Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom 10

Advertisement

mibrulz

Active member
Member
அத்தியாயம் 10

"அடோப்ஸி ரிபோர்டில் அப் பெண்ணின் மரணம் காலை 5.30 க்கு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரம் மி.ஷர்மா வாஸ் வித் மி."
இதை கேட்டவுடன் நிகிலுகு கோபம் ஐகூட யாமினியை எரித்து விடும் பார்வையை வீசினான். இதை நகுல் நன்றாக கவனித்தான்.
"ஐய்யோ சும்மாவே வாயை மென்று கொண்டிருப்பார். இவள் அவர் வாயில் அவல் போடுகிறாளே.." சிவதாஸ் மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.
சிவதாஸின் எண்ணம் சிறிதளவும் தவறவில்லை. பி.பி எழுந்து கேட்டே விட்டார்.
"காலையில் 5.30 மணிக்கு என்னம்மா உங்கள் இரண்டு பேருக்கும் வேலை..?"
" ஒப்ஜக்ஷன் மை லோர்ட். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம்." நகுல் கூறினான்.
"அது எப்படி மி.நகுல்.? மிஸ். யாமினி வந்து மி. தீரஜை காப்பாற்ற ஸாட்சியாக வந்திருக்கிறார். அப்போ அவர் சொல்லி தானே ஆகணும்."
நிகில் தன்னை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான்.
யாமினிக்கு நிகிலை பார்க்க பயமாக இருந்தது.
"நாங்கள் இருவரும் நண்பர்கள். "
"அது எப்படி? "
"நீங்கள் என்னை பேச விட்டால் தான் என்னால் முழு விவரங்களையும் சொல்ல முடியும். " யாமினியின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
"நான் இரண்டு வருடம் முன்பு ஒரு வேலை விஷயமாக மும்பைக்கு போயிருந்தேன். அங்கே தான் அவரை பார்த்தேன். நட்பும் உருவானது. "
"நட்பு மட்டும் தானா..? இல்ல.." என்று பி.பி இழுத்தார்.
நகுலுக்கு தன் கோபத்தை குறைக்க வழி தெரியவில்லை.
"என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கிறது போல் தெரியுதே மி.பி.பி. ஐ திங்க் இட் ஷுட் நோட் போதர் யூ ஓர் எனிவண் ஃபோர் தாட் மாட்டர்."
"மி. பி.பி. என்ன இது..? கேஸை சார்ந்த கேள்வியை மட்டும் கேளுங்கள். " ஜட்ஜ் பி.பியிடம் கறாராக கூறினார். அவரும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
"நல்ல நட்பு என்றதால் இவர் இங்கு வந்த போது என்னை பார்க்க வேண்டும் என்றார்..:
"அதிகாலை நேரமா..?" மீண்டும் பி.பி.
" நான் ஜோகிங்க் போகுமிடத்தில் தான் நாங்கள் சந்தித்தோம்."
இப்போ உனக்கு புரிந்ததா என்ற பார்வையை பார்த்தாள்.
"நௌ ஐ திங்க் ஐ ஹாவ் மேட் மை போயின்ட் க்ளியர்."
" நீங்கள் மீட் பண்ணினதற்கு ஸாட்சியம் வேண்டாமா..?"
"கண்டிப்பாக வேண்டும்.." யாமினி கெத்தாகச் சொன்னாள்.
நித்யா உடன் நகுலின் கையில் ஒரு கோப்பை கொடுத்தாள்.
அவன் அதை நீதிபதியிடம் கொடுத்தான்.
அதில் இரண்டு மூன்று புகைப்படங்கள் இருந்தன.
"புகைப்படங்களை பார்த்தால் இவர் அந்த பெண் கொல்லப்பட்ட அந்த நேரத்தில் உங்கள் கூட இருந்ததாக தான் தெரிகிறது. "
"அது எப்படி உங்களுக்கு தெரிய வந்தது..?" பி.பி. நீதிபதியிடமே கேட்டு விட்டார்.
"இந்த புகைப்படங்களை பார்த்தால் தெரிய வரும் மி. பி.பி." எரிச்சலுடன் கூறினார் நீதிபதி.
" அது டாக்டர்டாக கூட இருக்கலாம் இல்லையா? "
"இதை பார்த்து விட்டு கூறுங்கள்.?
புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தவருக்கு புரிந்தது அந்த புகைப்படங்கள் செயற்கை அல்ல என்று. அதில் யாமினியும் தீரஜும் ஒரு சர்ச் முன்னாடி நின்று படம் எடுத்திருந்தார்கள். அந்த தேவாலயத்தின் கடிகாரம் காலை 5.30 என்று காட்டியது. தோற்றுவிட்டோம் என்று புரிந்தும் இறுதி முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு பிட்டை போட்டார் பி.பி.
"இவர்கள் வேறு எங்கோ புகைப்படத்தை எடுத்து இந்த தேவாலயத்தின் புகைப்படத்தில் இணைத்து கொண்டிருப்பார்கள் இல்லையா?"
"எப்படி நீங்கள் செய்தது போலவா.."
பி.பி கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
"ஆதாரங்களை வைத்து பார்க்கும் பொழுது மி.தீரஜ் இந்த கொலையை பண்ணவில்லை என்று தெரிய வருகிறது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுகிறேன்."
அப்படி ஓரு நிம்மதி யாமினியின் மனதில். மகிழ்ச்சியோடு நிகிலை பார்த்தாள். அவன் முகமோ எண்ணெயில்லாமலே கடுகு வெடிக்கும் போல் இறுகியிருந்தது.
யாமினிக்கு அர்த்தம் புரியாமல் இல்லை. ஆனால் அவளின் மனதில் இருக்கிறதை நிகிலிடம் கூறியே ஆக வேண்டும் என்று நினைத்தாள்.
கேஸ் முடிஞ்சு எல்லோரும் மருத்துவமனைக்கு கிளம்பினர். தீரஜ் கண்களில் கேள்வியுடன் யாமினியை ஏறிட்டான். யாமினி தன் கண்களை மூடித் திறந்தாள். இதை எல்லாம் நிகில் பார்த்து கொண்டே தான் இருந்தான். கோபம் கண்மண் தெரியாமல் ஏறி கொண்டே இருந்தது. தன்னுடைய கோபம் தன் வண்டியின் மீது காட்டினான். வண்டி அசுர வேகத்தில் சென்றது. மருத்துவமனையை அடைந்தது.
பத்மாவதி அப்போது தான் ஷில்பாவை பரிசோதித்து வெளியே வந்தார். யாமினி தீரஜை அவருக்கு அறிமுகப் படுத்தினாள்.
"கங்க்ராஜுலேஷன்ஸ் மி. தீரஜ். நீங்கள் அப்பாவாக போறீங்க."
தீரஜுக்கு ஒன்னும் புரியவில்லை. யாமினியை பார்த்தான். அவள் சந்தோஷத்துடன் தலையாட்டினாள்.
"நான் அவளை பார்க்கலாமா..? "
"ஓ.. யெஸ். நேற்றே அவங்களை அனுப்பியிருப்பேன். ஆனால் யாமினி தான் வேண்டாம் என்றாள். அவங்க இங்க தான் பத்திரமாக இருப்பாங்க என்று சொன்னாள். அதனால் தான்.."
நகுல் தன் அன்னையை ஏறிட்டான்.என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நீ..”என்று மனதில் பொறுமினான்.


"அது தான் அந்த பிள்ளை வந்தாச்சில்ல.. நீஙக கிளம்புங்க. யாமினிக்கும் ரெஸ்ட் தேவை.." என்று பத்மாவதி கூறவும் எல்லோரும் கிளம்பினர் நகுலின் வீட்டிற்கு.
அங்கே சென்று எல்லோரும் ஃப்ர்ஷாகி வந்தனர்.
"நான் குடிக்க டீ எடுத்துகிட்டு வரேன்." என்று நகுல் கூற நித்யாவிற்கோ நகுலின்கூட அவள் இருக்க வேண்டும் என்று மனம் விழைய அவளும் எழுந்தாள்.
"நானும் வரேன் நகுல். "
அவனுக்கும் மற்ற இருவருக்கும் மனம் விட்டு பேச இது தான் சந்தர்ப்பம் என்று உணர்ந்து,
"சரி நிது.. நீயும் வா..ஏதாவது சாப்பிட பண்ணலாம்."
இரண்டு பேரும் சமையலறைக்கு புகவும் நிகில் சடாரென்று எழுந்து யாமினியின் கையை இறுக பற்றினான். அவன் பிடித்த இடம் கன்றி போக அவளுக்கு அப்படி ஓர் வலி அது கொடுக்க கண்களில் நீர் தேங்கியது. ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.
"ஏன் கோர்டுக்கு வந்த யாமி..? உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கலையா.. என்னால அந்த தீரஜை வெளியே கொண்டு வர முடியும் என்று தோணலியா..? நீ ஒவ்வொன்னும் சொல்லும்போது அந்த பி.பி. உன்னை பார்த்த விதம் தாங்கலை. அவ்வளவு இம்போர்டன்ட்டா அந்த தீரஜ்?"
"உனக்கிட்ட நிறைய பேசணும் நிக்ஸ். நான் என்ன ஃபீல் பண்றேன், இபபோ என் மனசுல என்ன நடக்குது எல்லாம் நான் உன் கூட ஷேர் பண்ண ஆசை படறேன். நான் சொல்லட்டுமா..?" அவள் கெஞ்சலில் அவன் என்ன கண்டானோ அவள் கன்னத்தை வருடி ஆம் என்று தலையாட்டினான்.
அந்த வருடல் அவளுக்கு தேவையாக இருக்க அவன் கையை இறுக பற்றினாள். அந்த தொடுகை அவளின் மனதை பறைசாற்ற அவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு நிம்மதி.. இனி அவள் தன்னை விட்டு போக மாட்டாளென்று.
"மும்பையில் ஒரு வேலை விஷயமாக தான் போனேன். அங்கு ஒரு கூட்டம் ஆட்கள் என்னை தொந்தரவு செய்ய முனைந்தார்கள். எனக்கு களரிபயட்டு தெரிந்திருந்தும் ஒரு கட்டத்தில் நான் களைத்து போனேன். அப்போது தான் தீரஜை முதல் தடவை பார்த்தேன். அவர் படத்தில் வரும் ஹீரோவை போல் எல்லாம் வரவில்லை. என்னை காப்பாற்றுவதற்காக பக்கத்தில் இருந்த ஸ்லம் மனிதர்களின் உதவியை நாடினார். அவர்களை பார்த்ததும் இந்த கூட்டம் என்னை விட்டு ஓடினார்கள். அப்படி தான் ஆரம்பித்தது எங்கள் நட்பு. நட்பு கொஞ்சம் நாளில் காதலாக மாற..." சொல்லிக் கொண்டே நிகிலை பார்த்தாள். அவன் முகம் சுணங்கினாலும் கோபம் ஏதும் வரவில்லை. அவன் உள்ளத்தில் ஒரு புரிதல் உண்டாக அவளை மேலே சொல் என்று கண்களால் செய்கை செய்தான். அவள் நிம்மதி பெருமூச்சு விட அதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வர அவள் உச்சியில் முத்தம் பதித்தான்.
"ஆனால் எங்கள் காதல் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அவர் அப்பா எங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர் ஓடிப்போலாமுனு சொன்னார். ஆனால் எனக்கு அதற்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாங்கள் பிரியும்படி ஆனது."
அவள் குரலில் வருத்தம் இருக்கவில்லை. அதுவே அவனுக்கு போதுமானது.
"அப்போ ஷில்பா? "
" நான் விட்டு போனது அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர் என்னை புரிஞ்சுகிட்டு ஒதுங்கிட்டார். இப்ப தான் அவரை நான் பார்த்ததும் ஷில்பாவை பற்றி எனக்கு தெரிய வந்தது. அப்ப தான் எனக்கு அப்படி ஒரு நிம்மதி உண்டாச்சு."
நிகிலிற்கும் இது நிம்மதியை உண்டாக்கியது.
 
ஸ்டோரி சூப்பரா இருக்கு
அப்டேட்ஸ் ஏன் தாமதம் ஆகுது?
I'm working as a teacher plus en kuzhanthaiyoda exams. Ellaam sernthu vanthathu. Naduvula konjam udambum mudiyala.
 
Top