Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 28

Advertisement

Admin

Admin
Member
ஹாய் பிரண்ட்ஸ்

நானே நானே பேசியிருக்கேன் இன்னும் கொஞ்சம் நல்லா கூட பேசியிருக்கலாம் ஆனா முதல் முறை பேசினேன் அதை அழிக்க மனதில்லை ஏன்னா எழுதும் கூட அப்படி தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் தான் கர்ரக்ஷன், எழுதிட்டேன்னா ஒரு வரி கூட அழிக்க மாட்டேன் , சோ அட்ஜஸ்ட் மாடி ,

நாளைக்கு எபி ப்ரிகேப் கிடையாது , புல் எபி அடியோ புக் அப்புறம் நாளைனைக்கு எபி , இந்த கதை முடியும் வரை , இன்னும் ரெண்டு எபி இருக்கு , அதுக்கு எபியும் அடியோ புக் கும் சேர்த்து கொடுக்க முயற்சி பண்றேன்

இது ஒரு புது முயற்சி சப்போர்ட் US.




அத்தியாயம் இருபத்தி எட்டு :

“பாருடா, இந்த பொண்ணு சொன்னா புருஷனும் அண்ணனும் எப்படி செய்யறாங்க” என்று ஊரே பார்த்தது.

“ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணியிருந்தா, இவளை மாதிரி தானே எனக்கும் பொண்ணு பிறந்திருக்கும்” என்று எப்போதும் எழும் நினைவை ஆத்மனால் தவிர்க்க முடியவில்லை.

அவர் எதுவும் பிரச்சனை செய்வாரோ என்று எல்லோரும் பார்க்க அவர் எதுவும் பேசவில்லை.

பின்பு மளமளவென்று காரியங்கள் நடந்தன.

அவர்கள் வீட்டின் ஆண்மகனாய் முன்னின்று காரியங்களை செய்தான் ராஜராஜன்.

சுவாமிநாதனுக்கு ராஜராஜனை விட மனதில்லை, ஊருக்கு முன் சொல்லி விட்டதால் பின் வாங்க முடியாது அமைதியாய் நின்றார். அப்போதும் சிவன் கோவில் பூசாரிக்கு அழைத்து, செய்யலாமா என்று கேட்டு, அவர் சுவாமிநாதனின் குடும்பத்திற்கு ஒன்றும் தீட்டில்லை என்று சொன்ன பிறகு தான் ஆசுவாசமானார்.

கொள்ளி போடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாதே நாச்சியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்க்காக எதை பற்றியும் யோசிக்காமல் அங்கை சொல்ல ராஜன் செய்திருந்தான்.

“ரொம்ப வாய் பேசினாலும் அங்கை நிறைய வளர்ந்துட்டாம்மா” என்றான் மனோ ராஜலக்ஷ்மியிடம்.

“ம்ம்” என்றார் அவரும் பெருமையாய்.

யாரும் எதற்கிந்த வேண்டாத வேலை என்பது போல நினைக்கவில்லை.

“நான் அவனின் வேலிக்குள் இல்லை, இல்லை” என்று அங்கையற்கண்ணி சொன்னாலும் அவளும் அதற்குள் தான் இருந்தாள்.

காரியம் செய்ததால் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் தான் ராஜராஜன் இருக்க வேண்டும் என்பது போல சொல்லப்பட்டு விட , சுவாமிநாதனும் நாச்சியும் அவனுடன் தங்கிக் கொண்டனர்.

நாச்சிக்கு பேத்தியை நினைத்து அவ்வளவு பெருமை “அவ சொன்னான்னு தானே வந்த, உனக்கா தோணிச்சா” என்று ராஜராஜனிடம் வழக்காடினார்.

“எனக்கெப்படி தோணும் கிழவி. எனக்கு அவர் யாருமே கிடையாது. நீ சொல்லியிருந்தா செஞ்சிருப்பேன். நானா எப்படி வந்து சொல்ல முடியும்? பெரியப்பா என்னை பிச்சு எடுத்துடுவார். இப்போவே முறைச்சு முறைச்சு பார்க்கறார். உன் பேத்திக்கு என்னை கூப்பிட தோணிச்சு, உனக்கு தோணிச்சா?”என்று அவரை வாரினான்

இப்படியாக மூன்று நாட்கள் அங்கிருந்து எல்லாம் முடித்து வீடு வந்து இரண்டு நாட்கள் கழித்து மனைவியையும் மகளையும் வீடு அழைத்துக் கொண்டு வந்தான்.

அங்கை எதுவுமே வம்பு வளர்க்கவில்லை, அமைதியாக அவன் அழைத்ததும் வந்து விட்டாள், மில்லுக்கும் செல்ல ஆரம்பித்து விட்டாள்.

மில்லில் யாருமில்லாத போது “டேய், யப்பா, ராசா, இராசராச, உனக்கு கணக்கு வருமா வராதா” என்று ஏக கடுப்பில் அவனை பார்த்து சீரியசாய் கேட்க,

“எனக்கு கணக்கும் வராது, கணக்கு பண்ணவும் வராது” என்றான் இலகுவாய்.

“அய்யே, கேவலமான ஜோக்” என்றவள்,

“அதாகப்பட்டது, யாராவது முறைகேடு பண்ணி, பணம் அடிச்சு, தப்பு கணக்கு எழுதினா கூடப் பரவாயில்லை. ஆனா எல்லாம் சரியா இருக்க, சரியா நடக்க, நீ எழுதி வெச்சிருக்குற கணக்கு இருக்கே, அம்மாடி இதெல்லாம் சரி பண்ண யாரலையும் முடியாது”

“நீ அறிவாளி இல்லைன்னா போகுது, அறிவாளி மாதிரி காமிக்கவாவது செய்யலாம் தானே” என்று வெகுவாய் நக்கலடிக்க,

அவளை முறைத்து பார்த்தான்.

“சும்மா முறைக்க கூடாது, நாளும் ரெண்டும் ப்ளஸ் பண்ணினா எட்டுன்னு போட்டிருக்குற”

“அது மல்டிப்ளை பண்ணிட்டேன் போல” என்றான் அசால்டாய்.

“இனிமே நீ கணக்கு எழுது உன்னை தொலைக்கறேன்”

“என்னடி ஓவரா மிரட்டுற?”

“அப்படி தான் மிரட்டுவேன், என்னை கூட்டிட்டு வராம எல்லோர் முன்னமும் என்னை கீழ இறக்குன தானே”

“நான் உன்னை தூக்கவேயில்லையே இறக்கி விட”

“அய்யே காமெடி” என்றவள் அப்போதைக்கு பேச்சை விட்டு விட்டாள்.

பின் இரவின் தனிமையில் பிடித்துக் கொண்டாள்.

“என்ன கோபம் என் மேல?” என்று.

“கோபம் எதுவுமில்லையே” என்றான்.

“இல்லை கோபம் இன்னும் இருக்கு. அப்படியில்லைன்னா முன்னம் இருந்திருக்கும். அது தான் நீங்க எனக்கு ஊருக்கு போன பிறகு ஃபோன் பண்ணவேயில்லை”

“அது நீ ஃபோன் பண்ணலை, நான் பண்ணலை. நீ ஏன் பண்ணலை?”

“நான் கோபிச்சிட்டு போனா, ஒரு ஃபோன் செஞ்சு கூட சமாதானம் பண்ண மாட்டீங்களா?” என்று சலுகையாய் குறை பட,

அதற்கு பதில் சொல்லாமல் அங்கையை அணைத்து முத்தமிட ஆரம்பித்தான்.

ராஜராஜன் தவிர்கிறான் என்று புரிந்தது. அவனை தள்ளி “பதில் சொல்லு முதல்ல” என்று கேட்க தோன்றினாலும், கேட்கவில்லை, இசைந்து தான் கொடுத்தாள். அவனை எந்த விதத்திலும் கோபப்படுத்தவும் விரும்பவில்லை, காயப்படுத்தவும் விரும்பவில்லை.

வெகு நேரம் கழித்து ராஜராஜன் உறங்கி விட,

அங்கைக்கு உறக்கமில்லை. அவன் மனதில் என்ன இருக்கிறது? பெரிதாய் எதுவும் இருக்குமோ என்ற சஞ்சலம்.
உறங்காமல் புரண்டு கொண்டே இருந்தவள், கவனியாமல் அவனை இடித்து விட, அதில் உறக்கம் கலைந்து விட்டான்.

“என்ன அங்கை? தூங்கலையா நீ”

“தூக்கம் வரலை”

“தூங்கு” என்று அணைத்து பிடித்துக் கொள்ள, சில நிமிடங்களில் அவனுக்கு தூக்கம் தள்ளிய போதும், அவனின் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் விடும் மூச்சினில் அவள் உறங்க வில்லை என்று புரிந்தது.

“என்ன அங்கை?” என்று அவளின் முகம் நிமிர்த்தி பார்த்தான்.

“நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லலை”

“என்ன கேள்வி?” என்றான், உண்மையில் அதனை மறந்திருந்தான். அங்கையின் அருகாமை மறக்கச் செய்திருந்தது.

“என்னை ஏன் ஃபோன்ல கூட கூப்பிடலை”

“இப்போ எனக்கு எந்த கோபமும் இல்லை”

“ஓஹ், அப்போ இருந்திருக்கு. என்ன கோபம்னாலும் ஃபோன்ல கூப்பிட்டு சண்டை போடணும். அதை விட்டு பேசாமயே இருந்தா?”

“என்ன கோபம்? எனக்கு தெரியணும்”

“கோபம்னு சொல்ல முடியாது. ஒரு வருத்தம், நான் உன் பின்ன ரொம்ப சுத்தறதால, நீ என்னை அட்வான்டேஜ் எடுத்துட்டு, எல்லோர் முன்னையும் எப்பவும் என்னை கீழ இறக்கரையோன்னு” என்று சொல்ல,
அவனை ஒரே தள்ளாய் தள்ளி எழுந்து அமர்ந்து முறைத்தாள்.

“ஒரு மனசாட்சி வேண்டாம், நீங்க என் பின்ன சுத்தறீங்களா?” என்று கேள்வி கேட்டு பார்த்திருந்தாள்.

“இல்லையா பின்னே, எப்பவும் உன் பின்னே தான் சுத்தறேன்”

“எங்கே என் பின்னே சுத்தற முகத்தை காண்பிங்க, அப்படியே ஒரு குத்து விடறேன்” என்று பாக்சிங் போவது போல அக்ஷன் செய்ய

“உனக்கு பாக்சிங் தெரியுமா?”

“பாரு, கல்யாணமாகி நாலு வருஷம் ஆச்சு. எனக்கு என்ன தெரியும்னு கூட உங்களுக்கு தெரியாது, நீங்க என் பின்னே சுத்துறீங்களா. மிலிட்டரிகாரர் பொண்ணாக்கும் நான்” என்றாள்.

“நான் சுத்தறேனா தெரியாது. ஆனா என் மனசு உன் கழுத்துல தாலி கட்டுன நாள்ல இருந்து உன்னையே தான் நினைக்குது. பல சமயம் உன் பின்னே வந்திருக்கேன், நாம சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் முன்னே. நீ என்னை மனுஷனா மதிச்சு கூட பேசினது கிடையாது தெரியுமா?”

“அதுக்கு இப்போ பழிவாங்கறீங்களா”

“உளறாத” என்று அவளை கடிந்தவன்.

“இவ்வளவு அழகான பொண்ணை சைட் அடிக்க கூட எனக்கு தைரியம் கிடையாது. இதெல்லாம் எங்க நம்மை பார்க்கும்ன்ற நினைப்பு தான். அப்படியிருக்கும் போது நம்ம கல்யாணம் நடக்குது. ஆனாலும் நீ இங்க வரலை”
“நானா என்னன்னு பேச வந்தாலும் என்னை மதிக்கலை. ஊருக்குள்ள இதெல்லாம் பெரிய விஷயம் தெரியுமா. அத்தை விட்டுட்டு போயிட்டதால எங்க பெரியப்பா இதை ஒத்துக்கலைன்னு நானே சுத்த விட்டேன், அதுல நிஜம் இருக்கு. ஆனா நாம சேரணும்னு நினைச்சிருந்தா யாரும் தடுத்திருக்க முடியாது”

“ஒரு நாள் நீயா வந்த, எங்க வாழ்க்கையே மாறி போச்சு. இதுல பெண்டாட்டி வசதி அதான் அவளை தாங்கறான்னு பேச்சு”

“உண்மையா நீ இவ்வளவு அழகா, அறிவா, வசதியா இல்லாமா சாதாரணமா இருந்திருந்தா, எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஆனா இப்படி இருக்குற நீ பேசற சின்ன சின்ன வார்த்தையும் ரொம்ப பெருசு”

“அது உனக்கு புரியறதேயில்லை. எல்லோர் முன்னமும் எப்பவும் ஏதாவது பேசி வைக்கற. அது எனக்கு உன் அடி மனசுல எங்கயோ நான் உனக்கு பொருத்தமில்லைன்னு இருக்குற நினைப்போட வெளிப்பாடுன்னு எனக்கு தோண ஆரம்பிச்சிடுது”

“அதுல இருந்து என்னால வெளில வர முடியலை. இதுல உங்க அப்பா அம்மாக்காக சண்டை வேற”

“நீ இந்த வீட்ல ராஜராஜனோட மனைவின்னு சொன்னா, இல்லை எங்க அப்பா அம்மாவோட பொண்ணு சொல்ற”

“எதுவா வேணா இருக்கட்டும். அது நிஜமாவே இருக்கட்டும். அதை வெளில எல்லோர் முன்னமும் சொல்லணும்னு என்ன?”

“நான் சொன்னதோட அர்த்தம், இந்த வீட்ல நீ அவங்களோட பொண்ணு இல்லைன்னு கிடையாது. ராஜராஜனோட மனைவியா நீ இங்க இருக்கும் போது உங்க அப்பா அம்மாவை சரியா பார்க்கலைன்னா நான் கேட்க முடியும். ஆனா நீ உங்க அப்பா அம்மாவோட பொண்ணா கேள்வி கேட்டா நான் எப்படி உன் கூட நிக்க முடியும்”

“இது என் வீடு, என் வீட்டு ஆளுங்களை நான் விட்டு குடுக்க முடியாது”

“ஒரு விஷயம் நீ நல்லா புரிஞ்சிக்கணும். நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை நாம செய்யறோம். அதுக்கு அடுத்தவங்க அங்கீகாரம் குடுத்தே ஆகணும்னா எப்படி?”

“அவங்களுக்கு பிடிச்சது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியா அமையலை. வெளில போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா அதை அடுத்தவங்க அங்கீகரிக்கணும்னா எப்படி?”

“அவங்களுக்கு பிடிச்சா தானே ஒத்துக்குவாங்க”

“அவங்களை ஏதாவது தொந்தரவு பண்ணினாங்களா இல்லையே, ஏத்துக்கலை, அவ்வளவு தானே! இவங்களே பார்த்து பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்ச பொண்ணுங்க மாதிரி அவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும் கவனிக்கணும்னா எப்படி?”

“சொல்லப் போனா இதை பாட்டி பண்ணியிருக்கணும், ஆனா அவங்க அவங்க பசங்களை மீறி பண்ணலை”

“இது உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் ஒத்துக்கணும்”

“மாமா இதை பெரிய விஷயமா எடுக்கலை, மனோக்கு இது ஒரு விஷயமே கிடையாது. ஆனா அத்தை ஃபீல் பண்ணறாங்க, தூக்கி போடும்மா இதைன்னு உங்கம்மாவை சமாதானம் செய்யாம, நீ எங்களை கேள்வி கேட்கற”

“கேள்வி கேட்டு மட்டும் என்ன பண்ண முடியும்? கேட்டு வாங்கறதில்லை மரியாதை”

“எப்பவும் எல்லோர் முன்னமும் என்னை எதிர்த்து எதிர்த்து பேசற, நான் என்ன பண்ணட்டும்? ஒரு வார்த்தை கூட சொல்லாம ஊருக்கு கிளம்பி நிக்கற”

“அதுவும் எல்லோர் முன்னமும் நீங்க தான் விகாஸ்க்கு சொல்லிக் குடுத்தீங்களா கேட்டப்போ, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? உன்னை உங்கப்பா கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சதை எல்லோர் முன்னமும் காமிச்சு குடுக்கற”

“அந்த நிமிஷம் உன்னை கல்யாணம் பண்ணாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கலாம் தான் தோணினது. நான் உன் பின்னே சுத்துறதால தான் என்னை நீ ரொம்ப அசால்டா எடுத்துகிட்டயோன்னு தோணினது. அப்புறம் நீ சண்டை போட்டுக்கிட்டு போயிட்ட”

என்று நிறுத்தாமல் பேசினான். அவன் மனதில் இருப்பது எல்லாம் வரட்டும் என்று அவளும் அதுவரை பேசவில்லை.

“உங்க விரததுக்காக தான் போக முடிவெடுத்தேன், கூட சண்டையும் சேர்ந்துகிச்சு” என்று அவள் சொல்ல.

“எனக்கு அது எப்படி தெரியும்? நான் எல்லோர் முன்னமும் எப்பவும் கீழ போறானோன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு”

“எங்க வீட்ல எல்லோரும் நிறைய படிச்சிருக்காங்க. நான் தான் ப்ளஸ் டூ, நீயும் என்னை விட படிச்சிருக்க. நான் உனக்கு எங்கேயும் பொருத்தமில்லை, அப்போ நான் என்ன நினைப்பேன்?” என முடிக்க,

நிஜமாக இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு.

அவள் அமைதியாகிவிட,

படுத்துக் கொண்டவன் கை விரித்தான் அவளுக்காய். அமைதியாக அவனின் விரிந்த கைகளுக்குள் சரண் புகுந்தாள்.

“எனக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரியலை. ஆனா ஒரு நொடி கூட உங்களை கீழ இறக்கணும்னு நினைக்கலை. என் மனசுக்குள்ள எங்காவது ஒரு மூலையில நீங்க எனக்கு பொருத்தமில்லைன்னு நினைப்பு இருக்கோ என்னவோ தெரியலை. ஆனா நானும் தேடித் பார்த்துட்டேன் சமீபமா எனக்கு அது கிடைக்கவேயில்லை” என்றாள் உண்மையாய் உணர்ந்து.


அவளின் பதிலில் உல்லாசமாய் மனம் விட்டு சிரித்தான். அப்படி ஒரு பொங்கிய சிரிப்பு.



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
:love::love::love::love:

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் மல்லி..

ராஜராஜ இனிமே கணக்கு பாக்குறது, கணக்கு பண்றது எல்லாமே
அங்கையோட வேலை.. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...

ராஜன் மனசு விட்டு பேசறது அருமை... (y)(y)(y)
இனி அங்கை அவனை புரிந்து கொள்வாள்...

கொஞ்சி கொஞ்சி தமிழில் பேச
கோடைத் தென்றல் மலர்கள் வீச
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கேட்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
மல்லி தந்த ஆடியோவே
அன்பில் வந்த ராகமே
மல்லி தந்த ஆடியோவே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
 
Last edited:
Hi
மல்லி சிஸ்
உங்கள் புதிய
முயற்சிக்கு வாழ்த்துகள்
உங்களுடைய குரல் செம
அதுவும் RR பேசுற வார்த்தைகள் உங்கள் குரலில் கேட்கும் போது
எந்த எதிர்கருத்தும் தோணல.
 
Last edited:
Top