Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara... Episode 5 - Precap

Advertisement

AshrafHameedaT

Administrator
The precap for the 5th episode is here....


Subscribe the channel for immediate updates!!

Part 1
திகைத்து தான் நின்றான். அவன் பெரிய ஆள் தான். ஆனால் அவனின் ஊருக்குள் மட்டுமே. அவனின் கிராம எல்லைக்குள் வரும் போலிஸ் ஸ்டேஷனை தெரியும். அங்கிருக்கும் ஆட்களையும் தெரியும். அப்போதும் அங்கே கூட பிரச்சனை என்றால் பெரியப்பா தான் செல்வார். இவனுக்கு பரிட்சயமில்லை.
“ஒன்னும் பயமில்லை, இவங்களும் நம்மை மாதிரி மனுஷங்க தான். ஆனா பல சமயம் தப்பான ஆளுங்க கிட்ட சலாம் போட்டு, சரியான ஆளுங்க கிட்ட கெத்து காட்டுவாங்க” என்று அவர்களின் முன்னமே சொல்ல,
அது அந்த காவலர்களை சரியாய் பதம் பார்த்தது.

Part 2
“மரியாதையில்லாம பேசின நான் வாடா போடான்னு பேசுவேன்” என்று அங்கை எகிற, அப்போது தான் அவர்களின் புறம் பார்வையை திருப்பிய ராஜராஜன் , யார் என்று பார்த்தான், முகமும் கோபத்தை தத்தெடுத்தது.
அங்கிருந்தது ஆத்மனின் மகன், கூட இன்னும் ஒருவன்!

Part 3
“ஏதாவது இவங்க வம்பு பண்ணி இருப்பாங்க” என்று ராஜராஜன் சொல்ல,
“இல்லை, நாங்க ஒன்னும் பண்ணலை” என்று ஆத்மனின் மகன் திலகன் சொல்ல,
“ரோட்ல இத்தனை கார் போகுது, எல்லோர் காரையுமா நிறுத்தி உடைச்சாங்க” என்று ராஜராஜன் திரும்ப பேச,
“நாங்க இவளுக்கு..” என்று ஆரம்பித்த திலகன்,
“என்னடா சொன்ன?” என்ற ராஜராஜனின் கர்ஜனையில்
“இவங்களுக்கு உதவி பண்ண நிறுத்தினோம்” என்று மாற்றினான்.

Part 4
“இந்த வண்டியை பூட்டிட்டு என்னோட வா” என்று சொல்லவும்,
“அதெல்லாம் வர முடியாது, நான் என் வண்டில வர்றேன், நீங்க உங்க வண்டில வாங்க”
“ஒன்னு நீ என் வண்டில வா, இல்லை நான் உன் வண்டில வர்றேன்”

Part 5
“என்ன பிரச்சனை?” என்று சொல்ல..
அப்படியே அவள் வண்டியை நிறுத்தி அவனை பார்த்து திரும்பி “எல்லாம் உங்களால, உங்க வீடுனால” என்று கோபமாய் பேசினாள்.
பிரச்சனையின் நுனியை பிடித்தான், அவளின் அம்மாவை திலகன் பேசியிருக்கக் கூடும் என்று.

Part 6
இறங்கு என்று அவளிடம் ஸ்திரமாய் சொல்ல,
முறைத்துக் கொண்டே இறங்கினாள், பின் வண்டியை இயக்கியவன், அவனே ஒட்டுமிடம் அமர்ந்து, “நம்ம சண்டை அப்புறம், ரோட்ல எல்லோருக்கும் காட்சி பொருள் ஆக வேண்டாம், உட்காரு” என்று அதட்ட அமர்ந்து கொண்டாள்.

Part 7
அதிலிருந்து ஆத்மன் இறங்க, அதுவரையிலும் கூட அசால்டாய் நின்ற ராஜராஜனிற்கு பயம் வந்தது. ஆம்! பயம் தான் வந்தது. அவனோ இல்லை வீட்டினில் யாரோ வேறு ஆண்மக்கள் இருந்திருந்தால் அவனுக்கு பயமில்லை. ஆனால் அங்கை இருக்கவும் பயம்.

எண்ணமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
நீயும் நானும் தானா..
எல்லாரும் தூங்கிட்டாங்க போல..
காலையில் தான் எப்பி வந்தது..
பாவம் மக்கள் :D
PC வரும்னு தெரியாம தூங்கிட்டாங்க:p
 
Top