Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 14 1

Advertisement

Admin

Admin
Member
ஒரு பார்ட் மட்டும் இன்றைக்கு மற்றொன்று நாளைக்கு :


அத்தியாயம் பதினான்கு :

அவர்கள் வீடு வந்த போது, எல்லோரும் வீடு வந்திருந்தனர்.

“எந்த கோவில் பாட்டி போனீங்க” என்று அங்கை கேட்க, வெகு நாட்களுக்கு பிறகு நாச்சியிடம் இயல்பாக ஒரு பேச்சு.

அவர் அதற்கு பதில் சொல்லாமல், “நீங்க எங்க போனீங்க” என்றார்.

“மில்லுக்கு” என்று சொல்லிக் கொண்டே சிறிய மெத்தையை தரையில் விரித்து ஸ்ருஷ்டியை படுக்க வைத்தவள், “விக்கி, பில்லோ எடுத்துட்டு வா” என்று அவனிற்கு வேலை ஏவினாள்.

அவனும் சமத்தாக மேலே இருந்து எடுத்து அப்படியே கீழே வீசினான்.

“ஓய், என்ன பண்ற நீ” என்று அவள் அதட்ட,

அங்கிருந்து அவன் “வீசுரேன் அத்தை, கேட்ச் பிடிங்க” என்றான்.

“அடி வாங்க போற , பாப்பா மேல விழப் போகுது, கீழ வந்து குடுடா” என்று பேசிக் கொண்டிருந்தாள்.

“ம்கூம், நீங்க கேட்ச் பிடிங்க” என்று அவன் இன்னொன்றையும் வீச, “விக்கி” என்று அவள் கத்த, அவளின் குரல் உரத்து ஒலித்தது.

அது விகாஸிற்கு விளையாட்டாய் போய்விட, மீண்டும் ஒன்றை தூக்கி அவன் வீச, “விகாஸ்” என்ற ஒற்றை ராஜராஜனின் அழைப்பிற்கு அப்படியே அடங்கியவன், இன்னொரு தலையணையை சமத்தாய் கீழே கொண்டு வந்து கொடுக்க..

வீடே வேடிக்கை பார்த்தது. பின்னே அங்கையின் குரல் அந்த வீட்டினில் உரத்து ஒலித்தது இந்த ஒரு மாதத்தில் அன்று தான். அவளின் இறுக்கமும் தளர்ந்து அவள் இயல்பாய் இருந்ததும் அன்று தான்.

“குழந்தைங்களை கொண்டு வந்து விட்டு இந்த கரிச்சுமா பொண்ணு நல்ல வேலை செஞ்சிருக்கு” என்று கரிஷ்மாவின் பெயரை கொலை செய்து நாச்சி பேச, அவர்களை விட்டு மீண்டும் ராஜராஜன் கிளம்பி விட்டான்.

“சாப்பிட்டு போடா” என்ற தில்லையின் குரலுக்கு கொஞ்சம் நேரத்துல வர்றேன் என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

அவர்கள் எங்கே சென்றார்கள் என்று ராஜராஜனுக்கும் அங்கையற்கண்ணிக்கும் தெரியாமலே போயிற்று. அவர்கள் சென்றது ராஜலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்க, நேற்று “அம்மா ஞாபகம்” என்று அவள் சொல்லியவுடன், தங்கையாக அழைக்க சென்றார்களோ இல்லையோ தங்கள் வீட்டு மருமகளின் அம்மாவாக அழைக்கக் சென்றார்கள்.

அவர்கள் சென்ற போது ராஜலக்ஷ்மி மட்டுமே வீட்டினில், அன்பழகன் ஊரிலிருந்து வந்திருக்கவில்லை. கலக்டர் பங்களா, ராஜலக்ஷ்மி மட்டும் தனியாக இருந்தார். இவர்களை “உள்ளே விடுவதா? வேண்டாமா?’ என்று சென்ட்ரி கேட்க,

இவர்கள் வந்தது தெரிந்ததும் கேட்டிற்கே வந்து அழைத்து சென்றார். முப்பத்தி இரண்டு வருடத்திற்கும் மேலானா பிரிவு, அப்படி ஒன்றும் பிறந்த வீட்டின் மீது பாசம் பொங்கிவிடவில்லை. இவர்களால் தான் எல்லாம் என்ற கோபம் அடி மனதில் அப்படியே இருந்தது. தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்த வீட்டினர் என்ற முறையில் தான் அவரின் கவனிப்புமே. நன்றாய் உபசரித்தார் பேசினார், ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று குறைந்தது. அதாகப்பட்டது தள்ளியே நின்றார்.

இவர்கள் வீட்டிற்கு அழைப்பு விடுக்க, “அவர் ரெண்டு மூணு நாள்ல இங்க வர்றேன்னு சொல்லியிருக்கார். அவர் வந்ததும் வர்றேன்” என்று சொல்லிவிட்டார்.

இவர்கள் சென்றதோ, ராஜலக்ஷ்மி சொன்னதோ, எதுவும் ராஜராஜனிற்கும் அங்கைக்கும் தெரியாது. ராஜலக்ஷ்மியோ அன்பழகனோ சொல்லியிருப்பர் என்று அவர்கள் நினைத்திருக்க, அம்மாவும் மகளும் பேசிக் கொள்வதில்லை. அப்பாவும் ஃபோன் செய்தால் இவள் மூட் இருந்தால் எடுப்பால், இல்லையென்றால் இல்லை என்று இவர்களுக்கு எப்படி தெரியும்?

குழந்தைகள் உடன் இருந்த நாட்களில் அங்கைக்கு நேரம் முழுதாய் அவர்களுடன் சென்று விட, பாலியில் இருந்து போட்டோ அனுப்பிக் கொண்டே இருப்பாள் கரிஷ்மா.

இப்போது ராஜராஜனின் படுக்கை இவர்களுடன் தான். பழகி விட்டது அவனிற்கு. ஒரு பெண்ணுடனான தனிமையோ, இல்லை மனைவியுடனான தனிமையோ, எங்கும் அவனுக்கு தெரியவில்லை. உறங்கும் வரை விகாஸிற்கு கதைகள் சொல்வது, பின் காலையில் எல்லோருக்கும் முன் ஸ்ருஷ்டி அவனை எழுப்பி விடுவாள்.

அங்கையற்கண்ணி யுடன் தனிமை என்பது இல்லவே இல்லை!

அன்று இரவும் ஸ்ருஷ்டி உறங்கியிருக்க, மனோவுடனும், கரிஷ்மாவுடனும், விடியோ காலில் பேசி முடித்திருந்தனர் அவளும் விகாஸும்.

எப்போதும் ஃபோட்டோ எல்லாம் ராஜராஜன் பார்க்க மாட்டான். “மாமா, அப்பாவும் அம்மாவும் டைவிங் போனாங்க” என்று விகாஸ் சொல்லி அவர்களின் பாலி டைவிங் வீடியோ காண்பிக்க,

“ஆங்” என்று தான் அந்த வீடியோவையும் மற்ற வீடியோக்களையும் பார்த்திருந்தான். ஃபோட்டோ மற்றும் வீடியோவை மாற்றி மாற்றி விகாஸிடம் கொடுத்து ராஜனை பார்க்க சொல்லியது அங்கையே.

ஆனாலும் அதனை எப்படி பார்ப்பது என்று தடுமாறினான். அவர்களுக்கு அது ஒன்றுமில்லை ஆனால் ராஜராஜனிற்கு அப்படி இல்லையே!

கரிஷ்மாவும் மனோவும் பல நேரங்களில் ஒன்று போல உடை, ஸ்லீவ்லெஸ் டீ ஷர்ட், குட்டி ட்ரவுசர் தான் கரிஷ்மாவின் உடை. “என்னங்கடா இது” என்று நொந்து விட்டான். இதை போய் நான் பார்க்க இவள் எதற்கு கொடுக்கின்றாள் என்பது போல. திரைப்படங்களில் தான் பெண்களை இப்படி பார்த்திருக்கின்றான். நேரில் பெண்களை இப்படி பார்த்தது கிடையாது. அதுவும் கரிஷ்மா அணிந்திருந்தது அங்கே அதிகப் படியான உடை. பின் தெரிந்தவர்கள் எல்லோரும் இன்னும் கவர்ச்சியாய் உடை அணிந்திருக்க, ம்ம் ஒன்றும் சொல்வதிற்கில்லை, இவர்களின் கலாச்சாரம் என்று நினைத்துக் கொண்டான்.

அதுவும் ஒரு இடத்தில், தண்ணீர் இருக்க, அதில் கையில் க்ளாசுடன் மனோவும் கரிஷ்மாவும், “அட என்ன கொடுமைடா சரவணா இது?” என்ற எண்ணம் தான் ராஜராஜனிற்கு. அங்கையின் முகத்தை தான் பார்த்தான். அவள் எல்லாம் இயல்பு போல தான் பார்த்திருந்தாள்.

வாழ்க்கை முறை வித்தியாசம் மலையளவு!

ராஜராஜனின் முகத்தை பார்த்தவள் “என்ன?” என, “என்ன இது தண்ணி அடிக்கறாங்க?” என்று கேட்டே விட்டான்.

“அது ஜஸ்ட் கூல் பீர், அண்ணா கைல இருக்குறது. ரொம்ப கொஞ்சமா குடிப்பாங்க, அண்ணி கைல ரெட் வைன் தான்” என்றாள். இது சகஜம் என்பது போல பேச்சு!

அவர்களை பற்றி எனக்கென்ன என்பது போல தூக்கி தூர வைத்தவன், அவர்களின் வாழ்க்கை முறை எனக்கு அதை விமர்சிக்க உரிமையில்லை, அவனின் தங்கைக்கு புகைப் படத்தை அவன் அனுப்பிவைக்கிறான். அதை அவள் பார்க்கின்றாள். இது அவர்களுக்கான உறவு என்று முடித்துக் கொண்டவனுக்கு இப்போது மனதில் இரண்டு முக்கியமான கேள்விகள்!

விகாஸ் உறங்கி விட்டவுடன் அவனை சரியாய் படுக்கவைத்தவன், நேராய் படுத்துக் கொண்டே அங்கையிடம் “தூங்கிட்டியா” என்றான்.

உறங்க ஆரம்பித்து இருந்தவள் அவனின் குரலில் உடனே விழித்து அவனின் புறம் திரும்பி படுத்து “என்ன?” என்றாள்.

ஆனால் அவன் நேராய் படுத்துக் கொண்டே, “நீயும் இந்த மாதிரி ட்ரெஸ் போடுவியா, நீயும் குடிப்பியா?” என்று கேட்டு விட,

“ஆங்” என்று விழிப்பது இப்போது அவளின் முறையாயிற்று. என்ன சொல்வது என்று தெரியாமல், “இது ஒரு தப்பான விஷயம் கிடையாது” என்றாள்.

“நான் தப்புன்னு சொல்லலையே, நீயும் அந்த ட்ரெஸ் போடுவியான்னு தானே கேட்டேன்”

“ம்ம், ஊர்ல போடுவேன். ஆனா இங்க வரும் போதே அம்மா இந்த மாதிரி இங்க போடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

“குடிப்பியா?”

“ஒரு தடவை பீர் குடிச்சிருக்கேன், ஒரு மிலிட்டரி மெம்பெர்ஸ் பார்ட்டில தான். அப்போ எனக்கு பதினேழு வயசு, இன்னும் நல்லா ஞாபகமிருக்கு, ஏன்னா அம்மா என்னை முதலும் கடைசியுமா அடிச்சது அப்போதான்!”

“அடி பின்னி எடுத்துட்டாங்க , அப்பா நடுவுல வந்து அப்பாவும் ரெண்டு அடி வாங்கினார். அதுக்கப்புறம் நிறைய பார்ட்டீஸ் போயிருக்கேன். ஆனா தொட தோணவே இல்லை”

“உங்க அண்ணியை திட்ட மாட்டாங்களா?”

“அச்சோ, அம்மாக்கு தெரியாது. மனோ தண்ணி அடிக்கறதே தெரியாது. அப்புறம் அண்ணிது எப்படி தெரியும். ஆனா அப்பாக்கு எல்லாம் தெரியும். அவர் கிட்ட மறைக்க முடியாது, கண்டு பிடிச்சிடுவார். அதனால எதுன்னாலும் நானும் அண்ணாவும் சொல்லிடுவோம்” என்றாள்.

ராஜராஜன் பின்பு எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, “நீங்க ரொம்ப ஓல்ட் ஃபாஷனா” என்று கேட்டவளிடம்,

“இதுவரை தெரிஞ்சிக்கிற அவசியம் வந்ததில்லை” என்றான். இப்படியாக அவர்களுக்குள் சகஜமான பேச்சுக்கள் வந்திருந்தது.

அடுத்த இரண்டு நாளில் மனோவும் கரிஷ்மாவும் பாலியில் இருந்து வருவதாக இருக்க, அன்பழகன் மட்டும் இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார்.

“இன்னும் நாங்க பொண்ணுக்கு சீர் செய்யலை, அதற்கான சந்தர்ப்பம் அமையலை. மனோ வந்த பிறகு அடுத்த நாள் கொண்டு வரலாம்னு இருக்கோம். நல்ல நாள் அன்னைக்கு, நீங்க சரின்னு சொன்னா!” என்று நாச்சியிடம் பவ்யமாய் பேசிக் கொண்டிருந்தார்.

ஸ்ருஷ்டியை மடியில் வைத்துக் கொண்டு அவர் அமர்ந்திருக்க, பக்கத்தில் விகாஸ்!

எதிரில் ஓர் ஓரமாய் தில்லையுடன் அங்கை நின்று கொண்டிருந்தாள். அந்த வீட்டின் பழக்கம், பழக ஆரம்பித்து இருந்தாள். அவளின் பெரிய மாமியாரும் மாமியாரும் நிற்க.. அவள் எப்படி அமர்வது. யாரும் சொல்லவில்லை பழக்கங்கள் பழக ஆரம்பித்து இருந்தது.

“எங்களுக்கு ஒண்ணுமில்லை, என் மத்த பேரன்களுக்கு சௌகரியப்படுமான்னு கேட்கறேன். அவனுங்க ரெண்டு பேரும் சென்னையில, அவங்களுக்கு லீவ் கிடைச்சா கொண்டு வாங்க. அவங்க இல்லாம நாங்க விசேஷம் பண்ண முடியாது, அப்படியே ஊர்லயும் கல்யாணம் விருந்து வைக்கலை, வெச்சிடுவோம்”

“அப்படியே உங்க பக்கம் யாராவது இருந்தா கூப்பிட்டுகங்க”

“எங்க பக்கமா?” என்று நிறுத்தியவர், “எங்க பக்கம் யாரும் கிடையாது. மனோ மாமனார் வீடு மட்டும் தான். அவங்களுக்கு இப்படி உடனே வர சௌகர்யப்படுமான்னு எனக்கு தெரியாது. இருந்தாலும் கூப்பிடுவோம். இல்லைன்னா எங்க பக்கம் நான், ராஜி, மனோ, கரிஷ்மா, குழந்தைங்க தான்” என்றார்.

“ராஜி ஏன் வரலை?”

“பொண்ணுக்கு சீர் கொண்டு வரும் போது வருவா” என்று முடித்துக் கொண்டார்.

இப்படியாக ஊரையே கூட்டி ஒரு பெரிய விருந்து, மூன்று வேளையும்!

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

அங்கை நீயேம்மா அந்த போட்டோ வீடியோ அவனுக்கு காட்டின???
என்ன விஷயம் அவனுக்கு சொல்லுற அது மூலமா???

தூங்கிட்டியா :p:p:p சரியான கேள்வி கேக்குறியே :D

கரிஷ்மா வந்து பிள்ளைகளை கூட்டிட்டு போய்டுவாளே 2 நாளில்.......
அப்புறம் தான உங்களுக்கு தனிமை......

ராஜலக்ஷ்மிக்கு என்னவாம்??? எல்லாம் இவங்களால தான்??? அவங்களுக்கு வேற கல்யாணம் பார்த்த கோபமா??? இல்லை பொண்ணுக்கு கல்யாணம் நடந்த கோபமா???
பொண்ணுக்கு சீர் என்ன கொடுக்குறாங்க??? வாங்கின சொத்து???

நீங்க ரொம்ப old fashionனா???
இதுவரை தெரிஞ்சுக்கிற அவசியம் வந்ததில்லை :unsure:

அங்கை typical மருமகள் ஆகிவிட்டாள் போல.......
இனி தான் கல்யாண விருந்து ஊருக்கும்........
அப்போ கல்யாணத்தப்போ என்ன நடந்தது???

இன்னும் அங்கை என்ன படிச்சிருக்கானு சொல்லலை மல்லி :unsure:
 
Last edited:
நன்றி மல்லி ?
ராஜலட்சுமி இன்னும் கெத்து மெயின்டெய்ன் பண்றாங்க...

அப்போ இன்னொரு பாலி சீன் ராஜன் - அங்கை கூட உண்டா.. ?
 
Last edited:
Top