Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 14 2

Advertisement

Admin

Admin
Member
அவர்களின் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்திருக்க, அங்கே அங்கையற்கண்ணியை பார்த்தவர்கள் கூட குறைவு தான், ராஜலக்ஷ்மியை பார்த்தவர்கள் தான் அநேகம். சொல்லப் போனால் அங்கையற்கண்ணியின் அக்கா போல தான் இருந்தார். வயதான தோற்றம் எங்கேயும் இல்லை.

ஒன்று அன்பழகனுடன் இல்லை மனோவுடன் இருந்தார், இல்லை கரிஷ்மா உடனிருந்தாள். ஆனால் ராஜியின் பார்வை முழுவதும் மகளிடம் தான். ஊரே வியக்கும் அளவிற்கு அன்பழகனும் மனோவும் சீர் வரிசையை இறக்கியிருந்தனர்.

அவர் மகளை மகளை பார்க்க, அவளோ அப்பாவை அம்மாவை என்று யாரையும் கண்டு கொள்ளவில்லை. எது என்றாலும் அவளின் பேச்சு கரிஷ்மாவுடன் மட்டும் தான் மனோவை கூட தூர தான் நிறுத்தினாள். ஏன் இன்னும் கோபம் எதற்கு கோபம், அவளுக்கே தெரியவில்லை.

ஸ்ருஷ்டி இன்னும் யாரிடமும் செல்லாமல் அத்தையிடம் தொத்திக் கொண்டிருக்க, விகாஸோ இன்னும் அவனின் மாமன் பின்னே!

இங்கு வந்த பிறகு எப்போதும் எல்லோருடனும் அளவாய் பேசும் அங்கை அன்று ராஜராஜனின் அண்ணன்கள் அக்காள்கள் அவர்களின் வீட்டினர்கள் என்று அனைவருடனும் நன்கு பேசினாள்.

எல்லோரும் எடுத்துக் கட்டி ஆளுக்கு ஒரு வேலையாய் செய்து கொண்டிருக்க, சுவாமிநாதன் அன்பழகனை அழைத்து அவர்களின் மற்ற சம்மந்திகளுக்கு அறிமுகம் செய்ய, நாச்சி மகளை கைபிடித்து அழைத்து வந்தவர், “என் பொண்ணு” என்று இன்ன பிற சம்மந்திகளுக்கு அவரும் அறிமுகம் செய்தார்.

இப்படியாக விழா சிறப்பாக முடிய, மகளை தனிமையில் சந்தித்தும் ராஜலக்ஷ்மி கண்கலங்க, “ஷ், இப்ப எதுக்கு அழறம்மா”

“நீ என்கூட பேசவே மாட்டேங்கற” என்றார் தேம்பியபடி.

“ஷ், மா” என்றவள், “எனக்கு உன்னோட நல்லா பேச முடியாது, நல்லா பேசினா, நீ என்னை கொஞ்ச நான் விட்டா, அடுத்த நிமிஷம் எனக்கு உன்னோட வரத் தோணும். எனக்கு இங்க இருக்கவே முடியலைம்மா புரிஞ்சிக்கோ , ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருந்துட்டு இருக்கேன். அப்பாவோட முட்டாள் தனம் என் வாழ்க்கை மட்டுமில்ல, ராஜனோட வாழ்க்கையும் சேர்த்து கெடுத்து இருக்கார்”

“வேறயாரையாவது அவர் கல்யாணம் பண்ணியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பார். எங்களுக்குள்ள அந்த சந்தோசம் வருமான்னு கூட தெரியலை, எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு”

“எனக்கு இதெல்லாம் ரொம்ப டென்ஷனா இருக்கு, அதனால என்னை நான் பார்த்துக்குவேன், நீ அப்பா கூடப் போ, அவரை தனியா விடாத, அவரோட சண்டை போடாத, புரிஞ்சதா?” என்று சொல்லி ஒருவாறு அவரை தேற்றி அனுப்பி வைத்தாள்.

நகைகளும் பணமும் இருந்த பெட்டியை நாச்சியிடம் அன்பழகன் கொடுத்திருக்க, அதனை விருந்தினர் எல்லோரும் சென்ற பிறகு வீட்டினர் மட்டும் இருந்தனர். ராஜராஜனின் அண்ணன்கள் குடும்பமும் அக்காள்கள் குடும்பமும் இருக்க அதனை நாச்சி காண்பித்து கொண்டிருந்தார்.

அன்பழகன் தனியாய் நகையும் பணமும் கொடுத்திருக்க, மனோகணபதி தனியாய் நகையும் பணமும் கொடுத்திருக்க, கரிஷ்மா அவளின் பங்கிற்கு தனியாய் நகையும் பணமும் கொடுத்திருக்க..

“ம்ம்ம்” ராஜராஜனை பார்த்து அவனின் அண்ணன்கள் அக்காள்களுக்கே “பாருடா, எல்லாம் மாறிப் போச்சு” என்று தான் தோன்றியது.

ஆம்! அவனின் முன்னேற்றதிற்காய் அவர்கள் உதவி இருக்க, இன்று அதெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது அவனுக்கு வந்த நகையும் பணமும்.

“இதென்ன கிழவி, நகை அவங்க பொண்ணுக்கு குடுக்கறாங்க, பணம் எதுக்கு வாங்கின?” என்றவனிடம், “இதென்னடா கூத்தா இருக்கு, உங்க அக்காங்களுக்கு நாங்க கூட தான் குடுத்தோம், உங்க அண்ணிங்களுக்கு நாங்க கூட தான் வாங்கினோம்” என்றார் நாச்சி.

“அதெல்லாம் இவ்வளவு பணமில்லை”

“குடுத்தா வாங்கி போடுவியா? சும்மா அதையும் இதையும் பேசறான்” என்ற நாச்சி, “நாளைக்கு நகையை கொண்டு போய் பேங்க்ல உங்க ரெண்டு பேர் பேர்லயும் லாக்கர் தொறந்து அதுல வெச்சிடு.

பணத்தையும் பேங்க்ல போட்டுடு” என்று சொல்ல,

“என்ன பண்ணனும்னு நான் முடிவு பண்ணிக்கறேன்”

“என்ன பண்ணுவ நீ ராஜா, உன் பொண்டாட்டிக்கிட்ட எல்லாம் உன்னதுன்னு குடுக்க போறியா? போடா கூறு கெட்டவனே, ஒழுங்கா நான் சொல்றதை செய்”

“நீ உன் வேலையை பார் கிழவி, இவ்வளவு பணத்தை பேங்க்ல போட்டா எப்படி வந்ததுன்னு கணக்கு கேட்பாங்க” என்று அவரை அதட்டி விட்டு, “நகை பணத்தை எடுத்து பத்திரமா வெச்சிக்கோ” என்று அங்கையிடம் சொல்லி அவன் மேலே செல்ல,

தில்லையிடம் “அத்தை, இதை என்னால மேல தூக்கிட்டு போக முடியாது, நீங்களே உங்க பிள்ளையை தூக்கிட்டு போக சொல்லுங்க” என்று அவரின் காதை கடித்தாள்.

“ராஜா இதை உங்க ரூம்க்கு எடுத்துட்டு போ” என்று தில்லை சொல்ல, இறங்கி வந்து தூக்கி சென்றான்.

இரண்டு நடை நடந்து ரூமில் எல்லாம் வைத்தவன், காலையில் இருந்து செய்த வேலைகளால் அக்கடா என்று நீட்டி படுத்துக் கொள்ள, இரவு உணவிற்கு கூட அவன் கீழே இறங்கி வரவில்லை, உறங்கிவிட்டான்.

இரவு உணவிற்கு பின் விருந்து அலைச்சலில் எல்லோரும் விரைவில் படுக்கப் போய்விட, ஊரிலிருந்து வந்த இரு மகள்களும் மருமகள்களும் கூட படுக்கச் சென்று விட, வாசுகியும் தில்லையும் வேலையாட்களை வைத்து எல்லாம் ஒதுங்க செய்து கொண்டிருந்தனர்.

அது வரையிலுமே பட்டுப் புடவையில் இருந்த அங்கை “நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்” என்று மேலே வந்து உடை மாற்றி சென்று அவர்களுடன் நின்று மேற்பார்வை பார்த்திருந்தாள்.

அந்த வகையினில் நாச்சிக்கும் சுவாமிநாதனுக்கும் தமிழ்செல்வனுக்கு மிக திருப்தி, பொறுப்பாய் இருக்கிறாளே என்று.

யாரும் எதுவும் செய்யப் போவதில்லை, ஆனால் எல்லாம் ஒதுங்க செய்யும் வரை, அதனை பார்க்க வேண்டும், அதனைக் கூட மற்ற பிள்ளைகள் வந்தவர்கள் பார்க்காத போது, வீட்டினலாய் எல்லாம் முடியும் வரை அவள் நின்றாள்.

பின் பணம்கொடுக்க வேண்டி இருக்க “ராஜராஜனை எழுப்பும்மா” என்றார் சுவாமிநாதன்.

“எதுக்கு மாமா நல்லா தூங்கறாங்க”

“பணம் குடுக்கணும்மா அவனுக்கு தான் எவ்வளவுன்னு தெரியும்”

மேலே அவனை எழுப்பச் செல்ல, இருந்த களைப்பில் லேசாய் வாய் திறந்து தூங்கும் அவனை எழுப்ப மனதில்லாமல், கீழே வந்து, “என்னை பார்க்க சொன்னாங்க” என்று அவளாய் சொல்லி, பணம் தான் பெட்டி பெட்டியை இருந்ததே, பணத்தை கொடுத்து அவர்களை அனுப்பினாள்.

பின் தில்லையும் அவளும் மட்டுமே, “பசி தாங்கமாட்டான் அவன் அங்கை, எதுக்கும் இந்த இட்லி சாம்பார் கொண்டு போய்டு , தூக்கத்துக்கு நடுவுல எழுந்தா பசிக்குதுன்னு எழுப்புவான்” என்று சொல்ல,

இப்படியாக வரவு செலவுகள் வீட்டின் பொறுப்பு கணவனின் பொறுப்பு என்று அத்தனையையும் ஒரே நாளில் அவளாகவே எடுத்துக் கொண்டாள்.

மேலே சென்று அவள் படுக்க, அந்த அரவத்தில் விழித்தவன், இவளை பார்த்ததும் “தூங்கற நேரமாகிடிச்சா. பணத்துக்கு நிப்பாங்களே” என்று வேகமாய் எழ,

“ஈசி, நான் குடுத்துட்டேன், காலையில பேசிக்கலாம்” என்று கண்ணை மூட, “பசிக்குது என்று படுக்கையில் இருந்து இறங்கி நின்றான்.

“அத்தை குடுத்து விட்டாங்க இட்லி இருக்கு” என்று விட்டாள். எழுந்து சென்று பரிமாறவெல்லாம் இல்லை. அவனும் எதிர்பார்க்கவில்லை. அங்கேயே அமர்ந்து உண்டவன், பின்பு ஒரு குளியல் போட்டு படுக்கைக்கு வந்து படுத்தான்.

அப்போதுதான் தான் வித்தியாசமே தெரிந்தது, முதல் முறை தனியாய் இருவரும் ஒரே படுக்கையில், இவன் புறம் தான் திரும்பி படுத்து கண்மூடி இருந்தாள்.

உறங்கி விட்டாளா என்று பார்க்க உறங்கி விட்ட மாதிரியும் இருந்தது, உறங்காத மாதிரியும் இருந்தது.

விழியெடுக்காமல் அவளை பார்த்தான்.. எப்போதும் போல வாய் மெதுவாய் முணுமுணுத்து “ஜாதிக் குதிரை” என்று..

அவனின் முணுமுணுப்பில் விழி திறந்தவள் “ஏதாவது சொன்னீங்களா?” என்றாள்.

“இல்லையே” என்றான் அவசரமாய்.

“இல்லை ஏதோ சொன்ன மாதிரி இருந்தது” என்று நிச்சயமாய் அங்கை சொன்னாள்.

“ம்ம், ஜாதி குதிரைன்னு சொன்னேன்” என்றான் “எனக்கென்ன உன்னை பார்த்து பயமா?” என்ற பாவனையில்.

“அப்படின்னா”

“ம்ம், குதிரைல நிறைய விதம். ஜாதி குதிரைன்னா அது ஒரு வகை ன்னு சொல்லுவோம். ரொம்ப ஸ்பெஷல், எல்லோராலையும் அடக்க முடியாதுன்னு சொல்லலாம் இல்லை எல்லோர்கிட்டயும் அடங்காதுன்னு சொல்லலாம்” என்றான் அவளை ரசனையாய் பார்த்தபடி.

அது அவளை சொன்னான் என்று புரியாதவளாக, “இதை எதுக்கு இப்ப சொன்னீங்க”

“உனக்கு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?” என்றான் மெல்லிய ஏமாற்றத்தில்.

அதில் அங்கைக்கைக்கு கோபம் வந்து விட, “என்ன எனக்கு புரியலை? உங்க கிட்ட எனக்கு நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று சொல்ல,

“நான் உன்னை சொன்னேன் ஜாதிக்குதிரைன்னு” என்றான் உடைத்து.

அங்கை அவனை முறைத்து பார்த்திருக்க, அந்த பார்வை ராஜராஜனை வசீகரிக்க, “இன்னைக்கு குழந்தைங்க இல்லை. இன்னைக்கு என்னை சண்டைக்கு கூப்பிட மாட்டியா நீ? தைரியமிருந்தா தொட்டுப் பார்ன்னு அன்னைக்கு கையை கட்டி நீ உட்கார்ந்து என்னை பார்த்து சொன்னப்போ, தொட்டு பார்க்கிறதென்ன எனக்கு உன்னை கடிச்சு சாப்பிடணும் போல இருந்தது” என்று சொல்ல,

அதற்கும் முறைத்து தான் பார்த்திருந்தாள், சண்டை இழுக்கவேயில்லை..

“என்ன எதுவும் பேச மாட்டியா? உனக்கு பயமா?”

“பேசணுமா?” என்று நிறுத்தியவள், “தூங்குங்க” என்று சொல்ல, அது சொன்ன விதம், “அம்மாடி, இதுவும் ஒரு அறைகூவலோ” என்று தான் ராஜராஜனிற்கு தோன்றியது.

இப்போது ராஜராஜனின் பார்வையில் லகுத்தன்மை, ரசனை எல்லாம் மறைந்து ஒரு உஷ்ணம் ஏறியது.

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Thanks dear MM mam...
இரண்டு வீட்டு சந்திப்பு விருந்து சீர் எல்லாம் சரி தான்...
இரண்டு பேரை யும் கூப்பிட்டு ஒரு வார்த்தை வாழ்த்தி பேசி ஏதாவது compromise பண்ண வேண்டாமா???மறுபடியும் பேச்சு ம் உஷ்ணமும் வருதே.
அவள் பொறுப்பாக செய்து விட்டது அவன் பார்வை க்கு வரலை....அம்மாவிடம் சிணுங்கி பிடிக்க வில்லை என்றாலும் கவனித்து மாமியார் சொல்ல டிபன் எடுத்து கொண்டு வந்த அக்கறை... சின்ன தூக்கம் முடித்து சாப்பிட்டு வம்பு வளரக்கும் RR....
Eagerly waiting for the next ...
Thanks again
வாழ்க வளமுடன்
 
Last edited:
:love::love::love:

என்னங்கடா ஆளாளுக்கு நகையும் பணமுமா குடுக்குறீங்க.........
அந்த சொத்தை குடுத்தாலாவது பணம் பெருகும்.......
பணத்தை பாங்குல போட்டால் எப்படி வந்ததுன்னு கணக்கு கேட்பாங்க.......
வீட்டில் இருக்கும் நகைக்கும் IT கேட்கும் காலம் :p:p:p
அப்போ என்னதான்டா பண்ணுறது???

ஹீரோ எல்லாம் load man ஆகுறாங்களே.......
2 நடை வந்து எடுத்திருக்கிறான் அந்த அரிசி மூட்டையை அனாயாசமா தூக்கினவன் :eek:

அம்மா கொஞ்சுவாங்கனு என்கிட்டே பேசாதனு சொல்லும் பொண்ணு........
எனக்கு இங்கே இருக்க முடியல...... ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்னு சொல்லும் பொண்ணு.......
என்ன பொறுப்பா வீட்டுக்காரனை தூங்கவிட்டு வீட்டை ஒதுங்க வைப்பதை பார்த்து கணக்கு முடிச்சு :love::love::love:
அம்மா ராஜலட்சுமியம்மா ......... கொஞ்சநாள் ஓரமாவே இருங்க.......
ஜாதி குதிரை அடங்குதா இல்லை அடக்குதான்னு பார்க்கலாம்........

ராஜனுக்கு மனசுக்குள் வந்தது ஜாதிக்குதிரை......
ஜாதிக்குதிரை இப்போ குற்ற உணர்ச்சியில் துடிக்குது......
ராஜன் கையில் தான் இருக்குது அதை போக்குறது.......

ராஜராஜா........
தூங்காதே தம்பி தூங்காதே
இப்போ தூங்கிவிட்டு பின்னாடி ஏங்கதே :p:p:p
 
Last edited:
அன்னைக்கு அவன் தூங்கிட்டியா???

இன்னைக்கு இவள் தூங்குங்க :unsure:
இதுவும் டபுள் மீனிங்ல போய்டுச்சா ?
 
Last edited:
முறையா சீர் வந்த உடனே..
பிள்ளை பொருப்பா நின்னு பார்க்கிறா..:love:

முறைமாமனை இன்னும் முறைக்கிறாளே?????

முறை பொண்ணு எப்ப நான் ரெடி
நீங்க ரெடியா பாட போற!!! :p
 
Last edited:
ஜாதிக் குதிரை... ??
ராஜராஜா
அடக்க போறியா... (y)(y)
அடங்க போறியா... (n)(n)

ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா

மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
அவள கணக்கு பண்ணாதே... ;);)
 
Last edited:
நாச்சி நீ சூப்பர் போ...
அங்கையின் மனதில் இன்னும் என்ன குழப்பம்????...

Typical மருமகளா ஆயிட்டா... ?‍♀️?‍♀️
Typical மனைவியா எப்ப ஆவா..?? ??
 
Last edited:
Top