Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 1

Advertisement

AshrafHameedaT

Administrator
அத்தியாயம் எட்டு (1) :

உண்ணாதது, அழுதது, அவன் உடன் தங்குகிறேன் என்று சொன்னது, எல்லாம் அங்கையற்கண்ணியினுள் ஒரு சோர்வை பதட்டத்தை கொடுத்திருக்க, அப்படியே போய் படுக்கையில் விழுந்தவள் தான் உறங்கிவிட்டாள்.

அப்பாவிடம் பேசிய போது அவளின் கைபேசியை அணைத்து தூக்கி எறிந்திருக்க, மனோ அவளுக்கு அழைக்கக் முயன்ற போது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. உடனே ராஜராஜனிற்கு அழைத்தான். அதுவும் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியிருந்தது. கொஞ்சமும் யோசிக்கவில்லை, கரிஷ்மாவிடமும் அம்மாவிடமும் ஒரு அவசர வேலை என்று கிளம்பிவிட்டான். இப்படி என்று சொல்லவில்லை பயந்து விடுவார்கள் என்று.

அவன் அழைத்த அதே நேரம் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் ராஜராஜனிற்கு அழைக்க அவர்களுக்கு சுவிட்ச் ஆஃப் என்று வர, அவர்களுக்கும் இருப்பு கொள்ளவில்லை.

ஏனென்றால் ஆத்மன் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த பிறகும் “போடா பொறுக்கின்றா என் பையனை பார்த்து. அதுவும் அடிப்பாளாமா அந்த பொண்ணு, அதையும் விட போஸ்டர் அடிச்சு என் வீட்டு பொண்ணுங்களை ஒட்டுவாளாமா? யாருன்னு காட்டுறேண்டா உங்களுக்கு” என்று சொல்லியிருக்க,

சுவாமிநாதனும் பேசியிருந்தார், “இத்தனை வருஷம் அப்பா இருந்தார். அவர் தப்பு நம்ம பக்கம், அந்த பையனுக்கு தீராத அவமானத்தை தேடிக் கொடுத்துட்டோம், நாம எதுவும் எதிர்க்க வேண்டாம்ன்னு சொன்னதால, எனக்கும் உன்னை நண்பன்னு நினைச்சு கொஞ்சம் நாள் பழகினதால தான் பேசாம விட்டுடேன். இனி முடியாது. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம். இல்லை நான் செஞ்சு தான் ஆவேன்னு நீ சொன்னா பார்த்துக்கலாம்” என்று சொல்லி விட்டார்.

அது இன்னும் ஆத்மனின் கோபத்தை கிளறி விட்டிருந்தது. இது நாள் வரை அமைதியாக இருந்தவர்கள் பேசவும், “பார்த்துக்கலாம்டா” என்று சுவாமிநாதனிடம் சொல்லி தான் கிளம்பியிருந்தார்.

அதுவே ஒரு பயத்தை கொடுத்தது சுவாமிநாதனுக்கு. அங்கை இருந்த வீடும் ஊருக்கு ஆரம்பத்தில் சுற்றியும் தோட்டம் இருக்க தனியாக இருக்கும்.

ராஜராஜனை பற்றி பயம் இல்லை என்றாலும், எதையும் சமாளிப்பான் என்றாலும், அவருக்கு ஒரு பயம், அந்த நேரத்தில் தமிழ்செல்வனை எழுப்பி அவரை அழைத்துக் கொண்டு பைக்கில் அண்ணனும் தம்பியும் அங்கை இருக்கும் வீட்டை நோக்கி வந்து விட்டனர்.

வந்து பார்த்தவர்களுக்கு ராஜராஜன் வெளியில் கட்டிலில் தனியாக படுத்திருப்பது தெரிந்தது.

இவர்கள் கேட்டை திறந்து உள்ளே வந்தனர். அந்த சத்தத்தில் கூட அவன் அசையவில்லை எனவும் பயந்து அருகில் விரைந்து வந்தார் தமிழ்செல்வன்.

அருகில் வந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிய, “தூங்கறாண்ணா” என்றார் ஆசுவாசமாக.

“என்னடா இப்படி ஆள் வந்த சத்தம் கூடத் தெரியாம தூங்கறான், அதுவும் வெளில வேற தூங்கறான்” என்று பேசியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தார்.

அண்ணன் அமரவும் தம்பியும் அமர்ந்து கொண்டார்.

கேட் திறக்கும் சத்ததிலேயே அங்கை விழித்துக் கொண்டாள்.

“யாராயிருக்கும்” என்று அவளுக்கு பயம் வந்தது. பின் பேச்சு குரல் வேறு கேட்கவும், ஜன்னலை மெதுவாய் திறந்து பார்க்க, அங்கே ராஜராஜன் கட்டிலில் உறங்குவது தெரிந்தது. பின்பு நன்றாய் திறந்து பார்க்க அங்கே சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் அமர்ந்திருக்க, மகனுக்கு காவலுக்கு அமர்ந்திருக்கிறார்கள் என்று புரிய,

அவளின் தூக்கம் எல்லாம் பறந்தோடி விட்டது. இப்போது கதவை திறப்பதா வேண்டாமா என்ற யோசனை.

என்ன தான் பேசுகிறார்கள் கேட்போம் என்று நின்று கொண்டாள். ஆனால் அண்ணனும் தம்பியும் பேசவில்லை அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து “ண்ணா, என்ன பண்ணுவான்னு நினைக்கற” என்று கேட்க,

“ப்ச் தெரியலையேடா, அப்படி ஒரு ஆவேசமா போறான். இத்தனை வருஷம் கழிச்சும் இப்படி பேசறான். சரியான கிறுக்கனா இருப்பான் போல இருக்கு, பார்த்துக்கலாம் விடு” என்று தைரியம் சொல்ல,

இப்போது பேச்சு சத்தம் இப்படி அருகில் கேட்கவும் தூக்கம் கலைய திரும்பி அப்பாவையும் பெரியப்பாவையும் பார்த்தவன் வேகமாய் எழுந்து “என்னப்பா இங்க? எதுவும் பிரச்சனையா?” என்றான்.

அவன் எழுந்த வேகத்திற்கு பார்த்திருந்த அனைவருமே அசந்து விட்டனர்.

“என்னடா?” என்றனர் இவர்கள் பதறி.

“இங்க இருக்கீங்க”

“உன் ஃபோன் சுவிட்ச் ஆஃப். அந்த ஆத்மன் ரொம்பவும் மிரட்டிடான். அதுதான் எதுவும் உங்களை பண்ணிடுவானோன்னு வந்தோம்”

ஆசுவாசமாய் அமர்ந்தவன், “அப்பா நம்மை அவன் ஒன்னும் பண்ண மாட்டான், அதாவது அடிக்கிறது அந்த மாதிரி. ஆனா நிச்சயம் வேற பண்ணுவான், அதுவும் என்னோட கணிப்பு பல வருஷம் முன்ன தாத்தா நீங்க எல்லாம் அமைதியானதுக்கு காரணமா இருந்ததை தான் திரும்பவும் எடுப்பான்”

“என்ன?” என்று அவர்கள் மிகுந்த கவலை கொள்ள அது முகத்திலும் தெரிய,

அந்த நேரம் சரியாக மனோவின் கார் வந்து விட்டது.

இறங்கியவன் இவர்கள் எல்லோரையும் இங்கே பார்க்கவும் என்னவோ என்று பயந்து விட்டான். வேகமாய் வந்தவன் ராஜராஜனிடம் “எதுவும் பிரச்சனையா, அங்கை எங்கே?” என்று கேட்க,

“தூங்கறா” என்று ராஜராஜன் சொல்லும் நேரம் வீட்டின் கதவு திறக்க, அங்கை வெளியே வந்தாள்.

“இவள் தூங்கவில்லையா?” என்று ராஜராஜன் நினைக்க, “இந்த பொண்ணு முழிச்சிட்டு தான் இருந்தாளா?” என்று சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் நினைக்க,

“ஐ அம் ஃபைன் அண்ணா” என்று அங்கை சொல்ல,

அப்போது தான் மனோவின் முகத்தில் தெளிவு, “அவ ஃபைன் தான், ஆனா இனி சூழ்நிலைகள் அப்படி இருக்குமான்னு தெரியலை” என்று முகம் இறுகியவனாய் ராஜராஜன் சொல்ல,

“ஏன் உங்களுக்கு பயமா?” என்று அங்கை பதில் பேசினாள்.

“எங்களை பார்த்தா உனக்கு பயப்படற மாதிரி தெரியுதா?” என்று அப்படி ஒரு ஆவேசத்தோடு ராஜராஜன் கேட்க,

மனோ தான் வேகமாய் “கோபம் வேண்டாம்” என்றான்.

“என்ன கோபம் வேண்டாம்?” என்றவன், “உங்க தங்கை கேட்கறா, எங்கம்மாவை பேசினா நீங்க கேட்க மாட்டீங்களா வேடிக்கை பார்ப்பீங்களான்னு”

“உண்மையா எங்க முன்னாடி எவனும் பேச மாட்டான். எவனுக்கு பேசற தைரியம் கிடையாது. இதுவரை ஆத்மன் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு குடுத்து இருந்தாலும், எங்க முன்ன இல்லை, எங்க காதுக்கு வர்ற மாதிரி பேசினதே கிடையாது. அது தான் நிஜம்!”

“இவளை பார்த்து பேசினாங்கன்னா, யார் தப்பு? எங்க தப்பா? இவ கேட்கறா எங்கம்மாவை விடுங்க உங்க மனைவின்ற பயம் கூட வேண்டாமான்னு”

“இல்லை தெரியாம தான் கேட்கறேன், இவ என்ன எங்களோடவா இருக்கா? எங்க வீட்ல இருந்து என்னோட அக்காங்க ரெண்டு பேரை கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கோம், எல்லோருமே பேர் சொல்ற மாதிரி பெரிய ஆளுங்க தான், பெரிய இடம் தான். உங்கம்மாவோட வாழ்க்கை அவங்களை ஒன்னும் பாதிக்கலையே , இவளை பாதிச்சா அதுக்கு நாங்க பொறுப்பா”

“இன்னும் இவ எங்க நிழல் குள்ள வரவேயில்லை, நாங்களும் கூப்பிடலை, நீங்களும் அனுப்பலை, எல்லாம் வேற, சும்மா பயமா, ஏன் கேட்கமாட்டீங்கன்னு இப்படி எல்லோர் முன்னமும் கேள்வி கேட்கறா? அதுவும் அந்த ஆத்மன் முன்ன கேள்வி கேட்கறா? என்ன தெரியும் இவளுக்கு எங்களை பத்தி?’ என்று கோபமாய் கத்தி பேசினான்.
 
:love: :love: :love:

கோபத்தை எங்கே காட்டணுமோ அங்கே காட்டிட்டான் ராஜராஜன்...........
அப்பாவும் பெரியப்பாவும் silent viewer ஆகிட்டாங்க.....

ரொம்பதான்மா பேசுற அங்கை.......
 
Last edited:
hi mallieeeee..
கல்யாணம் ஆனாலே, நிழலுக்கு வந்தது போல தானே...?
யார் இந்த திருமணத்தை ஒத்துக் கொள்ளவில்லை...,Mr RR
 
Last edited:

Advertisement

Top