Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal (ka)Vithai :)

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
97காதல் கவிதை!
-----------------------------

நீ
ஏற்பதற்கோ
மறுப்பதற்கோ
அல்லவென் காதல்!!

ஒளிகாண் உருகிடும்
பனித்துளி போல்-நின்
விழிகாண் உருகிடு
முள்ளத்தை-நீ
ஒருமுறையேனும்
உணர்ந்தால் போதும்.
மற்ற படி-மீண்டும்
முதல்வரி படி !!

மேல்சொன்னதையும், ஏற்பையும் மறுப்பையும் கண்களால் காட்டி அட்சர சுத்தமாய் அதற்கு பொருந்திப்போகுமந்த புகைப்படத்தையும் மறந்திடுங்கள்!

காதல் கவிதைகளில் எனக்கத்தனை பிராப்தி இல்லை. கல்லூரி காலத்து மையலுக்காக நான் முதலும் கடைசியாய் Acrostic வடிவில் (ஒவ்வொரு வரியின் முதலெழுத்தையும் இணைக்கையில் அவள் பெயர் வருமாறு) எழுதிய கவிதை "அலகா எளுதிரிக்கு. நான் தமில் நல்லா பேஸ்வேன்.. பச்சே படிக்க வராது. Native மலபார்...." என்று தோல்வியிலும், டெல்லி காலங்களில் அனாயசமாக கிறுக்கிய

"அப் நீந்த் நஹி-
க்யோன்கி-
ஆபீஸ் மே
ஆஜ் சாந்த் நஹி-
தேரி ச்சுட்டி !!

வெற்றியிலும் முடிந்ததை இப்போது அறிவுப்பூர்வமாய் பார்க்கையில், காதல் -மொழி-(பெண்களின்) Brain இம்மூன்றுக்குமான அற்புத synthesizer வெறும் நாலு வரிக்கவிதை என்று விஞ்ஞானம் சொல்வதை ஏற்க தோன்றுகிறது. FMRI (Functional Magnetic Resonance Imaging) ஆய்வுப்படி, Specifically பெண்களின் Brain Sensors, காதல் கவிதைகளின் எதுகை, மோனை, புகழ்ச்சி, நெகிழ்ச்சி இவற்றுக்கெல்லாம் மயங்குவதற்கேற்ப "Pre-wired" ப்ரோக்ராமிங் இழைகளால் தூண்டப்படுவது தான், இன்றளவும் காதல் கவிதைகளின் வெற்றிக்கு காரணம்.

My dear Boys, உடனேயொரு கவிதைத்தொகுப்பை கொண்டு போய் நீங்கள் விரும்பும் பெண்ணிடம் கொடுத்து மடக்க யத்தனிக்காதீர். அதற்குமுன் நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றுள்ளது. அதன் பெயர்...., "இவனோடிருக்கையில் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன்"... எனும்

"உள்ளுணர்வு "!!

#Charithraa's
 
View attachment 97காதல் கவிதை!

Manaivikku oru paadukappu unarvai kodukkum kanavan enbadu aayirathil oruvar alladu latchathukku oruvarai irukkalaam,kadaigalil mattumthan heroism,nijathil very less,mm mam kadaigalil varuvadu pol yadathathai meeradha oru vaazhkkai amaindaal adhu pengalukku varame
 
Appadi unaku amaiya vaalthukkal.
 
Manaivikku oru paadukappu unarvai kodukkum kanavan enbadu aayirathil oruvar alladu latchathukku oruvarai irukkalaam,kadaigalil mattumthan heroism,nijathil very less,mm mam kadaigalil varuvadu pol yadathathai meeradha oru vaazhkkai amaindaal adhu pengalukku varame
DP-யில் இருக்கும் குழந்தை உங்கள் குழந்தையா, பிரணவ் லக்ஸ் டியர்?
Very cute baby
இனி போட்டோ எடுக்கும் பொழுது
குழந்தைக்கு கன்னத்தில் கறுப்பு
திருஷ்டிப் பொட்டு வைத்து விட்டு
போட்டோ எடுங்கள்
இப்போ குழந்தைக்கு திருஷ்டி
சுத்திப் போடுங்கப்பா
என்னோட கண்ணே பட்டிருக்கும்
 
Last edited:
DP-யில் இருக்கும் குழந்தை உங்கள் குழந்தையா, பிரணவ் லக்ஸ் டியர்?
Very cute baby
இனி போட்டோ எடுக்கும் பொழுது குழந்தைக்கு கன்னத்தில் கறுப்பு
திருஷ்டிப் பொட்டு வைத்து விட்டு
போட்டோ எடுங்கள்
இப்போ குழந்தைக்கு திருஷ்டி
சுத்திப் போடுங்கப்பா
என்னோட கண்ணே பட்டிருக்கும்
Mam,now he is 7 and half years.
 
Mam,now he is 7 and half years.
ஓகே, Pranav Lax டியர்
ஏழு வயசுன்னாலும் அவன்
குழந்தைதானேப்பா
பத்திரமா பார்த்துக்கங்கப்பா
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கப்பா
 
very nice ....
ஒளி காண் உருகிடும்...
விழிகாண் உருகிடும்...
அழகான வரிகள்....
ஹிந்தி கவிதை சிரிப்பு....
fmri result ஆய்வு correct ஆ இருக்கும்...
ஏன் எனில் நம்மிடம் ஆண் கவிஞர் களைவிட கவிதாயினி கள் குறைவுதான்....

Top