Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 13

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் பதிமூன்று :

காலையில் அங்கை கண்விழித்த போது பக்கத்தில் விகாஸ் மட்டுமே! ஸ்ருஷ்டியை காணவில்லை. பக்கென்று ஆகிவிட்டது. சுவரை ஒட்டி கட்டில் என்பதால் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை. ஆனால் தவழ்ந்து மறுபக்கமாய் சென்று விழுந்திருப்பாளோ என்று பதறி எழுந்தாள்.

உண்மையில் அவள் அங்கை மீது தவழ்ந்து, பின் விகாஸை தாண்டி, ராஜராஜனை கடக்க முற்படும் போது அவனிடம் பிடிபட்டு இருந்தாள். காலை வேளையில் குழந்தையின் செய்கைகள் உற்சாகமாய் இருக்க,

“ஹேய் பட்டுக்குட்டி” என்று அவளை அணைத்து பிடித்திருந்தான் ராஜராஜன். குழந்தை அவன் மீது டொம்மென்று முகத்தால் முட்ட,

“நீயாவது கொஞ்சு என்னை, எப்போவாவது உங்க அத்தை என்னை கொஞ்ஜி, உன்னை மாதிரி ஒரு பட்டுகுட்டி எனக்கு பெத்துக் கொடுப்பான்னு நம்பிக்கையே இல்லை” என்று அவளோடு கதை பேசியபடி அவளை தூக்கி கொண்டு வெளியே சென்றிருந்தான்.

அம்மாவிடம் சென்று கொடுத்து. பின் அவன் முகம் கழுவி அவளின் சிப்பர் எடுப்பதற்காக ரூம் வர, அப்போது தான் அங்கை எழுந்து பதறி அமர்ந்து பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள். அதிகாலை ஐந்து மணி. அப்போதே நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் கிளம்பியிருந்தனர்.

வாசுகி குளிக்க சென்றிருக்க, தில்லை சமையல் அறையில், சமையல் வாசுகியும் தில்லையும் மட்டும் தான் செய்வர், கூட்ட, பெருக்க, பாத்திரம் துலக்க, சமையலில் உதவ இப்படி தான் ஆட்கள். அவர்களும் ஏழு மணிக்கு மேல் தான் வருவர். குழந்தைகள் இருப்பதால் தில்லை அவராகவே சமையலறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தார்.

“குழந்தை அம்மா கிட்ட இருக்கா, சிப்பர் எடுக்க வந்தேன்” என்றான் அவள் அலங்க மலங்க விழித்து அமர்ந்திருப்பதை பார்த்ததும். இன்னும் அவளின் தூக்கம் கலையவில்லை என்றும் புரிந்தது.

“அது சுடு தண்ணில போட்டு பாயில் பண்ணனும்” என்று சிப்பர் ஸ்டெர்லைஸ் செய்வதை பற்றி சொல்ல,

“எங்க வீட்டில எட்டு குழந்தைங்க வரிசையா இப்போ சில வருஷமா பிறந்து வளர்ந்துட்டு இருக்காங்க. அதனால் அம்மாக்கு எல்லாம் தெரியும், பார்த்துக்குவாங்க, ஸ்ருஷ்டியும் அழலை, அழுதா உன்னை எழுப்பறேன், நீ தூங்கு” என்று சொல்லி அவன் சென்று விட..

எழுந்து செல்வதா இல்லை உறங்குவதா என்று பட்டி மன்றம் மனதிற்குள் நடத்தி, உறங்க முடிவெடுத்து உறங்கி விட்டாள். அதன் பின் அவளுக்கு விழிப்பு வந்த போது மணி பத்து.

யாருமில்லை, அவள் மட்டுமே, வெளிச்சம் அதிகம் உள்ளே வராமலிருக்க, திரைச்சீலை இழுத்து விடப் பட்டு ரூம் இருட்டாய் வைக்கப்பட்டு இருக்க, எழுந்து முகம் கழுவி வெளியே வந்து பார்த்தாள்.

ஒரு நைட் பேன்ட் ஷர்ட் தான் அவளின் இரவு உடை, அந்த உடையில் அவள் படியிறங்க, முகத்தில் தண்ணீர் துவட்டப்படாமல் இருக்க, தலையும் தலைவிரி கோலமாய் இருக்க, படியில் இறங்கிக் கொண்டே, ஒரு ரப்பர் பேண்டில் கூந்தலை அடக்கி கொள்ள,

அவளின் இயல்பான செய்கையில் மிளிரும் நளினம் அவளின் அழகு, ராஜராஜனால் பார்வையை திருப்ப முடியவில்லை.

அவளுக்கு பிடிக்கவில்லை, அவள் வேண்டாம் என்று சொன்னவன் தான், இனி வேண்டாம் என்று அனுப்ப முடியாது என்று முடிவெடுத்து விட்டவன் தான், ஆனால் இதையெல்லாம் மீறி அவளின் அழகு, நளினம் தோரணை என்று அத்தனையும் அவனை கவர்ந்து இழுத்தது உண்மை. இது நாள் வரை அதனை வெளியில் தெரிய விட்டதில்லை. இப்போது பார்வை மாற்றம் தானாய் வந்தது.

ஆம்! நேற்று இரவு அங்கை உறங்கி விட்டாள், ஆனால் ராஜராஜனால் உறங்க முடியவில்லை. அண்ணன்கள் இருவரும் படிக்க போன பிறகே அவன் உறக்கம் தனியாய் தான். இதோ இப்படி அவன் குடும்பமாய் உறங்குவது ஏதோ ஒரு புதிய உணர்வை கொடுத்திருந்தது.

அந்த அறை, ராஜராஜனின் அறை, அந்த படுக்கை ராஜராஜனின் படுக்கை, இந்த ஒரு மாதமாய் அங்கையர்க்கண்ணி அங்கே இருக்க, பல வருடமாய் இருந்த அவனின் அறை இப்போது ஒரே மாதத்தில் அங்கையின் அறையாய் மாறியிருந்தது.

எங்கும் அவளின் பொருட்கள், அந்த அறையில் அவளின் வாசம், எங்கும் அவளின் வாசனையை கிளப்பி விட்டிருந்தது. மிகப் பெரிய அறை, அதனால் இடப் பற்றாக்குறை பொருட்களை வைப்பதற்கு வரவில்லை.

இப்போது கூட தில்லை சொல்லியிராவிட்டால் வந்திருக்க மாட்டான். வந்து விட்டான் இனி செல்வது என்பது கிடையாது. அதனால் இரவே முடிவெடுத்து விட்டான். அவளோடு எந்த சண்டையும் இருக்க கூடாது, வாக்கு வாதம் செய்யக் கூடாது, விட்டு கொடுத்து சென்று விட வேண்டும். பிடித்தால் சேர்ந்து வாழ்வது என்பது கிடையாது. பிடிக்காவிட்டாலும் சேர்ந்து தான் வாழ வேண்டும். அவளுக்கு என்னை பிடிக்க வைக்க வேண்டும், எனக்கு அவளை பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டவனால் உறங்க தான் முடியவில்லை.

இதோ அந்த முடிவை செயல் படுத்த நினைத்து அவளிடம் இணக்கமாய் பேச முற்பட்டான். அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டது, எவ்வளவு நேரம் தன்னால் இதை கடை பிடிக்க முடிகிறது என்று பார்ப்போம் என்று.

இவளை பார்த்ததும் ஓடி வந்த விகாஸ் அவளின் மேலேறி “ஃபீவர் போச்சா அத்தை” என்று அவளை தொட்டு பார்த்தான்..

“ஃபீவரா” என்று அவள் விழிக்க,

“ம்ம், நீ எழலைன்னதும் என்னை நொச்சி எடுத்துட்டான். அதனால நீ ரெஸ்ட் எடுக்கலைன்னா காய்ச்சல் வரும்னு சொன்னேன். அதுதான் இந்த கேள்வி” என்று நீண்ட விளக்கம் ராஜராஜனால் கொடுக்கப் பட்டது.

வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை, வேலை செய்யும் அக்கா மட்டுமே கண்ணில் பட, குழந்தைகள் இருவரையும் ராஜராஜன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ருஷ்டி அவனின் கையில் பாந்தமாய் அடங்கி இருந்தவள், இவளை பார்த்ததும் தாவ, ஏற்கனவே விகாஸ் வேறு கையில் இருக்க..

ஸ்ருஷ்டியை அவள் ஒரு கையால் பிடித்ததும் விகாஸை தூக்கி கொண்ட ராஜராஜன், “பாரு உன் மேல கை படாம அவனை தூக்கிட்டேன்” என்று சொல்ல, பதில் எதுவும் பேசவில்லை, எந்த முக பாவனையும் கூட காண்பிக்க வில்லை. ராஜராஜனை ஏதோ செய்தது. “போடி” என்று எப்போதும் போல மனம் சொல்ல விழைய, “அடங்குடா” என்று தன் மனதை அடக்கியவன்,

“சாரி” என்றான். எதற்கு என்பது போல பார்த்தவளிடம், “அத்தை பத்தி பேசினதுக்கு, ஒரு வேகத்துல நீ என்னை அந்த வார்த்தை சொன்னதும் வந்துடுச்சு. இனிமே இப்படி ஆகாது” என்று ஒப்புக் கொடுத்தான்.

அதற்கும் ஒன்றும் பேசவில்லை. பின் “எங்கே யாரையும் காணோம்” என்று கேட்க, “கோவிலுக்கு போறேன்னு போனாங்க, மொத்த குடும்பமும்” என்றவன்,

“அக்கா காஃபி குடுங்க” என்று ஒரு சத்தம் கொடுத்தவன், “குடிச்சிட்டு நீ குளிச்சிட்டு சாப்பிட்டு முடிச்சா, நான் வெளில கொஞ்சம் நேரம் போயிட்டு வருவேன் வேலையிருக்கு” என்றான்.

“நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்றவளிடம், “எப்படி பார்ப்ப, ரெண்டு பேரை விட்டுட்டு நீ குளிக்க போக முடியாது. அம்மா இவளுக்கு சத்து மாவு கஞ்சி ஊட்டி விட்டாங்க, கொஞ்சம் நேரம் கழிச்சு அழுதா சாதமும் பருப்பும் செஞ்சிருக்காங்களாம் குடுக்க சொன்னாங்க, மதியம் வந்துடுவாங்களாம், சொல்லச் சொன்னாங்க” என்றவன், பின் விகாஸை கூட்டி கொண்டு முன் புற ஹாலிற்கு சென்று விட, இவள் திரும்பவும் ஸ்ருஷ்டியை அவனிடம் விட்டு குளித்து வேகமாய் வரவும்,

அவளின் உடையை தான் கண்கள் பார்த்தது, அவனுக்கு அதன் பேர் எல்லாம் தெரியவில்லை. சுரிதார் போல தான், ஆனால் சுரிதார் இல்லை. கீழே பல்லீசோ பேண்ட்டும் மேலே ஒரு ஷார்ட் சல்வார் டாப்சும் அணிந்திருந்தாள்.

நல்ல மஞ்சள் நிறம் மேலே, கீழே பச்சை, மேலே ஒரு பக்கம் தொங்கும் ஷால், ஈரமான கூந்தல் விரித்து விடப் பட்டிருக்க, முகத்தில் பொட்டில்லை.

“குடுங்க, இனி நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி அவனிடம் வந்து ஸ்ருஷ்டியை வாங்க,

அருகில் வந்த அவளின் மீது வந்த சோப்பு வாசனையோ, ஷாம்பு வாசனையோ, இல்லை அவளின் வாசனையோ ஏதோ ஒன்று மயக்கியது.

“என்னோட மில்லுக்கு வர்றியா, நீ நம்ம மில் பார்த்திருக்கியா” என்று கேட்டுக் கொண்டே அவன் மேலே ரூம் போக..

ராஜராஜனோடு செல்வோமா வேண்டாமா என்று யோசித்த போதும், ஒரு மாதமாய் வீட்டின் உள் மட்டுமே இருக்க மூச்சு முட்டுவது போல இருக்க, அவன் வந்ததும் “சரி” என்று சொல்ல நினைத்திருக்க, இறங்கி வந்தவன் அவளை நெருங்கி வந்தான்.

அங்கை என்ன என்று பார்த்திருக்க, “முகத்தை காண்பி” என்று சொன்னான். எதற்கு என்று புரியாத போதும் முகத்தினை திருப்பவில்லை, அவள் வைக்கும் சிறிய பொட்டை அவளின் நெற்றியில் ஒட்டி விட்டான்.

சத்தியமாய் இதனை அங்கை எதிர்பார்க்கவில்லை!

“வெறும் நெத்தியாய் இருக்கிறது பார்க்க நால்லாயில்லை” என்று சொன்னவன், “வர்றியா மில்லுக்கு என்னோட” என்றான் மீண்டும்.

“ம்ம், ஆனா ரெண்டு பேரும் எப்படி சமாளிக்க, இவ கொஞ்சம் நேரத்துல தூக்கத்துக்கு அழுதா”

“பார்த்துக்கலாம், நீ சாப்பிட்டிட்டு அவளுக்கு சாதம் பால் எடுத்துக்கோ”

என்னவோ வெளியில் சென்றால் மனதிற்கு சற்று ஆசுவாசம் கொடுக்குமோ என்று நினைத்தவள் வேகமாய் அவன் சொன்னதை எல்லாம் செய்து “போகலாம்” என்று முன் நின்றாள்.

“இங்க குங்குமம் மிஸ்ஸிங்” என்றான் நெற்றி வகிட்டை காண்பித்து.

“அதுல நான் இதுவரை வெச்சதில்லை”

“இப்போ வெச்சிக்கோ” என்றான்.

உண்மையில் திருமணத்திற்கு முன் நெற்றியில் பொட்டே வைத்தாலும் ஆகிற்று, இல்லையென்றால் இல்லை. அப்படி பெரிய முக்கியத்துவங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் படவில்லை. ஏன் அதிகம் சாஸ்திர சம்ப்ரதாயங்கள் தெரியவும் தெரியாது.

அங்கைக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவளின் வாழ்க்கை முழுக்க முழுக்க அவளின் விருப்பம். எந்த கட்டுபாடுகளுமன்றி சுதந்திரமாய் வளர்ந்தவள்.

ஆனால் திருமணம் அவளின் விருப்பப்படி நடக்கவில்லை. வாழ்க்கையின் விந்தை அல்லவா? இரண்டு வருடம் ஆகிவிட்ட போதும் ஒரு உத்வேகத்தில் அவளே சரி என்று சொல்லி நடந்த திருமணம் என்ற போதும், இன்னும் மனம் தத்தளித்து நிலையற்று தத்தி தாவிக் கொண்டிருக்கிறது.

இவனோடு தான் வாழ்க்கை என்றாகி விட்டது தட்டி பேசி என்ன செய்ய போகிறோம் என்று நினைத்தவள், பூஜை அறைக்கு சென்று குங்குமம் எடுத்துக் கொண்டு கண்ணாடியை தேடிப் போக, “கொடு” என்று அவளின் முன் வந்து நின்றவன் அவனே வைத்து விட..

ராஜராஜனுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு, அங்கை இன்னும் அமைதியாகி விட்டாள்.

பின்பு பைக்கில் விகாஸ் முன் அமர, ஸ்ருஷ்டியை வைத்துக் கொண்டு இருபுறமும் காலிட்டு அங்கை பின் அமர, பைக்கை மிதமான வேகத்தில் செலுத்த ஆரம்பித்தான்.

அரிசி மில் செல்ல, வெளியில் இருந்து பார்த்திருக்கிறாள் ஆனால் உள்ளே வருவது இதுதான் முதல் முறை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சின்ன இடமாய் தோன்ற, வாயிலில் இருந்து சற்று உள்ளே வந்து திரும்பினால் தான் மில்லின் இன்னொரு வாயில் தெரிந்தது.

நல்ல பெரிய இடம், “அம்மாடி, இதென்ன இவ்வளவு பெரிய இயந்திரம்” என்று பார்த்திருந்தாள். அவள் பார்த்ததில்லை, பல அடி உயரம், நூறு அடி இருக்குமா என்று மனதிற்குள் நினைத்தபடி இறங்க,

“இந்த பக்கம் போகலாம், அங்க மூட்டை அடுக்கி இருக்கும், உமி வேற அங்க அங்க பறக்கும்”

இந்த பக்கம் பார்வையை ஓட்டினால் பெரிய அகலமான பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.

“இது இன்னொரு பிளான்ட் போடலாம்னு” என்றான். “ஓஹ்” என்று சொன்னாள்.

உள்ளே இருந்த ஒரு ரூமிற்கு அழைத்து சென்றான். நடுவில் இருந்தது, கண்ணாடி கதவுகள். அங்கிருந்த பார்த்தால் வேலை இடம் அத்தனையும் தெரிந்தது.

இவன் விகாஸை வைத்திருக்க, அவள் ஸ்ருஷ்டியை, விகாஸ் இறங்க முற்பட்ட போதும் ராஜராஜன் விடவில்லை. “அப்படியே பாரு விக்கி” என்று விட்டான்.

“இது என்ன? இது என்ன?” என்று ஆர்வமாய் கேட்டுக் கொண்டாள், அதற்குள் ஸ்ருஷ்டி பசிக்கு சிணுங்க, அங்கை சாதத்தை பிசைந்து ஊட்ட ஆரம்பிக்க ராஜராஜன் உதவினான்.

அங்கிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது எல்லாம் தெரிவது போல, உள்ளே நடப்பதும் தெரியும்.

வேலை செய்பவர்கள் எல்லோரும் அங்கையை பே என்று தான் பார்த்தனர்.

அப்போது லோடு ஏற்றும் லாரி வர, “நீ பார்த்துக்கோ” என்று சொல்லி விகாஸை தூக்கி கொண்டு வெளியே சென்று மேற் பார்வையிட ஆரம்பித்தான்.

ஆட்கள் எல்லாம் அரிசி மூட்டை தூக்கி வந்து லாரியில் அடுக்க, “நீங்களும் தூக்குவீங்களா மாமா?” என்று விகாஸ் கேட்க, “ராமு மாமா” என்று அழைத்தவன், “இவனை கீழ விடாதீங்க” என்று சொல்லி,

“இப்போ பாரு” என்று அவனிடம் சொல்லி, சட்டையை கழற்றி விகாஸிடமே பிடி என்பது போல கொடுத்தவன், வேஷ்டியை ஏறக் கட்டி அவனும் மூட்டைகளை சுமந்து ஏற்ற ஆரம்பித்தான்.

சில சமயம் பேன்ட் சட்டை என்றாலும், பெரும்பாலும் வேஷ்டி சட்டை தான் அவன். மில்லில் எந்த வேலை என்றாலும் மடித்து கட்டி களமிறங்க அவனுக்கு வசதியான உடை.

அசால்டாய் மூட்டைகளை தூக்கும் அவனின் தோளின் திண்மையை, நெஞ்சுரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள், விகாஸிற்காக என்று ஆரம்பித்தாலும் மூட்டை ஏற்றி முடிக்கும் வேலை முடியும் வரை இருந்தான்.

ராஜராஜன் முடிக்கும் வரையுமே பார்த்தும் பாராமல் அவனை தான் பார்த்திருந்தால் அங்கையர்க்கண்ணி. இவனோடு என்னால் இருக்க முடியுமா என்று? இருந்தாக வேண்டுமே என்றும் தோன்ற, எப்போதும் இல்லாத அளவில் மனதில் சஞ்சலம், ஏனென்று அவளாலேயே வகையறுக்க முடியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

வேலை முடித்து அங்கிருந்த தண்ணீர் பைப்பில் முகம் கை கால் கழுவி சட்டையை மாட்டி ராஜராஜன் வந்த போது, ஸ்ருஷ்டி அங்கையின் தோளில் உறங்கியிருந்தாள்.

“போகலாமா” என்று ராஜராஜன் கேட்க, போகலாம் என்று தலையசைத்து எழுந்த அங்கையிடம் பெரும் மௌனம் சூழ்ந்திருந்தது.

பின்பும் ஒரு பைக் பயணம், “குழந்தை தூங்கறா நல்லா பிடிச்சிக்கோ” என்று ராஜராஜன் சொல்ல, ஒரு கை குழந்தையை இறுக்கிப் பிடிக்க, இன்னொரு கை பிடிமாணத்திற்காக தான் எனினும் ராஜராஜனின் தோளை பிடித்துக் கொண்டது.







ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love: :love: :love:

10 மணியா :eek: உனக்கும் உன் அண்ணன் பசங்களுக்கும் பார்த்து பார்த்து பண்ணுறாங்க....... நீ 10 மணி வரை தூங்குறியேமா :p:p:p
இவன் தான் காரணமா உன் தூக்கத்துக்கு.......... ஸ்கிரீன் மூடி வச்சிருக்கான் :p:p:p

பிடிச்சதுனால தூக்கம் வரலையா உனக்கு :D:D:D
இப்போ பொட்டு குங்குமம்........ நீ அசத்துடா ராஜா......... உங்கம்மா வந்து என் பையனை காணோமேன்னு தேடப்போறாங்க......

நீ என்னடா தார் பாச்சுட்டு வேலையில் இறங்கிட்ட........ உன் வீட்டுக்காரி கண்ணில் கண்ணீர் இறங்குது........

மனசு சஞ்சலமா இருந்தாலும் சப்போர்ட்க்கு ராஜராஜன் தோள் தான்........ symbolicகா சொல்றாளோ :unsure:

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய் கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே.........
 
Last edited:
வரும் அனா வராது ரேஞ்சுல அங்கைக்கு
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருச்சு ராஜராஜனுக்கு..Screenshot_20191102-013935_YouTube.jpg
 
Last edited:
இதோ இப்படி அவன் குடும்பமாய் உறங்குவது ஏதோ ஒரு புதிய உணர்வை கொடுத்திருந்தது........

பெத்துக்காமலே 2 புள்ளைங்க மாதிரி இருக்கு உங்க நடவடிக்கை.......
என்னமா பார்த்து பார்த்து பண்ணுறான் இவன்...... அப்புறம் ஏன் விழமாட்ட அவ???

கரிஷ்மா உனக்கு உடம்பெல்லாம் மூளை & ஐடியா தான் போல.........
அம்மா ராஜலக்ஷ்மி சீக்கிரமா வீட்டுக்காரரோட வந்து பொண்ணை பாருங்க......
(வந்தால் கதை முடிஞ்சுடுமே :cry:)
 
Last edited:
Top