Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 2

Advertisement

Admin

Admin
Member
தமிழ்நாட்டிற்குள் ஏதாவது ஊர் என்றால் சென்றிருப்பான். அவர்களும் அழைக்கிறார்கள் வாருங்கள் என்று, ஆனால் எப்படி வரவேண்டும் என்று சொன்னதில்லை. இன்னும் அட்ரெஸ் கூட தெரியாது.

அவனாய் சென்று நிற்கலாம் என்றாலும் இவர்களிடம் சொல்லி கேட்டு, மனது என்னவோ செய்தது! எப்போதும் போல “போடி” என்று விடமுடியவில்லை.

இதற்கு கட்டில் யுத்தங்கள் பல புரிந்திருந்தாலும், அதனை தவிர அன்னியோன்யம் என்று சொல்வதற்கு வேறு நினைவுகள் இல்லை. அம்மா தான் அவனின் உணவின் பொறுப்பு. அப்படி எதையும் அங்கை செய்து கொடுத்ததில்லை, பரிமாறியதும் இல்லை. பெரிய குடும்பம் இருவரும் சேர்ந்து அமர்ந்து உண்டது கிடையாது. அவனின் உடைகள் வேலையாள் துவைத்து வரும் போதும் அம்மா தான் மடிப்பார்.

ஒரு ரகசிய புன்னகை, சிறு தொடுகை, இதழ் முத்தம் என்று எதுவும் அவனின் ஞாபகத்தில் இல்லை. ஏனென்றால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை.

சரி, சிரித்து பேசி இப்படியான தருணங்களும் இல்லை! சரி, எங்காவது வெளியில் தனியாய் சென்றார்களா? அதுவும் இல்லை! இரண்டே மாதத்தில் கருவுற்றிட அதில் உடல் உபாதை படுத்த, எங்கேயும் விருந்திற்கு கூட செல்லவில்லை.

அக்காள்களின் வீடு மட்டும் சென்று வந்தான்! அண்ணன்கள் வீடு கூட செல்லவில்லை! கடமையோ? காதலோ? அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி கிளம்ப, “ஒரு பார்சல் அனுப்பணும், உன்னோட அட்ரெஸ் கிடைக்குமா?” என்று கேட்டு, சென்னை சென்று அங்கிருந்து டெஹ்ராடூனிற்கு ஃபிளைட் பிடித்து மாலை ஐந்து மணிக்கு சென்று சேர்ந்தான்.

ஃபிளைட் பயணமே அவனுக்கு புதிது, அவனுக்கு ஆங்கில வழி கல்வியே, ஆங்கிலம் நன்றாய் புரிந்தாலும், பேச வந்தாலும், பள்ளி முடித்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அதனை பேசியிறாததால், சற்று உடைந்து தான் பேச வரும். ஹிந்தியும் தெரியாது.

கையில் ஒரு ஷோல்டர் பேக் மட்டும், டேக்சி எடுத்து, அட்ரெஸ் கொடுத்து வந்தால், அங்கே அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்த ஆஃபிசர் பங்களா பூட்டியிருக்க, இவன் எங்கே அவர்கள் என்று முன்னிருந்த காவலாளியிடம் கேட்க, அவன் வெளியே போயிருக்கிறார்கள், எப்போது வருவார்கள் என்று தெரியாது என்று சொல்ல..

இவன் யார் என்று சொல்லியிருந்தால் உள்ளே விட்டிருப்பான், அங்கே வராண்டாவில் சேர் எல்லாம் இருந்தது, அமர்ந்தும் இருந்திருக்கலாம். இவனுக்கு ஏனோ தானாய் சென்று சொல்ல பிடிக்கவில்லை.

அங்கைக்கு கைபேசியில் அழைத்தான், அவள் வெகு நேரம் எடுக்கவில்லை, விடாமல் அழைக்கவும் எடுத்தவள், இவன் பேசும் முன்னயே “இங்க நாங்க வெளில வந்திருக்கோம், பூஜைக்கு, இங்க சத்தமா இருக்கு, நானே கூப்பிடறேன்” என்று சொல்லி வைத்து விட்டாள்.

இதற்கு அவர்கள் சென்றிருந்தது, ஒரு இரண்டு தெரு தள்ளி தான். அவனுக்கு எப்படி தெரியும்.

“இந்த பேக் இங்க இருக்கட்டுமா?” என்று கேட்க, “நோ, நோ” என்று விட்டான் காவலாளி.

“யார்?” என்று தெரியாமல் ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் எதனையும் வாங்க மாட்டார்கள் அல்லவா?

அவன் இந்த பகுதியில் நுழையும் போதே அவனை முற்றிலும் சோதனையிட்டு யார் அவன், யார் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று கேட்டு, அவனின் ஐடி எல்லாம் சரி பார்த்து தான் உள்ளே விட்டனர்.

எப்போது வருவார்கள் என்று தெரியாமல், பக்கத்தில் சிறிது தூரம் நடந்து, ஒரு காஃபி ஷாப் வந்தான். அரை மணி நேரம் கழித்து சென்று பார்த்தான், வரவில்லை. திரும்ப வந்தான் காஃபி அருந்தினான், திரும்ப சென்றான், இப்படி இரண்டு மணி நேரங்கள் கழிய,

மீண்டும் இவன் வந்த போது உள்ளே ஒரு ஜீப் நுழைய, அதில் ராஜலக்ஷ்மியும் அன்பழகனும் மட்டுமே! அங்கையற்கண்ணியை காணவில்லை, அதனால் பேசாமல் நின்று விட்டான்.

மீண்டும் அவளுக்கு அழைக்கலாமா என்று யோசித்து, வேறு வழியில்லாமல் அழைக்க, அழைக்கும் போதே பார்த்து விட்டான், அந்த சாலையின் ஆரம்பத்தில் யாரோ ஒருவனோடு பேசி மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தாள். வயிறு இன்னும் நன்றாய் பெரிதாகி இருந்தது. ஊரில் சுரிதார் அல்லது புடவை மட்டுமே அணிவாள்.. இங்கு நீளமாய் கவுன் போல ஏதோ அணிந்திருந்தாள். அதற்கு மேலே ஸ்வெட்டர், தலைக்கு கேப், கைகளுக்கு க்ளௌஸ் என குளிருக்கு மிகுந்த பாதுக்காப்பாய் நடந்து வந்தாள். அந்த சாலையில் இருந்த விளக்கொக்ளியில் பார்ப்பதற்கு எதோ வெள்ளைக்கார துரைசானியை போல இருந்தாள்.

கூட வந்தவன் ஏதோ சொல்ல, அப்படி ஒரு சிரிப்பு அவளிற்கு. அந்த ஏகாந்த வேலையில் வேறு ஜனநடமாட்டம் அங்கே இல்லாததால் அந்த சிரிப்பு சத்தம் நன்கு கேட்டது. இப்படி கூட சிரிப்பால் என்பதே ராஜராஜனிற்கு அன்று தான் தெரியும். ஆசையாய் ரசனையாய் அவளை பார்த்திருந்தான்.

அவள் சிரிப்பதற்கும் அவளின் கை பேசி ஒலிப்பதற்கும் சரியாய் இருக்க எடுத்தவள், “நான் இன்னும் வீட்டுக்கு போகலை, போனதும் பேசறேன்” என்று சொல்லி மீண்டும் வைத்து விட,

ராஜராஜனிற்கு அங்கையை பார்த்ததும் தோன்றிய உற்சாகம் அப்படியே வடிந்தது. அப்படியே கைபேசியை தூக்கி தரையில் போட்டு உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. பின்னே கிட்ட தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாய் சுற்றுகிறான். பயந்து பயந்து நடக்கிறான், யாரேனும் எதுவும் “யாரடா நீ?” என்று கேட்டு சந்தேகத்திற்கு இடமானவன் என்று நினைத்து விட்டால். அதுவே மிலிட்டரி ஏரியா.

வீட்டின் எதிர்புறம் நின்றிருந்தான். அதுவும் அங்கையின் சத்தமான இந்த சந்தோஷ சிரிப்பு அவனை என்னவோ செய்தது. “என்னுடன் இப்படி சிரித்ததே இல்லையே. என்னுடனான வாழ்க்கை இப்படி சிரிப்பையும் சந்தோஷத்தையும் கொடுக்கவில்லையா” மனதளவில் பெரிதாக அடி வாங்கினான்.

அவள் வீடு வந்து உள்ளே செல்ல முயல, ஜீப் நேரே உள்ளே சென்று விட்டதால், ஒருவன் வந்து விசாரித்ததை காவலாளி சொல்ல இயலவில்லை.

இப்போது அங்கை நடந்து வரவும், “மேம்சாப், இங்க ஒருத்தர் உங்களை தேடி வந்தார்” என்றான் ஹிந்தியில்.

“முஜே யா பப்பாகோ” என்று அவள் கேட்க,

“ஆப்கோ” என்றான் தெளிவாய்.

“நம்ம ஃபிரண்ட்ஸ் யாராவதா இருக்கும்” என்று உடன் வந்தவன் சொன்னான். அவன் அவளின் பள்ளி தோழன், வேறு ஒரு அதிகாரியின் மகன், இப்போது அவர்களின் வீட்டின் பூஜைக்கு தான் சென்றிருந்தனர்.

அங்கேயே உணவு உண்டிருக்க, உண்டதும் “நான் நடக்கிறேன்” என்று அவள் சொல்லியிருக்க, நான் உடன் வருகிறேன் என்று கிளம்பியிருந்தான்.

“ஃபிரண்ட்ஸ் வந்தா எனக்கு ஃபோன் பண்ணுவாங்க” என்று ஹிந்தியில் பதில் சொன்னவளுக்கு, சட்டென்று மனம் பதைக்க, சுற்றிலும் அவசரமாய் பார்வையை ஓட விட்டுக் கொண்டே அவளின் கைபேசி எடுத்து ராஜராஜனையும் அழைத்து விட்டாள். அவனின் கைபேசி ஒலி மெல்லியதாய் கேட்க, இன்னும் நன்றாய் பார்க்க, எதிரில் ஒரு மரத்தினடியில் இவளை பார்த்தபடி ராஜராஜன் நின்றிருந்தான்.

“ஓஹ் கோஷ்” என்று ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

இவன் சற்று இருட்டான இடத்தினில் இருக்க, அவள் வெளிச்சத்தில் நன்றாய் பார்வையில் படும் தூரத்தில் இருந்தாள். தேவதையாய் நின்றிருந்தவளை சிறிது நேரம் ஆசை தீரப் பார்த்தவன், பின் அப்படியே அவளிற்கு எதிர்புறம் நடக்க ஆரம்பிக்க,

உணர்விற்கு வந்தவள் “ராஜன்” என்று அழைக்க , நின்றவன், “உன்னை பார்க்கணும்னு தோணிச்சு, வந்தேன், பார்த்துட்டேன், கிளம்பறேன்” என்று சொல்லி நடக்க..

“ராஜன்” என்று கத்தினாள்.

அவளின் கத்தலுக்கு காவலாளியும், “எங்கே இவளை காணோம்” என்று பார்க்க கேட்டிற்கு வந்த அன்பழகனும் விரைந்து வர,

“பா, போறாங்கப்பா, கூப்பிடுங்க” என்று கண்கலங்கி நின்றாள். பின்னே அவள் எதிர்பார்க்கவேயில்லை அவன் வருவான் என்று. வெகு நேரம் முன்பே வந்திருக்க வேண்டும் என்று புத்திக்கு உரைக்க, அவனை காக்க வைத்து விட்ட குற்றவுணர்ச்சியில் கண்கள் கலங்கி விட்டது.

வேகமாய் சென்ற அன்பழகன் “எங்க போறீங்க” என்று ராஜராஜனின் பேகை உரிமையாய் தோள்களில் இருந்து கழற்றி “வாங்க” என்று அழைத்து வந்தார்.

அவர் அப்படி அழைத்து செல்லும் போது முறுக்கி கொண்டு போக ராஜராஜனின் மனம் ஒப்பவில்லை, அதையும் விட கண்களில் நீரோடு நிற்கும் மனைவியை எங்கனம் விட்டு செல்வான்.

ராஜராஜன் அருகில் வந்ததும், “இவன் என் ஃபிரண்ட், அது தான் பேசிட்டு வந்தேன், வேற ஒண்ணுமில்லை” என்று சொல்ல,

ராஜராஜனிற்கு கோபம் பொங்கிவிட்டது, “இதையேன் என்னைப் பார்த்து சொல்ற, நான் உன்னை சந்தேகப்படுவேன்னு சொல்றியா” என்று கேட்டு விட,

“இல்லை, அது இல்லை” என்று அவள் தடுமாற, அவளின் எண்ணம் அதுதான் என்று புரிந்தது.

பின்னே அங்கையை பார்த்ததும், அவன் எதுவும் பேசாமல், அவள் அருகில் கூட வராமல் நடந்தால், அவளும் தான் என்னவென்று நினைப்பாள்.

“இல்லை, அது...” என்று மீண்டும் சொல்லி, என்ன சொல்லவென்று தெரியாமல் அவனின் கைகளுக்குள் கையை விட்டு “இப்படி என்கிட்டே கோபமா பேசாதீங்க” என்று கண்களில் நீரோடு சொல்ல,

ராஜராஜனும் தான் என்ன செய்வான், “இல்லை பேசலை” என்றதும் அவனின் தோளில் தலையை ஆதூரமாய் சாய்த்துக் கொள்ள, வேகமாய் வந்த காவலாளி அன்பழகனின் கையில் இருந்த பையை வாங்கி,

“யே கோன் ஹை சர்ஜி” என வினவ,

“மேம்சாப் கே சாப்” என்று சொல்லி அன்பழகன் முன்னே நடக்க,

எல்லாம் தமிழில் நடந்ததால் சத்தியமாய் உடன் வந்த நண்பனுக்கு எதுவும் புரியவில்லை.

அன்பழகனின் பதிலில் “ஹாய் பாய்ஜான்” என்று உற்சாகமாய் கை குலுக்க கையை நீட்ட, ராஜராஜனின் கையை அங்கை விட்டால் தானே கை குலுக்க முடியும்.

“கைவிடு அங்கை” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் விட மாட்டேன்” என்று தமிழில் சொல்லியபடி நண்பனின் கையை தட்டி விட,

“ஏன் நீ கை எடுக்கற கேப்ல யார் வந்து பாய்ஜானை பிக் அப் பண்ணிக்குவா” என்று ஆங்கிலத்தில் அவளை கிண்டல் செய்தபடி பெரும் குரலில் சிரிக்க, “நீ போடா” என்று அவள் அவனை தமிழில் திட்டிய போதும், ராஜராஜனின் கைகளை விடாமல் தான் நடந்தாள்.


அப்படி ராஜராஜனை தேடினாளா தெரியாது? ஆனால் அவனின் சிறு முக திருப்பல் கூட தாங்க முடியவில்லை என்பது உண்மை! என்ன சொல்வானோ என்ற பயத்தோடே தான் நடந்தாள். “நீ என்ன நினைச்சா எனக்கென்ன” என்ற அலட்சியம் எல்லாம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.




ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
:love: :love: :love:

அச்சச்சோ இப்படி வெயிட் பண்ண விட்டுட்டாங்களே :cry:
இவனும் தான் யார் கிட்டேயாவது சொன்னால் என்ன???
அன்பழகன் வரலைனா போயிருப்பான் போல.......
என்னா கோபம் .......... இப்போ அவ கையை விடலை....... வீட்டுக்கு போனதும் முறுக்குவானே.........
அத்தை பொண்ணு மாமா பையன் மாதிரியே ரெண்டு பெரும் நடந்துக்கலை......
ஊர் touch விட்டு போன அத்தை மாமா பசங்க பண்ணுற வேலை இது தான்........

தேடினாளா தெரியாது...... ஆனால் தேடியிருக்கா........
 
Last edited:
பார்சல் அனுப்பனும்னு சொல்லி அட்ரஸ் வாங்கி
வந்தேன் பார்த்துட்டேன் கிளம்புறேன்.......

டேய் டேய் ஏண்டா வந்த நீ???
ரொம்ப பண்ணுற..........
தில்லைக்கு சொல்லிட வேண்டியது தான்......

உடல் மட்டும் தான் சேர்ந்திருக்கு......
மனசு இன்னும் அந்த 2 வருஷம் மாதிரியே இருக்கு போல......
அப்போ வீட்டுக்குள்ள போகலை.......
இப்போ சேர்ந்திருக்காங்க........

மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாராலே.........
 
Last edited:
Super courier மனுஷங்க எல்லாம் டெலிவர் பண்றாங்களே...
எவ்வளவோ கதை எழுதிட்டேன்..
இந்த ராஜராஜனுக்கும் அங்கைகும் ரொமான்ஸ் வைக்கிறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே அய்யய்யோ.... :p

Newly arranged married couples emotions maari irukku
 
Last edited:
Top