர நிலா – 32

தூர நிலா 32 “அம்மடூ! நான் காலேஜ்  வெளியே நிக்குறேன், பஸ்ல போக வேண்டாம்” என்று வரப்ரசாத்தின் மெசெஜைப் பார்க்கவும் பதட்டமாய்   நகரின் அந்த பெரிய கல்லூரியில் இருந்து வெளியே வந்து நின்றாள் கல்கி. கல்கி இப்போது எம்பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் சீட் கிடைத்துவிட, சிரஞ்சீவி இப்போது விசாகப்பட்டிணத்தில் வேலையில் இருந்தான். இவளுடன் தான் சூர்யாவும் யமுனாவும். ஆசை  ஒரு புறம் இருந்தாலும் அச்சம் அதனை மறைக்க வேகவேகமாய் கல்கி […]


வா வா என் தூர நிலா – 31

தூர நிலா 31 “என்ன கல்கி சென்னையில மழையா? குண்டூர்ல துணி எடுக்கனுமா?” என்று கல்கி போன் செய்யவுமே நக்கல் செய்தான் சிரஞ்சீவி. கல்கியோ “அப்போ பேச காரணமில்ல அப்படி கேட்டேன். இப்போ நான் என்ன பேசினாலும் நீங்க கேட்டுத்தான் ஆகனும். ஸோ ரொம்ப ஓட்டாதீங்க  மாமா” என்று கல்கி சொல்லவும் “பேசு பேசு யார் வேண்டாம்னா, நீ செப்புரா” என்றான் உல்லாசமாக. சில  நிமிட பேச்சுக்குப் பின் “எப்போ ப்ரசாத் வரீங்க?” என்ற கல்கியின் கேள்விக்கு […]


வா வா என் தூர நிலா – 30

தூர நிலா 30 இரண்டு மாதமாய் உதயமூர்த்திக்குக் கல்கியின் கல்யாணம் குறித்த சிந்தனைதான். ஜெகதீஷ் கேட்டபோது ஒத்துக்கொண்ட மனம் சிரஞ்சீவி வந்து சொன்னபோது மறுத்த காரணத்தை யோசித்தார். தன்னை மீறிய தங்கையின் மகன் என்பதாலா? இல்லை தன் பெண்ணிடம் தான் பார்த்த போதெல்லாம் கோபம் மட்டுமே காட்டியவன் என்பதாலா? என்று பலவாறு சிந்தித்தார். இதில் தினமும் தையல் நாயகி வேறு ஒரு முறையாவது ‘எம்மூட்டு பேரனுக்கு என்ன குறை?’ என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார். உண்மையில் சிரஞ்சீவியிடம் அவருக்குப் […]


வா வா என் தூர நிலா – 29

தூர நிலா 29 வீட்டிற்குச் சென்று அவன் அறையில் அடைந்துகொண்டான் ஜெகதீஷ். மனம் மிகவும் காயப்பட்டு இருந்தது. அவனால் யுகிக்க கூட முடியவில்லை கல்கிக்கு சிரஞ்சீவியைப் பிடிக்குமென. என்னை விட அப்படி என்ன அவன் உயர்ந்துவிட்டான் என்ற எண்ணம்.  அஞ்சனாவுக்குத் தான் மனம் கேட்கவில்லை. எப்படியும் ஜெகதீஷ் கல்கியின் காதல் தெரிந்து வருத்தப்படுவான் என தெரியும். சின்ன வயதில் இருந்தே ஒன்றாய் வளர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் அவர்கள்தான் ஆறுதல் எல்லாம். அதனால் ஜெகதீஷுக்கு அழைக்க “நீ கூட உன் […]


வா வா என் தூர நிலா – 28

தூர நிலா 28 வாழ்க்கையை அவன் நினைத்தது போலவேதான் இத்தனை வருடமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் வரப்ரசாத். கல்கி படித்த பின் திருமணம் பேசும்போது அப்பா, அம்மாவை வைத்து பேச சொல்லலாம், மறுத்தால் அம்மம்மாவைப் பேச வைப்போம் பெரிதாக எந்த பிரச்சனையும் வராமல் கல்கியையும் கஷ்டப்படுத்தாமல் அவளைக் கரம் பிடிக்க வேண்டும் என்று ஒரு அழகான திட்டமிடல் அவனிடம். இப்போதோ எல்லாம் சிக்கி சிக்கலாகியிருந்தது. உதயமூர்த்தியின் உடல் நலக்குறைவு இன்றைய அவரின் பேச்சு எல்லாம் எப்படி கடக்க போகிறோம் […]


வா வா என் தூர நிலா – 27(2)

ஜெகதீஷ் சென்றுவிட  சிறிது நேரம் சென்று சிரஞ்சீவிக்கு அழைத்தவள் எல்லாம் சொல்ல, “நீ  என்னை லவ் பண்றேன்னு அவன் கிட்ட சொன்னியா கல்கி?” என்று கேட்டான். “இல்லை, எனக்கு அப்போ அவன் சொன்னதே ஷாக்கா இருந்துச்சு, நான் அவனை அப்படி நினைச்சதே இல்லை தெரியுமா ப்ரசாத்?” என்று கல்கி அழுகையுடன் சொல்ல “ஹே! நீ ஏன் இதுக்கு அழற? இட்ஸ் நேச்சுரல். விடு அவனுக்குப் பிடிச்சது சொல்லிட்டான். உனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டதானே. இதுக்கு ஃபீல் பண்ணாத” என்று […]


வா வா என் தூர நிலா – 27

தூர நிலா 27 “இந்த செமெஸ்டர்ல ஃப்ர்ஸ்ட் வந்தா என்னைப் பார்க்க வரேன்னு சொன்னீங்க, மறந்து போச்சா?” கல்கி கோபமாகக் கேட்க “ஒரு முக்கியமான கேஸ் ஹாண்டில் பண்றேன் கல்கி, அதான் வர முடியல” கல்கி அமைதியாய் இருந்தாள். அவனைக் கண்டு இதோடு ஐந்து மாதங்கள் ஆகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றாத அவன் மீது கடுங்கோபம் பெருகியது. அது அவளுக்குப் பிடிக்காத பழக்கமும் கூட.! “கல்கி, பேசு. நான் சீக்கிரமே இந்த கேஸ் முடிஞ்சதும் வரேன்” சிரஞ்சீவி […]


வா வா என் தூர நிலா – 25

தூர நிலா  25 கல்கியிடம் இரண்டு நாட்கள் பேசவே நேரமில்லை வரப்ரசாத்திற்கு, கேஸ் விஷயமாய் சுற்றிக்கொண்டிருந்தான். பேச மட்டுமில்லை பார்க்கவுமில்லை என்பதே மூன்றாம் நாள்தான் உரைத்தது. கல்கி காலையில் இப்போதெல்லாம் வாக்கிங் வருவதில்லை. சில நாட்கள் உடல் நலமில்லையென்றாலோ ப்ரீயட்ஸ் என்றாலோ வரமாட்டாள் என்பதால் சிரஞ்சீவி அதனைப் பெரிதாய் எடுக்கவில்லை. அந்த வாரம் கேஸ் ஹியரிங் ஒன்று இருக்க சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. கல்கியைத் தனக்குத் தெரியும் என்ற எண்ணம் வேறு அவனிடம். கல்கியும் […]


வா வா என் தூர நிலா – 24

தூர நிலா 24   விஜயவாடா விஜயத்தின் நகரம்! விஜயனின் நகரம் என்றும் சொல்லலாம். பாண்டவனான அர்ஜுனன் இந்திரகீல மலையில் இருந்து தவம் செய்து சிவப்பெருமானிடம் பசுபாஸ்திரம் பெற்ற இடமாக விஜயவாடா கருதப்படுகிறது.   அந்த மெல்லொளிப் பொழுதில் அடிவானத்தில் ஆதவன் அரும்பத் தொடங்கிய நேரத்தில் நதியின் ஈரக்காற்று மோத காரில் பயணம் செய்தாள் கல்கி. அதிகாலை தரிசனம் என்பதால் வீட்டில் இருந்து ஐந்து மணிக்கெல்லாம் குடும்பமாய்க் கிளம்பிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து பத்து நிமிடம் பயணம்தான். […]