Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 27

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் இருபத்தி ஏழு:

“போ, என்னை விட்டு அவனை அடி” என்று சொல்ல,

“சோ, இதை என்கிட்டே சொன்னா நான் போகணும்னு இஷ்டப் படுவேன்னு நினைச்சு சொல்லலை ரைட்” என்று ராஜனை பார்த்து கேட்க,

அவளின் கனமான குரலில் மனோ “அச்சோ” என்று நின்றான்.

“ராஜனோ அப்படியும் சொல்லலாம்” என்றான் தெனாவெட்டாய்.

“அப்படியும் சொல்லலாம் இல்லை அப்படிதான்” என்றாள் விடாமல்.

“சரி அப்படிதான், இப்போ அதுக்கு என்ன?” என்று அவன் பேச,

“சோ, உங்களுக்கு என் மேல நம்பிக்கையேயில்லை, அப்படி எந்த விஷயத்துல உங்ககிட்ட நான் பிடிவாதம் பிடிச்சிட்டேன்”

“நான் சொல்லலை, நீ சொன்ன, நான் ஆமாம் சொன்னேன் அவ்வளவு தான்”

அவன் அலட்சியமாய் நிற்க, இவள் முறைத்து நிற்க,

மனோ கடுப்பாகி “ரெண்டு பேரும் கத்தி எடுத்து குத்திக்கறது ஒன்னு தான் பாக்கி. அம்மா, இதெல்லாம் பார்த்தா எனக்கு டென்ஷன் ஆகுது. என்னவோ பண்ணுங்க” என்று சொல்லிச் செல்ல,

மனோவின் அருகில் வேகமாக சென்றவள் “அண்ணா நான் பேசினது யாருக்கும் அனுப்பக் கூடாது. ராஜன்க்கு அவனை நான் கெட்ட வார்த்தையில தனியா இருக்கும் போது பேசினா ஒன்னுமில்லை ஆனா யார் முன்னையும் அவன் இவன்ன்னு பேசினா கூட பிடிக்காது”

“நீ அப்பா கிட்ட அனுப்பிடாத”

“டென்ஷன் ஆகாத அனுப்ப மாட்டேன்” என்று சொல்லி சென்று விட்டான்.

அங்கை படுக்கையறையை நோக்கி வரவும், அவளை சீண்டும் விதமாய் “ஹனிமூன்க்கு எதுக்கு ஊருக்கு போகணும், போகாமையே எப்படி என்ஜாய் பண்றதுன்னு நான் கத்துக் கொடுக்கறேன்” என்று பேசினான்.

“நீ கத்துக்குடுக்கற அளவுக்கு நான் இல்லை” என்று முறுக்கி கொள்ள,

“ஓஹ், எனக்கும் அதிகமா உனக்கு தெரியுமா? சரி, நீ கத்துக் குடு!” என்றான் அதற்கும்.

“நீயும் எனக்கு கத்துக் குடுக்க வேண்டாம். நானும் உனக்கு கத்துக் குடுக்க மாட்டேன், மூடிட்டு போடா,
உன்னால அத்தனை பேரும் என்னை பரிதாபமா பார்க்கறாங்க. சமயம் கிடைச்சா அட்வைஸ்ன்ற பேர்ல என்னை கொல்றாங்க”

“என்னடா எனக்கு குறை? என்ன உன்னோட எனக்கு குப்பை கொட்ட தெரியலை? என்ன பண்றாங்க உன்னை? பக்கத்துல வந்த தொலைச்சிடுவேன், ஓடி போய்டு!” என்றாள்.

டிபிக்கல் ராஜராஜனின் தமிழ் அவள் பேசியது. சில வருடங்களாக நாச்சியுடனும் ராஜனுடனும் இருந்த ஒரு பாதிப்பு!

“ரொம்ப பேசறடி நீ”

“அப்படி தான் பேசுவேன், என்னடா பண்ணுவ?”

“வெளில நின்னுகிட்டு என்ன பண்ணுவ? என்ன பண்ணுவன்னா? ரூம்குள்ள வந்து நில்லு, என்ன பண்ணுவேன்னு காண்பிக்கறேன்”

அவள் முறைத்து நிற்க,

“சும்மா முறைக்காத வா, காஞ்சி போய் கிடக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டு” என்று சற்று இறங்கி பேசியவன், அவளின் கையை பிடித்து எதிர்பாராமல் இழுத்து விட, அப்படியே அவன் மேல் மோதி நின்றாள்.

“அம்மா” என்று அவன் மேல் மோதிய வலியில் சத்தம் செய்ய,

“பேசற என் உதடை கடிச்சு வெக்கறேன்னு உசுப்பேத்திட்டு, நைட் நைட்டா உன்னை தேடி ஓடி வந்தா, என் கண்ல படாம என்னை தவிக்க விட ஓடி ஒளிஞ்சள்ள, இரு, நைட் முழுசும் உன்னை கதற விடறேன். ரொம்ப பேசற நீ” என்று அவளை உள்ளே இழுத்து ரூமின் கதவை தாளிட்டான்.

“அப்படி தான் பேசுவேன், இன்னும் பேசுவேன், நிறைய பேசுவேன்” என்ற அவளின் குரல் கேட்க,

“எவ்வளவு வேணா பேசு, என்கிட்டே மட்டும் பேசு. நான் என்ன கேட்கமாட்டேன்னா சொல்றேன்” என்ற அவனின் குரலும் கேட்டது.

ஆனால் அதில் திமிரோ தெனாவெட்டோ இல்லை. அவளை கொஞ்சும் பாவனை மட்டுமே! கெஞ்சும் பாவனை மட்டுமே!

இப்படி ஓயாமல் அவர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் என்று நினைக்க, ஒரு நிமிடம் கூட இல்லை வழக்காடல்கள் நின்று விட்டன.

“எதுக்குடி கொலுசும் கண்ணாடி வளையலும் போட்ட, சத்தத்துல ரதி எழுந்துட்டா என்ன பண்ணறது?”.

“புடவை கட்டினேன்னு போட்டேன்” என்றவளின் குரல் மெல்லியதாய் கேட்க,

“என்னடி ப்ளவ்ஸ் அது, கொஞ்சம் நேரத்துல என்னை என்ன என்னவோ பண்ணிடுச்சு” என்றவனின் குரல் கேட்க,

“அத கழட்டி விடறேன்ற சாக்குல கண்ட இடத்துல தொட்டுட்டு, என்னை அப்படியே விட்டுட்டு போயிட்டீங்க. அன்னைக்கு கிஸ் பண்ணிட்டு விட்டுட்ட போயிட்டீங்க. இப்ப எதுக்கு என் பக்கத்துல வர்றீங்க, வராதீங்க போங்க”

“சாரி” என்ற வார்த்தை முடித்து விடும். ஆனால் “அவனோ அப்படி தான் பண்ணுவேன். என்ன பண்ணுவ நீ?” என்று எகிறினான்.

அவளும் விட்டேனா என்று பதில் பேசினாள்.

இப்படியாக ஆர்க்யுமென்ட் கண்டினியுஸ்...

வார்த்தை சண்டைகள்...
வாய் சண்டையாக...
இதழ் சண்டையாக...
உடலும் உடலும் உரச...
மனமும் மனமும் உரச...
உணர்வுகள் பற்றி எரிய...

இப்படி எல்லாம் கண்டினியு ஆகியது.

விடியும் வரை, ரதி எழுந்து விட்டாள்.

அவளை தூக்கிக் கொண்டு வந்து தில்லையிடம் விட்டு, அங்கை உறங்க செல்ல, ராஜராஜனோ குளித்து தயாராகி நின்றிருந்தான்.

“இவள் என்ன?” என்று பார்க்க,

“கிழவியோட அண்ணன் தவறிட்டாராம். நான் போகணும். அந்த ஆத்மன் ஊர் தான், ரொம்ப நாளா பிரச்சனையினால கிழவி அங்க போகலை. இப்போ தான் போக வர இருந்தது. நான் போகணும், போகலைன்னா நல்லா இருக்காது. போயிட்டு கிழவி கிட்ட கேட்கறேன், நீயும் அம்மாவும் வரணும்னா சொன்னா வாங்க” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

“தூங்கவேயில்லை நீங்க”

அவளை அணைத்து பிடித்தவன், “பல நாளா தூங்கலை, சில சமயம் ரெண்டு நாள் தொடர்ந்து தூங்கலை. இதொன்னுமில்லை சமாளிச்சிக்குவேன். நீ என்னை தூங்க விடாம அவ்வளவு தொந்தரவு பண்ணின. இப்போவும் தொந்தரவு தான் பண்ணின” என்று ரசனையாய் சொல்ல,

செல்லமாய் அவனின் தோளில் தட்டியவள் “எப்படி போவீங்க?” என்றாள்.

“பஸ்ல தான் போகணும். அதான் பெரியப்பா கார் எடுத்துட்டு போயிட்டார் தானே”

“அய்யா சாமி, பஸ்ல எல்லாம் போகக் கூடாது. காசு வெச்சு என்ன பண்ண போறீங்க, புதுசு இன்னொன்னு வாங்குங்கன்னாலும் கேட்கலை, அந்த அம்பாசிடர்ல தான் வலம் வர்றது”

“அது என் தாத்தா கார் அங்கை மாத்த மாட்டேன்”

“உங்களை யார் மாத்த சொன்னா? புரிஞ்சிக்கங்க, இன்னொன்னு புதுசு தான் வாங்க சொன்னேன். சரி அதை அப்புறம் பார்க்கலாம், அண்ணி கார் எடுத்துட்டுப் போங்க”

“அம்மாடி, அது ரொம்ப காஸ்ட்லி, கோடி ரூபாய்க்கு மேல. நான் பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு, எங்கேயாவது வண்டில கோடு போட்டுட்டேன்னா, எனக்கு அடிபட்டுடுமான்னு ஓட்டாம, வண்டிக்கு அடி பட்டுடுமான்னு எல்லாம் ஓட்ட முடியாது” என்று சொல்ல,

“இப்படி ஒரு விளக்கம் காஸ்ட்லி கார்க்கு ஊருக்குள்ள யாரும் குடுத்திருக்க மாட்டாங்க” என்று நொடித்து பேசியவள்,

“போடா” என்ற பார்வை பார்த்து வெளியில் சென்றாள்.

கரிஷ்மா அப்போது தான் எழுந்து வர,
“அண்ணி இவருக்கு ஊருக்கு போகணும் அவசரமா, ஒரு கண்டோலன்ஸ்க்கு. பஸ்ல போறாராம், உங்க கார் எடுத்துட்டு போக சொன்னா, அது காஸ்ட்லின்னு யோசிக்கறார்” என்று ஹிந்தியில் சொல்ல,

ராஜராஜன் புரிந்தும் புரியாமலும் நின்றான்.

அதற்குள் தில்லை வர அவரிடம் விஷயத்தை சொல்ல, “நானும் வர்றேண்டா” என்று அவரும் கிளம்பினார்.

“ராஜன் பாய்” என்று அவனின் அருகில் வந்த கரிஷ்மா,

“உங்களை விட எங்களுக்கு எதுவும் காஸ்ட்லி இல்லை. அதுவுமில்லாம அது என்கிட்டே இருக்கறதுலயே விலை குறைவான கார். பாயி ப்ளீஸ், எடுத்துட்டு போங்க. நான் பல முறை அங்கை கிட்ட புது கார் வாங்கி தர்றேன்னு சொன்னேன், அவ ஒதுக்கலை”

“நீங்க புதுசு வாங்கற வரை இதை எடுத்துட்டு போங்க, இங்க அப்பா எனக்கு பர்த்டேக்கு வாங்கி கொடுத்தது சும்மா தான் நிக்குது. அதை எடுத்துக்குவேன்” என்று அவளின் கொஞ்சு தமிழில் பலவாறாக சொல்லி அவனையும் தில்லையையும் அந்த காரில் அனுப்பி வைத்தாள்.

நாச்சியின் அண்ணனுக்கு இரண்டு பெண் மக்களே! அவர்களுக்கு பிறந்ததும் பெண்களே! இப்போது யார் அவருக்கு கடைசி காரியம் செய்வது? நீ செய், நான் செய் என்று பஞ்சாயத்து ஓடியது!

“சொத்து இருந்தால் அதற்காகவாவது கொள்ளி வைப்பர். இங்கோ அவர் முன்னமே பெண்களுக்கு சொத்து கொடுத்து இருந்தார். மனைவியும் உயிருடன் இல்லை. தனியாய் தான் இருந்தார்.

திடகாத்திரமாக இருந்ததால் அவரின் பெண்கள் துணையும் இன்றி, மகள்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்து கொண்டார்.

பங்காளி முறையில் இருப்பவன், கொள்ளி வைக்க முன் வரவில்லை. “அதான் பொண்ணுங்க சொத்தை வாங்கினாங்க தானே, இதை கூட செய்ய மாட்டாங்களா” என்று நின்று விட்டான்.

பெண்களின் கணவன்மார்களும் “எங்களுக்கு சரி வராது” என்று நின்றனர்.

நாச்சியின் அண்ணன் என்ற காரணத்தினால் ஆத்மன் வேறு பின்னால் இருந்து பிரச்னையை தீவிரமாக்கி கொண்டிருந்தார், உண்மையில் பிரச்சனையை அவர் கிளப்பவில்லை. ஆனால் கிளம்பிய பிரச்னையை முடிக்க விடாமல் ஊதி பெரிதாக்கி கொண்டிருந்தார்.

ஆன மட்டும் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் உறவுகளிடம் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் கேட்பதாய் தெரியவில்லை. வெகு நாட்கள் இல்லாமல் இருந்த உறவுகள், இப்போது புதுப்பிக்கப் பட்டு விட்டாலும் அவர்கள் இவர்களின் பேச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

ராஜராஜன் இதில் வெறும் பார்வையாளன் மட்டுமே. அவன் என்ன பேச முடியும், இல்லை செய்ய முடியும்?

மதியம் வரை இதே பேச்சுகள் ஓடிக் கொண்டிருந்தது. உறவுகள் எல்லோரும் வந்து விட்டனர், இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அவரின் மகள்கள் ஒரு புறம் அழுது நின்றனர். எதுவும் செய்ய வகையில்லாது.

அப்போது தான் ராஜலக்ஷ்மியும் அங்கையர்கண்ணியும் மனோவும் வந்தனர்.
மனோ கலக்டர் ஹோதாவிலேயே வந்திருந்தான், அவனின் வாகனத்தில்.
அங்கையும் ராஜலக்ஷ்மியும் வேறு காரில் வந்தனர், கரிஷ்மா பிள்ளைகளை பார்க்க வீட்டில் இருந்து கொண்டாள்.

“நீயேன் வந்த ராஜி” என்று சுவாமிநாதன் முதல் முறை சற்று உரிமையாய் கடிந்தார்.

ஆத்மனின் ஊர் அல்லவா? ஆதமனும் அங்கே தான் அமர்ந்திருந்தார், ஊர்க்காரர், ஊர் தலைவர் என்ற முறையில்.

கார் வந்து நின்று ராஜலக்ஷ்மி இறங்கியதில் இருந்து ஆத்மன் அவரை பார்த்திருந்தார்.

மனோ “ஏன் மாமா, வந்தா என்ன?” என்று வந்து கேட்டு நிற்க, என்ன சொல்லுவார்.

“அண்ணா, எனக்கு தாய் மாமா தானே, வரணும் தானே, அது தானே முறை” என்றார் ராஜலக்ஷ்மி.

“அப்பா தான் கூட்டிட்டுப் போக சொன்னார் மாமா” என்று மனோ சொல்ல, இனி சுவாமிநாதனுக்கு சொல்ல என்ன இருக்கிறது.

யார் கொள்ளி வைப்பது என்று எல்லோரும் பேசிப் பேசி நிற்க ராஜராஜனுக்கு கடுப்பாக இருந்தது.

பார்த்து பார்த்து சலித்த நாச்சி “எங்கண்ணனுக்கு நான் கொள்ளி போடறேன்” என்று கிளம்பிவிட்டார்.

“ஒரு மனிஷனை நேத்து ராத்திரி இருந்து இங்க படுக்க வெச்சிருக்கோம், யார் செய்யறதுன்னு இவ்வளவு பஞ்சாயத்தா, ஊருக்குள்ள பசங்க பெத்துக்கணும்னு சொல்றதை உண்மை ஆக்குறீங்க நீங்க, உங்க மாதிரி சில பொண்ணுங்களால தான் பையன் வேணும் வேணும்ன்னு நிக்கறாங்க. பொண்ணுங்கன்னா செய்யக் கூடாதா, நீங்களும் பொண்ணுங்களை தான் பெத்து வெச்சிருக்கீங்க, அந்த அறிவு கூட இல்லை” என்று அவர்களின் பெண்களை திட்டி,

“யாரும் தேவையில்லை எங்கண்ணனுக்கு நான் செய்யறேன்” என நின்றார்.

“பொண்ணுங்க செய்யக் கூடாது, அது இந்த ஊர் கட்டுப் பாடு” என்ற ஆத்மனின் குரல் ஓங்கி ஒலித்தது.

அப்போதுதான் அண்ணன் இதற்காக தான் தன்னை ஏன் வந்தாய் என்று கேட்டிருக்கிறார் என்று புரிந்த ராஜலக்ஷ்மி நிற்க,

அப்போது தான் அதனை உணர்ந்த அங்கை, எப்போதும் போல கிளம்பிவிட்டாள். அவளை நிறுத்துபவன் ராஜராஜன் தான், ஆனால் இன்று அவனும் எதுவும் செய்யவில்லை, அவளின் சொல் கேட்டான்.

“பொண்ணுங்க தானே செய்யக் கூடாது, பசங்க செய்யலாம் தானே” என்றவள் ராஜராஜனை ஒரு பார்வை பார்க்க, யாரும் சொல்வதற்காக காத்திருந்தவன் போல முன் வந்து நின்று விட்டான்.

பெரியப்பாவை, அப்பாவை யாரையும் பார்க்கவில்லை, அவர்களின் சம்மதமும் கேட்கவில்லை.

சுவாமிநாதன் இதற்கு விடுவாரா என்பது சந்தேகமே அதற்காவே அவரை பார்க்கவில்லை ராஜராஜன்.

அதன் பொருட்டே நாச்சி தன் மகன்களிடம் கூட கேட்கவில்லை.

ராஜராஜன் வந்து நின்றதும் நாச்சிக்கு கண்களில் நீர் வந்து விட்டது.

“உங்க பேரன் இருக்கும் போது நீங்கயேன் பாட்டி போறீங்க, கத்துறீங்க. வாடா நீ முன்னன்னு சத்தம் குடுக்க மாட்டீங்க” என்று நாச்சியை அங்கை அணைத்துக் கொண்டாள்.

ராஜராஜன் அவனின் சட்டையை கழட்டியதும், அருகில் சென்று கலெக்டர் என்ற பந்தா சிறிதும் இன்றி அதனை கையில் வாங்கிக் கொண்டான் மனோ.

ராஜராஜன் மௌனமாய் அமர, அவனின் மேல் தண்ணீர் ஊற்றி மொட்டை அடித்து மீசை வழித்தனர்.
ஊரே வியந்து உணர்ச்சிமயமாய் பார்த்திருந்தது.

அங்கையற்கண்ணி கம்பீரமாய் நின்று கணவனை பார்த்திருந்தாள்.

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்









 
:love::love::love:

கத்திய எடுத்து எதுக்கு குத்திக்கனும்
அதான் நீங்க ரெண்டு பேருமே ஷார்ப்தானே... ⚔⚔

கரிஷ்மா பாபிக்கு டயலாக்... :unsure:

எனக்கு என்ன காயம் ஆன போதும் என் உடம்பு தாங்கும்...
காஸ்ட்லி காரோட உடம்பு தாங்குமா தாங்காது ... :p :p

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே

விடிய விடிய
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

கொலுசு ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் சிணுங்கத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
அங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
 
Last edited:
Top