Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 1

Advertisement

Admin

Admin
Member

ஒரு பார்ட் இப்போ நெக்ஸ்ட் மோஸ்ட்லி நைட் முடிச்சிட்டா போட்டுடுவேன் இல்லை நாளைக்கு தான் ஃபிரண்ட்ஸ்


அத்தியாயம் பதினைந்து :

“என்ன நக்கலா” என்றான் பார்வையின் உஷ்ணம் சற்றும் குறையாமல்.

“ப்ச், இப்போ என்ன பிரச்னை உங்களுக்கு”

“என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியாதா?”

“உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலை, ஆனா கல்யாணம்னா என்ன நடக்கும்னு தெரியாத சின்ன பொண்ணு நான் கிடையாது” என்று பட்டென்று சொல்லிவிட..

“அம்மாடி இப்போது இவள் என்ன சொல்ல வருகிறாள்” என்று நிஜமாய் குழம்பிவிட்டான்.

“நீ என்னை வீட்டுக்குள்ள கூட விடலை” என்று சம்மந்தமில்லாமல் சொல்ல,

“நான் உங்களை கூப்பிட்டேன் நீங்க வரலை”

“உண்மையா கூப்பிடறதுக்கும் பேருக்கு கூப்பிடறதுக்கும் வித்தியாசம் இருக்கு”

“எஸ், பேருக்கு தான் கூப்பிட்டேன். ஏன்னா அப்போ எனக்கு உங்களோட சேர்ந்து வாழற எண்ணம் அதிகமா இல்லை” என்று சொல்லிவிட்டாள்.

“இப்போ” என்றான் உடனே,

“இப்போதைக்கு விட்டு போற எண்ணம் எனக்கில்லை” என்று அதற்கும் பதில் சொல்லி விட்டாள்.

“அப்போ அன்னைக்கு விட்ட சண்டையை இப்போ தொடரலாமா” என்றான் சரசமாக.

“என்ன சண்டை?” என்றாள் புரியாதவளாக.

“கொஞ்சம் லேட் பிக் அப் தான் போல நீ” என்று உதடு பிதுக்கியவன், “ம்ம், என்னை தைரியமிருந்தா தொட்டு பாருன்னு சொன்னியே, அந்த சண்டையை” என்று சொல்லி அங்கையை நேர் பார்வை பார்த்து அவளின் பதிலுக்காய் காத்திருந்தான்.

“ம்ம்” என்று அவள் சொன்ன மாதிரியும் இருந்தது, சொல்லாத மாதிரியும் இருந்தது.

“சண்டை போடலாமா?” என்றான் மீண்டும்.

“ம்ம்” என்று சற்று சத்தமாய் சொல்லி விட,

அம்மாடி! அங்கே நிஜமாய் ஒரு சண்டை தான். எப்போது எப்படி அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான் என்று தெரியவேயில்லை.

“அம்மா” என்று பயத்தில் ஒரு சிறு அலறல் அங்கையிடம், அவனின் மேலே இருந்தாள். வெகு அருகில் அவளின் முகம், இறுக்கி அணைத்து பிடித்திருந்தான். எதிர்பார்க்கவேயில்லை.

“என்ன அவ்வளவு தான் உன் தைரியமா பயந்துட்டியா?” என்றான் சிரிப்போடு.

“ஒன்னும் பயமில்லை” என்று சொன்ன அவளின் குரலில் சற்று பயம் இருக்க தான் செய்தது.

“அப்படியா பயமில்லையா?” என்று சொல்லிக் கொண்டே அவளை ஒரு புரட்டு புரட்டி இவன் மேலே, அவள் கீழே என்று கொண்டு வந்திருக்க, அவனின் வேகத்தில் தலை சுற்றிப் போனது!

“பயமாயிருக்குன்னு ஒத்துக்கோ” என்றவனின் முகம் சிரிப்பை விட்டு இதமான புன்னகைக்கு மாறியிருந்தது.

“இல்லை எனக்கு பயமாயில்லை” என்றாள் அப்போதும் கெத்தை விடாமல், வெளியில் மட்டும்மல்ல அவளுக்குள்ளும் சொல்லிக் கொண்டாள். “இது தான் உன் வாழ்க்கை இவனோடு தான் உன் வாழ்க்கை, இது ஒரு வழி பாதை, நடந்து தான் ஆக வேண்டும் பின் வாங்க முடியாது”

ராஜராஜனோ இவளின் மனநிலை புரியாமல் “சரி, உனக்கு பயமில்லைன்னு நீ சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்” என்று கேலி போல பேசியவன், “அன்னைக்கு விட்ட சண்டையை மட்டும் இப்போ போடறேன், முடிஞ்சா பயமில்லைன்னு எனக்கு காண்பி” என்று சொல்ல

“பார்த்துடலாம்” என்ற பார்வை அவள் பார்க்க,

பின்னே உண்மையில் அங்கே யார் அடங்கினர், யார் அடக்கினர் என்று தெரியவேயில்லை.

அங்கைக்கு எப்படியோ ராஜராஜன் இப்படி ஒரு இரவை அந்த இரவு ஆரம்பிக்கும் வரையிலும் கூட நினைத்து பார்த்ததில்லை.

“தேங்க்ஸ் அங்கை, தேங்க்யு வெரி மச். நிஜமாவே நான் இதை எதிர்பார்க்கலை” என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவளின் முகம் பார்த்து சொன்ன போது, அவனின் பார்வையை சில நொடிகள் சந்தித்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் அவனின் நெஞ்சினில் முகம் புதைத்து கொண்டாள்.

அவளுக்கு ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது, அது ராஜராஜனின் அருகாமை அவளுக்கு ஒவ்வாமையை கொடுக்க வில்லை என்பது தான். வாழ என்று வீட்டிற்கு வந்து விட்டால், அவனின் அருகாமையை தன்னால் சகிக்க முடியாவிட்டால் எல்லாம் தப்பாகி விடுமே என்பது அப்படி ஒரு பயத்தை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருக்க அப்படி இல்லை என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் செல்ல துவங்கியது.. அங்கை அவனின் வீட்டோடு பொருந்தி போக ராஜராஜன் உற்சாகமாய் வேலைகளை பார்க்க துவங்கினான்.

மில்லிற்கும் அங்கை உடன் வரத் துவங்க, ராஜராஜன் பெரியப்பாவோடும் அப்பாவோடும் வயல் வேலைகளையும் பார்க்க துவங்கினான்.

தொட்டதெல்லாம் அவர்களுக்கு துலங்கிற்று என்று தான் சொல்ல வேண்டும், சிவன் கோவிலும் ஒரு பக்கம் வளர்ந்தது..

இரண்டே மாதத்தில் அங்கை கருவுற.. ராஜராஜனை கையில் பிடிக்க முடியவில்லை. மீண்டும் அங்கையிடம் “தேங்க்ஸ், தேங்க்ஸ், நான் இவ்வவளவு சீக்கிரம் எதிர்பார்க்கலை” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பதிலுக்கு எப்போதும் போல ஒரு அணைப்பு.

மசக்கை அவளை படுத்தி எடுத்தது. அதுவும் சாப்பிட்ட அத்தனையும் அடுத்த நிமிடம் வெளியில் வந்து விடும். அப்படி ஒரு சிரமம் ஆறு மாதம் வரையிலுமே இருந்தது. அவளுக்கு என்ன பிடிக்குமோ அது தான் சமையலே வீட்டினில். தில்லை அப்படி பார்த்துக் கொண்டார்.

ராஜராஜனிற்கு நிறைய நிறைய வேலைகள், அவன் அங்கையோடு செலவளிக்கும் நேரம் இரவு மட்டுமே. அதில் ஒன்று அவளின் உடல் உபாதைகள் இல்லை கூடல்கள் இப்படி தான் ஓடியது.

உடளவு தேடல்களுக்கு இருவருக்குமே பஞ்சமில்லை. அதுவும் ராஜராஜனாய் ஆரம்பித்தால் தான். மனதளவில் தேடல்கள் தெரியவைக்கும் அளவு நேரமில்லை. “நான் இப்படி, நான் அப்படி, எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, நீங்கள் ஏன் லேட், இல்லை ஏன் சீக்கிரம் போக வேண்டும்” என்று அங்கை எதுவுமே சொன்னதுவுமில்லை, கேட்டதுவுமில்லை. அதனால் ராஜராஜனிற்கு அவளை பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் ராஜராஜனை பற்றி அங்கைக்கு எல்லாம் தெரியும். தில்லை தான் அவனின் அகராதியாய் அவளுடன் இருக்கின்றாரே. அவனை பற்றி எல்லாம் சொல்லுவார். அவனின் குழந்தை பருவத்தில் ஆரம்பித்தால் அன்று காலையில் நடந்தது வரை சொல்லுவார். காலை மதியம் இரவு என சொல்லிச் சொல்லி அங்கைக்கு எல்லாம் ராஜராஜனை பற்றி மனப் பாடம் என்று தான் சொல்ல வேண்டும்.

அங்கையற்கண்ணி பிள்ளை உண்டானதில் இருந்து அடிக்கடி ராஜலக்ஷ்மி வந்து பார்த்து போக தொடங்கியிருந்தார். மாதம் இருமுறையாவது வந்து விடுவார்.

ஏழாம் மாதத்தில் வளை பூட்ட முடிவு செய்து நாள் குறித்தனர்.. நன்றாய் உடல் எடை ஏறிவிட, கை கால் வீக்கமும் இருக்க, இன்னுமே அவ்வப் போது வாமிட் வர, சற்று பீ பீ யும் இருக்க என்று அங்கையற்கண்ணி சில பல தொந்தரவுகளுடன் இருந்தாள்.

“வளைகாப்பு முடிஞ்சு நாங்க கூட்டிட்டு போறோம். அங்கே மிலிடரி ஹாஸ்பிடல் இருக்கு, ரொம்ப நல்லா பார்ப்பாங்க, அதுவும் இவரோட பொண்ணுன்னா இன்னும் ஸ்பெஷல் கேர் இருக்கும். இவளுமே சிரமப்படரா அனுப்புங்கம்மா” என்று நாச்சியிடம் கேட்க..

“நான் வரலை” என்று அங்கை உடனே சொல்ல,

“இன்னுமா இந்த கல்யாணத்துனால உனக்கு எங்க மேல கோபம்” என்று ராஜலக்ஷ்மி கேட்க, அதற்கு எதுவும் பதில் சொல்ல இயலவில்லை. இப்போது எது சொன்னாலும் அது சரி கிடையாது அல்லவா, அங்கை அமைதியாகிவிட, “நீ வர்றியான்னு நான் கேட்கலை, நீ வர்ற” என்று முடித்து விட்டார் ராஜலக்ஷ்மி.

அந்த வீட்டின் பெரிய மனுஷி நாச்சியிடம் கேட்டு முடிவெடுத்து விட்டனர். ராஜராஜனிடம் கேட்கவேயில்லை, அவனிடம் சொல்ல மட்டுமே செய்யப் பட்டது!

இன்னும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகும் அன்பழகனும் ராஜலக்ஷ்மியும் இருக்கும் வாசஸ்தலமான டெஹ்ராடூனிற்கு செல்லவேயில்லை, அவர்கள் பல முறை அழைத்தும்.

இதோ வளை பூட்டி அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். “சீக்கிரம் நீங்களும் வாங்க, எல்லோரையும் கூட்டிட்டு வாங்க” என்ற அழைப்பை ராஜராஜனை பார்த்து வைத்து.

“நான் போகலை, என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது, நீங்களும் வாங்க, எப்போ வருவீங்க” இப்படி பலதும் ராஜராஜன் அங்கையிடம் எதிர்பார்த்தானோ என்னவோ?

அவளானாள் “நான் போயிட்டு வர்றேன்” என்ற வார்த்தையோடு கிளம்பிவிட்டாள். சிறிது நேர தனிமை கூட கிடைக்கவில்லை. ஒரு வாரம் முன்னமே ராஜலக்ஷ்மி வந்திருக்க, அன்றிருந்தே அவள் அம்மாவோடு தான் படுத்துக் கொண்டாள். இப்போது போய் வருகிறேன் என்று சென்றும் விட்டாள்.

என்னுடைய வாழ்க்கையே திருமணம் என்ற கடமைக்கோ? காதல், பிடித்தம், இது எதுவும் அவளிற்கு என் மேல் இல்லையோ? என்று தோன்ற ஆரம்பித்தது.

உண்மையில் அங்கைக்கு அந்த நிமிடம் அப்படி எதுவும் தோன்றவில்லை. ஊருக்கு சென்று ஒரு நான்கைந்து நாட்கள் வரையிலும் கூட எதுவும் பெரிதாய் தோன்றவில்லை.

அம்மா அப்பாவின் கொஞ்சல், சீராடல், பழைய நட்புக்களை பார்ப்பது, வெயிலில் காய்ந்து வந்திருந்தவளுக்கு இந்த குளிர் பிரதேசம் அப்படி ஒரு இதத்தை கொடுத்தது.

என்னவோ வீடு வந்து சேர்ந்து விட்ட உணர்வு!

வந்து சேர்ந்ததும், வந்து சேர்ந்து விட்டேன் என்று சொல்லியவள் தான், பின்பு இரண்டு நாட்கள் தூக்கத்திலயே போனது. அதன் பின் ஒரு நாளுக்கு ஒரு முறை ராஜராஜனிற்கு அவள் அழைத்த போதோ, இல்லை அவன் அழைத்த இவளுக்கு அழைத்த போதோ, “நல்லா இருக்கேன், சாப்பிட்டேன், தூங்கினேன், நீங்க எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா, தூங்கினிங்களா” இப்படி தான் பேச்சு! அதற்கு மேல் அவளுக்கு என்ன பேச என்று தெரியவில்லை.

ராஜராஜனின் மனதை கவலை அரிக்க துவங்கியது. திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கடமைக்கு வாழ்ந்தாளா, நெஞ்சம் காந்திப் போனது.

உண்மையில் அவனால் அங்கையை பார்க்காமல் இருக்க முடியவில்லை. என்ன செய்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? உடல் நிலை எப்படி இருக்கிறதோ? இப்படி பலதும் மனதை வருத்தின, அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆழியின் அலையாய் மனதை சுழற்றி அடித்தது.

அவள் சென்று ஒரு மாதம் ஆகிவிட, “என்னடா ராஜா, அவ பேசியே ரெண்டு நாள் ஆச்சு, எட்டாம் மாசம் ஆரம்பிச்சிடுச்சு, அவளை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு” என்று தில்லை சொல்ல,

“ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா? உங்க மருமக இல்லையா?” என்று எரிந்து விழுந்தான்.

“என்னடா சொன்னேன் நான், இந்த காயு காயுற என்கிட்டே” என்று தில்லை சொல்ல,

“ப்ச், போம்மா” என்று சலித்து வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். வாழ்க்கையே அவ்வளவு சலிப்பை கொடுத்தது.

“நீ ஃபோன் பண்ணு, நாம பேசலாம்” என்றார் நாச்சி.

தில்லை அழைக்கவும் “சொல்லுங்க அத்தை” என்ற அங்கையின் குரல் உற்சாகமாய் கேட்க,

“எங்க அங்கை ஃபோன் பண்ணலை, உன் உடம்பு எப்படி இருக்கு?” என்று இரண்டு வார்த்தை பேசி நாச்சியிடம் கொடுக்க,

“என்ன கண்ணு? எப்படி இருக்க?” என்று பேசி ஜாக்கிரதைகள் சொல்லி, “உன் புருஷனோட பேசறியா” என்றார்.

“பேசறேனே பாட்டி தினமும்” என்று சொன்னது கூட உற்சாகமாய் தான் இருக்க, “சரி, இவனுக்கு வேறு எதுவோ பிரச்சனை போல” என்று நாச்சியும் விட்டு விட்டார்.


ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
hi mallieee......
அங்கையை இன்னும் define பண்ணவே இல்லை மல்லி...
அவனோட அருகாமையை ஏற்றுக் கொண்டவளால்
அவனிடம் தன் மனம் திறக்க இயலவில்லை..

மினி டிரஸ் போடுவியா, டிரிங் பண்ணுவியா என்று
கேட்டவனால்....
அவள் மனதில் என்ன உள்ளது என்றிய முயலவில்லை...
இப்ப கடமையா, கட்டாயத்தால் இந்த வாழ்க்கையா
என்று தோன்றுகிறது.....
அவள் லேட்பிக் அப் இல்லை, ராஜராஜா.....
நீ தான் லேட் பிக் அப்.....
 
Last edited:
சீக்கிரமே update போட்டதுக்கு @Admin மல்லிக்கு ??

Late pick up அங்கை இல்ல நீதாண்டா ராஜராஜா...

தீயா வேலை செஞ்சு இருக்கியேடா ராஜா... :p :p

புள்ளதாச்சி பொண்டாட்டிய போய் ஒரு எட்டு பாத்துட்டு வரதுக்கு என்னவாம்...

(@Fathima.ar & @Joher Epi ல பிரியாணி & குஸ்கா மிஸ்ஸிங்... :p :p)
 
Last edited:
:love: :love: :love:

அடடா feel பண்ண விட்டுட்டு டெஹ்ராடூன் போய்ட்டாள் அங்கை.....
7ம் மாதத்தில் டெஹ்ராடூன் வரை பயணமா :oops:

இருக்கும் வரை தெரியலை......... தள்ளி போனதும் காயுதே RR க்கு........
ஏன் ஒரு நடை போயிட்டு வர்றது :p

அங்கைக்கு வீடு வந்து 4 5 நாள் வரை எதுவும் தோணலை........ அப்புறம் :unsure::unsure::unsure:

பாட்டி இவனுக்கு காதல் வந்துடுச்சி......... அதான் இப்படி இருக்கான்........
அவனை மாமியார் வீட்டுக்கு ஹனிமூன் அனுப்புங்க......... சரியாகிடுவான்.......

என்ன இந்த ராஜலக்ஷ்மி அவனை மனுஷனா கூட மதிக்க மாட்டாங்க போல :mad:
எல்லாமே அவங்க இஷ்டம் தான் போல........

கொஞ்சி பேசினால் எனக்கு உன்னோட வரத்தோணும்........ அதனால பேசாதேன்னு சொன்ன பொண்ணு காணோமே :unsure:

நாணுமோ இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ...........
 
Last edited:
Miss Panna feel pannanum .
ராஜா ஃபீலாயிட்டான்..
அங்கை நீ என்ஜாய் பண்ணு ராசாத்தி மூன்று வருஷம் கழிச்சு அம்மா வீட்டுக்கு போயிட்டு இது கூட இல்லைனா எப்படி...

??fb la angai marriage situation சொன்னதோட அவ்ளோ தானா!????
⚔⚔ cut copy எதுவும் பண்ண முடியாதா??

ஆமா அங்கை படிச்சது தான் என்ன????
@Admin
 
Last edited:
ராஜராஜனுக்காக...

ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
அங்கை பேஜார் பண்ணதில்லை

பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
தர ரம்பம் பம்

இந்த ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை ராஜா
கைய வச்சா...
 
Last edited:
Top