Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vennilavum Niram Marume Un Theendalil

Vennilavum Niram Marumae Un Theendalil – 31 epilogue

அத்தியாயம் – 31 வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில்…., மதியின் தந்தை, சதீஷ் மற்றும் அமெரிக்காவில் இருந்த மகியின் உறவினர்கள் அனைவருமே மதுரை ஹைவேயில் இருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தடைந்தனர் என்ற தகவல் கிடைக்கவே, அவர்கள் அனைவரையும் பார்ப்பதற்க்காகவே அந்த நேரத்தில் கிளம்பிச்சென்றான் மகி. அடுத்தநாள் ஈவினிங் அந்த ஹோட்டலிலேயே மதியின் பிறந்தநாள் விழாவையும், அதனையொட்டி அவர்களின் நிச்சயதார்த்தவிழாவையும் நடந்த ஏற்பாடு செய்துவிட்டு மதியம் அவளை அழைத்துச்செல்வதற்காக வீட்டிற்கு வந்தான் மகி. அவளின் அறைக்குச்சென்றான் அங்கு […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 30

அத்தியாயம் – 30 உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா… ஹோட்டல் அறையை அடைந்தப்பின் சற்று நேரம் அமைதியாக இருந்த மகி, பின் வசந்தன் கூறியவைகளை குறித்து மித்ராவிடம் கூறினான். “என்ன மாமா சொல்லுறீங்க…? இப்படிலாம் கூட செய்வாங்களா…? யார் அவன்” என்று கண்களை அகல விரித்து ஒன்றும் தெரியாததுபோல கேட்டாள். “அவன் இல்ல அவள்” என்று மகி சொல்ல, மித்ராவின் முகத்தோரணை மாறியதைக் கவனித்தவன் மேற்கொண்டு தொடர்ந்தான்.. “ஏன் மித்ரா அப்படி பண்ண” என்று வெளிப்படையாகவே அவன் கேட்டுவிட, […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 29

அத்தியாயம் – 29 உள்ளம் கொள்ளைப் போகுதடா….! அன்று இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. உறங்கவில்லையேயென்று அவள் மனமும், கண்களும் சோர்ந்து போகவில்லை மாறாக, அவனைப்பற்றிய நினைவுகளை இன்பமாய் அசைப்போட்டுக்கொண்டிருந்தன. அன்று அவன் சொன்ன கவிதை வரிகளை நினைவுக்கூர்ந்தாள்…. “என்ன சொன்னான்… உன்னை நீயே இரசித்ததுண்டோ…? இரவும், பகலும் போதாதென்று கனவில் கூட அவளை இரசிப்பாய் உன் நிழலிடம் கூட யோசனை கேட்பாய் என்றானே…. இன்று நானும் அப்படித்தானே இருக்கின்றேன்.. இதற்கு பெயர்தான் காதலா….?” என்று […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 28

அத்தியாயம் – 28 என் நினைவெல்லாம் நிறைந்தாயடா…!!! அன்று இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் வாக்கிங் செல்ல, “சார்… கிளைமெட் சூப்பரா இருக்கு இல்ல…” என்று இரசித்தபடி அவள் சொல்ல, “ம் எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே… எப்பவுமே இப்படித்தான் இருக்கும். ஒருவேளை…. நீ…. சந்தோஷமான மனநிலையில இருக்கப்போல” என்றானவன். “ஆமாம் சார்… ரொம்ப… ரொம்ப” என்று கைகளை உயர்த்தி காட்டியவள், “இதுக்கு காரணம் நீங்க தான் சார். இன்னைக்கு மட்டும் நீங்க என் பக்கத்துல இல்லன்னா… […]


Vennilavum Niram Marumae Un Theendalil -27

அத்தியாயம் – 27 சிங்கப்பெண்ணே….. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்று கூறிய வள்ளுவர்தான் “தீ நட்பு” என்ற அதிகாரத்தையும் வகுத்துள்ளார். நம் அனுமதியில்லாமல் நம்மை காயப்படுத்தி செல்பவர்களுக்கு மன்னிப்பு ஒன்றே தண்டனையாகி விடுமா…? மன்னிப்பு என்ற வார்த்தை இருப்பதால் தானே தெரிந்தே இன்றும் பலர் பல தவறுகளை செய்கின்றனர். எல்லா தவறுக்கும் தண்டிக்காமல், மன்னிப்பை மட்டுமே வாரி வழங்கிவிட்டால்.. பின் மன்னிப்பு என்ற வார்த்தையே பொருளற்று போய்விடுமே… கொடுக்கவேண்டிய நேரத்தில கொடுக்கத்தவறிய […]


Vennilavum Niram Marumae un Theendalil – 26

அத்தியாயம் – 26 வானம் விட்டு வாராயோ என் பெண்நிலவே..!!! அன்றைய நாளுக்குப்பிறகு அவனால் மதியிடம் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. அனைவரிடமும் சகஜமாக பழகினாள், பேசினாள், வேண்டுமென்றே வம்பிழுத்தாள். பைரவ்விடமும் நெருக்கமானாள். முன்னைப்போலவே துருத்துருவென மாறியிருந்தாள் அவள். அவன் கொடுத்த ஷெடுலை விரும்பி பின்பற்றினாள். ஒன்றாக ஜாகிங்க், வாக்கிங் என்று செல்லும்போதெல்லாம் தன்னைப்பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ இருவரும் கலந்துரையாடிக்கொண்டனர்.அவ்வப்போது போட்டி போட்டுக்கொண்டு பைக் ரைடும் சென்றனர். நடுநடுவே ஒருவர் காலை மற்றொருவர் வாரிக்கொள்வதும் வழக்கமாயிருந்தது. மகி […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 25

அத்தியாயம் -25 என் நெஞ்சில் நிறைந்தவளே….!!! ஜாகிங்க் போகக்கூடாது என்ற முடிவோடு எழுந்தவள், போர்வையை சுற்றிகொண்டு, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனிடம் சொல்ல, மகி, அண்ணாமாவை அழைத்து ஏதோ சொல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கிளாஸில் எதையோ கொண்டுவந்து மதியிடம் கொடுக்க, அதை வாங்கியவள், என்ன என்பது போல புரியாமல் விழிக்க, “உடம்பு சரியில்லைன்னு சொன்னல்ல, அதான் கசாயம் குடிச்சிட்டுப்போய் நீ ரெஸ்ட் எடு” என்று அவன் சொல்ல, “ஐய்யா…! […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 24

அத்தியாயம் – 24 அழகான இராட்சசன் காலை ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை நிறுத்திவிட்டு, தூக்க கலக்கத்திலேயே வெளியே வந்தவள், அங்கு அவளுக்கு முன்னால் ஜாகிங்க் உடையில் தயாராக நின்றுக்கொண்டிருந்த மகியைப்பார்த்து, “குட் மார்னிங் சார்.” என்றாள். பதிலுக்கு அவனும் குட் மார்னிங்க் சொல்லிவிட்டு,” போகலாமா..? “ என்று கேட்க, “சார் எனக்கு இதுலா பழக்கமே இல்ல, ஜாகிங்க் என்ற பேர்ல நானும் அப்பாவும் பார்க்-ல போய் தூங்கிதாம் பழக்கம். நான் ஃபிட்-ஆ தான் சார் இருக்கேன். […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 23

அத்தியாயம் – 23 உயிரின் உயிரே……!!! தான் இதுநாள் வரை திரட்டிவைத்திருந்த பழைய கால கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு தான் அன்று அவள் ப்ராஜக்ட் பிளானை ரெடி செய்திருந்தாள். அது மகிக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அது குறித்த அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபட்டனர் அனைவரும். இப்படியே சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் மகி தன்னை அழைத்ததாக டீம் மெம்பர்கள் மூலம் அறிந்தவள், அவனைப்பார்ப்பதற்காக, அவனுடைய கேபின்-க்கு சென்றாள். அங்கே அபியுடன் தீவிரமாக எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன், இவளைப்பார்த்து உள்ளே அழைத்து, அமரச்சொல்லிவிட்டு, […]


Vennilavum Niram Marumae Un Theendalil – 22

அத்தியாயம் – 22 நீ என் சொந்தமடி சரவெடி சத்தம் கேட்டு அனைவரும் திரும்ப, பட்டாசின் புகையில் நீந்தியபடி ரோல்ஸ் ராய்ஸ் கார்வந்து நிற்க, காரிலிருந்து மகி வளர்க்கும் பைரவ் என்னும் வேட்டைநாயைப்பிடித்தப்படி ஜோஜோ இறங்க, காருக்குப்பின்னால் ஜல் ஜல் என்ற சத்தத்தோடு, அழகிய வேலைப்பாடுடன் பர்மாதேக்கில் செதுக்கப்பட்ட மாட்டு வண்டியில், பூட்டப்பட்ட காங்கேயம் காளைகள் துள்ளிவந்து, அங்கு விரிக்கப்பட்டிருந்த ரெட்கார்ப்ட்டில் நிற்க, பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் குங்கும கீறல் இட்டு, கருப்பு கூலர் அணிந்து, […]