Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 15

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 15

வாழ்க்கையில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவர் இணையும் போது, அவர்களுக்குள் கண்டிப்பாக கருத்து வேறுபாடு வரும்! ஆனால், தங்களின் கருத்தை மற்றவர் மேல் திணிக்காத போது தான் அந்த உறவு காப்பாற்றப்படுகிறது. மற்றவரிடம் இது பிடிக்கவில்லை, அது பிடிக்கவில்லை என அவர்களை மாற்றுவதற்க்கு முயற்சிப்பதை விட அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதே சாலச் சிறந்தது!

ஏன்னென்றால், ஒரு சிலர் தங்களின் உயிரானவர்களுக்காக மாறுவர்! ஒரு சிலர் தங்களின் இயல்பை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்… இந்த விதிமுறை கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல, நட்பு, சகோதரத்துவம் என அனைத்து உறவுகளுக்கும் ஒத்துப் போகும்.

இதை அறியாமல், ஜீவா அன்பரசியை தனக்கேற்றவாரு மாற்ற முயற்சித்தான். அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்த அடுத்த வாரம், இரவு படுக்கச் செல்லும் முன் அன்புவிடம் பேச வேண்டும் என்றான்.

‘மறுபடியும் முதல்லந்தா?? இவரு புரிஞ்சிக்கவே மாட்டாறா???’ இதே மனநிலையுடன் தான் அன்பு அவனிடம் பேசப் போனாள். அவளின் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டு, அவளின் மென் விரல்களில் சொடுக்கு எடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

நோ நோ…. தப்பு தப்பு வாக்குவாதத்தை ஆரம்பித்தான்!! “அன்பு நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு! நல்லா யோசிச்சிட்டு அப்புறமா முடிவை சொல்லு. சரியா?” அவன் இவ்வளவு சீரிஸயாக பேசவும், மீண்டும் சண்டை வருமோ என பயந்து பேச்சை திசை மாற்றினாள்.

“ஏன் புரியாத மாதிரி ஏதாவது பேசப் போறீங்களா? இல்ல, கவனமா கேக்க சொன்னீங்களே, அதான் கேட்டேன்!” அவளின் நக்கலுக்கு பதிலாய், மெலிதாக புன்னகைத்துவிட்டு தன் காரியத்தில் கவனமானான், அந்த உத்தம புருஷன்.

“உனக்கு வீட்டுல போர் அடிக்குதுனு தான நீ ஆசிரமம், குழந்தைங்க, டிரஸ்டுனு போயிட்டே இருக்க. அதுக்கு ஒரு வழி இருக்கு! நீயும் நாளையிலந்து என்னோட ஆபீஸ் வா. உனக்கு அங்க என்ன வேலை பிடிக்குதோ பாரு. ஈவ்னிங் ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு வந்துடலாம்.

என்ன ஓகே தான??” ஜீவாவின் கண்களின் ஆர்வமும், முகத்தில் இருந்த பூரிப்பும் அன்பரசியை மேலும் கோவம் கொள்ளச் செய்தது. இவன் தன்னை புரிந்துக் கொள்ளவேயில்லையே என்ற ஆதங்கம் உண்டாக்கிய கோவம் அது.

“போர் அடிக்குது அதனால தான் ஆசிரமம் போறேன்னு, எப்பயாவது சொல்லிருக்கேனா ஜீவா? அதுமட்டும் இல்லாம, ஆபீஸ்ல நான் வந்து என்ன செய்யறது? கேமிஸ்ட்ரி படிச்ச என்னால என்ன வேலை செய்ய முடியும்னு நினைக்குறீங்க??”

அவளின் இகழ்ச்சியான குரலில் ஜீவாவுக்கும் கோவம் சுறுசுறுவென ஏறியது. “ஆமா, எல்லாரும் படிச்ச படிப்புக்கு தான் வேலை பார்க்குறாங்க பாரு! சும்மா ஏதாவது சொல்லாத ராணி”

சிறிது இடைவெளி விட்டு மின்னும் கண்களுடன் மீண்டும் தொடர்ந்தான். “ஹே பேசாம உனக்கு புதுசா ஒரு ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணி கொடுக்கட்டுமா? சூப்பர் ஐடியால” இதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டாள், அன்பு.

“ஐய்யோ உங்களுக்கு எப்படி தான் இப்படி எல்லாம் தோனுதோ? மூளை ஓவர்டைம் வேலை செய்யுதா? நான் ஒரு வருஷம் தான் டீச்சரா இருந்தேன். டீச்சர் உடனே பிரின்சிப்பால் ஆக முடியாது! புரியுதா? போய் படுங்க…”

அவள் கூறியதை கேட்டு என்ன செய்வது என்றே புரியவில்லை ஜீவாவிற்கு. சொன்னவள் உறங்கியும் விட்டாள். கேட்டவன் தான் தூங்காமல் யோசனையில் மூழ்கியபடி இருந்தான்.

அதற்கு அடுத்த மாதமே, அன்புக்கு வளைகாப்பு நடந்தது. இப்போது வினோத்தும், லட்சுமி அம்மாவும் சேர்ந்தே அவளை வீட்டிலிருக்க கூறவும், அன்பரைசியும் அரை மனதாக சம்மதித்தாள்.

பிரசவ தேதி நெருங்க நெருங்க அன்பரசியின் குழப்பங்களுக்கும், பயங்களுக்கும் ஜீவாவே மருந்தாகி போனான். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, அவனும் அன்பரசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான்.

இதன் நடுவில் நிலேஷின் முதல் வருட பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர். அடுத்த வாரமே ஜீவாவின் ராணிக்கு வலியெடுக்க, நிக்கித்தா என்னும் இளவரசியை உலகிற்கு கொண்டு வந்தாள், அன்பு!!

இனி எந்த பிரச்சனையும் வராது என இருவரும் ஒரு மனதாக எண்ணி விரிசலை மூடப் பார்க்க, விரிசல் விரிவடைந்து நிரந்தர பிளவாக மாறியது. மழை பெய்யும் வேளையில் கட்டப்படும் சுவரைப் போல, அவர்களின் அன்னோன்னியமும் வலுவிழந்து உடைந்து போனது.

“நிக்கித்தா பிறந்து முதல் மூணு மாசம் நல்லா தான் போச்சு…. அதுக்கப்புறம்… அதுக்கப்புறம்…”

அதன்பின் நடந்ததை நினைத்து அன்பரசி பொங்கி அழ ஆரம்பிக்க, மலர் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தாள். ஆனால், போகப் போக அன்புவின் அழுகை அதிகரித்து ஒரு நிலையில் மூச்சு விட முடியாமல் போகவும், மலர் தான் தண்ணீர் குடுத்து சமாதானப் படுத்தினாள்.

உறங்கிக் கொண்டிருந்த நிலேஷும் நிக்கித்தாவும் ஒன்றாக எழுந்து வர, அதன்பின் அன்புவிடம் இருந்து மலர்விழியால் எதையும் வாங்க முடியவில்லை. ஆனால், மலர் கிளம்பவும் அன்பு அவளின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டாள்.

“நாளைக்கு வரேன்டா. சண்டே வீட்டுல இருப்பல?” அன்புவின் கேள்விக்கு, சந்தோஷமாக தலையாட்டினாள் மலர்.

கூறியபடியே அடுத்த நாள் மலர்விழியின் வீட்டுக் கதவை தட்டினாள் அன்பரசி. குழந்தைகளை லட்சுமி அம்மா கூட்டிச் சென்ற பிறகே, அவள் அவ்விடம் சென்றது.

கதவை திறந்தது மலர்விழியின் தந்தை ஞானகனேசன். பின்னாலயே மலரும் வந்து இவளை வரவேற்றாள். உள்ளே வந்து அமர்ந்து, நல விசாரிப்புகள் முடிந்தவுடன் கனேசன் தன் நன்றிகளை அன்புவிடம் தெரிவித்தார்.

“ஒரு ஆக்சிடேன்ட் ஆகிடுச்சுப்பானு, இவ வந்து சொன்னப்ப ரொம்ப பயந்துட்டேன்மா. இவளுக்கு எதுவும் அடிபடல, பட் இடிச்ச கார்ல யாருக்காச்சும் அடிப்பட்டு இருந்தா? நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல!

நீங்க கார்ல ஆன பெண்டுக்கு கூட காசு வாங்கலேனு சொன்னா. ரொம்ப தாங்க்ஸ்மா… உங்க ப்ரெண்டுக்கும் தாங்க்ஸ் சொன்னேனு சொல்லிருங்க.”

அன்பரசி மென்முறுவலுடன் ‘பரவாயில்லை அங்கிள்’ என கூறிவிட்டு சிறிது இடைவெளி விட்டு, “அப்புறம் அடுத்து மலரோட கல்யாணம் தானா அங்கிள்?” என நூல் விட்டும் பார்த்தாள்.

நூலை நம்பி மீனும் வசமாக சிக்கிக் கொண்டது! “ஆமாம்மா… நல்ல பையனா பார்க்கனும். இவளோட அம்மா நாலு வருஷம் முன்னாடி தான் ஹார்ட் அட்டாக்ல எங்கள விட்டு போயிட்டா!! அதுக்கப்புறம் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு எங்க ரெண்டு பேருக்கும்.

இப்போ தான் ஒரு வருஷமா, கொஞ்சம் சிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்கா… அதனால இவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்க வேண்டியது, என்னோட பொறுப்பு! பொறுமையா தேடலாம்னு இருக்கேன்.”

ஒரு தந்தைக்கேயுரிய பொறுப்புணர்ச்சியுடன் ஞானகனேசன் பேசுவதை கண்ட அன்பு, எப்படி இவரிடம் வினோத்தை பற்றிக் கூறுவது என குழம்பிப் போனாள்.

பிறகு குரலில் ஒரு சாதாரணத்தன்மையை முயன்று கொண்டு வந்து, வினோத்தை பற்றிக் கூறளானாள். “அங்கிள் என்னோட ப்ரெண்டு பத்தி மலர் சொல்லிருப்பானு நினைக்கறேன்.

இன்ஞினியரிங் முடிச்சிட்டு கார் கம்பெனியில வேலை பார்க்குறான். விஷயத்த சொல்றதுக்கு முன்னாடி, அவனை பத்தியும் என்னை பத்தியும் சொல்லிடறேன்!”

பள்ளியில் யமுனாம்மாவிடம் பேசிப் பழகியது முதல் போன மாதம் மலரை பார்த்தது வரை படமாக ஓட்டினாள் அன்பு. இடையில் அவளின் திருமணம், விவாகரத்து வரும் நேரத்தில் மட்டும் இன்டிரவல் விட்டுவிட்டாள் வசதியாக!

கதை கேட்ட கணேசனுக்கோ இப்படியும் மனிதர்கள் உண்டா என்பது போல முகத்தில் ஆச்சரியக்குறியுடன் பார்த்தார். கடைசியில், மலரை வினோத்திற்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறிவிட்டாள்.

மலர்விழியை ஆராயும் கண்களுடன் நோக்கிவிட்டு, யோசனையில் மூழ்கினார் தந்தையவர்! சில அசௌகரியமான நிமிடங்கள் கழிந்த பின்னர், கணேசன் தீர்க்கமான முகத்துடன் பார்த்தார் அன்பரசியை.

நாசியின் வழியாக ஒரு பெருமூச்சை வெளியேற்றி, “உன்னோட ப்ரெண்டு நல்ல பையனா தான்மா இருக்கனும். நீ பேசுறதுலந்தே தெரியுது, உன்னை பத்தியும். இவளும் வேணாம்னு சொல்ல மாட்டா போல… இருந்தாலும், நான் கொஞ்சம் இல்ல, நிறையவே யோசிக்கனும். விசாரிக்கனும்.

அதுக்கப்புறம் தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும். அதனால, எனக்கு டைம் குடுமா.” என்றார் முடிவாக.

அவர் கூறியதை கேட்டு சத்தமில்லாமல் ஒரு நிம்மதி மூச்சை தள்ளிவிட்டு, ஆமோதிப்பாக தலையை ஆட்டினாள் அன்பு. “எனக்கு புரியுது அங்கிள். நீங்க எவ்வளோ நாள் வேணுமோ டைம் எடுத்துக்கோங்க. பட், என்னோட கல்யாண வாழ்க்கை, டிவோர்ஸ்… இதுக்கும் வினோத்தும் எந்தவித சம்பந்தமுமில்ல அங்கிள்.”

அன்பு அவசர அவசரமாக வார்த்தைகளை துப்பியதை பார்த்து, புன்னகை அரும்பியது மலருக்கும் அவள் அப்பாவுக்கும்! “ஹ்ம்ம்ம்… புரியுதுமா. நான் எதுவும் சந்தேகப்பட்டு உங்க ப்ரெண்ட்ஷிப்ல குட்டையை குழப்ப மாட்டேன். போதுமா??”

கணேசனின் கேலிக் குரலில் மனச் சஞ்சலங்கள் காற்றில் பஞ்சுப் போதியாய் பறந்து போயின அன்பரசிக்கு. சந்தோஷமாகவே அவர்களிடம் விடைப் பெற்று, தன் வீட்டை அடைந்தாள் அன்பு.

மனதில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் அணிவகுக்க, அதற்கேற்ப திட்டங்களும் வளர்ந்தன சரிசமமாக! அதில் முற்றும் முதலானது, வினோத்தை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது.

உண்ணாவிரதம் இருந்தாவது அவனை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும்! நினைத்த நிமிடமே, அவனும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து பிளானையே சோதப்பிடுவானே என்று உதித்த எண்ணத்தையும் தடுக்க முடியவில்லை!

இப்படியே அவள் யோசித்து அடுத்த இரண்டு நாட்களையும் கடத்தினாள். வினோத்தும் வந்து சேர்ந்தான்! வந்தவனிடம் மலரை சந்தித்தது பற்றி மூச்சே விடவில்லை அன்பு. இரண்டு வாரம் கழிந்த நிலையில், ஞானகணேசன் ஃபோன் செய்தார்.

வினோத்தை பார்க்க வேண்டும் என்று அவர் கூற, அவரை வீட்டுக்கு அழைத்தாள் அன்பரசி. வினோத்திடமும் வெளியே செல்ல வேண்டாம் என கூறினாள்.

“டேய் இன்னிக்கு முக்கியமானவங்க வீட்டுக்கு வராங்க. ஒழுங்கா வீட்டுல இரு. சொல்லிட்டேன்…”

“அப்படி யாரு வராங்க?? என்ன மேட்டர்??”

“அதெல்லாம் அவங்க வந்ததும் நீயே தெரிஞ்சுப்ப. இப்போ சாப்பிட வா…” அதற்குப்பின், லவ்ஸை எவ்வளவு கேட்டும் அவள் வாயை திறக்காமல் இருக்க, வெறுத்துப் போய் வீட்டில் அடைந்தான் வினோத்.

எல்லா எரிச்சலும் கோபமும், ஞானகணேசனை மலர்விழியின் தந்தையாக அன்பரசி அறிமுகம் செய்ததும் ஜன்னல் மற்றும் கதவின் வழியாக ஓடியே போனது! பிற்கால மாமனார் அன்றோ??

மரியாதை தூள் பறந்தது!! ஏற்கனவே அவனை பற்றி விசாரித்து இருந்ததில் பாதி விழுந்திருந்த கணேசன், மீதியும் அவனின் சிரித்த முகத்திலும் கனிந்த பேச்சிலும் முழுதாக கவிழ்ந்து விட்டார். அவனிடம் எதையும் மறைக்காமல், அன்பரசி தன்னை வீட்டில் சந்தித்ததும், மேற்கொண்டு தான் அவனை பற்றி விசாரித்ததையும் போட்டுடைத்தார்.

அதை கேட்டு அதிர்ந்த முகத்துடன் வினோத் அன்பை நோக்க, அவள் ஏன் அவனை பார்க்க போகிறாள்? விட்டத்தையும் கீழே தரையையும் மாறி மாறி பார்த்தாள்.

அவளை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு, உடனே கணேசனை முடிவுடன் எதிர்நோக்கினான் வினோத். “இவ உங்க கிட்ட என்ன சொன்னானு எனக்கு தெரியாது மாமா. நான் சொல்றேன். எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… அவளை நல்ல படியா பார்த்துப்பேன், வாழ் நாள் முழுக்க!

உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குனு தான் நினைக்கிறேன். என்ன அப்படி தான??”

இதழ்களின் மெலிதான வளைவில், அவனின் கூற்றை ஏற்றுக் கொண்டார் கணேசன். அன்பரசியும் இதை கேட்டு சந்தோஷமாக பூரித்துப் போக, சிறிது நேரத்துலேயே அவளின் பூரிப்பில் ஒரு லாரி மண் அள்ளி போட்டான் அவளின் உயிர் நண்பன்.

“அடுத்து சொந்தக்காரங்க எல்லாரையும் கூட்டி வீட்டுலையே சின்னதா ஒரு நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்ல அன்பு? உங்களுக்கு ஓகே தான?”

“ஓகே தான் மாமா. ஆனா, கல்யாணம் கொஞ்ச நாள் கழிச்சு வெச்சுக்கலாம். டேட் எதுவும் பிக்ஸ் பண்ண வேண்டாம்!”

வினோத் கூறியதை கேட்டு அன்பரசி எதிர்த்து எதுவும் பேசும் முன், அவனே அவளிடம் திரும்பினான். “எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு உனக்கு தோனுதுல? அப்புறம் நான் பண்ணா மட்டும் ஏன் சும்மா என்னை திட்டுற?? நீங்களே கேளுங்க மாமா… இன்னோரு கல்யாணம் பண்ணிக்கோனு நானும் ஒரு வருஷமா கத்திட்டு இருக்கேன். கேக்கவே மாட்டுறா… ஆனா, இப்போ சொல்றேன்.

நீ உன்னோட கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா தான் நான் என்னோட கல்யாண டேட் பிக்ஸ் பண்ணுவேன். சொல்லிட்டேன்!”

வினோத் கூறியதை கேட்ட கணேசன் பொறுமையாக அன்பரசியின் முகத்தை பார்த்தார். “இந்த விஷயத்துல உன்னை கம்பெல் பண்ணக் கூடாதுமா. எனக்கு தெரியுது… ரொம்ப கஷ்டமான முடிவு தான். பொறுமையா யோசி.

ரெண்டு பேரும் சேர்ந்து பேசி, எனக்கும் மலருக்கும் ஒரு முடிவை சொல்லுங்க. அப்போ நான் வரேன்மா. வரேன் மாப்பிள்ளை.” கை எடுத்து கும்பிட்டு அவர் விடைபெற, “மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் மாமா. வினோத் இல்லனா வினோனே கூப்பிடுங்க.” என்றான் வினோத்.

அடுத்த பதினொரு நாட்களில் நிச்சயதார்த்தம் என்ற நிலையில் அன்பரசி தான் தவியாய் தவித்துப் போனாள். கண்ணீரும் கம்பளையுமாய் வினோத்திடம் கெஞ்சியும் பார்த்தாயிற்று!

கல் கொண்டான மனதுப் போல், அவன் இவளின் பேச்சுகளை மதிக்கவேயில்லை! தான் மட்டும் திருமணம் செய்து செட்டிலாகி விட, அன்பு தனியாக தவிப்பதை எந்த காரணத்துக்காகவும் வினோத்தால் ஒத்துக் கொள்ள முடியவில்லை… கடைசியில், வேறு வழியில்லாமல் அன்பரசி அரை மனதாக தலையசைத்தாள். முதலில் தன் திருமணம் முடிந்ததும், மலருடன் சேர்ந்து இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என மனதில் கோட்டை கட்டினான், வினோத்.

மனதில் எழுப்பப் பட்ட கோட்டை, மனதிலேயே தகர்ந்தும் போனது!!

 
அன்பரசியை வேற ஒருத்தனுக்கு
தாரை வார்த்துட்டுத்தான் ஜீவா
வேற வேலை பார்ப்பான் பாரு
 
உன்னுடைய மனக்கோட்டை
மண் கோட்டையாய் சரிந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்கள், வினோத்து
போ போ மலர் புள்ள வேற இரண்டு
கொடுப்பாள் வாங்கிக்கோ தம்பி
 
Top