Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 3

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 3


தட்டில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தவளை தோளில் தட்டி கலைத்தார் மாலா “என்ன வஞ்சி தட்டுல சோத்த போட்டுட்டு விட்டத்தப் பார்த்துகிட்டு இருக்க” அப்படி என்ன யோசனை என்றவளை பார்த்து தயங்கியவாறே


“அக்கா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்கள”


“அது நீ கேட்குற செய்திய பொறுத்து இருக்கு” என்றதும் வஞ்சி மௌனம் கொள்ள “ப்ச் சரி என்ன கேட்கனும் கேளு”


“அக்கா அவர் பிள்ளைகளா அந்த மூணு பெண்களும்” என்றவளை ஒருமுறை பார்த்த மாலா உண்டு கொண்டே பேசினார்


“பொதுவா அடுத்தவங்க குடும்ப கதை பத்தி பேசுறது எனக்குப் பிடிக்காது அதுக்கு நேரமும் கொடுக்க மாட்டேன்.நீ அந்த வீட்டுக்கு வேலைக்குப் போற உனக்குச் சில விஷயம் தெரியணும் அதுனால சொல்லுறேன்,


அதுக்கு முன்னாடி ஒன்னு மனசுல வை வஞ்சி நம்ப எதுக்கு அங்க போறோமோ அதை மட்டும் செஞ்சிட்டு வந்துகிட்டே இருக்கனும்.அங்க என்ன நடந்தாலும் நம்ப உண்டு நம்ப வேலை உண்டு இருக்கனும் என்ன... நான் சொல்லவரது புரியுதா”


“புரியுதுக்கா” என்றவளிடம்உடையவன் குடும்பத்தைப் பற்றி சில செய்திகளை தன் நிலை தேவலாம் என்றானது


சொல்லி முடித்தவர் உடையவனுக்கு ஒரு அண்ணன் இருக்கார் மாசம் ஒரு நாள் வருவார் என்றவர் கூடுதல் தகவலாக அவரது வயதையும் சொல்லி விட்டு “சரி நேரம் ஆகுது படு நாளைக்கி முதல் நாள் வேலை நேரத்துக்குப் போகனும்” என்றவர் படுத்துவிட்டார்.


தனது குழந்தையை அனைத்துக் கொண்டு படுத்தவளுக்குக் காலையில் பார்த்த உடையவன் நினைவே....மீண்டும் ஒருமுறை காலையில் பார்த்த அந்த பதுமையின் முகம் கண்ணுக்குள் உலவ மூடிய விழியில் இருந்து பெருகியது நீர்.... காட்சி மீண்டும் ஒருமுறை

****************************

மாலா உடையவனுக்காகக் காத்திருக்கப் பத்து நிமிடங்கள் கடந்து வந்தான் முப்பதை நெருங்கும் ஆண் மகன்.நல்ல உயரம் ஓங்கு தாங்கான உடல் வாகு நல்ல உயரம் இரவு உடையில் இருந்தவன் “வாங்க மாலா அக்கா” என்றழைத்து எதிர் நாற்காலியில் அமர்ந்தவன் மாலா பக்கத்தில் அமர்ந்திருக்கும் வஞ்சியைப் பார்த்து “வாங்க” என்றான்.


தன்னைத் தான் அவன் அழைக்கிறான் என்பது கூடத் திரியாமல் முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.முதலில் கண் பார்த்துக் கண்ணியம் பேசும் ஆண் மகன் அரிது என்பதனாலோ என்னமோ பேச்சே வரவில்லை அவனும் அவளைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.


“சொல்லுங்க அக்கா எப்படி இருக்கீங்க”


“நல்ல இருக்கேன் தம்பி அப்புறம் இது தான் நான் சொன்ன பொண்ணு பெயர் வஞ்சி இப்போ இருக்குற சூழ்நிலையில வெளில வேலைக்கு அனுப்ப முடியாது அதான் நம்ப வீடுன்னா பாதுகாப்பா இருக்கும்”


“சரிங்கக்கா” என்றவன் வஞ்சியிடம் திரும்பி “என்ன வேலைனு அக்கா சொன்னாங்களா”


இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்ட அதற்குள் மாலா “நான் எதுவும் பேசல தம்பி நீங்களே பேசிடுங்க நான் குழந்தைங்களைப் பார்த்துட்டு வரேன்” என்றவர் வஞ்சியிடன் சென்று “நீ பேசு வஞ்சி பாப்பா என்கிட்ட இருக்கட்டும்” என்று குழந்தையைத் தூக்கி கொண்டு சென்று விட்டாள்.


மாலா சென்றதும் “இங்க பாரும்மா நான் நகை வியாபாரி எனக்குப் பல தொழில் உண்டு என்னால வீடு பொறுப்புகளைக் கவனிக்க முடியல முக்கியமா குழந்தைகளை அதுக்குத் தான் உங்களை வேலைக்கு வைக்குது குழந்தைகளைச் சாப்பிட வச்சுப் பத்திரமா பார்த்துக்கணும் மாலை ஏழு மணிக்கு நான் வந்துருவேன்.உங்க குழந்தையையும் நீங்க கூட வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க” என்றதும் தலையை மட்டும் ஆட்டினாள் மறுமொழி எதுவும் கூற வில்லை அவனும் அதனை எதிர் பார்க்கவில்லை போலும்


“சரி நீங்க பாருங்க” என்றவன் எழுந்து செல்ல அவளும் மெல்ல மாலா இருக்கும் அறைக்குள் சென்றாள்.அங்கே பார்த்தவள் கண்ணில் அதிர்ச்சி இருபது கடந்த நிலையில் ஒரு பெண் அம்பாள் சிலை போல் இருந்தாலும் முகத்தில் சீல் பிடித்துப் பருக்கள் அங்கங்கே முளைத்திருந்தது.காதில் வேறு சலம் கோர்த்திருந்தது.


அவளைத் தாண்டி தொட்டிலில் இரண்டு வயது குழந்தை உறங்கி கொண்டு இருந்தது.அதனை தாண்டி செல்ல பயம் கொள்ளும் கண்களைப் பிடிவாதமாக நகர்த்த பதின்வயது பதுமை கை கால் செயல் இழந்து படுத்திருந்தது.அறைக்குள் செல்லவே கால்கள் பின்ன நின்று இருந்தாள் வஞ்சி.


வஞ்சியைப் பார்த்த மாலா “எல்லாம் தம்பி பேசிடுச்சா”


ஹ்ம்ம்…. என்றவளை பார்த்து சரி கிளம்பலாம் என்றவள் அவர்களிடம் சொல்லி கொண்டு வெளியில் வர…… உடையவன் கடைக்குச் செல்ல கிளம்பி வந்தான்.


“அப்புறம் நான் கிளம்புறேன் தம்பி நாளைக்கி காலையில ஏழு மணிக்கெல்லாம் அனுப்பி வைக்குறேன்”


“சரீங்கக்கா அப்புறம் பெரிய பாப்பாக்கு ஹாஸ்பிடல் போகனும்”


“சரிங்க தம்பி சனி கிழமை எனக்கு வேலை இல்லை அப்போ கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்றவர் வஞ்சியுடன் விடைபெற்றார் நடந்தவை எண்ணி பார்த்தவளுக்கு அவர்களது கடந்த காலம் கலக்கத்தைக் கொடுத்தது. மேலும் சில மணி நேரம் சிந்தனையில் இருந்தவள் தன்னை அறியாமல் தூங்கி போனாள்.

**************************

இந்த விடியல் வஞ்சிக்கா...அல்லது உடையவன் குடும்பத்திற்கா என்பது காலத்தின் கையில்…..


காலையில் ஆறு மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையுடன் கிளம்பி விட்டாள் வஞ்சி.பழகும் வரை அவளைத் தனியா செல்ல விடாமல் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் போல் உடையவன் வீட்டில் விட்டுவிட்டு இரவு வந்து அழைத்துக் கொள்கிறேன் என்று சென்றாள் மாலா..

வீட்டினுள் நுழைய சமையல் அறையில் ஒரு மூதாட்டி சரசு என்பவர் சமைத்துக் கொண்டு இருந்தார்.இவளை பார்த்துச் சினேகமாகச் சிரித்தவர் “வாம்மா நீதான் புதுசா வந்த பொண்ணா”


“ஆமாங்க”


“இது உன் குழந்தையா”

“ஆம்” என்பது போல் தலை ஆட்டியவளை வாங்கிக் கொள்ள அதுவும் அழுகாமல் சென்றது குழந்தையை கொஞ்சி கொண்டே “உன் பெயர் என்ன சாமி"


“வஞ்சி”


“வஞ்சி பொண்ணு சின்னப் பாப்பாக்கும், பெரிய பாப்பாக்கும் பால் வச்சு இருக்கேன் கொடுத்துட்டு வா நான் துளசி பாப்பாக்கு ஆற வைக்குறேன்” அவர் சொன்னதும் முழித்து நின்றவளை பார்த்தவர் “என்னம்மா”


“இதுல யார் சின்னப் பாப்பா? துளசி பாப்பா?”


“நீ புதுசுல நான் பழக்கத்துல பேசுறேன்” என்றவர் தலையில் தட்டி கொண்டு சின்னப் பாப்பா இரண்டு வயசு குட்டி அது பெயர் பானு.பெரிய பாப்பா மது பாப்பா காலேஜ் படிக்குது அதுக்குக் கொடுத்துட்டு வந்து படுத்தே இருக்குல்ல அது துளசி பாப்பா அதுக்கு கொடு பார்த்து கொடுக்கனும் இல்லாட்டி பொறை ஏறிடும்”


சரியென்றவள் முதலில் பெரியவள் இருக்கும் அறைக்குச் செல்ல அங்கே வலியில் முனகி கொண்டு இருந்தாள் அவளிடம் நெருங்கிய வஞ்சி “ஏங்க பால்”


வாஞ்சியின் குரலில் கண் விழித்தவள் “அக்கா எனக்கு எதுவும் வேணாம்” என்க


“ஏங்க”


“காதும் கன்னமும் வலிக்குது காய்ச்சல் வேற அடிக்குது”


ஐயோ! என்றவள் அருகில் சென்று பார்க்க நெருப்பாகக் கொதித்தது சீல் பிடித்து ரணமாக இருந்தமையால் இப்போது காய்ச்சல்… உடனே வெளியில் சென்றவள் அந்த மூதாட்டியிடம் நெருங்கி அம்மா மஞ்சள், கல் உப்பு கொஞ்சம் சுடு தண்ணியும் தாங்க ....அப்புறம் வெப்பம் குச்சி வேனும் இலையோட


அவளது பதட்டத்தில் அவரும் பயம் கொண்டு “ஏன் சாமி”


“அந்தப் பொண்ணுக்கு புண்ணா இருக்கு சீல் பிடித்து காய்ச்சல் வேற அடிக்குது”


“அய்யயோ!.... நான் அப்பவே டாக்டர் கிட்ட போக சொன்னேன் கேக்கல” என்றவர் வேகமாகச் சுடு தண்ணீர் வைக்க அந்த வேளையில் தனது குழந்தையை வாங்கிக் கூடத்தில் விளையாட விட்டவள் இருவயது வயது குழந்தையைத் தூளியில் இருந்து தூக்கி அதற்குப் பசியாற்றிப் பின்பு துளசியிடம் செல்ல


துளசியோ முதலில் புதியவள் முகம் பார்த்துப் பயந்தாள் அவளை நெருங்க விடாமல் கையைக் காலை ஆட்டி அடம் பிடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்தவள் பின்பு அவளது முகத்திற்கு நேராகக் குனிந்து


“பாப்பாக்கு என்ன புடிக்கலையா என்ன பார்த்தா பயமா இருக்கா”அவளது மென்மையான பேச்சில் அடங்கியவள் வாஞ்சியின் முகத்தில் என்ன கண்டாலோ பயம் அகல லேசாக சிறு புன்னகை வந்தது அவளது புன்னகை நம்பிக்கை கொடுக்க.


“ஐ!.... பாப்பா என்ன பார்த்து சிரிக்கிறீங்க எனக்கிட்டயும் ஒரு பாப்பா இருக்கு வெளியில விளையாடுது நீங்க குடிங்க நான் தூக்கிட்டு வரேன்” என்க வாய் பேச மடந்தை கண் கொண்டே கவி பாடியது பாலை கொடுக்க எதுவாகத் தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு ஒவ்வொரு துளியாகக் கொடுக்க அதனைப் பருகிவரே வஞ்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் துளசி.


வஞ்சிக்கு தான் மனம் கொதித்தது படைத்தவனை எண்ணி என்ன அழகான பிள்ளை.கை கால் மட்டும் செயல் கொண்டால் தேவதையாக வளம் வருவாள் வஞ்சித்து விட்டாரே கடவுள் என்ற ஆதங்கம். முட்டி நின்ற கண்ணீரை தன்னுள் விழுங்கி கொண்டவள் மீண்டும் படுக்க வைத்து துளசியின் வாய் துடைத்து


“இருங்க அக்காவ பார்த்துட்டு மருந்து போட்டுட்டு வந்துடுறேன்” என்றவள் மீண்டும் சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு மதுவின் அறை நோக்கி சென்றாள். சரசு கொடுத்த வேப்பிலை காம்பை உடைத்து சிறு குச்சியாக்கி இரு காதுகளிலும் தோடு போல் சொருகியவள் கன்னத்தில் உள்ள பருக்களை மெதுவாகத் துடைத்து எடுத்தாள்.


“ஆ ............. அக்கா வலிக்குது எங்க அண்ணன் மாதிரியே பண்ணுறீங்க விடுங்க” என்று கையைத் தட்டி விட்டவளை


“எம்புட்டு அழகா இருக்கீங்க இது என்ன திஷ்டி மாதிரி கொஞ்சம் பொறுத்தீகனா அம்புட்டும் சுத்தம் பண்ணி சரி பண்ணிடுவேன்” அழகு என்ற வார்த்தையில் அரிவை பெண் அடங்கியவள்


“வலிக்குதே”


“அதைப் பார்த்தா சரியாகாதே நல்ல பொண்ணு தானே பல்லை க டி ச்சுக்கோங்க” என்றவள் கன்னத்தில் உள்ள பருக்களை மெல்ல அமுக்கி சீல் எடுத்துச் சுத்தம் செய்து அதில் மஞ்சள் பத்து போட்டுவிட்டாள் மதுவுக்கு உயிர் போயிற்று..


அனைத்தையும் சுத்தம் செய்தவள் மது எதிர் பாரா நேரம் காதில் உள்ள குச்சிகளை வேகமாக உருவ அனைத்து கசடுகளும் வெளியில் வந்தது.அதற்குள் மது அலறிய அலறலில் உடையவன் அடித்துப் பிடித்து வந்து நின்றான்.


“என்னம்மா எதுக்கு அழுகுறா”மது சொல்லாமல் அழுது கொண்டு இருக்க


“ஒன்னுமில்லங்க புண்ண சுத்தம் பண்ணுனேன் அதுக்கு அழுகுறாங்க எல்லாம் சுத்தம் பண்ணியாச்சு டாக்டர் கிட்ட போய் ஊசி போட்டுட்டா சரியா போய்டும்” என்றவள் வெளியேற


மதுவிடம் சென்ற உடையவன் கண்ணில் கண்ணீர் “வலிக்கிதாடா”


“இல்லண்ணா” என்றவள் அவனது வயிற்றில் முகம் புதைத்து கொண்டே அண்ணா பெரிய அண்ணா வேனும் நான் பார்க்கணும்” என்க ஒரு பெருமூச்சடன் எழுந்தவன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான் மனதுக்குள் தனது அண்ணனை எண்ணி அத்தனை கோபம். போகும் உடையவனை கண்ணீருடன் பார்த்து கொண்டு இருந்தாள் மது.


அதன் பின் உடையவன் உண்டு கடைக்குச் செல்ல வஞ்சிக்குச் சரியாக வேலை இருந்தது சரசும் அந்த வீட்டில் உள்ள வேலைகளை விளக்க மதியம் வரை சரியாக இருந்தது.


அவள் குழந்தையும் சேர்த்து மொத்தம் நான்கு பிள்ளைகளையும் உண்டு உறங்க செய்த பின்னே ஓய்வு கிடைக்க இருவரும் அமர்ந்தனர்.சரசு தான் மெல்ல பேச்சு கொடுத்தார் “நீ மலாக்கா உறவா”


“இல்ல அவுக அக்காவ தெரியும்”


“ஓ... சரி சரி”


“பெரிய தம்பி வஞ்சிக்கொண்டான் சின்னப் பொண்ணுங்கள வேலைக்கு வைக்காது அதான் கேட்டேன்”


“என்ன பெயர் சொன்னீங்க”


“வஞ்சி கொண்டான்”


“அது என்னங்க பெயர்”


“இந்த வீட்டு பெரிய ஐயா தமிழ் வாத்தியார் மகன் அதேன் அவர் அப்பாரு காலத்துல இருந்து எனக்கு தெரியும்”


ஓ!.... என்றவள் “சொந்த பந்தம் யாருமில்லையா பாவம் பிள்ளைங்க”

“அதெல்லாம் நிறைய இருக்கு ஆனா அம்புட்டும் விஷம் அதான் தம்பி யாரையும் உள்ள சேர்க்காது.பாவம் எல்லாம் பொட்ட புள்ளைங்க அதுகளுக்கு நல்லது பொல்லது சொல்ல கூட ஆள் இல்லை”


“ஒரு வீட்டுல பொம்பள இல்லனா அது சரிவராதும்மா”


“சரியா சொன்ன சாமி ஆண் இல்லாம பொண்ணு பிள்ளை வளர்த்துடுவா ஆனா பொண்ணு இல்லாம ஹ்ம்ம்ம் ............. இதோ காசு பணம் கொட்டி கிடக்குது சீண்ட நாதியில்லை… ஆனா பிள்ளைகளை பார்த்தியா எப்படி கடக்குதுனு என்ன செய்யச் சொல்லு”


“இந்த மது பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணுற வயசு வந்துருச்சு ஒரு சூதனம் இல்லாம இருக்கு நானும் சொல்லி சொல்லி பார்த்துட்டு விட்டுட்டேன்”


“அப்பன் ஆத்தா இல்லனா கொடுமை யாராவது ஒருத்தர் இருந்தா கூடப் பலமா இருக்கும்”


“உண்மை தான் விதி என்ன செய்ய…. வஞ்சி துளசி பாப்பா பேசாது ஆனா கண்ணால எல்லாமே சொல்லும் அது பேசுறது போகப் போகப் புரியும் அது வெளிய போனா நீ தான் எடுத்து போடனும் சுத்தம் பண்ணனும்”


“மாலா அக்கா சொன்னாங்க ம்மா நான் செஞ்சுடுறேன்”


“சரி சாமி முன்னாடி இருந்த நர்ஸ் பொண்ணு ஒழுங்கா சுத்தம் பண்ணாம பாப்பாக்கு புண்ணு வந்துடுச்சு யோசுச்சு பாரு படுத்து இருக்குறதே நரக வேதனை இதுல புண்ணு வந்தா”


“ஐயோ! கடவுளே புள்ள எப்படி தாங்குன”


“வாய்விட்டு சொல்ல தெரியாம ஒரே அழுகை உடையவன் தம்பி தான் பார்த்து மருந்து போட்டு அந்தப் பொண்ண திட்டி அனுப்பிடுச்சு.யாரையும் நம்பி விட முடியல அதான் மாலா உன்ன வர சொன்னது”


பின்பு இருவரும் சற்று நேரம் பிள்ளைகள் அவர்களது வேலைகள் எனப் பேச நாளை அனைத்தும் முறையாக வர வேண்டும் என்று தனக்குள் சொல்லி கொண்டவள் மாலை வேளை வேலைகளைக் கையில் எடுக்க அழகாக நகர்ந்தது நேரம்.


இரவு உணவை குழந்தைக்கு ஊட்டிவிட எந்த வித இடரும் இல்லாமல் சமத்தாக உண்டது.இரு குழந்தைகளுக்கும் சில மாதங்கள் மட்டுமே இடைவெளி அவ்வப்போது வஞ்சி குழந்தைக்குப் பசியாற்ற தத்தி தத்தி வந்த பானு வஞ்சியின் தோள் பிடித்து அவள் கை இடுக்கில் எட்டி பார்த்தது இளம் சிட்டு.


அவள் பார்ப்பதை உணர்ந்து இந்த வாண்டும் குடிப்பதை நிறுத்தி விட்டு இரு பற்கள் தெரிய ஒரு கள்ள சிரிப்பு சிரிக்க பார்க்க கண் கோடி வேண்டும்.குடிப்பதும் சிரிப்பதுமாக இவர்கள் விளையாடுவதை ரசனையாகப் பார்த்திருந்தால் வஞ்சி.


தன்னை மறந்து அவள் பார்த்துக் கொண்டு இருக்க மடியில் இருக்கும் குழந்தையைத் தள்ளி விட்டு வஞ்சியின் மடியில் படுத்துக் கொண்டு அதுவே அவளது முந்தானையை எடுத்து முகத்தை மூடி கொண்டு உதிரத்தை பருக உச்சி சிலிர்த்தது வஞ்சிக்கு


பெற்றால் தான் பிள்ளையா என்ன தாய்மை எத்தகைய புனிதம் என்பதை உணர்ந்தாள் வஞ்சி.

முதல் நாள் வேலை இனிதே முடிய மனம் முழுமை அடைந்தது போல் உணர்ந்தாள் வஞ்சி. எந்த வித அறிமுகம் அல்லாது மது தொடங்கிப் பானு வரை அவள் சொல் கேட்டு நடந்தது விந்தை தான்.....அங்கனம் ஒரு முடிவு கொண்டாள் அரிவை இக்குழந்தைகளைக் கை விடக் கூடாது என்று.அவளுக்கு யார் சொல்வது நினைப்பது நடந்தால் அது கடவுள் அல்ல என்பதை.
 
Last edited:
Top